மும்பை மற்றும் சிங்கப்பூர், January 9, 2017 /PRNewswire/ --
எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நாட்டின் ஒப்புயர்வற்ற IPC ன் தலைமைப் பொறுப்பில் முக்கியமான மாற்றங்கள்.
JLL India - யிலிருந்து விலகிக் கொள்வதாக தனது முடிவை இன்று அதன் சேர்மனும், நாட்டின் தலைவருமான Anuj Puri இன்று அறிவித்ததோடு Ramesh Nair அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், நாட்டின் தலைவராகவும் பதவி வகிப்பார் என்பதையும் உறுதிபடுத்தினார். Mr. Puri 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 அன்று சென்றவுடன், மார்ச் 1, 2017 முதல் Ramesh Nair அவருடைய புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்வார். அவர் JLL Asia Pacific - ன் தலைமை நிர்வாக அதிகாரியான Anthony Couse-க்கு ரிப்போர்ட் செய்வார்.
(Photo: http://mma.prnewswire.com/media/455012/PRNE_RameshJLL_Image.jpg )
(Photo: http://mma.prnewswire.com/media/455011/PRNE_AnujJLL_Image.jpg )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160316/10142243 )
2007 ஆம் ஆண்டு Anuj Puri அவருடைய நிறுவனமான ட்ராமெல் க்ரோ மெக்ராஜ் (Trammell Crow Meghraj - TCM) - ஐ உலகளாவிய ரியல் எஸ்டேட் நிறுவனமான JLL -ன் இந்தியப் பிரிவோடு இணைத்தபோது JLL -ல் சேர்ந்தார். இந்த வல்லமை மிக்க கூட்டால் இந்தியத் துணைக் கண்டத்திலேயே பெரிய ரியல் எஸ்டேட் சேவை நிறுவனமாக இது உயர்ந்தது.
"பத்துவருடங்கள் JLL ல் வியக்கத்தக்கதாக இருந்தது, ஆனால் இப்போது புதிய வழியில் செல்வதற்கு முன்பு கொஞ்சம் பின்வாங்கி நினைத்துப்பார்க்க வேண்டியிருக்கிறது, என Anuj Puri கூறினார். "இந்த நிறுவனத்தில் உள்ள சிறந்த தலைவர்கள் எல்லாம் அவர்களுடைய முக்கியமான கட்டத்தில் இருக்கிறார்கள் அந்த மாதிரியான ஒருவரிடம் எனது பொறுப்பை ஒப்படைக்கிறேன். Ramesh Nair, கடந்த பல ஆண்டுகளாக தான் எடுத்துக் கொண்ட அனைத்திற்கு வலு மேல் வலு சேர்ந்து பல முறை பெருமை தேடித் தந்திருக்கிறார். பல ஆண்டுகளாக அவரோடு நான் நெருக்கமாக வேலை செய்திருக்கிறேன். JLL ஐ பல புதிய நிலைகளுக்கு அவர் எடுத்துச் செல்வதற்கு முற்றிலும் சரியானவர் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது' என்றார்.
Ramesh Nair-ருடைய தலைமைத்துவ சாத்தியக்கூறும், தொழில் ரீதியிலான வெற்றி குறித்த அவரது வரலாறும் JLL India - ல் நன்கு ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. நிறுவனத்தில் பல்வேறு தொழில் பிரிவுகளின் குழுக்களுக்கு தலைமை தாங்கியது, தொழில் வளர்ச்சியில் அவருக்கிருந்த கவனம், முன்னேற்றம் அதை அவரது அணியினர் முன்னோக்கி எடுத்துச் சென்றது ஆகியவற்றில் அவர் சிறந்த பெயர் பெற்றவர். அவருடைய திறனை திறமை மேம்பாடு, உத்தி மற்றும் நிறுவனத்தின் மையப் பண்புகளை பெருக்குவது ஆகியவற்றில் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தினார். JLL India-ல் பெரிய வரவு-செலவு திட்டம் கொண்ட சில பிரிவுகளை நிர்வகித்ததோடு, அணிகளுக்குத் தலைமை தாங்குவது, மாற்றம் சம்பந்தமான மேலாண்மை, பல் வேறு சொத்து வகைகளையும், இடங்களையும் சேர்ந்த உள்நாடு மற்றும் வெளிநாடைச் சேர்ந்த உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் சேவை செய்தது என பரந்த அனுபவத்தையும் கொண்டவராவார்.
"JLL -ன் இந்தியப் பிரிவுக்குத் தலைவராக பொறுப்பேற்பது என்பது சிறந்த கெளரவமாகும் என்ற Ramesh Nair, `இந்த நிறுவனத்தில் கடந்த பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக எனது பயணம் சிறப்பாக இருந்ததோடு Anuj மற்றும் பிராந்திய, இந்திய தலைமைத்துவக் குழுவினர் காட்டிய ஆதரவுக்கும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடு உத்வேகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் JLL - ஐ தலைமையேற்று நடத்த முடியும் என அவர்கள் என்மீது கொண்டிருக்கும் நம்பிக்கைக்கும் நான் நன்றி தெரிவிக்க ஆசைப்படுகிறேன். இந்திய மற்றும் உலக அளவிலான ரியல் எஸ்டேட் துறையில் Anuj ஒரு ஜாம்பவான். அவரது இடத்தை நிரப்புவது என்பது கண்டிப்பாக ஒரு பெரிய வேலைதான். இருப்பினும், மிகச் சிறப்பான விளைவுகளை உருவாக்கவும், அடுத்த நிலைக்கு வளர்ச்சியை எடுத்துச் செல்வதற்கும் நம்முடைய க்ளையண்டுகளுடனும், குழுக்களுடனும் நெருக்கமாக வேலை செய்வதை நான் எதிர்பார்க்கிறேன்.
