சென்னை, September 30, 2016 /PRNewswire/ --
Madras Jewellers and Diamond Merchants Association (MJDMA) மற்றும் UBM India ஆகியோர் மீண்டுமாக மெகா B2B ரத்தினம் மற்றும் நகை பெருவிழா - the Gem and Jewellery India International Exhibition (GJIIE) உடன் வருகின்றன,சென்னை வர்த்தக மையத்தில் அக்டோபர் 7-9, 2016 வரை. GJIIE உடைய 12வது நிகழ்வு தரநிலைகளை உயர்த்தி இந்தியாவில் உள்ள நகைத் துறையின் வர்த்தகத்தை அதிகரிக்கக்கூடியதாக இருக்கும்.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160929/413254LOGO)
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c)
350க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் மற்றும் சில்லரை வர்த்தகர்கள், கலைஞர்கள், மொத்தவியாபாரிகள் மற்றும் இயந்திர உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பங்கேற்பாளர்கள் ஆகியோரால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் மூன்று நாள் கண்காட்சியில் அவர்கள் சமீபத்திய போக்குகளை இந்த உணர்வூட்டும் துறையிலே காட்சிப்படுத்துவார்கள். வரவிருக்கும் கண்காட்சியிலே நகை மொத்த வியாபாரிகள், சில்லரைவியாபாரிகள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், நகை உற்பத்தியாளர்கள், வைரம், ரத்தினக்கல், முத்து விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்கள், விலையுயர்ந்த உலோகம் மற்றும் நகை பதிக்கும் வணிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள், வர்த்தக மற்றும் அரசாங்க நிறுவனங்களில் இருந்து வரும் பிரதிநிதிகள் ஆகியோர் அனைவரும் ஒரே கூரையின் கீழ் வந்து, சந்தித்து, இணைந்து, பிணைப்பை ஏற்படுத்தி தங்கள் தொழிலை வளர்ப்பார்கள். இந்தியாவில் டையர் I, II மற்றும் III நகரங்களோடு கூடுதலாக, இக்கண்காட்சிக்கு மலேசியா, சிங்கப்பூர் மற்றும் துபாயில் இருந்து பிரதிநிதிகளின் பிரதிநிதித்துவம் இருக்கும், இதன் மூலம் சர்வதேசத்தையும் சென்றடையவும், GJIIE 2016 இருப்பையும் உறுதிப்படுத்த முடியும்.
5 மாளிகைகளில் பரப்பப்பட்டு இருக்கும் இந்த ஆண்டின் கண்காட்சிக்கு சென்னை, திருச்சூர், கோயம்புத்தூர், திருவனந்தபுரம், மதுரை, கொச்சின் ஆகிய நகரங்களில் இருந்தும், மும்பை, ஹைதராபாத், ராஜ்கோட், அஹமதாபாத், சென்னை, தில்லி, ஜெய்பூர், பெங்களூர், கோலாபூர், கேலிகட், சூரத் மற்றும் விஜயவாடா உள்ளிட்ட பல நகரங்களில் இருந்தும் பங்கேற்பு இருக்கும். கண்காட்சியாளர்களில் இடம்பெறும் சில பெயர்களில் Emerald, Krizz, Royal Chains, Sangam Chains, Damara Gold, Jewel Park, Mehta Gold, White Fire, Laxmi Diamonds, Bonitas Diamonds, Chain N Chains, Angel Gold, Anmol Swarn, Silver Emporium, Derewala, Harish Creations மற்றும் Ashlyn Chemunnoor ஆகியவை உள்ளடங்கும்.
கண்காட்சியின் சிறப்பு அம்சங்களில் Bureau of India Standard வழங்கும் 'Purity & Standard' என்னும் தலைப்பிலான தொழில்நுட்ப கருத்தரங்குகள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புகளை முதல் முறையாக காட்சிப்படுத்தும் ஒரு சிறப்பான களஞ்சியமான 'Innovative Zone' ஒன்றும் உள்ளடங்கும். விலையுயர்ந்த உலோகங்கள் மற்றும் ரத்தின கற்களினால் செய்யப்பட்ட சிறு உருவங்களும் இந்த களஞ்சியத்தின் மேலும் ஒரு ஆர்வமூட்டும் சிறப்பு அம்சமாக இருக்கும்.
முதல் முறையாக, GJIIE 2016 கண்காட்சியில், இப்பகுதியில் சிறந்த சில்லரை வர்த்தகர்களை கௌரவிக்கும் Tamil Nadu Retail Jewellers Awards என்னும் தனித்துவமான முயற்சி இடம்பெறும். பரிந்துரைக்கப்படும் பிரிவுகளுக்கான விரும்பத்தக்க சில விருதுகளில் உள்ளடங்குவை 'Design Excellence', 'Best Print Ad', 'Best Marketing Campaign', 'Store of the Year', 'Exemplary Customer Service', 'Best Retail Team of the Year', மற்றும் பல. அற்புதமான நகைகளை காட்சிப்படுத்தி, இந்த காலகட்டத்துக்கான போக்குகளை கவரும் நவநாகரீக அணிவகுப்புகளுக்கு இடையே இந்த விருதுகள் அளிக்கப்படும்.
