Sterlite Tech வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக மூன்று முக்கிய தலைவர்களை நியமிப்பதாக அறிவிக்கிறது
பூனே, இந்தியா, August 29, 2017 /PRNewswire/ --
- பரிமாற்றத்தை ஊக்குவிக்க Nischal Gupta, சேவைகள் தொழிலை அதிகரிக்க Sanjeev Bedekarமற்றும் வாடிக்கையாளர் ஈடுபாட்டில் பெரும்வளர்ச்சியை ஏற்படுத்த Manish Sinha ஆகியோரை நியமித்துள்ளது
Sterlite Tech [BSE: 532374, NSE: STRTECH],ஸ்மார்டர் டிஜிட்டல் நெட்வொர்க்குகளில் ஒரு தொடக்கம் முதல் முடிவு வரையிலான உலகளாவிய தொழில்நுட்ப முன்னோடி, தலைமை பரிமாற்ற அதிகாரியாக Nischal Gupta, தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியாக Manish Sinha மற்றும் தொலைதொடர்பு சேவைகளின் தலைமை விநியோக மற்றும் தொழில்நுட்ப அதிகாரியாக Sanjeev Bedekar ஆகியோரை நியமித்து தன் தலமைத்துவ அணியை பலப்படுத்தி உள்ளது. இந்த தலைவர்கள் Sterlite Tech உடைய தலைமைத்துவ பதவியை வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் பிராட்பேண்ட் நெட்வொர்க்குகளை நிர்வகிப்பது ஆகியவற்றில் ஊக்கப்படுத்துவார்கள்.
இந்த நியமனங்களை குறித்து சிறப்பாக பேசிய, Dr. Anand Agarwal, தலைமை நிர்வாக அதிகாரி, Sterlite Tech இவ்வாறு கூறினார், "Nischal, Manish மற்றும் Sanjeev ஆகியோர் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் துறைகளில் வேறுபட்ட திறன்கள் மற்றும் உலகளாவிய அனுபவத்தை கொண்டு வருகிறார்கள், மற்றும் அவர்களை Sterlite Tech-கிற்கு வரவேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நெட்வொர்க் தொழில்நுட்பங்கள் மற்றும் தரவு பயன்பாட்டு தோரனைகளில் உலகளவில் காணக்கூடிய இடப்பெயர்ப்புகளை நாம் பார்க்கும் சமயத்தில், எங்களது தலைமைத்துவ அணியானது வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு வழிநடத்தி, உந்திச்செல்லும்.."
பரிமாற்றம், உக்தி, நடைமுறை சிறப்புத்தன்மை, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் நிகழ்ச்சி மேலாண்மை ஆகியவற்றில் 20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் பெற்ற, Nischal அவர்கள் Sterlite Tech இல் தலைமை பரிமாற்ற அதிகாரியாக இணைந்துள்ளார். உலகத் தரம்வாய்ந்த செயல்பாடுகள், தொழில்நுட்பம் மற்றும் நடைமுறைகளை, ஒரு வேகமான டிஜிட்டல் உலகத்தில் செயல்படுத்துவதற்காக கொண்டு வருவதன் மூலம் இந்த நிறுவனத்தை அதன் பரிமாற்ற பயணத்தில் வழிநடத்துவார். Nischal அவர்களது கடந்த பதவியானது Flipkart இல் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு கார்ப்பரேட் உக்தி செயல்படுத்துதலின் தலைவராகவும், E2E தொழில் பரிமாற்றம், தரம், லீன் மற்றும் மாற்ற மேலாண்மையை ஆகியவற்றிற்கு வழிவகுத்தார். அவர் Maruti Suzuki, Escorts, Fujitsu, IBM, HP மற்றும் Lenovo போன்ற நிறுவனங்களிலும் பணிபுரிந்து இருக்கிறார். Nischal தனது முதுகலை அறிவியல் பட்டத்தை தகவல்தொழில்நுட்ப சேவைகள் துறையில், SUNY, , Buffalo, US -இல் இருந்தும், தொழிற்சாலை பொறியியலை Thapar Institute of Engineering and Technology, பட்டியாலாவில் இருந்தும், அதை தொடர்ந்து நிர்வாக மேலாண்மையை IIM-பெங்களூரில் இருந்தும் பெற்றார்.
முதன்மை சந்தைப்படுத்தல் அதிகாரியாக (CMO), Manish ஒரு புதுமையான வணிகத் தலைவராக 20 வருட அனுபவத்தை கொண்டவர், இதில் இவர் பிராண்டுகளை சந்தைப்படுத்தி கட்டி எழுப்பி இருக்கிறார், தயாரிப்பு வரிசைகளை தொடங்கி இருக்கிறார், வெற்றி-வெற்றி ஒப்பந்தங்களை முன்னின்று நடத்தி இருக்கிறார் மற்றும் தொடக்கநிலையில் இருந்து நிலையான வளர்ச்சி வரை தொழிலை இயக்கி இருக்கிறார். இவர் இந்தியாவிலும் அமெரிக்காவிலும், இணையதளம், தகவல்தொழில்நுட்பம், ஊடகம், வங்கி மற்றும் அவுட்சோர்சிங் தொழில் ஆகியவற்றில் பெரிய பல மில்லியன் டாலர் லாபம் & நஷ்டங்களை நிர்வகித்து இருக்கிறார். இவருடைய கடைசி பதவியில், Manish அவர்கள் QuikrHomes மற்றும் Commonfloor.com உடைய நிர்வாக துணை தலைவராகவும் தொழில் தலைவராகவும் இருந்திருக்கிறார். இவர் WNS Global Services, Capital One Financial, Infosys and McKinsey & Co ஆகிய நிறுவனங்களிலும் தலைமைப் பதவிகளில் பணிசெய்து இருக்கிறார் மற்றும் பல்வேறு தொடக்கநிலை நிறுவனங்களின் நிறுவனராகவும் இருந்திருக்கிறர். Sterlite Tech இல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி பதவியிலே Manish அவர்கள் Sterlite Tech உடைய உலகளாவிய சந்தைப்படுத்தல் உக்தியை வழிநடத்தி முதன்மையான வரிசை வளர்ச்சியையும் அதிகரிக்கும் வாடிக்கையாளர் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவார். Manish அவர்கள் IIT-தில்லியில் இருந்து B Tech இரசாயன பொறியியல் பட்டமும் IIM-கொல்கத்தாவில் இருந்து சந்தைப்படுத்தல் MBA பட்டமும் பெற்றுள்ளார்.