தலைமை நிர்வாக அதிகாரியாகவும், நாட்டின் தலைவராகவும் JLL India - வின் அனைத்து இயக்கம், உத்தி மற்றும் வளர்ச்சிக்கும் அவர் பொறுப்பாவார். 1999 ஆம் ஆண்டு JLL - ல் சேர்ந்த அவர் தலைமைப் பொறுப்பிற்கு மிகவும் விரைவாக உயர்ந்ததோடு 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இண்டியா லீடர்ஷிப் கவுன்சிலிலும் ஆரம்பத்திலிருந்து உறுப்பினராக இருந்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு அவர் இந்தியாவின் தலைமை செயல்பாட்டு அதிகாரியாகவும், 2014 ஆம் ஆண்டு சர்வதேச இயக்குநராகவும் பதிவு உயர்வு செய்யப்பட்டார்.
"கடந்த பத்து ஆண்டுகளாக தன்னுடைய தொழில் அந்தஸ்தினாலும், பங்களிப்புகளினாலும் நிறுவனத்துக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை கொடுத்த Anuj Puri JLL -ன் மிகப் பெரிய சொத்து ஆவார். பிராந்திய மற்றும் இந்தியக் குழுவினரின் சார்பாக அவருடைய அளப்பற்றப் பங்களிப்புக்கு மனமார நன்றி கூறுகிறேன். நம்முடைய இந்தியத் தலைமையில் சிறந்த திறமைசாலிகளைக் கொண்டிருப்பது நமது அதிர்ஷ்டம் - Anuj-னால் தெரிவு செய்யப்பட்டு பிராந்திய தலைமையால வழிமொழியப்பட்ட Ramesh Nair மிகவும் தகுதிவாய்ந்த வழித்தோன்றல் ஆவார். உறுதிக்கும், உந்துதலுக்கும், மீட்டெழுச்சிக்கும், ஆற்றலுக்கும் நன்கு அறியப்பட்ட Ramesh தன்னோடு அதையும் நிறுவனத்துக்குக் கொண்டுவருவார். Ramesh உடன் மிகவும் நெருக்கமாக வேலை செய்வதை நான் எதிர்பார்ப்பதோடு ரூ 3000 கோடி அளவிலான நம்முடைய இந்திய தொழிலின் வளர்ச்சித் திட்டத்துக்கான நடவடிக்கையையும் அவர் செயல்படுத்துவதை பார்க்க விரும்புகிறேன்.
JLL India பற்றி
ரியல் எஸ்டேட் துறையில் சிறந்து விளங்கும் JLL இந்தியாவின் பிரதானமான, பெரிய தொழில் நிபுணத்துவம் மிக்க சேவை நிறுவனமாகும். பதினோரு நகரங்களில் (அகமதாபாத், டெல்லி, மும்பை, பெங்களூர், புனே, சென்னை, ஹைதாரபாத், கொல்கத்தா, கொச்சி, சன்டிகார், கோயம்புத்தூர்) பரந்து விரிந்து 9000 பணியாளர்களைக் கொண்டிருக்கும் இந்நிறுவனம் ஆய்வு, பகுப்பாய்வு, ஆலோசனை, பரிவர்த்தனை, திட்டம் மற்றும் மேம்பாட்டு சேவைகள், ஒருங்கிணைந்த வசதி மேலாண்மை, நிலம் மற்றும் சொத்து மேலாண்மை, பேண்தகைமை, தொழில் துறை, முதலீட்டு சந்தை, வீடு, ஹோட்டல், ஆரோக்கியம், முதியோர் வாழ்வு, கல்வி மற்றும் ரீடெயில் ஆலோசனை போன்ற விரிவான பலதரப்பட்ட சேவைகளை தனது முதலீட்டாளர்கள், மேம்படுத்துவோர், உள்ளூர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிறுவனத்துக்கு 10வது CNBC - Awaaz ரியல் எஸ்டேட் 2015 ன் ப்ராப்பர்ட்டி கன்சல்டண்ட் ஆஃப் தி டிகேட் என்கிற விருதும், இண்டர்நேஷனல் ப்ராப்பர்ட்டி அவார்ட்ஸ் ஆசியா - பசிஃபிக் 2016-17ன் பெஸ்ட் ப்ராப்பர்ட்டி கன்சல்டன்சி இன் இந்தியா என்கிற விருதும் வழங்கப்பட்டன.
ஊடகத் தொடர்பு:
Arun Chitnis
[email protected]
+91-9657129999
தலைவர் - Corporate Communications & Media Relations, JLL India
Share this article