UBM இதுவரையிலும் 30 ஆண்டுகளாக நகைத் துறையின் உள்ளார்ந்த அங்கமாக இருந்து வருகிறது, உலகெங்கும் இதேபோன்ற புகழ்பெற்ற நகை கண்காட்சிகளை ஒருங்கிணைத்து வருகிறது. GJIIE என்பது UBM Indiaவினால் ஆண்டு முழுவதும் நடத்தப்படும் நான்கு நகர (Kolkata, Chennai, Hyderabad and Delhi) நகை கண்காட்சிகளில் ஒன்றாகும்.
GJIIE 2016 அறிவிப்பின்போது பேசிய, Mr. Jayantilal Challani, தலைவர், MJDMA இவ்வாறு கூறினார், "நுகர்வோர் முன்னுரிமைகளில் இந்த துறை மாற்றங்களை கண்டு வரும்போதும், சமகால வடிவமைப்புகளுக்கு மகத்தான தேவை இருக்கும்போதும், இந்தியாவின் ஒருங்கிணைக்கப்பட்ட நகை சில்லரைவர்த்தகத் துறையில் நாங்கள் ஒரு வளர்ச்சிக்கான வாய்ப்பைக் காண்கிறோம். மேலும், இன்றைய நுகர்வோர் சான்றுபெற்ற, ஹால்மார்க்பெற்ற நகைகளை தேடுகிறார்கள், மற்றும் நாங்கள் ஹால்மார்க் மட்டும் அல்லது மூன்றாம் தரப்பு சர்வதேச ஆய்வகங்களினால் சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளையும் பரிந்துரைக்கிறோம். UBM Indiaவின் GJIIE தான் தங்கள் சமீபத்திய வழங்கல்களை நகை சில்லரை வியாபாரிகளுக்கு காட்சிப்படுத்துவதற்கான சரியான தளம்."
GJIIE 2016 அறிவிப்பின்போது பேசிய Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India இவ்வாறு கூறினார், "இந்தியா, தங்கத்திற்கான மிகப்பெரிய நுகர்வோரில் ஒன்று. நகைக்கடை சங்கிலிகள் தெற்குப்பகுதியை இலக்குவைப்பது அதிகரிக்கும்போது, நாட்டின் உள்ளே தங்கத்திற்கான முன்னணி நுகர்வோராக தென் இந்தியா தொடர்கின்றது. கோவில் நாக்ஷி நகை, கல் பதிக்கப்பட்ட நகை மற்றும், மாங்கா மாலை, காசு மாலை மற்றும் பச்சி வடிவமைப்புகள் போன்ற திருமண நகைகள் ஆகியவை உள்ளிட்ட பொறாமைப்படக்கூடிய சரித்திரம் இந்த பகுதிக்கு உண்டு. இவை இந்த கண்காட்சியில் பல சமகால, போக்குள்ள வடிவமைப்புகளுடன் காட்சிப்படுத்தப்படும். GJIIE 2016 மூலமாக UBM Indiaவின் முயற்சியானது தெற்கு மாகாணத்தில் நிறுவப்பட்ட மற்றும் நிறுவப்பட இருக்கும் மையங்களுக்கு ஆதரவு அளித்து அவர்களுக்கும் தொழிற்துறைக்கும் பெரிய வகையில் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே."
MJDMA பற்றி:
The Madras Jewellers & Diamond Merchants Association (MJDMA) என்பது 1,200 சிறு, நடுத்தர மற்றும் பெரிய நகைக்கடைகளின் உறுப்பினர்த்துவம் பெற்ற ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். இந்த கழகத்தின் பிரதான நோக்கமானது புதிய வழித்தோன்றல் மற்றும் தொடர்புடைய சந்தைகள் நிறுவப்படுவதை ஊக்கப்படுத்துவதும், தகவல் தொடர்பு மற்றும் தகவல்களுக்கான பாதைகளை அதன் உறுப்பினர்கள் இடையே வலிமைப்படுத்துவதும் ஆகும். இந்த முயற்சியை மனதில் வைத்து, இந்த கழகம் UBM India உடன் 2009 ஆம் ஆண்டு கைகோர்த்தது.
மாநிலம் மற்றும் மத்திய அரசாங்கத்தில் நகைவியாபார சகோதரரர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளை MJDMA பிரதிபலித்து, அதற்கான தீர்வைக் காண வகைதேடுகின்றது. இது வர்த்தக வளர்ச்சி நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் பணிப்பட்டறைகளை GIA (Gemological Institute of America) மற்றும் IGI (International Gemological Institute) இணைந்து நடத்துகின்றது, இது நகைவியாபாரிகளுக்கு வர்த்தகத்திற்குத் தேவையான அறிவியல் கல்வியை அளிக்க உதவுகின்றது. மேலும் விவரங்களுக்கு, தயவு செய்து வருகை தாருங்கள் http://www.mjdma.org .
UBM India பற்றி
UBM India என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களைஅளிக்கிறது. UBM India ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு UBM Asia நிறுவனமான, UBM இந்தியாவுக்கு மும்பை, புது தில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஆசியா லண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM Plcக்கு சொந்தமானது. UBM Asiaவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு, தயவு செய்து வருகை தாருங்கள் ubmindia.in.
ஊடக தொடர்பு:
Mili Lalwani
UBM India
[email protected]
+91-22-61727000
Share this article