மும்பை, October 21, 2015 /PRNewswire/ --
இந்திய உணவு மற்றும் உடல்நலத் தொழில்துறையின் ஒரே B2B தளம்
UBM இந்தியா இன்று இந்திய உணவுச் சந்தைக்குப் பங்களிக்கும் தனது பிரமாண்டமான தொழில் நிகழ்ச்சியான உணவு உட்பொருட்கள் மற்றும் ஆரோக்கிய உட்பொருட்கள் (Fi India & Hi trade show 2015)-ன் 10வது பதிப்பை அறிமுகப்படுத்தியது. இந்நிகழ்ச்சியை, தொழில்துறையின் பெருமைமிக்க கூட்டம் ஒன்றின் முன்னிலையில், சிறப்பு விருந்தினரான மஹாராஷ்டிரா FDA-ன் ஆணையர், டாக்டர் ஹர்ஷ்தீப் கம்ப்ளே ஐஏஎஸ் தொடங்கி வைத்தார்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20151019/10132856-a )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20151019/10132856-b )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20151008/10132190 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
மற்ற முக்கியப் பிரமுகர்களில், திரு. பிரபோத் ஹல்டே, தலைவர், AFSTI மற்றும் திரு. அஜித் சிங், தலைவர், HADSA ஆகியோர் அடங்குவர், இவர்கள் கண்காட்சியைச் சுற்றி வந்து கண்டு களித்தனர். இக்கண்காட்சி, இந்திய உணவுத் தொழில்துறையின் முன்னணி முடிவெடுப்போர், நிபுணர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்களை ஒரே தளத்தில் ஒன்று சேர்க்கிறது.
நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த டாக்டர் கம்ப்ளே, இக்கண்காட்சியின் 10வது பதிப்பிற்காக, UBM இந்தியாவைப் பாராட்டியதுடன், உணவு பதப்படுத்தும் தொழில்துறை, உலக நிலைக்கு எதிராக மேலும் அதிக அளவில் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தனது தொடக்க உரையின் ஒரு பகுதியாக, அவர் இத்துறையில் புத்தமைவு மற்றும் தொழில்நுட்பத்தின் காரணமாக, "இந்தியாவில் தயாரிப்பதற்கு" தற்போதுள்ள சூழல் உகந்ததாக இருப்பதை வலியுறுத்தினார்.
ஏராளமான பிரமுகர்கள், காட்சியாளர்கள், தொழில்துறையின் தொழில்நிபுணர்கள் மற்றும் வருகையாளர்களிடையே உரை நிகழ்த்தியபோது, UBM இந்தியா பிரைவேட் லிமிடெடின் பொறுப்பிலுள்ள நிர்வாக இயக்குனரான திரு.யோகேஷ் முத்ராஸ் கூறியதாவது, "இந்தியாவின் உணவு பதப்படுத்தும் துறை, சமூகப் பொருளாதார சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, அதிவேக வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது, உணவுப் பொருட்களின் தர நிர்ணயங்கள் மட்டுமின்றி, இந்த பூர்த்தி செய்யப்பட்ட பொருட்களை உருவாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் உட்பொருட்களின் உயர் தரத்தின் மீதும் கவனம் செலுத்தப்படுவது குறித்த அதிகரித்த விழிப்புணர்விற்கு வழிவகுத்துள்ளது. அத்தகைய உட்பொருட்களை சர்வதேச அளவில் காட்சிப்படுத்தி, உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கான மிகப் பரவலான மற்றும் பெரிய மூலப்பொருள் அடித்தளத்தை உருவாக்க உதவுவதே Fi & Hi India வின் 10வது பதிப்பிற்கான UBM இந்தியாவின் குறிக்கோளாகும்."
இந்திய உணவு மற்றும் உடல்நல தொழில்துறைக்கான, அதிக அளவில் விரும்பப்படுகின்ற மற்றும் ஒரே B2B தளம் என்ற முறையில், கடந்த இரண்டு நாட்களாக ஃபை இந்தியா & ஹை, உயர்தர உட்பொருட்களைக் கொள்முதல் செய்தல், தொழில்துறை வல்லுனர்களுடன் வலையமைப்பை உருவாக்குதல், சமீபத்திய தொழில்துறை போக்குகள் மற்றும் புத்தமைவுகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல், மற்றும் தங்கள் மார்க்கெட் ஷேரை அதிகப்படுத்திக் கொள்ளுதல் ஆகியவற்றிகான ஓர் வாய்ப்பை தொழில்துறைக்கு வழங்க உள்ளது.
