மும்பை, November 4, 2015 /PRNewswire/ --
- UBM India நடத்தும், பணிசார் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மீதான இந்தியாவின் பிரமாண்டமான வர்த்தகக் கண்காட்சி
- OSH India பாதுகாப்பு விருதுகள் மற்றும் தொழில்துறை மாநாடு 4வது பதிப்பின் சிறப்பம்சங்களாகும்
மும்பையில், Occupational Safety & Health (OSH) India-வின் 4வது பதிப்பின் அறிமுகத்தை UBM இந்தியா இன்று அறிவித்தது. நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய நாட்களில், பாம்பே கன்வென்ஷன் அன்ட் எக்ஸிபிஷன் சென்டரில் நடைபெற உள்ள இக்கண்காட்சி, உலக அளவிலான சிறந்த செயல்முறைகளைப் பரிமாறிக் கொள்வதற்கும், பணியிடப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்த சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கும், சர்வதேசப் புகழ்பெற்ற காட்சியாளர்கள், ஆலோசகர்கள், தொழில் நிபுணர்கள் மற்றும் முக்கிய அரசு அலுவலர்களை ஒரே தொழில்துறைத் தளத்தில் ஒன்றுகூடச் செய்வதை நோக்கமாகக் கொண்டதாகும்.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
வாய்ப்புகள் மிகுந்த மற்றும் இன்னும் பயன்படுத்தப்படாத வளஆதாரங்கள் நிறைந்த இந்தியச் சந்தையில் தங்கள் புதுமைத் தயாரிப்புகளையும், அறிவாற்றலையும் காட்சிப்படுத்துவதற்கு உலகெங்கிலும் உள்ள ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு சப்ளையர்கள் மற்றும் சேவை வழங்குனர்களுக்கு அளவற்ற வாய்ப்பினை வழங்குவது மட்டுமின்றி, நிறுவனங்களுக்கான முன்னுரிமையாக தொழில்சார் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு ஊக்கமளிக்கும் ஓர் இரண்டு - நாள் மாநாட்டையும் OSH India 2015 கொண்டிருக்கும், அதே நேரத்தில், தனது பணியாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காக முதலீடு செய்வதிலுள்ள முக்கியத்துவம் மற்றும் தொழில் நன்மை மற்றும் அதன் மூலம் தனது சொந்த நிறுவனம் மற்றும் பொருளாதாரம் அனைத்திற்குமே கிடைக்கின்ற நன்மைகளையும் அது எடுத்துரைக்கும்.
Yogesh Mudras, Acting Managing Director, UBM India Pvt. Ltd., கூறியதாவது, "இந்திய நிறுவனங்களிடையே பணிசார் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு இத்தனை ஆண்டுகளில் மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. இத்துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் கண்டுள்ள வளர்ச்சி மட்டுமின்றி, உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் பணியிட பாதுகாப்பை வழங்குதலின் முக்கியத்துவத்தை அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தும் நிலையில், தங்கள் தயாரிப்புகளையும், தீர்வு வழங்கல்களையும் காட்சிப்படுத்துவதற்கு உலகெங்கிலும் உள்ள சப்ளையர்கள் மற்றும் சேவை வழங்குனர்களுக்கு அளவற்ற வாய்ப்புள்ளது. OSH இந்தியாவின் மூலம், இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதற்கான சரியான தளத்தை நாங்கள் தொழில்துறைக்கு வழங்குகிறோம்."
OSH India பெரிதாகவும், ஆழமாகவும் வளர்ந்து வரும் நிலையில், Acme Safetywears, Acme Fabrik Plastic, BATA, Drager, Euro Safety Footwear, Joseph Leslie & Co., Jayco Safety Products, Karam, Kimberly Clark Hygiene Products, Lifegear Safetech, Honeywell Safety Products, Rahman, Venus Safety & Health Products, Shree Lalita, E.I. Dupont, Arvind, Fall Arrest Systems & Technologies, Teijin India, Mallcom safety, New Pig India, Sure Safety மற்றும் IOSH மற்றும் NEBOSH ஆகியவை உள்ளிட்ட தொழில்துறையின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் முக்கியக் காட்சியாளர்களை பயிலரங்கக் கூட்டாளர்களாகவும் கவர்ந்திழுத்துள்ளது.
நிகழ்ச்சியில் பேசும்போது, Nikil Rao, Country Manager, Dräger Medical India Pvt. Ltd. கூறியதாவது, "பாதுகாப்பு என்பது, மனித உயிர்களை காத்தல் மற்றும் பாதுகாத்தலில் உள்ள ஓர் உள்ளார்ந்த அம்சமாகும். இந்தியாவின் விரிவடைந்துவரும் தொழில்துறை எல்லைகள், பணியாளர்களின் அளவற்ற அதிகரிப்பைக் கண்டுள்ளன. இது, பாதுகாப்புத் தீர்வுகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் தேவையை அதிகரித்துள்ளது. பாதுகாப்பின் தொழில்நுட்பம் சார்ந்த போக்குகளைக் கலந்தாலோசிப்பதற்காக, முக்கியமானவர்கள் மற்றும் தங்கள் சக ஊழியர்களின் பாதுகாப்பு மீது அக்கறை காட்டுகின்றவர்களுக்கான ஒரு தளத்தை OSH இந்தியா வழங்குகிறது. பாதுகாப்பை மேலும் வலியுறுத்தும் பொருட்டு, தேசிய பாதுகாப்புக் குழுவுடன் இணைந்து, பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் பயணிக்கும் ஒரு சாலைக் காட்சி டிரக் உடனான 'மிஷன் சுரக்ஷா' என்ற இயக்கத்தை டிராகர் தொடங்கியுள்ளது."
