சென்னை, July 13, 2017 /PRNewswire/ --
- கடந்த ஆண்டைவிட 30% பேர் அதிகமாகப் பங்கேற்றனர்
- கண்காட்சியில் இந்தத் துறையைச் சேர்ந்த முக்கியமான நிறுவனங்கள் பங்கேற்றன
- 'நடத்தை மற்றும் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பில்' கவனம் செலுத்திய இரண்டு நாள் பயிலரங்கை நடத்தியது
OSH சென்னை 2017, இது தொழில்சார் பாதுகாப்பையும் உடல்நல துறை தொடர்பான தேவைகளையும் பூர்த்தி செய்து, தென்னிந்தியாவில் இந்தத் துறையின் ஆற்றலையும் செயல்திட்டத்தையும் வரையறுத்த தென்னிந்தியாவின் மிகப் பெரிய சர்வதேச வணிக நிகழ்வாகும். UBM India-வால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வணிகக் கண்காட்சி, Chennai Trade Centre-யில் ஜூன் 30 அன்று தனது 4வது கண்காட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இதன் துவக்க விழாவில் தலைமை விருந்தினர் Mr.Prem Anand Sinha, IPS, Joint Commissioner of Police (Traffic), Chennai; மற்றும் முக்கிய பதவி வகிக்கும் Shri S.Sreekumar, Regional Executive Director, Southern Region, Airports Authority of India, Ministry of Civil Aviation, Govt of India; Shri. S Ponsingh Mohanram, Additional Director of Industrial Safety and Health, Chennai, Ministry of Labour & Employment, Government of Tamil Nadu; Shri Varun Buddhiraja, Director, Euro Safety Footwear India Pvt. Ltd., Shri. G.M.E.K Raj, Director General (Retd.) DGFASLI, Govt of India; மற்றும் Mr. Yogesh Mudras, Managing Director, UBM India ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
(Logo: http://mma.prnewswire.com/media/525922/OSH_Exhibition_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
OSH சென்னை 2017க்கு முக்கிய சங்கங்களான Gujarat Safety Council, Indian Technical Textile Association, Indian Society of Ergonomics, National Small Industries Corporation, The International Powered Access Federation (IPAF) and Aerial Platform Association of India (APAOI) ஆகியவை ஆதரவளித்தன. இந்தக் கண்காட்சியில் இத்துறையைச் சேர்ந்த முக்கியமான நிறுவனங்களான Amazon, Acme Safetywears Limited, Accent Industries Ltd., Bata India Ltd., Euro Safety Footwear India Pvt. Ltd., Motorola Solutions India Pvt. Ltd., Oshkosh India Private Limited, Prolite Autoglo Limited, TATA Communications, Tribe, Toughscaff Pvt. Ltd., Udyogi International Pvt. Ltd., போன்றவையும் பங்கேற்றன.
OSH இவற்றுடன் 'Adoption of Industrial Best Practices to Achieve World Class Safety', 'Creating Psychologically Healthy Workplaces', 'Women and OSH - A Holistic Approach' மற்றும் 'Safety Issues in the Construction Industry' ஆகிய தலைப்புகளில் இரண்டு நாட்கள், ஆலோசனையைப் பகிரும் கருத்தரங்கையும் பயிலரங்கையும் நடத்துகிறது. Reliance Industries Limited, DGFASLI, AcuiZen Technologies Singapore Pte. Ltd. போன்ற பிரபல நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்களும் ஆலோசகர்களும் சிறந்த பேச்சாளர்களாக இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். Tribe Ltd. உடன் சேர்ந்து இந்தக் கண்காட்சி பிரதான மாநாட்டின் ஒரு பகுதியாக 'Behavioural and Cultural Based Safety' என்பதில் கவனம் செலுத்தும் இரண்டு நாள் பயிலரங்கிற்கும் ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பயிலரங்கில் Nick Wharton, Director at Tribe Cultural Change நடத்தையையும் கலாசாரத்தையும் அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பு உலகம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
OSH சென்னை 2017 வெற்றிகரமாக முடிவடைந்தது பற்றிப் பேசிய Mr. Yogesh Mudras, Managing Director, UBM India, "நம் நாட்டில் அதிகரித்துவரும் பணியாளர்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்ய நாங்கள் ஆதரவு அளித்துவருகிறோம். வாழ்க்கைத் தரத்தை முழுவதுமாக நிறைவேற்ற, மாறிவரும் பொருளாதாரத்தில் தொழில்சார் பாதுகாப்பும் ஆரோக்கியமும் மிகவும் அவசியம். மாநாட்டின் முக்கிய அம்சம் தனிநபர்களின் உளவியல் ஆரோக்கியமும் நலமும் ஆகும். நான் எந்தவொரு தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் என்னும் முயற்சிக்கு இதுதான் அடிப்படை என்று நினைக்கிறேன்.UBM India இந்தத் துறையில் வாய்ப்புக்களை உணர தென்னிந்தியாவில் வளரத் துவங்கியிருக்கும் தொழிற்சாலைகளுக்கு கச்சிதமான மேடையை அளித்துள்ளது. இந்தக் கண்காட்சி இன்றைய உலகில் மிகவும் தேவைப்படும் பாதுகாப்பு என்னும் திடமான கலாசாரத்தை ஊக்குவிக்க உதவுகிறது" என்று கூறினார்.
