இந்தியாவின் முதல் Celebrity Badminton League தொடங்கி வைக்கப்பட்டது
சென்னை, இந்தியா, August 22, 2016 /PRNewswire/ --
- CBL முன்னதாகவே அறை மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீட்டை ஈர்த்துள்ளது
- CBL சீசன் 1இல் Kollywood, Mollywood, Sandalwood மற்றும் Tollywood ஆகியவற்றை பிரதிபலிக்கும் நான்கு பிரபல்யங்களின் அணிகள் உள்ளன
இந்தியாவின் முதல் Celebrity Badminton League (CBL) - சீசன் 1 நான்கு வித்தியாசமான அணிகளுடன் தொடங்கப்பட்டது. தொடக்கநிலை நிறுவனமான "Celebrity Badminton league Pvt. Ltd." அது தொடங்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள்ளாக J.P. Academy Pvt. Ltd., என்னும் விளையாட்டு நிகழ்வுகளுகான முதலீட்டை பார்த்துக்கொள்ளும் நிறுவனத்திடம் இருந்து அறை மில்லியன் டாலர்களை (3.3 கோடி இந்திய ரூபாய்) ஈர்த்துள்ளது. ஒவ்வொரு அணி உரிமையாளரும் Kollywood, Mollywood, Sandalwood மற்றும் Tollywood திரைத்துறையை பிரதிபலிக்கும் ஃப்ராம்சைசீக்கு பொறுப்பாக இருக்கிறார்கள். ஒவ்வொரு ஃப்ரான்சைசியும் தோராயமாக 2 கோடி முதலீடு செய்து இருக்கிறார்கள், இதில் ஃப்ரான்சைசீ கட்டணம், பிரபல்யங்களின் கட்டணங்கள் மற்றும் நிகழ்வு மேலாண்மை கட்டணங்கள் ஆகியவை உள்ளடங்கும். நான்கு மாநிலங்களில் celebrity league நடத்துவதற்கான மொத்த செலவானது, கோலா லம்பூரில் (மலேசியா) நடைபெறும் இறுதிப்போட்டியையும் சேர்த்து 15 கோடி இந்திய ரூபாயை மிஞ்சும்.
தொடக்கவிழாவில் பேசும்போது, Mr. Hemachandran, CBL உடைய நிறுவனர் & தலைமை நிர்வாக அதிகாரி இவ்வாறு கூறினார், "Chennai Angel Investors மற்றும் Indian Angel Network உடைய ஒருங்கிணைந்த பகுதியாக இருந்ததன் மூலம் கடந்த பல ஆண்டுகளாக விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு துறைகளே மிகப்பெரிய பணம் புரளும் துறைகளாக இருப்பதாக என்னால் துரிதமாக மதிப்பீடுசெய்து அங்கீகரிக்க முடிகிறது. இந்த இரண்டு மூலக்கூறுகளின் அவதாரத்தையும் ஒரு ஆற்றல்மிக்க விளையாட்டு தொடர் மாதிரியில் அளிக்கும்போது பெருக்கெடுத்தல் விளைவு அதில் ஏற்படும் என்று நான் நம்புகிறேன். உடலை கட்டுக்குள் வைத்துக்கொள்ள குறைந்தபட்சம் 80% பிரபல்யங்கள் பேட்மிண்டனை ஒரு புத்துணர்வூட்டும் விளையாட்டாக விளையாடுகிறார்கள், மற்றும் தொடருக்கான நமது எண்ணங்களை நாம் அறிவிக்கும்போதும், இந்த வடிவத்தில் விளையாடுவதற்கான நான்கு அணி உரிமையாளர்கள் மற்றும் பிரபல்ய விளையாட்டு வீரர்களின் பிரதிநிதித்துவத்தை நாங்கள் உடனடியாக பெற்றுக்கொண்டோம். இந்த வடிவம் அணி உரிமையாளர்கள் CBL உருவாக்கிய மத்திய வருவாயில் இருந்து 15% சேகரித்துக்கொள்ள அனுமதிக்கிறது, இது தனிப்பட்ட அணியை பெறுவதற்காக அணியை வாங்குவதற்கான விலைக்காக மாணியம் வழங்குதல் என்னும் மாணியத்தோடு கூடுதலானதாகும். அணி உரிமையாளர் ஃப்ரான்சைசீ கட்டணம், உள்ளூர் விளம்பர கட்டணம், பொருள் கொண்டு செல்லுதல் கட்டணம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்வார் மற்றும் அந்த பணமானது பங்கேற்பதற்காக பிரபல்யங்களால் விதிக்கப்படும்.."
