மும்பை, May 27, 2016 /PRNewswire/ --
மே 20 2016 அன்று, MoneyOnMobile மற்றும் Enfold 170 மில்லியன் தனிநபர்களுக்கு டிஜிட்டல் லாக்கர்கள் வழங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர், இவர்கள் MoneyOnMobile உடைய பிரத்தியேக பயனர் அடித்தளம் ஆவர்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160526/10147080 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150330/10119359-a )
MoneyOnMobile இந்தியாவின் ஒரு முன்னணி மொபைல் ஃபோன் மூலமாக நிதிநிலை சேவை வழங்குநர் ஆகும். இது தற்போது ஆண்டுதோறும் தனது அமைப்புகள் மூலமாக $1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் செயல்முறைப்படுத்துகின்றது மற்றும் நேரடியாக 170 மில்லியனுக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு தனது 310,000 சேனல் பங்காளர்கள் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள சில்லரைவர்த்தக அவுட்லெட்கள் மூலமாகவும் சேவைகளை விநியோகம் செய்கிறது.
Enfold என்பது தொலைதொடர்பு, வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் குறிப்பிட்ட கவனம் உடைய உலகளவில்ஒரு முன்னணி வெள்ளை-லேபிள் டிஜிட்டல் லாக்கர்கள் வழங்குநர் ஆகும். இது இந்தியாவைச் சார்ந்த மும்பையின் Shapoorji Pallonji குழுமத்தினால் வழிநடத்தப்படும் முதலீட்டாளர்களின் வகையராக்களால் ஆதரிக்கப்படுகின்றது.
டிஜிட்டல் லாக்கர் சேவையானது இந்தியாவிலுள்ள Microsoft இன் Azure தரவு மையங்களில்நடத்தப்படும்.
இந்த ஒப்பந்தமானது முன்னெப்பொழுதும் இல்லாதது-இது 12%க்கும் மேற்பட்ட இந்திய மக்கள்தொகையை அடைகிறது, மற்றும் இது உலகின் டிஜிட்டல் லாக்கர்களின் அணிவகுப்புகளில் இதுவரை உள்ளதிலேயே மிகப்பெரியது ஆகும். இது பெரிய எண்ணிக்கையிலான மக்கள் ஆதார் அட்டை, பான் அட்டை, பல்வேறு சான்றிதழ்கள், புகைப்படங்கள், வீடியோக்கள்- அவர்கள் விரும்பும் ஏதேனும் டிஜிட்டல் கோப்புகள்-ஒவ்வொரு முறை அவர்கள் MoneOnMobile சேவையைப் பயன்படுத்தும்போதும் கிடைக்கும் பரிவர்த்தனை ரசீதுகள் உட்பட தங்கள் முக்கியமான தனிப்பட்ட ஆவணங்களான பாதுகாப்பாக சேமித்து வைக்கும் திறனை அளிக்கிறது. மின்னஞ்சல், தொலைநகல், பதிவேற்றம் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் கேமராக்கள் மூலமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலமாக ஆவணங்கள் சேர்க்கப்படலாம்.
"இந்த ஒப்பந்தமானது இந்திய மக்களுக்கு நாங்கள் வழங்கும் சேவைகளின் மிகப்பெரிய விரிவாக்கத்தை குறிப்பிடுகின்றது. எங்கள் டிஜிட்டல் லாக்கர் எங்கள் வாடிக்கையாளர்களுக்கான ஒரு மிகமுக்கிய வசதி ஆகும், ஏனெனில் அது நாங்கள் அளிக்கும் பல்வேறு நிதி சேவைகளுக்கு மட்டும் அல்ல அவர்கள் சேமிக்க விரும்பும் வேறு எந்த டிஜிட்டல் கோப்புகளுக்குமான ரசீதுகளையும் சேமிக்கவும் நிர்வகிக்கவும் ஒரு பாதுகாப்பான மற்றும் மிகவும் செயல்படக்கூடிய ஒற்றை பொதுவான இடத்தையும் அளிக்கிறது," என்றார் Ranjeet Oak, MoneyOnMobile உடைய துணை நிறுவனர் மற்றும் தலைவர். "பிரதம மந்திரியின் டிஜிட்டல் இந்தியா ஆணைக்குள்ளாக எங்கள் வாடிக்கையாளர்களில் மில்லியன் கணக்கானோர்களை இயன்றவரை விரைவாக கொண்டுவரும்படியாக தேசிய டிஜிட்டல் லாக்கர் வழங்குநராக குழுவைப் பட்டியலிடுவதற்கு விண்ணப்பிக்கவும் நாங்கள் உத்தேசிக்கிறோம்," என்றும் அவர் கூடுதலாக தெரிவித்தார்.