புதிய சந்தைகளை அடைவதற்கான ஒரு உத்தியாக, UBM India ஹைதராபாத்தில் HITEXயில் OSH South Indiaவின் 5வது நிகழ்ச்சியைப் பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்தப் புதிய OSH நுழைவாயில் ஆந்திர பிரதேசத்திலும் தெலுங்கானாவிலும் அமைந்துள்ள தொழிற்சாலைகளுடன் நெட்வொர்க்கை ஏற்படுத்திக் கொள்ள OSH பங்குதாரர்களுக்கு பிரத்யேகமான வாய்ப்பினை அளிக்கும். இந்தக் கண்காட்சி The show will run in close association with DISH தெலுங்கானா மற்றும் ஆந்திரபிரதேசத்துடன் இணைந்து நடைபெறும். இதற்கு மற்ற பகுதிகளிலிருந்தும் நல்ல ஆதரவு கிடைக்கும்.
OSH சென்னை 2017-யில் துறைசார்ந்த நபர்களின் உரைகள் மற்றும் அறிமுகங்கள்
1. Mr. Roopak Jakhmola, Major Consultant, Tribe Culture Change Limited
"தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய இந்திய (சென்னை) 2017 ஆக்கப்பூர்வமான சிந்தனைகளைக் கொண்டுள்ள வணிகங்களை ஈர்த்துள்ளது. இது பல்வேறு வணிக நிறுவனங்களின் யோசனைகளைப் பகிர்ந்துகொள்ள சிறந்த வாய்ப்புக்களை அளித்துள்ளது. இது நடத்தை மற்றும் கலாசாரம் சார்ந்த பாதுகாப்பை அளிக்க உதவியது. இதன் மூலம் பணியாளர்கள் என்ன செய்கிறார்கள், அதன் பின்னால் உள்ள காரணம் என்னவென்பதில் கவனம் செலுத்தியது. இதில் நிறைய பேர் கலந்துகொண்டனர், குழுவாகச் செயல்படுவது ஊக்குவிக்கப்பட்டது மற்றும் ஆரோக்கியம், பாதுகாப்பு ஆகிய விஷயங்கள் குறித்த கருத்துப்பரிமாற்றம் நிகழ்ந்தது. அரசாங்கத்தின் 'Make In India' முயற்சியும் பல்வேறு மற்ற கொள்கைகளும் பணி இடத்தில் தொழில்சார் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவியுள்ளன."
2. Mr. Ankur Jain, Bata India Limited
"இந்தியாவில் அடுத்த 4 ஆண்டுகளில் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணத்தின் லாப வளர்ச்சி 20%ஆக இருக்குமென்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். Bata Industries ஸ்டீல், உலோகம் மற்றும் சுரங்கத் தொழிற்சாலைகளில் அணியக்கூடிய காலணிகளுக்கு பாலியூரெதேன் ரப்பரில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் பல்வேறு தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நிறுவனங்கள் காலணிகளைப் பிரதானமாகத் தயாரிக்கின்றன. அரசாங்கமும் தொழில்சார் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. மேலும், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய கட்டுப்பாட்டு ஆணையமும் ஆதரவளிக்கிறது."
