புது டெல்லி, June 23, 2017 /PRNewswire/ --
டெல்லியின் சட்ராசல் அரங்கம் இந்த வார இறுதியில் 'ஓம்' என்னும் மந்திரத்தால் புத்துயிர் பெறப்போகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் Yogacharya Amit Dev ji-யின் முறையான வழிகாட்டுதலின்படி யோகா செய்ய போகிறார்கள். இந்த மந்திரம் மனம், உடல் மற்றும் ஆன்மாவை குணமாக்கும் என்பதால் பல ஆண்டுகளாக அவதிக்குள்ளாக்கிய நோய்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் குணமடைவார்கள்.
(Photo: http://mma.prnewswire.com/media/526953/Yogacharya_Amit.jpg )
யோகா என்பது பல நூற்றாண்டுகளுக்கு முன்பிலிருந்து இந்தியர்கள் பின்பற்றிவரும் பயிற்சி என்றாலும், இதன் பலன்களை முழுவதுமாக அடைவதற்கு எப்படி கச்சிதமாகச் செய்வது என்று பலருக்கு தெரியாது. அதனால் தான் ஒருவருக்கு குரு தேவைப்படுகிறார். யாராலும் Yogacharya Amit Dev ji-யைவிட சிறப்பாகச் செய்ய முடியாது. இவருடைய தலைமுறைகள் உலகிற்கு யோகாவைக் கற்றுக்கொடுத்து, உலகத்திற்கு ஆறுதலளித்துள்ளனர்.
Yog Abhyas Ashram Society என்பது Ramlal Mahaprabhu ji என்பவரால் 1888ல் துவங்கப்பட்டது. இவர் பிளவுப்படாத இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த தெய்வீகப் பயணத்தைத் துவங்கினார். இவர்களில் முக்கியமானவர்கள் Yogeshwar MulakRaj ji Maharaj (இரண்டாவது குருதேவர்), Yogeshwar Devi Dayal Ji Maharaj (மூன்றாவது குருதேவ்), Yogeshwar Surender Dev Ji Maharaj (நான்காவது குருதேவ்). அதன் பிறகு நாடு முழுவதிலும் பெரிய யோகா மையங்களும், 17 மாநில அளவில் பதிவு பெற்ற சங்கங்களும் உருவாகின. இவை 2016லிருந்து எங்களின் மிகச் சிறந்த குருக்களின் போதனைகளைப் பரப்பிவருகின்றன. Yogacharya Amit Dev ji, இவற்றை பிரசாரம் செய்தும், யோகா மூலமும் தியானத்தின் மூலமும் மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியும், 21ஆம் நூற்றாண்டிலும் இந்த மரபை முன்னெடுத்துச் சென்று, இலக்கை அடைய முயற்சி செய்கிறார்.
Mahaprabhu ji -யின் யோகா முகாம் ஜூன் 24, சனிக்கிழமையன்று காலை 5:00 மணிக்கு துவங்கி, ஜூன் 26, திங்கட்கிழமையன்று முடிவடையும். இது அரைமணிநேர தினசரி பிரார்த்தனையுடன் துவங்கும். இதனைத் தொடர்ந்து 1 மணிநேர தியானமும், அதன் பிறகு 1 மணிநேர யோக் சாத்னாவும் கிரியாக்களும் நடைபெறும். பங்கேற்பாளர்கள், மூத்த யோகாச்சார்யாக்களிடம் காலை 9:00 மணி முதல் 11 மணி வரை ஆலோசனைப் பெறலாம். மாலை நேரங்கள் பெரும்பாலும் பெண்களுக்கும் குழந்தைகளுக்குமென ஒதுக்கப்படும். அன்றைய தினத்தின் முகாம் இரவு 7: 45 மணிக்கு பிரார்த்தனையுடன் முடிவடையும்.
Yogacharya Amit Dev ji-யின் ஒளி, அவருடன் உரையாடுபவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும். அவரின் அன்பான மனத்தாலும், யோகா மற்றும் வேதம் குறித்து அவருக்கு இருக்கும் ஆழமான அறிவாலும் பல ஆண்டுகளாக அவரைச் சுற்றியுள்ள எண்ணற்ற நபர்களின் வாழ்வு வளம் பெறச் செய்துள்ளார். இவருடைய அமைப்பு யோகாவை கற்பிப்பதிலும், மக்களை குணப்படுத்துவதிலும் மட்டும் ஈடுபடாமல், யோகா சார்ந்த உடல்நல பராமரிப்பு மற்றும் தியானம் ஆகியவற்றில் விரிவான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுவருகிறது. இந்த அமைப்பு உலகம் முழுவதிலும் பல மையங்களைக் கொண்டுள்ளது. தினமும் இவை ஒவ்வொன்றிலும் 100-150 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த அமைப்பு டெல்லியில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவில் 17 மாநிலங்களில் 76 மையங்களைக் கொண்டுள்ளது.
மேலும் தகவலுக்கு, எங்கள் வலைதளத்தில் லாக் இன் செய்யுங்கள் http://www.yogacamp.co.in அல்லது https://www.facebook.com/indian.yogacharya FBயில் பின்தொடருங்கள்.
Mahaprabhu ji-யின் யோகா முகாம் இங்கு நடைபெறும்:
சட்ராசல் அரங்கம்
மஹாத்மா காந்தி ரோடு
ப்ளாக் B, குஜ்ரன்வாலா டவுன்
டெல்லி - 110009
ஜூன் 24 முதல் 26 வரை ஜூன் 2017 வரை
பதிவு செய்ய +91-11-4000-0777 என்கிற எண்ணை அழைத்திடுங்கள்.
ஊடகத் தொடர்பு:
Yogacharya Tanu
Executive Member
Yog Abhyas Ashram Society
[email protected]
+91-9911211777
Share this article