பூனே, இந்தியா, March 22, 2016 /PRNewswire/ --
செல்ஃப்-ப்ரைமிங் பம்பு தொழில்நுட்பத்தில் Alfa Laval LKH Prime பம்பு செட்டுகள் புதிய தரநிலையை அமைக்கின்றன. சந்தையில் முன்னிலை வகிக்கும் Alfa Laval LKH பம்பு ரகத்தை சார்ந்த இது, ஒரு பல்திறன்வாய்ந்த, ஆற்றல்மிக்க, செல்ஃப்-ப்ரைமிங் பம்பு ஆகும். இது காற்று-திருகாணி தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட வடிவமைப்பின் கலவையைப் பயன்படுத்தி உணவு முதல் மருந்துகள் வரை பல தொழில்துறைகளின் கண்டிப்பான தேவைகளை சந்திக்கிறது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160318/10142399 )
Alfa Laval LKH Prime உடைய மிக உயரிய ஆற்றலின் விளைவாக குறைந்த சக்தியே பயன்படுத்தப்படுகிறது. இதோடு, இது சந்தையில் முன்னணி வகிக்கும் LKH பம்பு ரகத்தை சார்ந்து இருக்கிறது என்பதால், இதைக் குறைந்த விலையில் வாங்கலாம் மற்றும் இதன் செயல்பாட்டு நேரமும் அதிகரிக்கிறது. இடத்தில் சுத்தப்படுத்துவதற்கான (CIP) கடமைகளுக்காக வடிவமைக்கப்பட்டு உள்நுழைந்த காற்றைக்கொண்டு இருப்பதால், இது தயாரிப்பையும் பம்ப்செய்யலாம், செயல்பாட்டு அமைப்புகளை வடிவமைக்கும்போது முதலீட்டுத் தொகையை குறைக்கும் சாத்தியமும் உள்ளது. சத்தமில்லாமல் செயல்படுகின்ற Alfa Laval LKH Prime மிகவும் கண்டிப்பான தரநிலைகளையும், உணவு, பால், பானம் மற்றும் வீட்டு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு தொழிற்துறைகளின் சுகாதார தேவைகளையும் சந்திக்கும்படி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பம்பு UltraPure மாதிரியிலும் கிடைக்கிறது, மருந்து நிறுவன வாடிக்கையாளார்களின் தேவைகளை இது சந்திக்கிறது.
உயர்ந்த தரநிலைகளை மிஞ்சுகிறது
ரஸ் கெல்லி, Alfa Lavalலின் உலகளாவிய பம்பு பிரிசு மேலாளர் இவ்வாறு கூறினார், "மேம்படுத்தப்பட்ட மின்சக்தி ஆற்றல் மற்றும் குறைக்கப்பட்ட இரைச்சல் அளவுகள் மற்றும் அதே சமயம் நவீன சுகாதார வடிவமைப்பு தரநிலைகள் ஆகிய தேவைகளை சந்திக்கும் செல்ஃப்-ப்ரைமிங் பம்பை பல தொழிற்துறைகள் தேடிக்கொண்டு இருக்கின்றன. காற்று-திருகாணி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, Alfa Laval LKH Prime இந்த எதிர்பார்ப்புகளை மிஞ்சும்படியாக உருவாக்கப்பட்டு இருக்கிறது."
Alfa Laval LKH Prime மற்றும் Alfa Laval LKH Prime UltraPure ஆகிய இரண்டுமே EHEDG சான்றிதழ் பெற்றவை மற்றும் 3-A தரநிலைக்கு இணங்க வடிவமைக்கப்பட்டவை. கூடுதலாக, Alfa Laval LKH Prime UltraPure என்பது Alfa Laval Q-docஇல் கிடைக்கிறது, இது மருந்துநிறுவன தொழிற்துறைக்கு தேவையான தரநிலைகளை சந்திக்கின்ற ஒரு விரிவான ஆவண தொகுப்பு ஆகும்.
Alfa Laval LKH பம்பு ரகம்
Alfa Laval LKH ப்ரீமியம் ரக மையவிலக்கு பம்புகள், உயர்ந்த செயல்திறன், குறைந்த மின்சக்தி பயன்பாடு, பயன்பாட்டு தேவைகளைச் சந்திப்பதற்கான பல்வேறுபட்ட கூடுதல் தெரிவுகள், பரவலாக வீச்சிலான ஓட்ட விகிதங்கள் மற்றும் அழுத்தங்கள் ஆகியவறினால் பிற பம்புகளில் இருந்து வேறுபடுத்தப்படுகின்றன. இந்த ரகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் Alfa Laval LKH Prime நம்பகமானதும், பழுதுபார்க்கவும் பராமரிக்கவும் எளிதானதுமாக இருக்கிறது.
