பொறியியல் கண்டுபிடிப்பு போட்டியின் வெற்றியாளர்களை QuEST Global அறிவிக்கின்றது
திருவனந்தபுரம், இந்தியா, September 18, 2017 /PRNewswire/ --
- இந்தியா முழுவதும் 6,500 க்கும் அதிகமான கல்லூரிகளில் இருந்து இப்போட்டியில் பங்கேற்றனர்
- Park College of Engineering and Technology and Vellore Institute of Technology (VIT) இரண்டாவது மற்றும் மூன்றாவது வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்
QuEST Global, உலகளாவிய பொறியியல் தீர்வுகள் வழங்குநர், இன்று, அதன் பான்-இந்தியா மாணவர்களுக்கான கண்டுபிடிப்பு போட்டியின் - QuEST Ingenium 2017 வெற்றியாளர்களை அறிவித்தது. கௌரவமிக்க முதல் பரிசை Saintgits College of Engineering, Kerala, வேக தடைகளைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தி (Electricity generation using speed breakers) என்கிற திட்டத்திற்காகப் பெற்றது. வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசோடு, ஜெர்மெனியில் ஏர்பஸ் வசதியுடன் அனைத்து செலவுகளும் ஏற்கப்பட்ட ஒரு சுற்றுலா பயணம் மற்றும் உற்பத்தி செயல்முறைகள் மற்றும் பொறியியலில் வணிகத்தின் முக்கிய பங்கு பற்றிய அறிமுகத்துக்காக ஏர்பஸ் வசதியுடன் கூடிய ஒரு பிரத்யேக பயணம் வழங்கப்படும். Park College of Engineering and Technology, Tamil Nadu தங்கள் திட்டமான Design and fabrication of a fighter aircraft with yawing wing கிற்காக இரண்டாம் பரிசையும், அவர்களைத் தொடர்ந்து Vellore Institute of Technology (VIT), Tamil Nadu, Hi-Tech bionic prosthetic legs என்கிற திட்டத்திற்காக மூன்றாவது பரிசையும் பெற்றன.
MVJ College of Engineering (MVJCE), Karnataka வின் மாணவர்கள் ஊனமுற்றவர்களுக்கான மேம்பட்ட செயற்கைக் கை (Advanced prosthetic hand for handicapped) என்கிற திட்டத்திற்காக சிறப்பு ஜூரியாக குறிப்பிடப்பட்டது. மிகவும் பிரபலமான திட்ட விருது, சமூக ஊடகத்தில் பொது மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிறப்பு வகை விருது, Sri Sairam Engineering College, Tamil Nadu, MOBSCOPE என்கிற திட்டத்திற்காக வழங்கப்பட்டது.
QuEST Ingenium மின் ஏழாவது பதிப்பு, இந்தியா முழுவதும் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து 6,500 க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. திருவனந்தபுரத்தில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வில், தொழில் துறையில் இருந்து நீதிபதிகள் மற்றும் பிரபலமான நபர்கள் குழுவிடம் தங்கள் திட்டங்களை வழங்குவதற்காக முதல் 10 குழுக்கள் அழைக்கப்பட்டன. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நிர்மைய் இணை நிறுவனர் திருமதி நிதி மாதூர் கலந்து கொண்டார் மற்றும் பர்க்ஹார்ட் எச். ஆர். ஹீன்க், திட்ட தலைவரும், ஏர்பஸ் காபின் எலெக்ட்ரானிக்ஸ் பியூஸ்டெஹுடு பிரீடெவெலொப்மெண்ட், நாடு முழுவதிலிருந்தும் வந்த இளம் பொறியியலாளர்களுக்கு சிறப்புரையாற்றினார்.
இந்த வருடம், QuEST Global லின் பொறியியல் திறமையை வளர்ப்பதில் உள்ள முயற்சிகள் இன்ஜினியம் ஆதரவாளர்களால் ஆதரிக்கப்பட்டன - ஏர்பஸ், சீமன்ஸ், கத்தார் ஏர்வேஸ் மற்றும் எம் எஸ் சி மென்பொருள் உட்பட.