"இந்த ஒப்பந்தத்தின் அடித்தளமாக இருக்கும் தொழில்நுட்பத்தை வழங்குவதில் Enfold மிகவும் மகிழ்ச்சி அடைகிறது," என்றுEnfold India Pvt. Ltd உடைய K. Digvijay Singh கூறினார். "நூறு மில்லியன் அளவிலே எங்கள் டிஜிட்டல் லாக்கர்களை கட்டியெழுப்பவும் பரிசோதிக்கவும் வளங்களை அளித்ததற்காக Microsoftக்கு நன்றிசெலுத்த நாங்கள் விரும்புகிறோம், இதன் மூலம் இவ்வகையான வழங்குதலுக்காக MoneyOnMobileக்கு வேகம், அளவுகோல் மற்றும் அளவை வழங்கும் நிலையில் நாங்கள் இருக்கிறோம்." அவர் மேலும் கூறியதாவது " அனைத்து லாக்கர்களிலும் மிகவும் செயல்படக்கூடிய ஒரு மையப்பொருளை, தேவை அதிகரிக்கும்போது வழங்கப்படும் ரகங்களை அதிகரிக்கும்படியான கூடுதல் அம்சங்களோடு வழங்குவதே தற்போதைய திட்டம் ஆகும்."
" MoneyOnMobile உடனான Enfold உடைய ஒப்பந்தமானது இந்திய சந்தையிலே Microsoft Cloud கொண்டு வரும் மதிப்பைக் காட்டுகிறது," என்றார் Mark Ozur, Microsoftஇன்Azure குழுவின்கூட்டு கட்டமைப்பாளர் மற்றும் பொது மேலாளர் . " Azureஐ தங்கள் தொழில்நுட்ப தளமாக ஏற்றுக்கொண்டதன் மூலமாக Enfold அவர்களுடைய தொழில் வளரும்போது நூற்றுக்கணக்கான மில்லியன் பயனர்களை அடையும் திறனைப் பெற்றுள்ளது. டிஜிட்டல் லாக்கர் வழங்குதலுக்குள் ஒருங்கிணைய கூடுதல் திறங்களை ஆராயும்போது எங்களுக்கு வானமே எல்லை."
My Mobile Payments Ltd பற்றி:
My Mobile Payments Limited (MMPL) இந்தியாவின் ஒரு முன்னணி மொபைல் பணம்செலுத்தல் தீர்வு நிறுவனம், இது தனது MoneyOnMobile மற்றும் MOM wallet ப்ராண்டு மூலம் செயல்படுகின்றது, இது அனைவருக்கும் ஒரு எளிமையான மற்றும் திறன்மிக்க மொபைல் பணம்செலுத்து தீர்வுகளை விரைவாக கொண்டுவர இலக்குவைத்துள்ள சேவை. MOM Walletஐ பயன்படுத்தி, சரக்குகள், டாப்-அப்கள், பயன்பாட்டு ரசீது செலுத்துதல்கள், DTH ரீச்சார்ஜுகள் மற்றும் பல குறித்த எவ்வகையான கட்டணம் செலுத்துதல்களையும் ஒரு பொத்தானை சொடுக்குவதன் மூலம் நுகர்வோர் செய்துவிட முடியும்.
MoneyOnMobile மூலம், MMPLஉடைய வலிமையான 2,75,000 சில்லரைவர்த்தக பிணையத்தில் ஏதாவது ஒன்றின் மூலமாக வாடிக்கையாளர்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும். MOM Wallet இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் கட்டணம்செலுத்தும் தளம், இது வாடிக்கையாளரின் கையிலே நாட்டின் இரண்டாம் மொபைல் புரட்சியை வைக்கிறது. MOMவாசற்படிக்கே வந்து சேவை வழங்குகிறது மற்றும் மொபைல் ஆப் சேவைகள் தடையில்லா கட்டணம் செலுத்துதல்களை தெருவில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் கொண்டுவர இலக்குவைத்துள்ளது.
My Mobile Payments Ltd பல்வேறு கௌரவமிக்க தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் மற்றும் அங்கீகாரங்களைப் பெற்ற நிறுவனம் ஆகும். இதில் 2015 இல் "Top 100 Red Herring Global" பட்டியல் மற்றும் "Red Herring Top 100 Asia" பட்டியலில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் (2014 மற்றும் 2015) இடம்பெற்றது, மற்றும் 2014 மற்றும் 2015இன் Emerging Payments "Best Wallet of the Year" வெற்றியாளராக இருந்ததும் உள்ளடங்கும்.
மேலும் தகவல்களுக்கு, வருகைதாருங்கள்: http://www.money-on-mobile.com
ஊடக தொடர்பு :
Vipul Bondal
[email protected]
+91-99203 84555
Veriitte Consulting
Share this article