ஃபை இந்தியா & ஹை வர்த்தகக் கண்காட்சியின் 10வது பதிப்பு, 20 மற்றும் 21 அக்டோபர் ஆகிய அடுத்த இரண்டு நாட்களுக்குத் தொடரும். இத்தளம், உலகளாவிய உணவு தொடர்பான போக்குகள்: அவை தென்கிழக்கு ஆசியாவில் எப்படிச் செயல்படப் போகின்றன? கடைப்பிடிக்காதிருப்பத்தல் மற்றும் முன்னோக்கியப் பயணத்தின் விளைவு; உடல்நலப் பராமரிப்பில் உடல்நல துணைப் பொருட்களின் பங்கு ஆகியவை மீதான ஏராளமான குழுக் கலந்தாலோசனைகளைக் கொண்டிருக்கும்.
குழுக் கலந்தாலோசனைகள்/கருத்தரங்கங்கள் ஆல் இந்தியா ஃபுட் பிராசஸர்ஸ்' அசோசியேஷன் (AIFPA) மற்றும் ஹெல்த் ஃபுட் அன்ட் டயட்டரி சப்ளிமென்ட்ஸ் அசோசியேஷன் (HADSA) உடன் கூட்டிணைந்து ஏற்பாடு செய்யப்படுகின்றன. தளத்தில் நடைபெறும் கருத்தரங்கங்களில், தொழில்துறை தலைவர்கள் கலந்து கொண்டு, உணவு உட்பொருட்களில் புத்தமைவுகள் மற்றும் நியூட்ராசியூட்டிகல்களில் உள்ள வாய்ப்புகள் குறித்து சிறப்பித்துக் கூறுவார்கள். உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சிக்கு, இந்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் ஆதரவளிக்கிறது.
Fi & Hi 2015-ன் ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக, பேக்கரி நவீனகமயமாக்கல் - உங்கள் பேக்கரி தொழில் மீது சுவை சேர்த்தல் என்ற ஓர் இரண்டு நாள் பயிலரங்கத்தையும் UBM இந்தியா அறிமுகப்படுத்துகிறது. பேக்கிங் தொழில்நுட்பம் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்காகவே பிரத்யேகமாக உள்ள, ஒரு முழுமையான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமான ஆஸோகாம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேக்கரி டெக்னாலஜி அன்ட் மேனேஜ்மென்ட் (AIBTM), இப்பயிலரங்கத்தை நடத்தும். இப்பயிலரங்கத்தில் கருத்தரங்கங்கள் மற்றும் செயல்விளக்கங்கள் ஆகிய இரண்டுமே இடம் பெற்றிருக்கும்.
இவ்வாண்டு, "ஆரோக்கியமான குக்கி பேக்கிங் போட்டி" என்றழைக்கப்படும் ஒரு பேக்கரி போட்டியும் நடைபெறும். தொழில்சார் முறையில் அடுமனையாளராகப் பணியாற்றியுள்ள, அல்லது பேக்கிங், கேக், பேஸ்ட்ரி அல்லது சாக்லேட் தொழில்துறையில் பணியாற்றும் எவரும் இதில் பங்கேற்கலாம். இப்போட்டிக்கான முன்பதிவு, முதலில் வருவோருக்கு முதலில் என்ற அடிப்படையில் ஏற்கப்படும்.
ஃபை இந்தியா தொடர்ந்து அளவிலும், ஆழத்திலும் வளர்ச்சி கண்டு வருதன் மூலம், ஏஸ் இன்டர்நேஷனல், பிராமல் ஹெலத்கேர், கால்ப்ரோ ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட், இன்கிரேடியான் இந்தியா பிரைவேட் லிமிடெட், சோனாரோம், ADM அக்ரோ, G.C. கெமிஃபார்மி லிமிடெட், மின்டெல், நேச்சுரெக்ஸ், ரோக்கெட் மற்றும் பலவை உள்ளிட்ட தொழில்துறையின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் முக்கிய காட்சியாளர்களைக் கவர்ந்திழுத்துள்ளது.
ஃபை இந்தியா & ஹை, 10 உலகளாவிய வர்த்தகக் காட்சிகள் கொண்ட உலகளாவிய உணவு உட்பொருட்கள் பிரிவின் ஒரு பகுதியாகும், இதில் 142 நாடுகள் நமது நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் எடுத்துச் சென்று, உணவு மற்றும் பானங்கள் தொழில்துறை முழுவதற்கும் நேரடி அணுகலை வழங்குகின்றன.
#fஉணவு உட்பொருட்கள் #உடல்நல உட்பொருட்கள் #ஃபைஹை2015 #UBMஇந்தியா #மும்பை நிகழ்ச்சிகள் #அடுமனை பயிலரங்கம்
UBM இந்தியா பற்றி:
UBM இந்தியா, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM இந்தியா, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM ஏஷியாவின் ஒரு நிறுவனமான UBM இந்தியா, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM பிஎல்சி-க்கு சொந்தமான UBM ஏஷியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM ஏஷியா, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் ubmindia.in.
ஊடகத் தொடர்பு
ப்ரியா பாட்ஷா
[email protected]
+91 22 61727000,
PR- தலைவர்,
UBM இந்தியா பிரைவேட் லிமிடெட்
Share this article