காலா நிகழ்ச்சியில் பேசிய திரு ஸ்ரீகாந்த் டி நாயக், QuEST Global-ன் மூத்த துணைத் தலைவர் & தலைவர்-குளோபல் டெலிவரி, "QuEST Ingenium பொறியியல் மற்றும் கண்டுபிடிப்புக்கான ஆர்வத்தை நிரூபிக்கும் இந்திய மாணவர்களை ஒன்றாக இணைக்கிறது. இந்த தேசிய அளவிலான பொறியியல் கண்டுபிடிப்பு போட்டி மாணவர்கள் நமது உலகத்தை மாற்றும் வகையில் பொறியியல் தீர்வுகளை உருவாக்க ஊக்குவிக்கிறது. இந்த முயற்சியை உலகளாவிய அளவில் QuEST Global உலகளாவிய ரீதியில் ஒழுங்குபடுத்தும் பலவற்றில் ஒன்றாகும், எங்களுடைய அடுத்த தலைமுறை பொறியியலாளர்களுக்கு 'எதிர்காலத்திற்குத் தயார்' என்று நாம் கல்விசார் பணிக்காக உழைக்கின்றோம்." என்று கூறினார்.
"Quest Ingenium 2017 இன் ஒரு பகுதியாக "இது ஒருமுறை வாழ்நாள் அனுபவமாக இருந்தது. இறுதிப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிர்ஷ்டசாலிகள் நாங்கள் மற்றும் ஏர்பஸ் வசதியை பார்வையிட நாங்கள் உற்சாகமாக உள்ளோம். QuEST Global மற்றும் இந்த திட்டத்தில் எங்களுக்கு ஆதரவளித்த அனைத்த அனைவருக்கும் நன்றி," என்று வெற்றி பெற்ற அணியின் உறுப்பினர்களான ஜோபி ஜார்ஜ் மற்றும் ஜோஸ் டாம் கூறினர்.
QuEST Global பற்றி
QuEST Global என்பது உயர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான தயாரிப்பு உருவாக்கம் & உற்பத்தி பொறியியல் தேவைகளுக்கு சேவை அளிப்பதில் 20ஆண்டு கால நிரூபிக்கப்பட்ட வரலாற்று சாதனையை கொண்டுள்ள ஒரு உலகளாவிய பொறியியல் தீர்வுகள் வழங்குநர். உலகளாவிய பொறியியல் சேவைகளில் முன்னோடியாகவும், Quest பார்ச்சூன் 500 நிறுவனங்களான ஏரோ எஞ்சின்கள், விண்வெளி மற்றும் பாதுகாப்பு, ஹை-டெக் &தொழில்துறை, மருத்துவ சாதனங்கள், எண்ணெய்&எரிவாயு, மின்சக்தி, மற்றும் போக்குவரத்து துறைகளுக்கு நம்பகமான, மூலோபாய மற்றும் நீண்டகால பங்குதாரராக உள்ளது. இயந்திரவியல், மின், மின்னணு, உட்பொதிக்கப்பட்ட, பொறியியல் மென்பொருட்கள், பொறியியல் பகுப்பாய்வுகள், உற்பத்தி பொறியியல் மற்றும் விநியோகசங்கிலி உருமாற்ற தீர்வுகளை முழுமையான பொறியியல் வாழ்க்கை சுழற்சி அனைத்திலும் வழங்குகிறது.
Quest பங்காளிகள் வாடிக்கையாளர்களுடன் தொடர்ச்சியாக வாடிக்கையாளர்-மையப் பண்பாடு, தொடர்ந்து முன்னேறுவதற்கான மனத்திட்டம் மற்றும் டொமைன் குறிப்பிட்ட பொறியியல் திறன் ஆகியவற்றின் மூலம் மதிப்புகளை உருவாக்குகின்றன. பூகோள இடங்களில் இருந்து உகந்த விலையில் உயர் தரமான விநியோகங்களுடன், உள்ளூர்-உலகளாவிய மாதிரியின் மூலம், QUEST உள்நாட்டில் அதிகபட்ச மதிப்பீட்டு பொறியியல் தொடர்புகளை வழங்குகிறது. உலகளாவிய வாடிக்கையாளர்களின் வியாபாரத்திற்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக பல்வேறு உலகளாவிய இடங்களுக்கிடையில் செயல்படும் 8,300 ஆர்வமுள்ள பொறியாளர்களுடன் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது, அவர்கள் பொறியியல் செய்யும் வழியில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றனர்.
Share this article