மும்பை, May 20, 2016 /PRNewswire/ --
150-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் தொழில்துறைக் கூட்டம்
UBM India நிறுவனத்தால் நடத்தப்படுகின்ற மூன்று நாள் (மே 19 - 21) வர்த்தகக் கண்காட்சியாகிய கான்கிரீட் கண்காட்சி இந்தியா 2016, மும்பையில் உள்ள பாம்பே மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சி முதன்மை விருந்தினராகிய மஹாராஷ்டிர அரசின் பொதுப்பணித்துறை (MSRDC, பொதுத்துறை நிறுவனம்) கேபினட் அமைச்சராகிய Shri. Eknath Sambhaji Shinde என்பவரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாட்சிமை பொருந்திய தொழில்துறை வல்லுநர்களுடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் (MP) Shri Gajanan Kirtikar, இளைஞர் தலைவர் Shri. Varun Sardesai; Maharashtra State Road Development Corporation Ltd. (MSRDC) நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் Shri. S. M. Ramchandani, சிமென்ட் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (CMA) பொதுச் செயலாளர் Shri. N. A. Viswanathan, Indian Concrete Institute (ICI)இன் தலைவர் Dr. Manamohan R Kalgal மற்றும் UBM Indiaவின் நிர்வாக இயக்குநர் Mr. Yogesh Mudras ஆகிய முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்றனர்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160519/10146578-a )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160519/10146578-b )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
கான்கிரீட் கண்காட்சி இந்தியா தொழில்துறைக்கு புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுவருவதில் உதவி செய்யும் என்பதையும், மாநில அளவில் தொடங்கப்பட உள்ள புதிய திட்டங்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் Shri. Eknath Shinde சுட்டிக்காட்டினார். 'Make in India' பிரச்சாரத்தில் மஹாராஷ்டிரா மிகப் பெரிய பங்களிப்பை வழங்க வேண்டும் என விரும்புவதாக அவர் மேலும் கூறினார். சாலைத் திட்டங்களின் கட்டுமானத்துக்காக அவர்கள் Maharashtra State Road Development Corporation Ltd. (MSRDC) உடன் ஒப்பந்தம் செய்துள்ளனர் மற்றும் அத்தகைய திட்டங்களை முடிப்பதற்காக எடுத்துக்கொள்ளும் நேரத்தைக் குறைப்பதற்கு உதவக்கூடிய மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் அவர்கள் கவனம் செலுத்துவார்கள் என அவர் கூறினார்.
இந்தக் கண்காட்சி கான்கிரீட் மற்றும் கட்டுமானம், கட்டுமானக் கருவிகள், தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் கட்டுமான இரசாயனங்கள் ஆகியவை உட்பட, தொழில்துறையிலிருந்து 150-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சர்வதேச விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்களை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைக்கிறது. கான்கிரீட் இந்தியா கண்காட்சி சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள், வீடுகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சாரம், இரயில், அணைகள் மற்றும் பாலங்கள் போன்ற முக்கியத் துறைகளை உள்ளடக்கிய கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு வசதிக்கென பிரத்யேகமாக அர்ப்பணிக்கப்பட்ட தொழில்துறைக் களமாக விளங்குகிறது. தொழில்துறையில் உள்ள சமீபத்திய சலுகைகள் மற்றும் தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்தும் இந்தக் கண்காட்சி புதிய பிரிவுகளை அறிமுகப்படுத்தியதன் வாயிலாக இந்த ஆண்டு கிட்டத்தட்ட இரு மடங்காகப் பெருகியுள்ளது. அவையாவன: கான்கிரீட் மற்றும் கட்டுமானம், கட்டுமானக் கருவிகள் மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் கட்டுமான இரசாயனங்கள்.
இந்த ஆண்டுக்கான கான்கிரீட் கண்காட்சி இந்தியா நிகழ்ச்சியில் பல முதலாவது நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. இந்தக் கண்காட்சியில் முதல் முறையாக பல சர்வதேசக் காட்சி அரங்குகள் இடம் பெற்றுள்ளன, இந்தியாவின் மேற்குப் பகுதியில் கட்டுமான இயந்திரங்கள் பிரிவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகப் பெரிய வெளிப்புறப் பகுதியை வழங்குகின்றன. இந்தக் கண்காட்சியில் சிறப்பு அம்சமாக டிஜிட்டல் B2B கூட்டங்களும் இடம் பெற்றிருந்தன, இது தொழில்துறைப் பங்குதாரர்களுக்கு இடையிலான உற்பத்தித் திறன் மிக்க வணிக விவாதங்களையும் சாத்தியமாக்கியது.
