மும்பை, October 30, 2015 /PRNewswire/ --
- 10வது ஆண்டில் 160க்கு மேற்பட்ட நிறுவனங்களும் 6,500க்கும் அதிகமான பார்வையாளர்களும் பங்கேற்றனர்
- புதுமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது
இந்திய உணவு மற்றும் உடல் நல துறைக்கான ஒரே B2B மேடையான Fi & Hi இந்தியா 2015 (அக்டோபர் 19 - 21 வரை), கடந்த வாரம் மும்பையில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதனை மஹாராஷ்டிராவின் FDA கமிஷனர், டாக்டர் ஹர்ஷ்தீப் காம்ப்ளி IAS துவங்கிவைத்தார். இந்த மூன்று நாள் கண்காட்சி, கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகளில் 160க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் 6,500க்கும் அதிகமான பார்வையாளர்களும் பங்கேற்றனர்.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20151008/10132190)
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c)
10 ஆண்டுகள் துறை அனுபவத்தைக் கொண்டு இயங்கும் Fi & Hi இந்தியா உணவுப் பாதுகாப்புடன் தரத்தை நிர்வகித்தல், உலகளாவிய உணவு போக்குகள், ஹெல்த் சப்ளிமென்ட்களின் புதுமையான முயற்சிகள் மற்றும் உணவு பேக்கேஜிங்கில் வெளிப்படும் போக்குகள் போன்ற தலைப்புகளில் குழு கலந்துரையாடல்களுடன் பல தகவல் நிறைந்த, செய்நுட்பம்சார்ந்த கருத்தரங்குகள் பலவற்றை நடத்தியது. உணவு அறிவியலாளர்கள் மற்றும் தொழில் நுட்பவல்லுநர்கள் சங்கமான (இந்தியா) AFSTI, அனைத்திந்திய உணவுத் தயாரிப்பு சங்கம் (AIFPA) மற்றும் ஹெல்த் ஃபுட் அண்டு டயட்ரி சப்ளிமென்ட்ஸ் சங்கம் (HADSA) ஆகியவற்றுடன் இணைந்து இந்த கருத்தரங்குகளும் கலந்துரையாடல்களும் ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் துறையில் முன்னிலை வகிப்போர் பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி இந்திய அரசின் உணவுத் தயாரிப்பு துறை அமைச்சரின் ஆதரவில் உணவுத் தயாரிப்பு நிறுவனங்களுக்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது.
Fi இந்தியா தொடர்ந்து சிறப்பாக வளர்ச்சி பெற்றுவருகிறது. முன்னணியில் உள்ள, முக்கியமான காட்சிப்படுத்தும் நிறுவனங்களான ஏஸ் இன்டர்நேஷனல், பிரமல் ஹெல்த்கேர், கேல்ப்ரோ ஃபுட்ஸ் பிரைவேட் லிமிட்டட், இன்க்ரெடியான் இந்தியா பிரைவேட் லிமிட்டட், சோனாரோம், ஏ.டி.எம். அக்ரோ, ஜி.சி. கெமி ஃபார்மி லிமிட்டட், மின்டெல், நேச்சரெக்ஸ், ரொக்யூட் போன்றவற்றையும் கவர்ந்துள்ளது.
தயாரிப்பு, பேக்கேஜிங், உபகரணம் மற்றும் சேவைகள் ஆகியவற்றின் வளர்ந்துவரும் தேவைகளுக்குத் தீர்வளிக்க, Fi இந்தியா மீண்டும் எக்ஸ்போ ஃபுட்டெக் காட்சி அரங்கை வழங்கியது. இதில் பங்கேற்பவர்களுக்கு அனைத்து வகை உட்பொருட்களையும் கிடைக்கச் செய்தது. இரண்டாவது ஆண்டாக, Fi & Hi இந்தியா இலவச இரண்டு நாள் பேக்கரி பயிலரங்கான 'பேக்கரி நவீனமயமாக்கல் - உங்கள் பேக்கரி பிசினஸில் வளர்ச்சியடைதல்' என்பதை அறிமுகம் செய்தது. இதனை அசோகாம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேக்கரி டெக்னாலஜி அண்டு மேனேஜ்மென்ட் (AIBTM) நடத்தியது; இது பேக்கிங் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த விஷயங்கள் குறித்து விரிவாக கற்பிக்கும், பயிற்சியளிக்கும் ஆராய்ச்சி மையமாகும். இந்த பயிலரங்கில் கருத்தரங்குகள், செயல்முறை வளக்கங்கள் போன்றவை நடைபெற்றன. இதில் ஊட்டச்சத்து நிறைந்த பேக்கரி பொருட்கள், ஓட் சேர்க்கப்பட்ட, க்ளுட்டன் இல்லாத குக்கீஸ், க்ளுட்டன் இன்மை சவால்கள் மற்றும் பேக் செய்யப்படும் (baked) உணவுகளில் முட்டைக்கு மாற்றீடு போன்ற தலைப்புகளை இவை உள்ளடக்கியிருந்தன.