அனைத்து சுகாதார பயன்பாடுகளுக்கும் மாதிரிகள் கிடைக்கின்றன, இதில் உணவு, பால், பானம், வீட்டு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு, உயிரி தொழில்நுட்பம் மற்றும் மருந்து தயாரிப்பு ஆகியவை உள்ளடங்கும்.
Alfa Laval LKH Prime உண்மைகள்:
- Alfa Laval LKH Prime மிக உயரிய செயல்திறனை அளித்து குறைந்த மின்சக்தி பயன்பாட்டை விளைவிக்கிறது.
- Alfa Laval LKH Prime என்பது சந்தையில் முன்னணி வகிக்கும் ப்ரீமியம் LKH பம்பு தளத்தின் புதிய சேர்க்கையாகும். எளிதாக பழுதுபார்க்கவும் குறைந்தநேர செயலிழப்பையும் உறுதிசெய்வதற்காக இது பொதுவான பாகங்களைக் கொண்டு இருக்கிறது.
- Alfa Laval LKH Prime உடைய பலப்பயன்பாட்டு வடிவமைப்பு உள்நுழையும் காற்றைக் கொண்டு இருக்கும் CIP கடமைகளையும் தயாரிப்பை பம்பு செய்வதையும் கையாளும் திறனை அளிக்கிறது.
- 130 ஆண்டுகளாக பயனுள்ள தீர்வுகளை அளித்து வரும் நிறுவனத்தின் நீண்ட வரிசையிலான சுகாதார தீர்வுகளின் சமீபத்திய தீர்வு தான் இந்த பம்பு.
2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த பம்பு சந்தையில் வெளியிடப்பட்டது
Alfa Laval குறித்து
Alfa Laval என்பது வெப்ப பரிமாற்றம், பிரித்தல் மற்றும் திரவம் கையாளுதல் என்னும் தனது முக்கிய தொழில்நுட்பங்களை சார்ந்த சிறப்பான தயாரிப்புகளையும் பொறியியல் தீர்வுகளையும் வழங்குகின்ற உலகளாவிய முன்னணி வழங்குநர் ஆகும். நிறுவனத்தின் சாதனம், அமைப்புகள் மற்றும் சேவைகள் வாடிக்கையாளர் தங்கள் செயல்முறைகளை உகந்ததாக்குவதற்கு உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. உணவு மற்றும் பானங்கள், இரசாயனங்கள் மற்றும் பெட்ரோகெமிக்கல்கள், மருந்துகள், மாவுச்சத்து, சர்க்கரை மற்றும் எத்தனால் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் தயாரிப்புகளை சூடாக்க, குளிரவைக்க, பிரிக்க மற்றும் இடம்மாற்ற இந்த தீர்வுகள் உதவுகின்றன. Alfa Laval உடைய தயாரிப்புகள் மின்சார ஆலைகள், வெளிநாட்டு கப்பல்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு, மெக்கானிக்கல் தொழிற்துறை, சுரங்க தொழிற்துறை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் வசதியான வானிலை மற்றும் குளிர்பதன பயன்பாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
Alfa Laval உடைய உலகளாவிய நிறுவனம் ஏறத்தாழ 100 நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றி அவர்கள் உலக அரங்கில் முன்னணியில் இருக்க உதவுகிறது. NASDAQ: OMXயில் Alfa Laval பட்டியலிடப்பட்டுள்ளது, மற்றும், 2014இல், சுமார் SEK 35.1 பில்லியன் ஆண்டு விற்பனையை பெற்றது (சுமார். 3.85 பில்லியன் யூரோக்கள்). இந்நிறுவனத்தில் சுமார் 18,000 பணியாளர்கள் இருக்கிறார்கள்.
வருகை தாருங்கள் http://www.alfalaval.com .
மேலும் தகவலுக்கு தயவுசெய்து தொடர்புகொள்ளவும்:
Russ Kelly
[email protected]
+44-7901954183
சொத்துவிவர மேலாளர் பம்புகள், சுகாதார உபகரணங்கள்
Xenia Nolev
[email protected]
+46-46367076
மத்திய தகவல் தொடர்பு மேலாளர், சுகாதார உபகரணங்கள்
Rajita Kumar
[email protected]
+91-2067341100
பிராந்திய தகவல் தொடர்பு மேலாளர்
Alfa Laval India Limited
Share this article