Kakinada Smart City Project-ற்காக Sterlite Tech தெரிவு செய்யப்பட்டுள்ளது
புனே, இந்தியா மற்றும் காக்கிநாடா, இந்தியா, June 27, 2017 /PRNewswire/ --
- திட்டத்தின் மாஸ்டர் சிஸ்டம் இன்டெக்ரேட்டர் ஆன ஸ்டெர்லைட் டெக் அடுத்த ஆறு ஆண்டுகள் நுட்ப நகரத்தினை வடிவமைத்து, உருவாக்கி, நிர்வகித்து வரும்
- இணையான IoT தளம், LoRa அடிப்படையிலான நகரம் முழுவதுக்குமான சென்சர் நெட்வொர்க்,பேரிடர் நிர்வாக அமைப்பு போன்ற பல தொழில்நுட்பங்களை முதன்முறையாக இந்தியாவுக்குக் கொண்டு வரும்.
ஸ்டெர்லைட் டெக் [BSE: 532374, NSE:STRTECH], ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷனின் இரண்டவாது ஆண்டு நிறைவு விழாவில் இந்தியாவின் ஆந்திரபிரதேச மாநிலத்திலிருந்க்கும் காக்கிநாடாவுக்கு ஸ்மார் சிட்டியினுடைய தீர்வுகளை நிறைவேற்றுவதற்காக ஸ்மார்ட் டிஜிட்டல் நெட்வொர்க் தொழில் நுட்பத்தில் முழுத் தீர்வையும் வழங்குவதில் முன்னனியில் இருக்கும் ஸ்டார்லைட் டெக் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஸ்மார்ட் சிட்டி மிஷனின் முதல் கட்டத்தின் முதல் இருபது நகரங்களில் ஒன்றாக காக்கிநாடா தெரிவுசெய்யப்பட்டது. நிகழ் நேர மேலாண்மை மற்றும் திறமையுடன் மக்கள் சேவை வாயிலாக காக்கிநாடாவின் 3.25 மக்களின் தினசரி வாழ்க்கையில் ஒரு நிலைமாற்றத்தைக் கொண்டுவருவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் பகுதியாக இது அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு காக்கிநாடா ஸ்மார்ட் சிட்டியை வடிவமைத்து, உருவாக்கி, நிர்வகித்து வரும்.
இந்தத் திட்டத்தின் தொழில்நுட்ப அடுக்கின் சிறப்பம்சம் பற்றி Shri S Aleem Basha, Commissioner, Kakinada Municipal Corporation, `மொபிலிட்டியை மேம்படுத்துவது, சூழ்நிலைகுறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவது, பொதுமக்களுக்கான பாதுப்பை மேம்படுத்துவது, தரவு அடிப்படையிலான முடிவெடுத்தலை அறிமுகப்படுத்துவது போன்றவை காக்கிநாடாவுக்கான எங்களது மூலோபாய நோக்கம் ஆகும். இந்த தொலைநோக்குக்கு இணங்க, ஸ்டெர்லைட் டெக் இந்த ஹை-டெக் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ஸ்மார்ட்டர் நெட்வொர்க் தொழில்நுட்பங்களைக் கொண்டுவரும்' என்றார்.
இது குறித்து Shri Sujay Arun J, CEO, Kakinada Smart City Corporation Limited, "உள்கட்டமைப்பு மற்றும் ICT முன்னேற்றதின் மீது கவனம் கொண்டு நகரம் முழுவதுமல்லாமது மிகவும் முக்கியமான இடங்களிலும் பகுதிவாரியான மேம்பாட்டுத் திட்டங்களை காக்கிநாடா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் கொண்டுவர எண்ணியிருக்கிறோம். புதுமையான ஸ்மார்ட் சிட்டி செயலிகளையும், தீர்வுகளையும் வழங்குவதில் ஸ்டெர்லைட் டெக்கிற்கு இருக்கும் அனுபவத்தின் அடிப்படையில் அவர்களை எங்களுடைய செயல்படுத்தும் கூட்டாளியாகத் தெரிவு செய்திருக்கிறோம்" என்று கூறினார்.
ஸ்மார்ட் சிட்டி தொடர்பாக பல ICT தீர்வுகளை வழங்குவதற்கு காக்கிநாடா ஸ்மார்ட் சிட்டி கார்ப்பொரேஷன் ஸ்டெர்லைட் டெக்கை அதனுடைய செயல்படுத்தும் கூட்டாளியாகத் தெரிவு செய்திருக்கிறது. கமான்ட் கண்ட்ரோல் செண்டர், CCTV கண்காணிப்பு, Wi-Fi, ஆட்டோமாடிக் நம்பர் பிளேட் ரெககினிஷன், ஃபேஸ் டிடெக்ஷன், கழிவு மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் சில தளங்கள்; இணையான IoT தளம், LoRa அடிப்படையிலான நகரம் முழுமைக்கான வயர்லெஸ் சென்சர் நெட்வொர்க் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைப்பு போன்றவை இதில் அடங்கும்.
