மும்பை, November 27, 2015 /PRNewswire/ --
மும்பையில், ITC மராத்தாவில் 30 நவம்பர், 2015 அன்று நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள 3வது வருடாந்திர இந்தியா ஃபார்மா விருதுகளை நடத்துவதற்கு UBM India முற்றிலும் தயார்நிலையில் இருப்பதுடன், TAKE Solutions-ஐ தங்களுடைய வழங்கும் பங்காளராக அறிவிப்பதிலும் அது பெருமகிழ்ச்சியடைகிறது. இந்நிகழ்ச்சி ஒரு "விருது இரவுக்கும்" மேலாக மருந்து உற்பத்தி தொழில்துறையின் பிரபலங்களை ஒன்று சேர்க்கும், இதில், ஒளிர்கின்ற இரவு, கேளிக்கை, கோலாகலம் மட்டுமின்றி, இந்திய மருந்து உற்பத்தித் தொழில்துறையின் மிகச்சிறந்த பிரிவாக இருப்பதன் பெருமை ஆகியவையும் பிரதிபலிக்க உள்ளது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c)
முன்மொழியப்பட்ட வகைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இந்நிகழ்ச்சியின் பயன் இவ்வாண்டு மேலும் பெரிதாக ஆகிறது. இவ்வாண்டு, இப்பிரிவுகள் வெறும் முன்மொழிவு அடிப்படையிலானவை மட்டுமல்ல, அவை நடுவர் சார்ந்தவையும் ஆகும், இதில், மிகவும் பெருமை வாய்ந்த நடுவர்களின் குழு ஒன்று பல்வேறு துறைகளில் இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களின் பங்களிப்பை மதிப்பீடு செய்யும். இந்தியா ஃபார்மா விருதுகள் 2015, தங்களுடைய பல்வேறு செயல்முறைகளில் சிறந்து விளங்கும் இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களை அங்கீகரித்து, நிறுவனம் மற்றும் தொழில்துறையின் ஒட்டுமொத்த செயல்முறையில் மாற்றங்களைக் கொண்டுவர உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியா ஃபார்மா விருதுகள் 2015 ஏற்கனவே நாடு முழுவதிலும் உள்ள சிறிய மற்றும் பெரிய அளவிலான மருந்து உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்ற வகையில், பிரமிக்கத்தக்க வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில், மற்றவற்றிற்கிடையே சிப்லா, டாக்டர் ரெட்டி'ஸ், ஸைடஸ், பீராமல், ACG, வோக்ஹார்ட் ஆகியவை சில முக்கிய நிறுவனங்களாகும்.
மருந்து உற்பத்தி தொழில்துறை உயர் தரமுள்ள மற்றும் குறைந்த செலவிலான மருந்துத் தீர்வுகளுக்காக மருந்து உற்பத்தி தொழில்துறை அதிக அளவில் இந்தியாவை எதிர்நோக்கியிருக்கும் சூழலில், UBM இந்தியா ஃபார்மா விருதுகள், இந்தியாவின் மருந்து தயாரிப்பு அமைப்பு, தொழில்நுட்பம், உட்பொருட்கள், அவுட்சோர்ஸிங் மற்றும் பயோஃபார்மா தொழில் பிரிவிலுள்ள முக்கியமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்துவோருடன் ஈடுபடுத்திக் கொள்வதற்கு நிறுவனங்களுக்குள்ள ஒரு கச்சிதமான இடமாகும். இவ்வாண்டு, இந்தியா ஃபார்மா விருதுகள் 2015, 13 வேறுபட்ட முன்மொழிவு அடிப்படையிலான பிரிவுகள் மற்றும் நான்கு வேறுபட்ட நடுவர் அடிப்படையிலான பிரிவுகள் மூலம், இந்தியாவின் மருந்து தயாரிப்புத் துறையின் ஏராளமான செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.