Mr. J. Praveen, J.P. Academy Pvt Ltd உடைய இயக்குநர், CBL இல் முதலீடு செய்வதற்காண தீர்மானம் குறித்து கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார், " Celebrity Badminton League, பிற செலிப்ரிட்டி லீகுகளைப் போல் இல்லாமல் விளையாட்டானது சரியான ஊக்கத்தோடு செய்யப்பட வேண்டும் என்றும் அனைத்து பங்குதாரர்களுகும் பணத்திற்கான மதிப்பீட்டை அளிக்க வேண்டும் என்றும் நம்புகிறது மற்றும் வலியுறுத்துகின்றது. மிகப்பெரும் கவர்ச்சியாக இருக்கும் பிரபல்யங்கள் இந்த விளையாட்டை தீவிரமாக ஒரு தொழில்முறையான வீரரைப்போல் எடுத்துக்கொண்டு போட்டியிடும்போது CBL உடைய வெற்றி வாய்ப்பு மிக அதிகமாக மேம்படுகிறது. முதல் சீசனின் புகழானது ஒரு வித்தியாசம் ஏற்படுத்தும் விளையாட்டாக இருக்கக்கூடிய அடுத்த சீசனுக்கான உந்துசக்தியாக இருக்கும். "
இந்த போட்டித்தொடர் தொடங்க விருக்கும் மற்றும் தொடக்கவிழாவை 17 செப்டம்பர், 2016இல் கொண்டாட இருக்கும் சென்னை பிரிவைத் தவிர. கொச்சி, பெங்களுரு மற்றும் ஹைதராபாத் ஆகிய பிற தெற்கு மையங்களிலும் போட்டிகள் நடத்தப்படும். போட்டிகளுக்கான கால அட்டவணை பின்வருமாறு:
செப்டம்பர் 18 சென்னை தொடர் போட்டி 1 Nehru indoor stadium செப்டம்பர் 24 கொச்சி செய்தியாளர் சந்திப்பு / பிராந்திய விளையாட்டு மையம் தொடர்போட்டி2 stadium - RSC செய்தியாளர் சந்திப்பு/ அக்டோபர் 8 பெங்களுரு தொடர் போட்டி3 Karnataka Badminton செய்தியாளர் சந்திப்பு/ Association Stadium- KBA அக்டோபர் 22 ஹைதராபாத் தொடர் போட்டி4 Gachibowli Indoor Stadium நவம்பர் 11 Kuala Lumpur மலேசியா-திறப்பு Stadium Negara விழா / நட்சத்திரஇரவு நவம்பர் 12 Kuala Lumpur இறுதிப்போட்டி- தொடர் Stadium Negara போட்டி /போட்டித் தொடர் &விருதுகள்
அணி உரிமையாளர்கள் &அணி பெயர்கள் ஆகியவைMr. Hemachandran, நிறுவனர் & தலைமை நிர்வாக அதிகாரி, Celebrity Badminton League மற்றும் பிற பிரபல்யங்களினால் செய்தியாளர் சந்திப்பின்போது வெளியிடப்பட்டது.
CHENNAI ROCKERS என்கிற ஃப்ரான்சைசீ Venkatesh C.R அவர்களால் Celebrity Badminton Leagueஇல் உரிமையாக்கப்பட்டது. Mr.Venkatesh, DOT COM INFOWAY, ADATHA, GMASA மற்றும் GALATA MEDIA ஆகியவற்றின் மேலாண்மை இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருக்கிறார்நடிகர் Arya அவர்கள் Kollywood பேட்மிண்டன் அணியின் தலைவராக இருப்பார்.
KERALA ROYALS என்கிற ஃப்ரான்சைசீ Ranjit Karunakaran அவர்களால் Celebrity Badminton Leagueஇல் உரிமையாக்கப்பட்டது. Mr. Ranjit, EAK நிறுவனங்களின் குழுமத்திற்கு தலைவராக இருக்கிறார் மற்றும் விருந்தோம்பல் மற்றும் இரும்பு ஏற்றுமதி போன்ற பிற தொழில்களிலும் தொடர்புடையவராக இருக்கிறார். முன்னணி கதாநாயகன் Jayaram அவர்கள் Mollywood அணியின் தலைவராக இருப்பார்.
KARNATAKA ALPS என்கிற ஃப்ரான்சைசீ Justinஅவர்களால் Celebrity Badminton Leagueஇல் உரிமையாக்கப்பட்டது மற்றும் Sanghavi இதற்கு துணை உரிமையாளராக இருக்கிறார்.
Mr. Justin, Alpha Digitech உடைய நிறுவனராகவும், GMASA and Mobilogi என்னும் மலேசிய நிறுவனத்தின் இயக்குநர்கள் மன்றத்தின் ஆலோசகராகவும் இருக்கிறார். Ms. Sanghavi ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல், இவர் தமிழ் சினிமா, கன்னட சினிமா மற்றும் தெலுங்கு சினிமாவில் இவருடைய பணிக்காக நன்கு அறியப்பட்டவர். இவர் 22 ஆண்டுகளில் 95 திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இவர்கள் Sandalwoodஇல் இருந்து சிறந்த திறமையுடையவர்களை கொண்டு வருகிறார்கள் மற்றும் Mr. Diganth அணி தலைவராக இருப்பார்.