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 27%-க்கும் அதிகமாகப் பதிவுகள் உயர்ந்து, ஆசியாவில் NEBOSH கல்வித் தகுதிகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில், தற்போது நாற்பத்தி ஏழு NEBOSH சான்றளிக்கப்பட்ட பாடப்பயிற்சி வழங்குனர்கள் நாட்டில் உள்ளனர். இதை எதிரொலிக்கும் வகையில், Stuart Naylor, NEBOSH International Manager கூறியதாவது, "இந்தியாவில் NEBOSH கல்வித் தகுதிகளுக்காக தொடர்ந்து அதிகரித்துவரும் தேவையானது, மும்பையில் நடைபெறும் இவ்வாண்டின் OSH இந்தியா மாநாட்டில் மீண்டும் பங்கேற்று, ஆதரவளிப்பதற்கு நாங்கள் முடிவெடுக்கும்படி தூண்டியது."
"தடுத்தல் மாற்றத்திற்கு வழிவகுக்குமிடம்" என்ற இந்த ஆண்டின் மாநாடு, உலகளாவிய நிறந்த நடைமுறைகளை பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தைக் கொண்டதாகும்; அதே நேரத்தில் இணைந்து நடத்தப்படுகின்ற கண்காட்சியானது, பணியிட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திலுள்ள மிகத் தீவிரமான சவால்களுக்கான தீர்வுகளை அடையாளம் காண உதவும். இணையாக நடத்தப்பட்ட மாநாட்டில், நாடு முழுவதிலிருந்தும் தொழில்துறை நிபுணர்களும், முன்னணி சர்வதேச நிறுவனங்களும் பங்கேற்றதுடன், "பாதுகாப்பைப் புரிந்து கொள்வதற்கான ஆற்றல்மிக்க அணுகுமுறை", "பெண்கள் மற்றும் OSH: பணியிடத்தில் பாலின கூருணர்வு, ஒரு முழுமையான அணுகுமுறை", "சுரங்க மற்றும் பெட்ரோலிய தொழில்துறையில் விபத்துகளைத் தவிர்ப்பதற்கு அபாயத்தை அடையாளம் காணல் மற்றும் இடர் மதிப்பீடு" மற்றும் "கட்டுமானத் தொழில்துறை, பாதுகாப்பு கலாச்சாரம் மற்றும் சூழல்" போன்ற தலைப்புகள் முதல், "செயல்முறை பாதுகாப்பு மேலாண்மை மற்றும் தொழில் யுக்தியில் நடப்பு போக்குகள்" மற்றும் நிறுவனத்தின் அடித்தட்டில் பாதுகாப்பு மற்றும் நிலைத்ததன்மை எவ்வாறு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது வரையிலான ஏராளமான தலைப்புகளில் கலந்துரையாடல்களும் நடைபெற்றன. முக்கியமான பேச்சாளர்களில், Shri Jayendra M Motghare, Director - Directorate of Industrial Safety and Health Maharashtra; Dr Avneesh Singh, Director General, Directorate General Factory Advice Service and Labour Institutes (DGFASLI), Ministry of Labour & Employment, Government of India; Shri D C Chaudhary, Director, Office of the Director Industrial Safety and Health, Ministry of Labour and Employment, Gujarat Government; Dr R Elangovan, Deputy Director General, DGFASLI, Ministry of Labour & Employment, Government of India; Mr Suresh Tanwar, Chief - Group Safety and Health, Tata Group; Mr Stephen Philip Storey, Head -EHS -Heavy Civil Infra IC, Larsen and Toubro Limited; Mr R.A.Venkitachalam, Vice President - Public Safety, Underwriters Laboratories Inc ஆகியோரும் மற்றும் பலரும் அடங்குவர்.
OSH India Safety Award 2015, பாதுகாப்பு விருதுகள் அல்லது சேஃப்டி ஹீரோஸ் விருதுகள் வகைகளிலுள்ள புத்தமைவுகளில் ஏதேனும் ஒன்றினைக் கடைப்பிடிக்கும் பணியிட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான முயற்சியைக் கொண்டுள்ள, இந்தியாவில் இயங்குகின்ற, பொது அல்லது தனியார் துறையிலுள்ள தொழில், நிறுவனங்கள் மற்றும் கூட்டு அல்லது தனிநபர்களை வரவேற்கிறது. IOSH, 26 நவம்பர் 2015 அன்று நடைபெறும் விருதுகள் இரவுக்கான துணைப் பங்காளர் ஆகும் மற்றும் இது புகழ்பெற்றவர்கள் மற்றும் தொழில்துறை முன்னோடிகள் ஒன்றுகூடுவதன் கொண்டாட்டமாக அமைந்து, கவர்ச்சியும், கேளிக்கைகளும் நிறைந்த இரவாகவும் திகழும்.
UBM India பற்றி:
UBM India, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM India, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM-Asiaவின் ஒரு நிறுவனமான UBM India, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM பிஎல்சி-க்கு சொந்தமான UBM-Asia, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM-Asia, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் ubmindia.in.
ஊடகத் தொடர்பு:
ப்ரியா பாட்ஷா / மிலி லால்வானி
[email protected] / [email protected]
Share this article