3. Ms. Meeta Rani, Marketing Co-ordinator, Udyogi Plastics Pvt Ltd
"கடந்த ஐந்து ஆண்டுகளில் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் இந்தியாவில் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த பன்னாட்டு நிறுவனங்கள் இப்போது பாதுகாப்பிற்கான சர்வதேச தரங்களை ஆதரிக்கின்றன. பாதுகாப்பு விழிப்புணர்வும் கல்வியும் வளர்ச்சியடைந்துள்ளது. உகந்த பாதுகாப்புத் தீர்வுகளை ஏற்பதற்கான சரியான வழியை இவை காட்டுகின்றன. நிர்வாகம் தனது பணியாளர்களின் நலனில் கவனம் செலுத்த துவங்கியுள்ளது. அதிகரித்துவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் கலாசாரமும் அடுத்த பத்தாண்டுகளில் நல்ல முன்னேற்றத்தை அடைந்துவிடும். அரசாங்கமும் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தில் கண்டிப்புடன் உள்ளது. PPE போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் நல்ல இடத்தை அடைந்துள்ளன. கையுறைகள் மிக முக்கியமான PPE ஆகும். நுகர்வோரும்/நிபுணர்களும் இதனைப் பயன்படுத்தும்போது/மீண்டும் பயன்படுத்தும்போது, அதன் சூழலியல்/அளவுகள், அதன் நெகிழுந்தன்மை/துல்லியம் மற்றும் அதன் ஆயுட்காலம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். OSH சென்னை 2017 அனைத்து பங்குதாரர்கள், நுகர்வோர், நிறுவனங்கள், பாதுகாப்பு துறை பணியாளர்கள், அரசாங்க பாதுகாப்பு ஆய்வாளர்கள் மற்றும் சந்தைக்குமான கூட்டமைப்பாகும். மற்ற உலக நாடுகளைப் போல், நாங்கள் Proton Retractable Fall Arrestor, Proton Gloves மற்றும் மிகவும் பிரத்யேகமான Wind Harness ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளோம்."
4. Mr. Raj Kamal, Euro Safety Footwear India Pvt. Ltd.
"நாங்கள் இந்தியாவில் தொழில் துறையில் மிகப் பெரிய வளர்ச்சி வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறோம். எனவே நாங்கள் இதில் கவனம் செலுத்தி பல்வேறு முறைகளில் EHS அளவீடுகளுக்காகச் செலவிடுகிறோம். ஒட்டுமொத்தமாக, இந்திய துணை கண்ட சந்தையில் பெரிய பிராண்டுகள் நுழைந்து, தரமான உற்பத்தியாளர்கள் மத்தியில் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளுடன் போட்டிகரமான தயாரிப்புகளை அளிப்பதற்கான போட்டி ஏற்பட்டு PPE துறை மிக அதிகமான வளர்ச்சியடையும். OSH ஏற்கனவே இந்தியாவில் பாதுகாப்பு துறையைச் சேர்ந்தவர்களிடம் கவனம் செலுத்தி வருகிறது. அரசாங்கம் பணி இட பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சில வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது, ஆனால் அது போதுமானது அல்ல. 'Make in India' மூலம், இந்தத் துறை வளர்ச்சியை அதிகரிக்க தயாராக உள்ளது, ஆனால் அதே நேரத்தில், இதில் ஒரு பங்குதாரராக, அரசாங்கம் பணி இட பாதுகாப்பிற்கு கட்டுப்பாட்டு தேவைகளை வரையறுத்து, தொழிற்சாலைகள் முழுவதும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா என்று கண்காணிக்க வேண்டும். தற்போது புதுமையான வடிவமைப்பு இந்தத் துறையில் தேவைப்படுகிறது. Euro Safety பணி இடத்திற்கான சூழலியலுக்கேற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட PPEஐ குறைந்த விலையில், தரம் குறையாமல் அளிக்கிறது. எங்களின் R&D நடவடிக்கைகள் உலகத் தரங்களுக்கு இணங்க திறமிக்க, பயன்படுத்துவதற்கு சிறந்த தயாரிப்புகளை வடிவமைப்பதிலேயே கவனம் செலுத்துகிறது."