Sanjeev அவர்கள் Sterlite Tech உடைய நெட்வொர்க் சேவைகள் தொழிலின் சேவை விநியோகம் மற்றும் தொழில்நுட்ப விவரத்தை ஊக்கபப்டுத்துவார். இவர் தகவல்தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவர், மற்றும் Bharti Airtel, Tata Teleservices, Reliance Infocomm, DoT மற்றும் TCS ஆகிய நிறுவனங்களில் தொழில்நுட்பம், வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் தொழில் வளர்ச்சித் துறைகளில் தலைமைத்துவ பதவிகளை வகித்து இருக்கிறார். இவர் செயல்பாடுகள், திட்டமிடல், தரம், வயர்லெஸ் ஆளுமை, ஆப்டிகல் போக்குவரத்து மற்றும் வெவ்வேறு தொழில்நுட்பங்களில் பரந்து கிடக்கும் (2ஜி/3ஜி/4ஜி) நிலையான கம்பி பிராட்பேண்ட் தொழில்நுட்பங்களின் பசுமைக்கள நெட்வொர்க்குகளை முன்னின்று வெளியிட்டு இருக்கிறார் மற்றும் இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச புவியியல்களில் இவற்றை செய்து இருக்கிறார். அவரது முந்தைய பதவியில் Telesonic Networks உடைய தலைமை நிர்வாக அதிகாரியாக, Sanjeev அவர்கள் Airtel Broadband உடைய தொழில்நுட்பம் மற்றும் சேவை விநியோகத்தை மொபைல் நெட்வொர்க்குகளுக்கான எண்டர்பிரைஸ் சேவைகள் மற்றும் ஆப்டிக் போக்குவரத்தில் வழிநடத்தினார். இவர் IIT-தில்லியில் M Tech, BE (எலக்ட்ரானிக்ஸ்) மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தில் டிப்ளமோ ஆகியவற்றை நிறைவுசெய்துள்ளார்.
Sterlite Technologies பற்றி:
Sterlite Technologies Ltd [BSE: 532374, NSE: STRTECH], என்பது உலகளாவிய சேவை வழங்குநர்கள், ஸ்மார்ட் நகரங்கள், கிராமப்புற பிராட்பேண்ட் மற்றும் பெரிய எண்டர்பிரைசஸ் போன்ற முக்கிய வாடிக்கையாளர்களுக்கான ஸ்மார்ட்டான டிஜிட்டல் நெட்வொர்க்குகளை வடிவமைத்து, கட்டியெழுபபி, நிர்வகிக்கின்ற ஒரு உலகளாவிய தொழில்நுட்ப முன்னோடி ஆகும். Sterlite Tech ஆறு கண்டங்களிலும் 100க்கும் மேற்பட்ட நாடுகளிலும் ஈடுபடுகின்றது, இதில் தயாரிப்புகள், சேவைகள் மற்றும் மென்பொருள் ஆகியவை அனைத்திலுமான தொழில்கள் மீது குவிக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் நெட்வொர்க்குகள் இருக்கின்றன -ஆப்டிக்கல் தகவல்தொடர்பு தயாரிப்புகள், நெட்வொர்க் மற்றும் அமைப்பு ஒருங்கிணைப்பு சேவைகள், மற்றும் OSS/BSS மென்பொருள் தீர்வுகள். இந்நிறுவனத்திற்கு இந்தியா, சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அதிநவீன உற்பத்தி நிலையங்கள் உள்ளன, மற்றும் ஸ்மார்ட்டான நெட்வொர்க்குகளை வழங்குவதன் மூலம் அனுதின வாழ்வை உருமாற்றம் செய்ய இலக்கு வைத்துள்ளது. 155 காப்புரிமைகளுடனான வலிமையான சுயவிவரிப்புடன், Sterlite Tech என்பது இந்தியாவின் பிராட்பேண்ட் ஆராய்ச்சிக்கான ஒரே சிறப்புத்தன்மை மையமாக இருக்கிறது. இந்நிறுவனத்தால் எடுத்துக்கொள்ளப்பட்ட செயல்திட்டங்களில் ராணுவ படைகளுக்கான ஊடுருவ முடியாத ஸ்மார்டர் டேட்டா நெட்வொர்க், BharatNet-கான கிராமப்புற நெட்வொர்க், ஸ்மார்ட் நகர வளர்ச்சி மற்றும் அதிவேக ஃபைபர்-டூ-த-ஹோம் (FTTH) ஆகியவை உள்ளடங்கும்.
மேலும் விவரங்களுக்கு வருகைதாருங்கள் http://www.sterlitetech.com
தொடர்புகள்:
கார்ப்பரேட் தகவல்தொடர்புகள்
Sumedha Mahorey
Manager - Corporate Communications
Sterlite Technologies Ltd
Phone: +91-22-30450404
Email: [email protected]
முதலீட்டாளர் உறவுகள்
Vishal Aggarwal
Phone: +91-20-30514000
Email: [email protected]
Share this article