சென்னை, September 28, 2016 /PRNewswire/ --
Liveday.in, தனது வாசகர்களுக்கு உணர்வுப்பூர்வமான பிரச்சனைகள், நடப்பு நிகழ்ச்சிகள், விளையாட்டு, சினிமா கிசுகிசுக்கள், அரசியல் மற்றும் பல செய்திகள் குறித்த நிகழ்-நேர செய்திப் புதுப்பிப்புகளை வழங்குவதன் மூலம் வாசகர்களை தமிழ்நாட்டுச் செய்திகளிலும் மற்றும் உலகச் செய்திகளிலும் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அவ்வப்பொழுது வாசகர்களுக்குத் தெரிவிப்பதன் மூலம் அவர்களுக்கு திருப்பு-முனையான இதழியலை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160817/398863LOGO )
Liveday.in, மே 5, 2016 அன்று தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. அது தொடங்கப்பட்ட நாள் முதல், துல்லியமான, உடனுக்குடனான செய்திகளை வழங்குவதன் வாயிலாக தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல வாசகர்களின் இதயத்தில் குறுகிய காலத்திலேயே இடம் பிடித்துள்ளது. மிகக் குறுகிய காலகட்டத்தில், இந்த ஆன்லைன் செய்தி போர்ட்டல் தனது இலக்கு வாடிக்கையாளர்களில் பெரும்பான்மையினரைக் கவர்ந்துள்ளது.
Liveday.in துல்லியமான மற்றும் நிகழ்-நேர செய்திகளை வழங்குவதன் மூலம், சர்வதேச அளவில் 196 நாடுகளில் நடத்தப்பட்ட Google பார்வையாளர்களின் ஆய்வின் மூலம் இந்த ஆன்லைன் செய்தி போர்ட்டல் 179 நாடுகளைச் சேர்ந்த மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாக இருக்க முடியாது மற்றும் அது குறுகிய காலத்தில் வளரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சமீப காலங்களில், சென்னை தகவல் தொழில்நுட்பப் பொறியாளர் S.Swathi-யின் கொடூரமான மரணம் உள்ளிட்ட உணர்ச்சிகரமான பிரச்சனைகளில் கவனம் செலுத்தியது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள நகரங்களில் விவாகரத்து செய்வோர் விகிதம் ஏன் மிகவும் அதிகரித்து வருகின்றது என்பன போன்ற திருமணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலும் சிறிது கவனம் செலுத்தியுள்ளது. உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளைத் தவிர, சினிமாப் பிரியர்களுக்கு கோலிவுட் கிசுகிசுக்கள் பற்றிய செய்திகளை வழங்குதல் போன்றவற்றின் மூலம் உற்சாகமூட்டும் விஷயங்களிலும் அது கவனம் செலுத்துகிறது. மேலும், இது சமீபத்தில் Rio 2016 ஒலிம்பிக் தொடர்பான செய்திகளிலும் ஆழ்ந்த விரிவான கவனத்தைச் செலுத்தியுள்ளது. தற்சமயம் தனது வாசகர்களுக்கு காவிரி நதிநீர்ப் பிரச்சனை தொடர்பாக கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் அதிகரித்துவரும் பதட்டங்கள் குறித்த நிகழ்-நேர உடனுக்குடனான புதுப்பிப்புகளையும் Liveday.in தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது.
Liveday.in பற்றி:
Liveday.in, தமிழ்நாட்டு மக்களுக்கு திரைப்படம், விளையாட்டு மற்றும் அரசியல் போன்ற துறைகளில் துல்லியமான, உடனுக்குடனான செய்திகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Liveday.in நாளொன்றுக்கு 6,00,000 க்கும் மேற்பட்ட வாசகர்கள் படிக்கும் அளவுக்கு வரவேற்பைப் பெற்றுள்ளது.
Liveday.in-இன் நோக்கம் தங்களது வலைத்தளத்தின் பயனர் இடைமுகத்தை பார்வையாளர்களுக்கு மிகவும் ஏற்றதாகவும், பயனுள்ளதாகவும் செய்வதாகும். மற்றும் இது நாளொன்றுக்கு 10,00,000 வாசகர்களைக் கவர்ந்திழுப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.
Liveday.in -இன் இலக்கு பல பெரிய நகரங்களைச் சென்றடைவதாகும், ஏனெனில் இது தங்களது வலைத்தளத்தை தமிழுக்கு அடுத்தபடியாக, கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற இதர இந்திய வட்டார மொழிகளில் உருவாக்குவதற்குத் திட்டமிட்டுள்ளது. தங்களது இருப்பை தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இ-நியூஸ் சந்தையில் உலகளவில் முதலிடம் பெற்ற போர்ட்டலாக ஆக்குவதற்கு பல துணிகர முயற்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அதிக அளவிலான ஆன்லைன் செய்தி போர்ட்டல்கள் காரணமாகவும், மக்களில் பலர் தங்களுடைய ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லட்களில் மூழ்கியிருப்பதன் காரணமாகவும், மிகச் சிறந்த ஆன்லைன் தமிழ் செய்தி போர்ட்டல்களில் ஒன்றாக குறிப்பிடத்தக்க அடையாளத்தை உருவாக்கியுள்ளது. மேலும் அது W3 செய்தித்தாள் மற்றும் Google news போன்ற பல்வேறு செய்தி ஒருங்கிணைப்புத் தளங்களிலும் இடம் பெற்றுள்ளது. அந்த வெற்றியின் மூலம் இதர மொழிகளிலும் தங்களுடைய சேவையை தொடர்ந்து விரிவுபடுத்த முடியும் எனவும், இ-நியூஸ் துறையின் முன்னோடியாகத் திகழ முடியும் எனவும் நம்பிக்கை கொண்டுள்ளது.
Liveday.in -ஐ பின்தொடர்வதற்கு:
அதிகாரப்பூர்வ Facebook பக்கம்: https://www.facebook.com/liveday.tamilnadu/
அதிகாரப்பூர்வ Pinterest பக்கம்: https://in.pinterest.com/livedaysubmissi/
அதிகாரப்பூர்வ Twitter பக்கம்: https://twitter.com/LiveDayTN
ஊடகத் தொடர்புநபர்:
Sakthivel T
[email protected]
+91-7899795355
ஆசிரியர்
Liveday.in
Share this article