5. Mr. Padmanabhan Ramesh, Director, Toughscaff Pvt. Ltd.
"மனித உரிமைகளின் ஒருங்கிணைந்த பிரகடனம் ஆரோக்கியமான வேலை சூழல்களைக் கொண்ட பாதுகாப்பான, சுத்தமான சூழலை அடிப்படை மனித உரிமையாக அங்கீகரித்துள்ளது. தொழிலாளர்களின் ஒட்டுமொத்த திறனை பாதிக்கும் இரண்டு முக்கியமான அம்சங்கள் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ஆகும். இந்தியா போன்ற நாடுகளில் பணியிட ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு பல சட்டங்கள் இருந்தாலும், இந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது மிகவும் சவாலான விஷயம். இது குறித்து தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க இந்தத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியம். இதற்காக Toughscaff Private Limited ஆகிய நாங்கள் Simian Skill, UK உடன் இணைந்து, சாரம் கட்டுபவர்களுக்கு உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட CISRS சான்றளிக்கப்பட்ட பயிற்சி வகுப்புகளை நடத்துகிறோம். CISRS சான்றிதழ் அல்லது பதிவு அட்டையைக் கொண்டிருக்கும் சாரம் கட்டுபவர், மேற்பார்வையாளர் அல்லது ஆய்வாளர்அவர்களின் துறையில் திறனையும் அறிவையும் பெற்றுள்ளார்கள் என்று இது வாடிக்கையாளர்களுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் ஒரு நம்பிக்கையை அளிக்கும். மேலும் இது உள்ளூர்/சர்வதேச வேலை வாய்ப்புக்களுக்கு ஊக்கமாக இருக்கும். இந்தச் சேவைகள் குறித்து தெரியாதவர்களுக்கு மிக அதிக அளவில் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு வகுப்புகளை ஊக்குவிப்பதற்கு OSH சென்னை சிறந்த மேடையாக இருக்கும். இது இலக்காகக் கொண்டிருக்கும் சந்தைக்கு விளம்பரப்படுத்தவும், புதிய சேவைகளை அறிமுகம் செய்யவும், துணை வணிக நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும், பிராண்ட் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்தச் சந்தையை சிறப்பாகப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. இந்த வணிகக் கண்காட்சியில் நாங்கள் பங்கேற்றதால் எங்களின் வணிகத்தை மேலும் சிறப்பாக மேற்கொள்வதற்கான வாய்ப்பு எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது."
UBM India பற்றி:
UBM India, இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராகும், இது உலகம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களையும் விற்பனையாளர்களையும் பல கண்காட்சிகள், மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் இணைப்பதற்கான மேடைகளை வழங்குகிறது. UBM India ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதிலும் பெரிய அளவில் 25 கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் நடத்துகிறது. இதனால் பல துறைகளின் வணிகத்திற்கு வழிவகுக்கிறது. UBM Asia கம்பெனியின் UBM India மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM Asia-வின் உரிமையாளர் UBM plc ஆகும். இது லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM Asia என்பது ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராகும், இது மெய்ன்லேண்ட் சீனா, இந்தியா மற்றும் மலேசியாவில் உள்ள மிகப் பெரிய வர்த்தக ஏற்பாட்டாளராகும். மேலும் விவரங்களுக்கு, ubmindia.inஐ பாருங்கள்.
UBM plc பற்றி:
UBM plc என்பது உலகிலேயே மிகப் பெரிய பிரத்யேக B2B நிகழ்ச்சி ஏற்பாட்டாளராகும். வளர்ந்துவரும் டிஜிட்டல் உலகில், மனிதர்கள் ஒரு காரணத்திற்காகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். UBMல் எங்களின் ஆழமான அறிவும், நாங்கள் செயல்படும் இந்தத் துறையில் எங்களுக்கு உள்ள ஆர்வமும் மக்கள் வெற்றிப் பெறுவதற்கான சிறந்த அனுபவங்களை உருவாக்க எங்களுக்கு உதவுகிறது. எங்களின் நிகழ்ச்சிகளில் மக்கள் உறவுகளைக் கட்டமைத்து, வணிகம் செய்து, தங்கள் தொழிலை வளர்ச்சியடைய செய்கின்றனர். எங்களின் 3,750+ உறுப்பினர்கள் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளனர், இவர்கள் 50க்கும் மேற்பட்ட வெவ்வேறு துறைகளில் செயல்படுகின்றனர். இதில் ஃபேஷன் முதல் மருந்து தயாரிப்பு உட்பொருட்கள் வரை அனைத்தும் அடங்கியிருக்கும். இந்த உலகளாவிய நெட்வொர்க் திறமிக்க, ஆர்வமுள்ளவர்களை ஒருங்கிணைத்து, வியாபாரிகள் தங்கள் லட்சியங்களை அடைய அற்புதமான வாய்ப்புக்களை அளிக்கும் நிகழ்ச்சிகளை வழங்குகிறது.
ஊடகத் தொடர்பு:
UBM India
Roshni Mitra
[email protected]
+91-22-61727000
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
Share this article