புது டெல்லி, November 9, 2015 /PRNewswire/ --
UBM India நடத்தும் தெற்காசியாவின் பிரமாண்டமான பாதுகாப்பு நிகழ்ச்சி
பாதுகாப்பு தொழில்துறைக்கான உலகின் முன்னணி வருடாந்திர கண்காட்சிகளில் ஒன்றான, UBM India-வின் 9வது சர்வதேச Fire & Security Exhibition and Conference (IFSEC) இந்தியா எக்ஸ்போ 2015, டிசம்பர் 10 முதல் 12, 2015 வரை, புது டெல்லி பிரகதி மைதானில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. Asian Professional Security Association (APSA), ASIS International, British Security Industry Association (BSIA) மற்றும் Electronic Security Association of India (ESAI) ஆகியவை இந்நிகழ்ச்சிக்கு ஆதரவளிக்கின்றன.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20141104/10110098)
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c)
உலகின் முன்னணி பாதுகாப்பு மற்றும் தீ பாதுகாப்பு நிகழ்வுகள் தொகுதியின் ஒரு பகுதி என்ற முறையில், தொழில்துறை சார்ந்த பாதுகாப்புத் திறன் மற்றும் வழிகாட்டுதலில் இம்மண்டலத்தின் ஒரு மேம்பட்ட அதிகார அமைப்பாக IFSEC India உள்ளது. இந்நிகழ்ச்சி, தனது காட்சியாளர்கள் மற்றும் வருகையாளர்களுக்கு, சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறையின் போக்குகளைப் பற்றி அறிந்து கொள்ள உதவுவது மட்டுமின்றி, தங்கள் தொழில் மற்றும் வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான சிறந்த தீர்வுகளைக் கண்டறிவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. 15,000-க்கும் அதிகமான வருகையாளர்களைக் கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற IFSEC India, பாதுகாப்பு மற்றும் தீ நாட்காட்டியின் வருடாந்திர தொழில்துறை நிகழ்ச்சியாகும், இதில் காட்சிப்படுத்தப்படும் பொருட்களில் அடங்குபவை - CCTV மற்றும் வீடியோ கண்காணிப்பு, பயோமெட்ரிக்ஸ் மற்றும் RFID, ஒருங்கிணைந்த அமைப்புகள், அணுகுதல் கட்டுப்பாடு, சைபர் பாதுகாப்பு, ஒருங்கிணைந்த அமைப்புகள், பொருள்சார் பாதுகாப்பு, சுற்றுப்புற பாதுகாப்பு, தீ கண்டறியும் அமைப்புகள், குறுக்கீட்டு எச்சரிக்கை ஒலிகள் மற்றும் தீ எச்சரிக்கை ஒலிகள்.
20 வேறுபட்ட நாடுகளிலிருந்து, பாதுகாப்பு மற்றும் தீ துறைகளைச் சேர்ந்த 300-க்கும் அதிகமான நிறுவனங்கள் 2015 பதிப்பில் தங்களது பங்கேற்பை உறுதி செய்துள்ளன; மிகவும் முன்னணி கூட்டாளர்களில் சில Aditya, Autocop, Dahua, Enter, Hi-Focus, Hikvision, Lookman, Secureye, Securico, Tech Smart, Uniview மற்றும் Zebronics ஆகும். முன்னணி கூட்டாளர்களில் Acsys, Advik, Avtron, Canon, Com-Sur, Godrej Security Solutions, Honeywell, Infinova, Keeper, Messung, Milestone, MR Impex, Nitgen, Ozone, Panasonic, Starex Global and Wavesight ஆகியவை அடங்கும்.
"இன்றையச் சூழலில், தொழில்துறை, வர்த்தகம் மற்றும் வீட்டுவசதி அமைப்புகளில், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பிற்கு அதிவிரைவான மேம்பாடு அவசியமாகியுள்ளது. IFSEC India 2015 மீது UBM India செலுத்தும் கவனமானது, இத்தேவையை முன்னணிக்குக் கொண்டு வருகின்ற முயற்சியாகும் மற்றும் அதன் விளைவாக, இந்த அமைப்புகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு, புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான தீர்வுகளை வழங்குவதாகும்," என்றார், UBM India Pvt. Ltd-ன் பொறுப்பிலுள்ள நிர்வாக இயக்குனரான Mr. Yogesh Mudras.
IFSEC 2015-ல் "SAFE CITIES" என்ற கருப்பொருளின் அடிப்படையில் ஓர் இரண்டு நாள்
(10 மற்றும் 11 டிசம்பர்) மாநாடும் இடம்பெறும். இதன் அமர்வுகள், பின்வரும் தொழில்துறை தலைப்புகளைச் சுற்றி அமைந்திருக்கும்:
IFSEC India 2014 பிரமாதமான தொழில்துறை பங்கேற்பைக் கண்டது. இந்நிகழ்ச்சி, நாட்டின் வளர்ச்சி கண்டு வரும் வர்த்தக, பொதுவியல் பாதுகாப்பு மற்றும் தீ பாதுகாப்புத் துறைகளின் முக்கிய அம்சங்களை எடுத்துக்காட்டியது. முந்தைய ஆண்டின் வெற்றியால் தூண்டப்பட்ட IFSEC India 2015, பாதுகாப்பு மற்றும் பத்திரத்தன்மைக்காகப் பாடுபடுகின்ற ஒரு பெரிய தளத்தையும், சமுதாயத்தையும் உருவாக்குகின்ற நோக்கத்தைக் கொண்டுள்ளது.
UBM India பற்றி:
UBM India, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM India, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM Asia Company, UBM India, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM Plc-க்கு சொந்தமான UBM Asia, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM Asia, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் ubmindia.in.
ஊடகத் தொடர்பு:
ப்ரியா பாட்ஷா,
[email protected],
+91(0)-22-61727000,
UBM India Pvt.Ltd.
Share this article