இந்த ஆண்டு, புதுமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது, இந்திய உணவுத் துறையின் முன்னணி நபர்கள், நிபுணர்கள், வாடிக்கையாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் வழங்குநர்களின் முன்னிலையில் புதுமையான தயாரிப்புகளைக் காட்சிப்படுத்த நிறுவனங்களுக்கு வாய்ப்பளித்தது. இந்த புதுமையான தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலில் அட்வான்ஸ்ட் என்சைம்ஸ் டெக்னாலஜீஸ், கான்கொர் இன்க்ரெடியன்ட்ஸ், ஜெனெரெக்ஸ் ஃபார்மசிஸ்ட், டயாப்ளிஸ், ஃப்ளேவரோமா, கேம்லின் ஃபைன் சைன்சஸ், ஃபைன் ஆர்கானிக்ஸ், ராஜ் அக்ரோ ஃபார்ச்சூன் ப்ரொட்யூசர் கம்பெனி, ஸ்டார் ஹை ஹெர்ப்ஸ், டஸ்டோராம் ப்ராடக்ட்ஸ் LLP , கோமல் எக்ஸாட்டிக் ஸ்பைசஸ், ஏ.பி.எஸ். உணவு உட்பொருட்கள், முர்டுஸா ஃபுட்ஸ் மற்றும் ராதா கோவிந்த் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவையும் அடங்கியுள்ளன.
பேக்கிங் (baking), கேக், பேஸ்ட்ரி, சாக்கலேட் துறையில் வேலை செய்பவர்களுக்கு "ஆரோக்கியமான குக்கியை பேக் செய்யும் (baking) போட்டி" நடைபெற்றது. இந்த போட்டியை AIBTMன் துணைப் பேராசிரியர் திரு. ஷ்ரவன் குமார், மாஸ்டர் செஃப் இந்தியா 4ன் முதல் ரன்னர் அப் நேஹா தீபக் ஷா, IHMன் இயக்குநர் திருமதி பெட்ரீசியா ஆகியோர் பின்வரும் மூவரை வெற்றியாளர்களாக அறிவித்தனர்: ஆலிவ் (1வது), ஸ்வாதி (2வது) மற்றும் ஜ்யோட்ஸ்னா (3வது). இந்த ஆண்டு முதல் முறையாக, Fi & Hi இந்தியா 'விசிட்டர்'ஸ் சாய்ஸ் விருதுகளையும்' அறிமுகம் செய்தது. இதில் ஜெனெரெக்ஸ் ஃபார்மசிஸ்ட் பிரைவேட் லிமிட்டட், ராஜ் அக்ரோ ஃபார்ச்சூன் ப்ரொட்யூசர் கம்பெனி லிமிட்டட் மற்றும் டயாப்ளிஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் ஆகியவை புதுமையான உட்பொருட்கள் வகையில் வெற்றி பெற்றனர்.
UBM இந்தியாவின் தற்காலிக நிர்வாக இயக்குநர், யோகேஷ் முத்ராஸ், "இந்தியாவில் உணவுத் தயாரிக்கும் துறை அதிவேக வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது மாறிவரும் சமூகப் பொருளாதாரத்திற்கு பங்களித்துள்ளது. இது உணவுப் பொருட்களின் தரம் குறித்த விழிப்புணர்வை அதிகரித்துள்ளது, இந்த தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் உட்பொருட்களின் தரத்தில் தொடர்ச்சியாக கவனம் செலுத்திவருகிறது. UBM இந்தியா, Fi & Hi இந்தியா இதுபோன்ற உட்பொருட்களை சர்வதேச அளவில் காட்சிப்படுத்துவதன் மூலம் உணவுத் தயாரிப்புத் துறையில் இந்தியாவின் பல வகையான மிகப் பெரிய கச்சாப் பொருட்கள் பிரிவை ஊக்குவிக்க வேண்டும் என்கிற தனது நோக்கத்தை இந்த 10வது ஆண்டிலும் நிறைவேற்றியுள்ளது."
Fi இந்தியா மற்றும் Hi என்பது உலகளாவிய உணவு உட்பொருட்கள் பிரிவின் ஒரு பகுதியாகும். இது உலகளவில் 10 வணிக நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து 142 நாடுகள் பங்கேற்றுள்ளன. இது மொத்த உணவு மற்றும் பானம் துறையை நேரடியாக அணுக வழிவகுத்துள்ளது.
UBM இந்தியா பற்றி
UBM இந்தியா, இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராகும். இது உலகம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களையும் விற்பனையாளர்களையும் பல கண்காட்சிகள், மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் இணைப்பதற்கான மேடைகளை வழங்குகிறது. UBM இந்தியா ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதிலும் பெரிய அளவில் 25 கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் நடத்துகிறது. இதனால் பல துறைகளின் வணிகத்திற்கு வழிவகுக்கிறது. UBM ஏஷியா கம்பெனியின் UBM இந்தியா மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM ஏஷியாவின் உரிமையாளர் UBM plc ஆகும். இது லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM ஏஷியா என்பது ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராகும். இது மெய்ன்லேண்ட் சீனா, இந்தியா மற்றும் மலேசியாவில் உள்ள மிகப் பெரிய வர்த்தக ஏற்பாட்டாளராகும். மேலும் விவரங்களுக்கு, ubmindia.inஐ பாருங்கள்.
ஊடகத் தொடர்பு
ப்ரியா பாத்ஷா
[email protected]
+91-22-61727000
UBM இந்தியா பிரைவேட் லிமிட்டட்
Share this article