புனே, இந்தியா, March 23, 2016 /PRNewswire/ --
விநியோக வளர்ச்சியை இலக்குவைக்கும் Alfa Lavalயின் 'சந்தைப்படுத்துவதற்கான இரு வழிகள்" திட்டத்திற்கு இணங்க, Alfa Laval தனது 4வது வருடாந்திர விநியோகஸ்தர்கள் கூட்டத்தை பிப்ரவரி 26, 2016 அன்று ஒழுங்குசெய்தது.இந்த ஆண்டு இந்தியாவில் Alfa Laval விநியோகஸ்தர்கள் பிணையத்தில் இணைந்த ஆறு புதிய விநியோகஸ்தர்கள் இந்நிகழ்விலே கலந்துகொண்டனர்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160322/10142586)
'ஆற்றலை ஆராய்ந்துபாருங்கள். விரிவடையுங்கள்' என்கிற 2015 ஆம் ஆண்டின் விநியோக நிகழ்வு கருப்பொருளுடன் இணையும்படியாக இந்திய தேசிய பறவையான மயில் தனது தோகையை விரிப்பதுபோன்று அடையாளப்படுத்தப்பட்டது போல , இந்த ஆண்டின் கருப்பொருளான 'நிபுணத்துவத்துக்கு நகர்தல்' என்பதோடு சந்தை மற்றும் நமது வாடிக்கையாளர்கள் மீதான நமது கவனத்தை அடையாளப்படுத்தும்விதமாக மயிலின் கண் இணைக்கப்பட்டு உள்ளது.
திரு லார்ஸ் டித்மெர் மேலாண்மை இயக்குநர், Alfa Laval India, Alfa Laval India business உணவு மற்றும் ஆற்றல் துறைகள் மற்றும் தண்ணீரை திறன்பட பயன்படுத்தும் மற்றும் மறுபயன்பாடு செய்யும் பிரிவுகளினால் பிரதிநிதித்துவம் செய்கின்ற பிற பகுதிகளிலும் உள்ள கவனம் மற்றும் வாய்ப்புகளை வெளிப்படுத்தினார். விநியோகஸ்தர்களுடன் பேசியபோது, லார்ஸ் இவ்வாறு கூறினார், "எங்களுடைய முக்கியத்துவங்களைக் குறித்து தகவல்பரிமாறிக்கொள்ல விநியோகஸ்தர் கூட்டம் ஒரு அற்புதமான வாய்ப்பாக இருக்கிறது - Alfa Laval அதன் விநியோகஸ்தர்களுடன் உரையாடவும், விநியோகஸ்தர்கள் அவர்களுக்குள் உரையாடவும் ஒரு நல்ல தளத்தை அளிக்கிறது. தொழில் வளர்ச்சியிலே இதன் விளைவை காணவும் நமது விநியோகஸ்தர்களை 2017 கூட்டத்திலும் காண நான் ஆவலாக இருக்கிறேன்."
குமுத் ஜம்ப், துணைத் தலைவர், சாதன பிரிவு இந்தியா, தொழில் குறித்த தரிசனம் மற்றும் வாடிக்கையாளரின் நடைமுறை நேரத்தை மீண்டும் மீண்டுமாக உகந்ததாக்குவதற்கான Alfa Laval உடைய தயாரிப்பு பிரிவு வழங்குகின்ற அம்சங்கள் ஆகியவற்றைக் குறித்து பேசினார். Alfa Laval உடைய கேஸ்கெட்டட் தகடு வெப்ப பரிமாற்றிகளின் பிரிவு குறித்த ஒரு சிறப்பான முக்கியத்துவமும் அளிக்கப்பட்டது.
Alfa Laval வழங்கும் சேவை அம்சங்களை காட்சிப்படுத்தும்படியாக , , Alfa Laval எவ்வாறு வாடிக்கையாளர்களின் சேவைகளுக்கான தேவைகளை பூர்த்திசெய்யமுடியும் என்பதையும் தனிச்சிற்ப்புப்படுத்தி காட்சிப்படுத்தி Alfa Laval 360 டிகிரி சேவை பிரிவும் விநியோகஸ்தர்களுக்கு முன்வைக்கப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சிறப்பாக சேவை அளிக்கும்படியாக, தொழிலுக்கான பல்வேறுபட்ட டிஜிட்டல் சந்தைப்படுத்தல் சேனல்கள் மற்றும் வலை இடைமுகங்கள் பற்றி விவாதிக்கப்பட்ட ஒரு தகவல்தொடர்பு பயிலரங்கத்திலே விநியோகஸ்தர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வின் தனிச்சிறப்பு விநியோகஸ்தர்களுடன் நடத்தப்பட்ட ஒரு வினா விடை அமர்வும், சிறப்பாக செயலாற்றிய விநியோகஸ்தர்களுக்கான விருது அளிக்கும் விழாவும் தான்.
விநியோகஸ்தர்கள் பிணையத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து, Alfa Laval India தனது இருப்பை இந்த நாட்டிலே விரிவுபடுத்தி வருகிறது. இந்த கூட்டத்தில் இந்தியா, நேபாள், மற்றும் இலங்கையில் இருந்து 60 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
Alfa Laval குறித்து
Alfa Laval என்பது வெப்ப பரிமாற்றம், பிரித்தல் மற்றும் திரவம் கையாளுதல் என்னும் தனது முக்கிய தொழில்நுட்பங்களை சார்ந்த சிறப்பான தயாரிப்புகளையும் பொறியியல் தீர்வுகளையும் வழங்குகின்ற உலகளாவிய முன்னணி வழங்குநர் ஆகும். நிறுவனத்தின் சாதனம், அமைப்புகள் மற்றும் சேவைகள் வாடிக்கையாளர் தங்கள் செயல்முறைகளை உகந்ததாக்குவதற்கு உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. உணவு மற்றும் பானங்கள், இரசாயனங்கள் மற்றும் பெட்ரோகெமிக்கல்கள், மருந்துகள், மாவுச்சத்து, சர்க்கரை மற்றும் எத்தனால் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் தயாரிப்புகளை சூடாக்க, குளிரவைக்க, பிரிக்க மற்றும் இடம்மாற்ற இந்த தீர்வுகள் உதவுகின்றன. Alfa Laval உடைய தயாரிப்புகள் மின்சார ஆலைகள், வெளிநாட்டு கப்பல்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு, மெக்கானிக்கல் தொழிற்துறை, சுரங்க தொழிற்துறை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் வசதியான வானிலை மற்றும் குளிர்பதன பயன்பாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
Alfa Laval உடைய உலகளாவிய நிறுவனம் ஏறத்தாழ 100 நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றி அவர்கள் உலக அரங்கில் முன்னணியில் இருக்க உதவுகிறது. NASDAQ: OMXயில் Alfa Laval பட்டியலிடப்பட்டுள்ளது, மற்றும், 2014இல், சுமார் SEK 35.1 பில்லியன் ஆண்டு விற்பனையை பெற்றது (சுமார். 3.85 பில்லியன் யூரோக்கள்). இந்நிறுவனத்தில் சுமார் 18,000 பணியாளர்கள் இருக்கிறார்கள். மேலும் தகவலுக்கு வருகை தாருங்கள் http://www.alfalaval.com .
ஊடக தொடர்பு:
Rajita Kumar
[email protected]
+91-9167341100
பிராந்திய தகவல் தொடர்பு மேலாளர்
Alfa Laval India Limited
Share this article