முன்மொழிவு அடிப்படையிலான பிரிவுகள்:
செயல்பாடுசார் சிறப்பு சிறந்த சுற்றுச்சூழல், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு
விநியோகச் சங்கிலி மேலாண்மையில் சிறப்பு ஐடி தன்னியக்கத்தில் சிறப்பு (ஐடி விற்பனையாளர்கள்)
மருந்து உற்பத்தியில் சிறப்பு
இயந்திரங்கள்/சாதனங்கள் கிராமப்புறத்தை சென்றடைவதில் சிறப்பு
பேக்கேஜிங் மேம்பாட்டில் சிறப்பு தொழில் செயல்திறனில் சிறப்பு
ஒப்பந்த ஆராய்ச்சியில் சிறப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் சிறப்பு
தொழில்சார் சமூகப் பொறுப்பில் சிறப்பு பிராண்ட் /தயாரிப்பில் சிறப்பு
ஏற்றுமதி மேம்பாட்டில் சிறப்பு
நடுவர் அடிப்படையிலான பிரிவுகள்:
இவ்வாண்டின் உருவாகிவரும் தொழில்முனைபவர் இவ்வாண்டின் பெண் ஃபார்மா பிரமுகர்
ஆயுட்கால சாதனை விருது ஊக்கமளிக்கும் தலைவர் விருது
வல்லுனர்களான நடுவர்கள் குழுவில், பின்வரும் தொழில்துறையின் புகழ்பெற்றவர்கள் இடம்பெற்று, ஏராளமான பரந்த அனுபவத்தை எடுத்து வருகின்றனர் - டாக்டர் Ajit Dangi, தலைவர் & CEO, Danssen Consulting; S V Veerramani, தலைவர், Indian Drug Manufacturers' Association; Divesh Kumar Singla, இயக்குனர் & குளோபல் லீட், Global Market Insights Analyst Services; திரு. B G Barve, இணை நிர்வாக இயக்குனர், Blue Cross Laboratories; திரு. S Srinivasan, நிர்வாக இயக்குனர், Shriram Industrial Holdings; மற்றும் திரு. S M Mudda, இயக்குனர் - Global Strategy (டெக்னிகல்), Micro Labs Limited.
இந்தியா ஃபார்மா விருதுகள் 2015 இரண்டு Collector's Edition வெளியீடுகளின் அறிமுகத்தையும் காணும் - அவை, The World of P-MEC - Collector's Edition (P-MEC நோக்கிலிருந்து) மற்றும் India Pharma Exporters - Collector's Edition (CPhI & மருந்து ஏற்றுமதியாளர்களின் நோக்கிலிருந்து), இவை, சிடிக்கள், பென் டிரைவ்கள், காகிதப் பிரதிகள் போன்ற பல்வேறு வடிவங்களில் CPhi P-MEC-ல் விநியோகிக்கப்படுவதுடன், இணையத்திலும் வெளியிடப்படும். இவ்வெளியீடுகள் முன்னணி வங்கிகள், VC-க்கள், தூதரகங்கள் போன்றவைகளுடன் சேர்த்து உலக அளவில் 1,00,000-க்கும் அதிகமான CPhI P-MEC வருகையாளர்கள் மற்றும் காட்சியாளர்களை சென்றடையும். நுண்ணோக்குகள், ஆராய்ச்சி அடிப்படையிலான பகுப்பாய்வு, இத்துறையின் எதிர்கால போக்குகள் மற்றும் வாய்ப்புகள், முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களை அவற்றின் பிரிவில் பட்டியலிடுதல் மற்றும் சுயவிவரங்களை உருவாக்குதல் ஆகியவை அடங்கிய தனித்துவமான உள்ளடக்கம் இவ்வெளியீட்டில் இடம்பெற்றிருக்கும்.
மேலும் தகவல்களுக்கு, அணுகவும் http://www.indiapharma-awards.com.
UBM India பற்றி:
UBM India, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM India, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM Asia-வின் ஒரு நிறுவனமான UBM India, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM Plc-க்கு சொந்தமான UBM ஏஷியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM Asia, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் ubmindia.in.
ஊடகத் தொடர்பு:
முஸ்தஃபா நல்வாலா,
[email protected],
+91-9664219292,
மார்க்கெட்டிங் மேனேஜர்,
UBM India
Share this article