TOLLYWOOD THUNDERS என்கிற ஃப்ரான்சைசீ Krishnathma Modigapalli அவர்களால் Celebrity Badminton Leagueஇல் உரிமையாக்கப்பட்டது. Krishnathma , Pebblestone Entertainment என்னும் பிரபல்யங்களின் திருமணம் & கார்ப்பரேட் புரவலர்களின் திருமணங்களில் நிபுணத்துவம்வாய்ந்த ஒரு முழு சேவை நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இவர்கள் Tollywoodஇல் இருந்து சிறந்த திறமையுடையவர்களை கொண்டு வருகிறார்கள் மற்றும் Sudheer Babu அணியின் தலைவராக இருப்பார்.
ஊடகத்திடம் பேசுகையில் Mr. Raghuram, இயக்குநர் - CBL மேலும் கூறியதாவது "கிரிக்கெட்டிற்குப் பிறகு இந்தியாவில் அதிகம் விளையாடப்பட்ட விளையாட்டு பேட்மிண்டன் மற்றும் இந்த விளையாட்டை மேலும் பிரபலப்படுத்த நாங்கள் முயற்சி எடுக்கிறோம். நாட்டைப் பிரதிபலித்து விளையாடிய Saina மற்றும் Sindhu ஆகியோர் சமீப காலத்தில் தனித்துவமான வீராங்கனைகளாக திகழ்ந்து இளைஞர்கள் இந்த விளையாட்டை வாஞ்சையோடு எடுத்துக்கொள்ள ஊக்கம் அளித்து உள்ளனர். தொடர்போட்டி வடிவமாணது தங்கள் தனித்தன்மையின் மற்றொரு முகத்தை பிரபல்யங்கள் வெளிக்கொண்டு வர உதவுகிறது, இது அவர்களுடைய ப்ராண்டை உயிரோட்டத்துடன் வைத்துக்கொள்ள உதவுகின்றது. பிரபல்யங்கள் இந்த போட்டித்தொடரையும் CBLயில் உள்ள போட்டிகளையும் தீவிரமாக எடுத்துக்கொண்டு, தங்கள் அலுவலான கால அட்டவணையிலும் தொடர்ச்சியாக பயிற்சி எடுக்க நேரம் எடுத்துள்ளனர், நிச்சயம் இதன் விளைவுகளை நீங்கள் கோர்ட்டில் பார்ப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். வேறு எந்த தொடர்போட்டியை போலும் இல்லாமல், விளையாட்டிலே பாலின சமநிலையை உறுதி செய்வதில் CBL பெருமைகொள்கிறது, ஏனெனில் இதில் பெண்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டும் அல்ல, அவர்கள் விளையாட்டு வீராங்கனைகள்!"
Celebrity Badminton League (CBL) தன் முதல் சீசனில் மீண்டுமாக ஒட்டுமொத்த தென்னிந்திய திரைத்துறையையும் ஒன்றுசேர்க்கிறது, மற்றும் அடுத்த நிகழ்விலே தேசிய தொடர்போட்டியாக மாறுவதற்கான அனைத்து அடையாளங்களையும் கொண்டுள்ளது. இறுதிப்போட்டி கோலாலம்பூரில் நடைபெறும், மற்றும் தென்னிந்திய சினிமாவின் பிரபல்யத்தை வைத்து பார்க்கும்போது, CBLஇல் நிச்சயமாக தங்கள் அபிமான நட்சத்திரங்களுக்காக அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் ஊக்கமளிப்பார்கள்.
Celebrity Badminton League (CBL) பற்றி:
CBL என்பது ஒரு தொழில்முறையாக நிர்வகிக்கப்படுகின்ற விளையாட்டு போட்டித்தொடர், இது புதுமையான பொழுதுபோக்கான மற்றும் உயர் தர தொடர்போட்டி தளத்தை பிரபல்யங்களுக்கு அளித்து அவர்கள் தங்கள் பேட்மிண்டன் திறமைகளை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கும், பங்காளர்களுக்கும் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கும் மதிப்பை அளிப்பார்கள். விருப்பமுள்ளோரை கண்டறிந்து அவர்கள் தொழில்முறையான வீரர்களாக மாற்றவேண்டும் என்று CBL விருப்பம்கொண்டுள்ளது. CBL, தொழிற்துறை தலைவர்கள், கருத்து தலைவர்கள் மற்றும் நிறுவன முதலீடு முதலீட்டாளர்கள் ஆகியோர் உள்ளடங்கிய ஒரு நம்பகமான செய்ற்குழுவால் நிர்வகிக்கப்பட்டு வழி நடத்தப்படுகின்றது, இவர்கள் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுப்போட்டி என்னும் இரண்டு பெரிய பணம் புரட்டும் தொழில்களை ஒன்று சேர்த்து, இதை ஒரு தேசிய நிகழ்வாக மாற்றி அனைத்து பங்குதாரர்களுக்கும் மதிப்பைப் பெற்றுத்தர இலக்கு நிர்ணயித்து உள்ளனர்.
CBL அல்லது போட்டித்தொடர் குறித்து மேலும் தெரிந்து கொள்ள தயவு செய்து தொடர்பு கொள்ளவும்:
Venkat Ramanan
மூத்த மேலாளர்
Tinacca Media
[email protected]
+91-98413 13473
Share this article