Concrete Institute (ICI), Builder Association of India (BAI), Association of Consulting Civil Engineers (India) (ACCE), Indian Society of Structural Engineers (ISSE), The Institute of Engineers India (IEI), Indian Association of Structural Engineers (IAstruct), Indian Institute of Bridge Engineering (IIBE), Cement Manufactures Association (CMA), Construction Chemicals Manufacturers Association (CCMA) மற்றும் Ready Mixed Concrete Manufacturers' Association (RMCMA) ஆகிய நிறுவனங்களின் ஆதரவுடன் இந்தக் கண்காட்சி தொழில்துறையினரின் பெரும் வரவேற்பைப் பெற்றது.
கான்கிரீட் கண்காட்சி இந்தியா 2016-இன் துவக்க விழாவில் பேசும்போது, UBM India நிர்வாக இயக்குநர் Mr. Yogesh Mudras கூறியதாவது, "இன்று, உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான இந்தியாவின் தேவை மத்திய அரசின் மேற்குறிப்பிட்ட துறைக்கான மாபெரும் உந்துதல் காரணமாக சிறப்பான ஆதரவைப் பெற்றுள்ளது. சாலைகள், இருப்புப்பாதைகள் முதல் விமான நிலையங்கள் மற்றும் இதர ஸ்மார்ட்-சிட்டி முயற்சிகள் வரை, கடந்த சில ஆண்டுகளாக இந்தத் துறையில் அதிவேக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது, அதனால் நாடு முழுவதும் உலகத் தரம் வாய்ந்த வசதிகள் கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் 2016இல் உள்கட்டமைப்புக்காக 2 டிரில்லியன் ரூபாய்க்கும் மேல் ஒதுக்கீடு செய்திருப்பதன் மூலம், 2016-17ஆம் ஆண்டில் இந்தத் துறை மாபெரும் வளர்ச்சி அடைவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளது."
"கான்கிரீட் கண்காட்சி இந்தியா 2016 ஆனது வணிக ரீதியான கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு கட்டுமானதாரர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள், கட்டிட வடிவமைப்பாளர்கள் மற்றும் பொறியாளர்கள், விநியோகிப்பாளர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் மாநில கார்ப்பரேஷன்கள் ஆகியவை தொழில்துறைப் போக்குகள், சவால்கள் மற்றும் சந்தை குறித்த ஆழ்ந்த பார்வை ஆகியவற்றைப் பற்றிக் கலந்துரையாடுவதற்கும், தொடர்புகொள்வதற்கும், வலையமைப்பை ஏற்படுத்துவதற்கும் மற்றும் விவாதிப்பதற்கும் நிகரற்ற வணிக வாய்ப்பை வழங்குகிறது. UBM India வில் கான்கிரீட் கண்காட்சி இந்தியா 2016 மூலமாக நாங்கள் பெற்றுள்ள இத்தகைய தொழில்துறைப் பிரதிபலிப்பு இந்தத் தொழில்துறையின் சாத்தியத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்த ஆண்டு உங்களுடைய வணிகத்தை மேம்படுத்துவதற்கான அணுகலை உங்களுக்கு வழங்குவதற்கு 150க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களைக் காட்சிப்படுத்துவதில் நாங்கள் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம்," என அவர் மேலும் கூறினார்.
இந்தக் கண்காட்சியில் Lucid Colloids Ltd. நிறுவனத்தின் புதிய தயாரிப்பாகிய Rheoluc® CM அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. Lucid ஆனது Guar Gum மற்றும் அதன் வழிப்பொருட்களைத் தயாரிக்கின்ற இந்தியாவைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் ஆகும். மற்றும் இது கட்டுமானப் பொருட்களுக்காக Rheoluc® CM என்ற பிராண்டு பெயரின் கீழ் தனிப்பயனாக்கப்பட்ட தரங்கள் உள்ளிட்ட பல வகையான பொருட்களை இந்தியாவில் தயாரிக்கின்ற முதலாவது இந்திய நிறுவனம் ஆகும்.
