மும்பை, August 16, 2016 /PRNewswire/ --
மேற்கு இந்தியாவிற்கான UBM Indiaவின் பிரயாணம் மற்றும் சுற்றுலா கண்காட்சி
UBM India, தெற்கு ஆசியாவின் முன்னணி பிரயாண வர்த்தக கண்காட்சியான SATTE உடைய ஒருங்கிணைப்பாளர், SATTE Mumbai West உடைய 5ஆம் நிகழ்வின் தொடக்கத்தை அறிவித்தது. 19-20 ஆகஸ்ட் 2016 வரை, மும்பையிலுள்ள Bombay Convention and Exhibition Centreஇல் திட்டமிடப்பட்டுள்ள பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்ற இக்கண்காட்சி மகராஷ்ட்ரா, குஜராத் மற்றும் கோவாவின் பிரயாண-வர்த்தக சகோதரத்துவத்திற்காக முதன்மையாக சேவை செய்கின்றது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160812/397699LOGO )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
இந்த வர்த்தக கண்காட்சியில் தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலா மன்றங்கள், DMCகள், பிரயாண ஏஜெண்டுகள் மற்றும் சுற்றுலா ஆப்பரேட்டர்கள், விமான நிறுவனங்கள், OTAகள், ஓட்டல்கள், ஓய்வு விடுதிகள் மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆகியவை இடம்பெறும். இவற்றில் Turkish Culture & Tourism Office, MTDC, Nepal Tourism Board, Madhya Pradesh State Tourism Development Ltd., Svatma, Ezeego One Travel and Tours Limited, North Tours LLC, The Ultimate Travelling Camp, Satguru Travels And Tourism Pvt. Ltd., Italian Government Tourism Board and VFS Global, உள்ளிட்ட பல புகழ்பெற்ற கண்காட்சியாளர்கள் இடம் பெறுவார்கள். இந்த தளத்தின் மூலமாக பங்கேற்பாளர்கள் சாத்தியமுள்ள வர்த்தக உதவியாளர்களுடன் ஈடுபடுவதற்கும் இந்த மண்டலத்திற்குள் கூட்டணியை வலுப்படுத்தவும் முயற்சிப்பார்கள்.
தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் ஆர்வமுள்ள பிரயாண வளங்களுக்கான தேவை அதிகரிக்கையில், எராளமான முக்கிய தயாரிப்புகள் மற்றும் சேவை வழங்குநர்களும் இக்கண்காட்சியில் தங்கள் இருப்பை உணரச்செய்வார்கள். SATTE Mumbai West ஐ திறன்பட ஆதரிப்பவர்கள்Indian Association of Tour Operators (IATO), Travel Agents Association of India (TAAI), Association of Domestic Tour Operators (ADTOI), Maharashtra Tour Organisers' Association (MTOA) மற்றும் SKAL International.
இந்த இரண்டு நாள் நிகழ்வானது ஆகஸ்ட் 19 அன்று இரண்டு ஆற்றல் மிக்க மாநாடுகளுடன் தொடங்குகின்றது, இதில் பிரயாணம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் சாத்தியமுள்ள வாய்ப்புகள், சவால்கள் மற்றும் போக்குகள் குறித்து மேற்கு இந்தியாவின் மீது கவனம் செலுத்தி துறைசார்ந்த சிந்தனைமிக்க தலைவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வார்கள். இந்த மாநாட்டின் தலைப்புகளில் 'Promoting Destinations through Cinema Tourism'யும் உள்ளடங்கும், இதில் தேசிய சுற்றுலா அலுவலகங்களும் இந்திய மாநிலங்களும் எவ்வாறு திரைப்படத்தை ஒரு விற்பனை கருவியாக பயன்படுத்தி செல்லும் இடங்களை விளம்பரப்படுத்தி அதிகமானோரை வரச்செய்து 'சுற்றுலா ஆப்பரேட்டர்களுக்கும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் இடையேயான இடைவெளியை நிரப்புவது' என்பது குறித்த விவாதம் நடைபெறும். பிந்தைய தலைப்பானது சுற்றுலா ஆப்பரேட்டர்களுக்கும் ஹோட்டல் உரிமையாலர்களுக்கும் இடையேயான ஒத்துழைப்பின் அத்தியாவசிய முக்கியத்துவத்தை ஆராயும், இது ஒட்டுமொத்த சுற்றுலா சூழலுக்கும் முழுவதுமாக பலனளிக்கும்.
SATTE Mumbai Westஇன் 5ஆம் நிகழ்வை அறிவிக்கும்போது பேசிய, Mr. Yogesh Mudras, மேலான்மை இயக்குநர், UBM India இவ்வாறு கூறினார், "பல ஆண்டுகளாக, SATTE Mumbai West வருடா வருடம் கண்காட்சியாளர் ஆதரவு மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றில் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இவ்வாண்டும் இது பிரயாண வர்த்தக சகோதரத்துவத்தில் இருந்து உற்சாகமான வரவேற்பைக் கண்டுவருகிறது. மகாராஷ்ட்ரா, குஜராத் மற்றும் கோவா ஆகிய இடங்களில் பிரயாணம் மற்றும் ஓய்வு என்பது ஒரு ஆற்றல்மிக்க தொழில் மற்றும் இந்த பகுதியின் பிற துறைகளின் பொருளாதாரத்தையும் தூண்டுவதற்கான ஆற்றல் இதற்கு உண்டு. இச்சமூகம் தொழில் குறித்த தங்கள் புரிந்து கொள்ளுதலை மேபடுத்துவதற்கும், எல்லையை விரிவுபடுத்தவும் நகரத்தின் மற்றும் மாகாணத்தின் சுற்றுலா ஆற்றலை பயன்படுத்திக்கொள்ளவும் சரியான நேரத்தில் இக்கண்காட்சி வருகின்றது."
UBM India பற்றி
UBM India என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழி நடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்துவாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களைஅளிக்கிறது. UBM India ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பலநிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு UBM Asia நிறுவனமான, UBM இந்தியாவுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஆசியா லண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM Plcக்கு சொந்தமானது. UBM Asia வின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து வருகைதாருங்கள் ubmindia.in.
ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
022-61727000
UBM India
Share this article