சென்னை, August 19, 2016 /PRNewswire/ --
Liveday.in என்பது தற்போதைய நிகழ்வுகள், செய்திகள் மற்றும் புதிய தகவல்களின் உலகை திறந்துகொடுத்து ஒரு சாமானிய மனிதன் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளச் செய்யும் ஒரு இணைய போர்டல் ஆகும். இது கடந்துசெல்லும் ஒவ்வொரு நிமிடத்திலும் தாக்கம் ஏற்படுத்துகின்ற, தற்போதைய முக்கிய செய்திகளை வாசகர்களுக்கு கொண்டு வருகின்றது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160817/398862-INFO )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160817/398863LOGO )
Liveday பல்வேறுபட்ட தலைப்புகளில் சாமானிய மனிதனுக்கு நிகழ்-நேர செய்திகளைக் கொடுக்க இலக்கு வைத்துள்ளது. இது தற்போதைய பிரச்சனைகள், சினிமா கிசுகிசு, அரசியல் மற்றும் பல காரியங்கள் தொடர்பான தகவல்களை அளிக்கிறது. இது தமிழகம் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து நேரலை செய்திகள், கண்ணோட்டங்கள் மற்றும் காட்சிகளை வழங்குகின்றது.
Liveday.in தமிழகத்தில் 5 மே, 2016 அன்று நிறுவப்பட்டது. துல்லியமான மற்றும் சமயத்திற்கேற்ற செய்திகளை பொதுமக்களுக்கு வழங்குவதன் மூலம் இது தமிழகத்திலும் உலகெங்கிலும் உள்ள மக்களை அடைகிறது. இது தொடங்கப்பட்டதில் இருந்து, இந்த போர்டலானது இது இலக்குவைத்த வாடிக்கையாளர்களின் பெரும் பகுதியை சென்று அடைந்து இருக்கிறது.
ஆச்சரியப்படும் விதமாக, Google பார்வையாளர்கள் பகுப்பாய்வின்படி உலகெங்கிலும் உள்ள 196 நாடுகளில், இந்த போர்டல் 146 நாடுகளை அடைந்து இருக்கிறது.
பணி
தமிழ் சினிமா, விளையாட்டுகள், அரசியல் மற்றும் பலவற்றைக் குறித்த புதிய செய்திகளை பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும் என்று இந்த போர்டல் இலக்கு வைத்துள்ளது. குறுகிய காலத்திலேயே இது அதிக பிரபலம் அடைந்துள்ளது, இதன் மூலம் இன்று 2,00,000 பேருக்கும் மேற்பட்டோர் இந்த இணையதளத்தை பின்தொடர்ந்து இதை பாராட்டுகின்றனர். இப்போது இந்த இணயதளத்தை அதிக திறன்மிக்கதாகவும், பார்வையாளர்களுக்கு உதவுவதாகவும் தினந்தோறும் 10 லட்சம் வாசகர்களை அடையவும் இது திட்டமிட்டு இருக்கிறது.
சமீபத்தில், தமிழக தேர்தல் செய்திகளை ஒளிபரப்பியது, இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்போது ஒலிம்பிக்ஸ் தொடர்பான ஆழமான செய்திகளையும் வழங்கி வருகிறது.
தரிசனம்
Liveday உலகெங்கிலும் உள்ள பல பெரிய நகரங்களை சென்றடைய தரிசனம் கொண்டுள்ளது. பலமொழி களத்திலே தங்கள் இருப்பை உணரச்செய்யும் நோக்கத்துடன், கன்னடா, தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற பிற மொழிகளிலும் இணையதளம் தொடங்குவதற்கு Liveday திட்டமிட்டுள்ளது. Liveday அதன் அடுத்த இணைய செய்தி போர்டலை தொடங்குவதற்கு முன்பாக பெரிய நடவடிக்கைகளை எடுத்துவருகிறது, அது விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்றைய இணையதளங்களின் போட்டிநிறைந்த சந்தையில் - சிறந்த தமிழ் செய்திகள் போர்டல்களில் ஒன்றாக Liveday.in தனது தனி முத்திரையைப் பதித்துள்ளது. இந்த இணைய போர்டல் தனது பிரபல்யத்தில் முன்னேறிச் செல்வதையும் இதன் ஆரம்ப நிலையிலேயே புதிய உச்சங்களை அடைந்து விட்டதையும் இது நிரூபிக்கிறது. Liveday எதிர்காலத்திலும் இந்த போக்கு தொடரும் என்று நம்பிக்கை வைத்து மின்னணு செய்தி சந்தையில் நம்பர்-1 போர்டலாக மாற வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.
Livedayஐ இதில் பின் தொடருங்கள்:
Facebook: https://www.facebook.com/liveday.tamilnadu/
Pinterest: https://in.pinterest.com/livedaysubmissi/
Twitter: https://twitter.com/LiveDayTN
ஊடக தொடர்பு:
Sunder Rajan
[email protected]
91-9884056866
ஆசிரியர்
Liveday
Share this article