இந்தத் திட்டத்தைப் பற்றி K S Rao, COO - Telecom Products and Services, Sterlite Tech, " வலிமையான வெப் ஸ்கேல், ஆப்டிக்கல் ஃபைபரை பின்புலமாகக் கொண்ட ஸ்மார்டர் ஆப்டிக்கல் ட்ரான்ஸ்போர்ட் நெட்வொர்க் போன்றவற்றின் வழியாக ஸ்மார்ட் சிட்டி தீர்வுகளை வடிவமைத்து, உருவாக்கி, நிர்வகிப்பதில் காக்கிநாடா ஸ்மார்ட் சிட்டி கார்ப்பொரேஷனுடன் கூட்டாளியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நகர அதிகாரிகளுக்கும், காக்கிநாடா மக்களுக்கும் இடையேயான வலுவான தொடர்புக்கு ஸ்மார்ட்டர் நெட்வொர்க் பின்புலம் ஒரு தூணாக அமையும்" என்று விளக்கினார்.
தெரிவு மற்றும் திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து Dr Anand Agarwal, CEO, Sterlite Tech, `எங்களுடைய வாடிக்கையாளர்கள் - சேவை வழங்குபவர்கள், ஸ்மார்ட் சிட்டிஸ், கிராமப்புற ப்ராட்பேண்ட் மற்றும் ராணுவம் - டிஜிட்டல் நெட்வொர்க்கை வடிவமைப்பது, உருவாக்குவது, நிர்வகிப்பது ஆகியவற்றில் முழு திறமை கொண்ட கூட்டாளிகளை தேடுகிறார்கள் என்பது குறித்த விழிப்புணர்வு எங்களிடையே அதிகரித்து வருகிறது. தனித்துவமான சிலிகன் முதல் மென்பொருள் வரையிலான திறனைக் கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் டெக் செயல்திறனுக்கான வலுவான SLA காப்புடன் கூடிய நீண்ட கால கடமையுடன் வாடிக்கையாளருடன் கூட்டாளி ஆகிறது. உலகத்தில் சிறந்த சேவைக்கு இணையாக காக்கிநாடாவிலிருக்கும் மக்களின் நலத்தை மையமாகக் கொண்ட சேவைகளை வலுப்படுத்தும் உறுதிமொழியோடு காக்கிநாடா ஸ்மார்ட் சிட்டி கார்ப்பொரேஷனுடன் கூட்டாளி ஆவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்' என்றார்.
தற்சமயம் ஸ்டெர்லைட் டெக் காந்திநகர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்மார்ட் சிட்டிகளின் செயல்பாடுகளை நிர்வகித்து வருகிறது. அதனுடைய ஒருங்கிணைந்த நுட்பமான பொருட்கள், சேவைகள், மென்பொருள் தீர்வுகள் மூலம் ப்ராட்பேண்ட் நெட்வொர்க்கை வடிவமைத்து, உருவாக்கி வலுவான 146 காப்புரிமைகளுடன் நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் நிர்வகித்து வருகிறது.
ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் குறித்து:
ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் [BSE:532374, NSE: STRTECH], டிஜிட்டல் நெட்வொர்க்கை வடிவமைத்து, உருவாக்கி, நிர்வகிப்பதில் உலகளவிலான ஒரு முன்னனி தொழில்நுட்ப நிறுவனமாகும். டிஜிட்டல் நெட்வொர்க்கை மையமாகக் கொண்ட தொழிலுக்கு பல்வேறு வகையான பொருட்களை - ஆப்டிக்கல் கம்யூனிகேஷன் பொருட்கள், நெட்வொர்க் & கணினி ஒருங்கினைப்பு சேவை மற்றும் OSS/BSS மென்பொருள் தீர்வுகள் என பலவகைகளில் ஸ்டெர்லைட் டெக் ஆறு கண்டங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது. ஸ்மார்ட்டர் நெட்வொர்க்கை தினசரி வாழ்க்கையில் நிலைமாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகளில் நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட உற்பத்திசாலைகளை இந்நிறுவனம் கொண்டிருக்கிறது. 146 காப்புரிமைகளின் வலுவோடு, இந்தியாவில் ப்ராட்பேண்ட் ஆய்வுக்கான ஒரே செண்டர் ஆஃப் எக்சலன்ஸ் ஸ்டெர்லைட் டெக் ஆகும். இந்நிறுவனம் மேற்கொண்ட சில திட்டங்களில் ராணுவத்திற்காக மேற்கொண்ட இண்ட்ரூசன் ஃப்ரூப் ஸ்மார்ட்டர் டேட்டா நெட்வொர்க், பாரத்நெட்டுக்கான கிராமப்புற ப்ராட்பேண்ட், ஸ்மார்ட் சிட்டிஸ் மேம்பாடு மற்றும் அதிவேக ஃபைபர் டூ ஹோம் நெட்வொர்க்கை (FTTH) நிறுவியது போன்றவை அடங்கும்.
மேலதிகத் தகவலுக்கு, http://www.sterlitetech.com
ஊடகத் தொடர்பு;
Corporate Communications
Sumedha Mahorey
Phone: +91-22-30450404
Email: [email protected]
பங்குதாரர் தொடர்புக்கு
Vishal Aggarwal
Phone: +91-20-30514000
Email: [email protected]
Sterlite Technologies Ltd
Share this article