தங்களுடைய புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்துவது பற்றிப் பேசும்போது, Lucid Colloids Ltd. நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் Mr. Vinayak Natu கூறியதாவது, " Lucid Colloids Ltd. தனது புதிய தயாரிப்பாகிய Rheoluc® CM ஐ அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது. இவை பல்வேறு சிமெண்ட் மற்றும் ஜிப்ஸம் அடிப்படையிலான கட்டுமானப் பொருட்களாகிய டைல் சிமெண்ட்கள், காரை, பிளாஸ்டர்கள், சுண்ணச் சாந்து, புட்டி மற்றும் சீலிங் சேர்மங்கள் ஆகியவற்றுக்கான கேலக்டோமனன் அடிப்படையிலான கெட்டிப்படுத்தும் பொருட்கள், பாய்வியல் மாற்றிகள் மற்றும் நீர்ப் பிடிமானப் பொருட்கள் ஆகும். நமது மாண்புமிகு பிரதமரின் 'Make in India' திட்டத்தின் அடிப்படையில், Rheoluc® CM தயாரிப்புகள் அனைத்தும் நீடித்துழைக்கும் இந்திய மூலப்பொருட்களைக் கொண்டு இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன மற்றும் அவை பல்வேறு பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்ற செல்லுலோஸ் அடிப்படையிலமைந்த பாலிமர்களுக்கு பொருளாதார அளவில் மாற்றாக அமையும். Lucid Colloids இத்தகைய தயாரிப்புகளை இந்தியாவில் தயாரித்து அறிமுகப்படுத்துகின்ற முதலாவது நிறுவனமாக விளங்குகிறது."
இந்தக் கண்காட்சியில் மற்றவர்களுக்கு மத்தியில் L&T Construction, Gammon India Limited, Ambuja Cements Limited மற்றும் Bauchemie (India) Private Limited போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களைச் சேர்ந்த தொழில்துறைப் பேச்சாளர்களைக் கொண்டு நடத்தப்படுகின்ற அறிவு சார்ந்த அமர்வுகளுக்கான நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளன. முதலாவது நாள் நிகழ்ச்சியில், மறுவலுவூட்டப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் (RCC) கட்டமைப்புகளுக்கான வடிவமைப்புத் தொழில்நுட்பத்தில் மேம்பாடுகள், அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கான நில அதிர்வு வடிவமைப்பு, மேம்பாலங்களின் வடிவமைப்பிலும் கட்டுமானத்திலும் நவீன உத்திகள், உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் சுரங்க வழிகள் உள்ளிட்ட பல தலைப்புகள் குறித்த முன்வைப்புகள் இடம் பெறும். அதே சமயம், இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் பின்வரும் கருத்துக்கள் குறித்த விவாதங்களும் இடம் பெறும் - உள்கட்டமைப்பு, பாலங்களின் வடிவமைப்பும் கட்டுமானமும்: சிறந்த நடைமுறைகள், ஆய்வு, பழுதுபார்ப்பு, பாலங்களின் மறுசீரமைப்பு மற்றும் பராமரிப்பு மற்றும் இதர கட்டமைப்புகள், தர உறுதிப்பாட்டு அமைப்பு மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கான TQM மற்றும் கான்கிரீட் கலவைத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல.
UBM India பற்றி:
UBM India என்பது கண்காட்சித் தொகுப்புகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் ஆகியவற்றின் வாயிலாக உலகம் முழுவதும் உள்ள வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் ஒருங்கிணைக்கும் களங்களை தொழில்துறையினருக்கு வழங்குகின்ற இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பு நிறுவனம் ஆகும். UBM India ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் சுமார் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் நடத்துகின்றது; அதன்மூலம் பல தொழில்துறை நிறுவனங்களுக்கிடையேயான வர்த்தகத்துக்கு உதவுகின்றது. ஒரு UBM Asia நிறுவனமாகிய UBM India-வின் அலுவலகங்கள் மும்பை, புதுதில்லி, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. UBM Asia நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM plc நிறுவனத்துக்குச் சொந்தமானது ஆகும். UBM Asia நிறுவனம் ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும், மற்றும் அது சீனா, இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளராகவும் உள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து பார்வையிடவும் : ubmindia.in
ஊடகத் தொடர்புநபர்:
Mili Lalwani
[email protected]
022-61727000
UBM India
Share this article