கோயம்புத்தூர், இந்தியா, February 13, 2017 /PRNewswire/ --
bigbasket, இந்தியாவின் மிகப்பெரிய இணையவழி சூப்பர்மார்கெட், வெற்றிகரமாக கோயம்புத்தூரில் 1 ஆண்டு காலத்தில் 25,000 வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்துள்ளது. bigbasket வசதியான, ஒற்றை நிறுத்த இணையவழி கொள்முதலை உயர் தர, புதிய தயாரிப்புகளுக்கு போட்டிகரமான விலையிலே வழங்கி, வாடிக்கையாளரின் வீட்டு வாசலிலேயே விநியோகிக்கிறது. Bigbasket இடம் நாடு முழுவதிலும் 4 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் மற்றும் தற்போது தோராயமாக 50,000 ஆர்டர்களை ஒவ்வொரு நாளும் பெற்று வருகின்றது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150911/10130176 )
Bigbasket.com இன் உள்ளே நுழைந்து கோயம்புத்தூரை இருப்பிடமாக தேர்வுசெய்து, வாடிக்கையாளர்கள் மளிகை சாமான்களையும் வீட்டுக்கான பொருட்களையும் வாங்கலாம் அல்லது Apple மற்றும் Android இணக்கமான bigbasket பயன்பாட்டை பதிவிறக்கம் செய்தும் ஒரு ஆர்டரை முன்வைக்கலாம். bigbasketஇல் ஒரு ஆர்டரை முன்வைப்பது மிகவும் வசதியான ஒரு செயல்முறை மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகள், ஸ்டேபில்கள், வீட்டுக்கான பொருட்கள், தனிப்பட்ட பராமரிப்பு, இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் தனிச்சுவையானவை உள்ளிட்ட அதிகமான ரகத்திலான பொருட்களில் இருந்து வாடிக்கையாளர்கள் தேர்வுசெய்யலாம். bigbasket நாட்டிலேயே சிறந்த சேவை அளவீடான 99% மற்றும் 98+% சரியான விநியோக நேரத்தை கொண்டு இருப்பதாக கோருகின்றது. Bigbasket உடைய தனிப்பட்ட லேபிலில் இருந்து விற்பனைகளின் விற்றுமுதல் 6-8 மாதங்களில் தற்போதுள்ள 35%இல் இருந்து 40%க்கு மேல்நோக்கி செல்லக்கூடியதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
"கோயம்புத்தூரில் 25,000 வாடிக்கையாளர் அளவை கடந்து சென்றதில் நாங்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளோம். நாங்கள் இந்த நகரத்தின் குடிமக்களிடம் இருந்து மகத்தான வரவேற்பை பெற்றுள்ளோம் மற்றும் எங்கள் மீது நம்பிக்கை வைத்து இருக்கும் ஒவ்வொருவருக்கும் நாங்கள் உண்மையுடன் நன்றியை தெரித்துக்கொள்கிறோம். சந்தையில் இருக்கும் பிறரைக் காட்டிலும் எங்கள் சேவை மற்றும் தரம் உயர்வானதாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கண்டுள்ளது எங்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கிறது. எங்களுடைய உத்தரவாதமான ஆர்டர் நிரப்பும் விகிதம் மற்றும் கேள்வி கேட்காமல் ஆர்டரை திரும்பப்பெறும் கொள்கை ஆகியவற்றுடன், bigbasket கோயம்புத்தூரின் சூப்பர்மார்கெட் வாங்குநர்களுக்கு விருப்பமான தெரிவாக மாறியுள்ளது. பழங்கள் மற்றும் காய்கறிகள், ஸ்டேபில்கள் மற்றும் வீட்டுக்கான பொருட்கள் ஆகியவை கோயம்புத்தூர் மக்களிடையே பெரும் தேவையை கண்டுள்ளது. இந்த நகரத்திலே, 75% ஆர்டர்கள் ஆப் மூலம் பெறப்பட்டுள்ளன," என்று Mr. Sundar R, பிராந்திய தொழில் தலைவர், bigbasket கூறியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த, Mr. Hari Menon, இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, bigbasket இவ்வாறு கூறினார், "வாடிக்கையாளர் மீதான கவனம், நிர்வாக சிறப்புத்தன்மை மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் கலவை எங்களை மீதமுள்ளோர் இடம் இருந்து பிரித்து வைத்துள்ளதாக நாங்கள் நம்புகிறோம். விவரப்பட்டியல் சார்ந்து இருக்கும் எங்கள் விநியோக மாதிரியே இதற்கு முக்கியமான காரணம். பெரிய எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை சந்திப்பதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும். எங்கள் இயற்கை விளைபொருட்களையும் தனியார் லேபில்களையும் அதிகரிப்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம் - Fresho, Royal Organic, Tasties, HappyChef Gourmet மற்றும் Popular, கோயம்புத்தூரில் இருக்கும் எங்கள் புத்தம் புதிய வாடிக்கையாளர்கள் கூட்டமும் இதை நாடுவார்கள் என்பதே இதன் அர்த்தம் எங்கள் தனிச்சுவை மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட வகைகள் குறித்தும் நாங்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளோம்."
bigbasket ஒரு மத்திய கிடங்கை இயக்குகிறது, இங்கிருந்து அனைத்து விநியோகங்களும் செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர் விநியோகங்களுக்காக இந்நிறுவனத்திலே தனக்கே சொந்தமான இடப்பெயர்ப்பு உள்கட்டுமானம் இருக்கிறது. அனைத்து நடைமுறைகளும் பிழை இல்லா செயல்பாடுகளும் நவீன தகவல் தொடர்பு உதவியின் ஆதரவை, மற்றும் bigbasket 98+% சரியான நேர விநியோக விகிதங்களையும் 99%க்கும் மேற்பட்ட ஆர்டர் நிறைவு செய்தல் விகிதத்தையும் தொடர்ச்சியாக அடைந்துள்ளது. புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள், மளிகைபொருட்கள் மற்றும் ஸ்டேபில்ஸ், இறைச்சி, தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் வீட்டு மற்றும் சமையலறை தயாரிப்புகள் உட்பட 20,000க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் உள்ளடங்கிய விவரப்பட்டியலுடன், bigbasket ஒரு வீட்டிற்கு தேவையான அனைத்தையும் விநியோகிக்கிறது.
bigbasket குறித்து
bigbasket டிசம்பர் 2011 ஆம் ஆண்டு பெங்களூரில் ஐந்து பேர் கொண்ட குழுவினால் நிறுவப்பட்டது - V S Sudhakar, Hari Menon, Vipul Parekh, V S Ramesh மற்றும் Abhinay Choudhari. இக்குழுவுக்கு ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் சில்லரை வர்த்தகங்கள் இரண்டிலுமே அனுபவம் உண்டு, ஏனெனில் அவர்கள் முன்னதாக இந்தியாவின் முதல் இ-காமர்ஸ் தளமாகிய FabMart.comஐ 1999ஆம் ஆண்டு அமைத்தார்கள், பின்னர் 200 மளிகை சூப்பர்மார்கெட் கடைகளை உடைய Fabmall - Trinethra சங்கிலியை நிறுவினார்கள். 20,000க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுடனும் 1000க்கும் மேற்பட்ட பிராண்டுகளுடனும் நாடு முழுவதிலும் பெங்களூர், ஹைதராபாத், மும்பை, பூனே, சென்னை மற்றும் தில்லி-என்சிஆர் உள்ளிட்ட 30 நகரங்களில் இருப்பையும் கொண்டு விரைவில் பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தும் திட்டத்துடன் 4 மில்லியன் பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து bigbasket இந்தியாவின் மிகப்பெரிய இணையவழி சூப்பர்மார்கெட்டாக மாறியுள்ளது. bigbasket உடைய இணையவழி உணவுக் கிஅடை பல்வேறு பிரிவுகளில் பல்வேறு வகையிலான தயாரிப்புகளை அளிக்கிறது: புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள், மளிகைபொருட்கள் மற்றும் ஸ்டேபில்கள், பானங்கள், ப்ரெட், பால் மற்றும் முட்டை தயாரிப்புகள், பிராண்டட் உணவுகள், இறைச்சி, தனிப்பட்ட பராமர்டிப்பு மற்றும் வீட்டுக்கான பொருட்களோ. bigbasket வாழ்க்கையை எளிமையாக்கவும் மளிகைப்பொருள் வாங்குவதை ஒரு தென்றல் காற்றைப்போன்று மாற்றவும் தன்னை அர்ப்பணித்து உள்ளது!
ஊடக தொடர்பு:
Paromita Sarkar
[email protected]
+91-9313331668
Talking Point Communications
Share this article