மும்பை, October 19, 2015 /PRNewswire/ --
UBM இந்தியா ஃபேர்ஸ் நடத்தும், இந்தியாவின் முன்னணி உள்அலங்காரம், கட்டுமானக்கலை மற்றும் வடிவமைப்புக் கண்காட்சி
இந்தியாவின் முன்னணி உள்அலங்காரம், கட்டுமானக்கலை மற்றும் வடிவமைப்புக் கண்காட்சியின் 27[வது] பதிப்பான இன்டெக்ஸ், இன்று மும்பையில் MMRDA கண்காட்சி மையத்தில், உள்வடிவமைப்பு நிபுணரான ஜரீன் கான் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. சிறப்புமிக்க கண்காட்சியான இன்டெக்ஸ் ஃபேர்ஸின் ஏற்பாட்டளர்களான UBM இன்டெக்ஸ் ஃபேர்ஸ், இந்த நான்கு நாள் நிகழ்ச்சியை (15-18 அக்டோபர்) நடத்துகிறது, மற்றும் இதில் 500-க்கும் அதிகமான பிராண்டுகளை மேம்படுத்தி வரும் 300-க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20151016/10132763 )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20151016/10132763-a )
இக்கண்காட்சியில், துருக்கி, யூகே, சீனா. இத்தாலி, மலேசியா, ஸ்பெயின் மற்றும் பல நாடுகளிலிருந்து சர்வதேசப் பங்கேற்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். முன்னணி கட்டிட நிபுணர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு வாங்குவோர் குழுக்கள், நாடு முழுவதிலிருந்தும் பில்டர்கள் மற்றும் மேம்பாட்டாளர்கள் இக்கண்காட்சியில் பங்கேற்றனர்.
இந்த வர்த்தகக் கண்காட்சி, வாங்குவோரையும், ஃபர்னிச்சர் மற்றும் ஃபிட்டிங்குகள், OEM வெண் பொருட்கள், துணைப்பொருட்கள், ஒளியமைப்பு தயாரிப்புகள் தொடர்பான வர்த்தகர்களையும், உள் வடிவமைப்பாளர்கள், பில்டர்கள், திட்ட மேலாளர்கள், ஆலோசனையாளர்கள், விருந்தோம்பல், தொழில்துறை மற்றும் அரசுத் துறைகள் முழுவதிலிருந்தும் கொள்முதல் தலைவர்கள், சமையலறை மற்றும் குளியல் சாதனங்கள் உடன் இணைக்கிறது.
இக்கண்காட்சியின் சிறப்பம்சங்களாக இருப்பவை, அறிவாற்றல் கூட்டங்கள், புத்தமைவு அரங்குகள் மற்றும் தயாரிப்பு அறிமுக மண்டலங்களாகும். இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்டியன் இன்டீரியர் டிசைனர்ஸ் (IIID), ஆல் இன்டியா ஹார்டுவேர் அசோசியேஷன், ஹாஸ்பிடாலிட்டி பர்ச்சேஸிங் மேனேஜர்ஸ் ஃபோரம் (HPMF), தைவான் ஃபர்னிச்சர் மேனுஃபாக்சரர்ஸ் அசோசியேஷன் (TFMA), ஃபர்னிச்சர் அசோசியேஷன் ஃப்ரம் டர்க்கி (MARMOB), இஸ்தான்புல் எக்ஸ்போர்ட்டர்ஸ் அசோசியேஷன் (IEA) மற்றும் பிரிட்டிஷ் கான்ட்ராக்ட் ஃபர்னினிஷிங் அசோசியேஷன் (BCFA) இந்நிகழைச்சிக்கு ஆதரவளிக்கின்றன.
இந்த B2B வர்த்தகக் கண்காட்சியில், புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணரும் உள் வடிவமைப்பாளருமான ஜரீன் கான் போன்ற பிரபலங்களும், இதர பிரசித்தி பெற்ற தொழில்துறை பிரமுகர்களான ப்ரிண்டா மில்லர், கட்டிடக்கலை நிபுணர் கரன் குரோவர், IIID தலைவர் பிரதாப் ஜாதவ், விருந்தோம்பல் கொள்முதல் மேலாளர்கள் குழுவின் தலைவர் மோகன் தேஷ்பாண்டே மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த பிற வடிவமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
லிவிங் ஸ்பேஸஸ், உட்பாக்ஸ், ஸீட்டிங்வேர்ல்டு, ஹெட்டிச், எப்கோ, லபாச்சா, காலின்ஸ், ஜோதி ஆர்க்கிடெக்சுரல், கிராம்ப்டன், ஏஷியன் பெயின்ட்ஸ், மக்வானா, காஃப், அக்ரிசில், HSIL, ஸ்பேஸ்வுட், வந்தனா டிரேடர்ஸ், ஃபியூச்சரிஸ்டிக் கான்செப்ட்ஸ், வென்சுரா, போஸ் ஹார்டுவேர், CNR, இவால்வ், ஆக்ஷன் டெஸா, ட்யூன்ஸ், இன்டாக்ஸ், க்ளிட்டோரியம், ஓஸ்வால், ஜாலி எஞ்சினியரிங், ஈகிள் சேல்ஸ் போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களும் மேலும் பலவும் தங்கள் தயாரிப்புகளையும் வழங்கல்களையும் காட்சிப்படுத்துவார்கள்.
கலைக் கூடமானது, யூகே, ஆஸ்திரேலியா மற்றும் நேபாளத்தின் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியது. வடிவமைப்பாளர்களான கனிகா பாவா, லேகா வாஷிங்டன், ரூபிள் நாகி, ஆர்க்கிடெக்ட் சுமேஷ் மேனனின் ஃபைன் ஆர்ட், ஸ்கல்ப்சர்ஸ் மற்றும் ஃபோட்டோகிராஃபி டிசைன் பொலேவார்ட் வழங்கிய க்யூடோஸ் கேலரி, 12 புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணர்களின் கைவண்ணத்தைக் காட்சிப்படுத்தியது, அவர்களில் சிலர், ஆஷீஷ் ஷா, ரெஸா காபூல், ஆலன் ஆப்ரஹாம் ஆகியோராவர். சமையல் நிபுணர் ரண்வீர் பிரார், கிச்சன் கேட்லாக்-ஐ வெளியிட்டார்.
UBM இந்தியாவின் பொறுப்பிலுள்ள நிர்வாக இயக்குனரான திரு. யோகேஷ் முத்ராஸ் கூறியதாவது, "கடந்த இருபதாண்டு காலத்தில், வர்த்தகம் மற்றும் மூலதன ஓட்டம் அதிகரித்திருப்பதுடன், இக்காலகட்டத்தில் நாட்டின் பிரதி நபர் வருமானம் ஏறக்குறைய மும்மடங்காகியுள்ளது. தொழில்துறை சூழலில் ஏற்பட்டுள்ள தற்போதைய வளர்ச்சி மற்றும் அதிகரித்துவரும் நடுத்தர மக்களின் பிரதி நபர் வருமானம் ஆகிய அனைத்தும் சேர்ந்து, ஆடம்பரச் சந்தையில், குறிப்பாக உள் அலங்கார துணைத் துறையிலும், அதன் மூலம் ஃபர்னிச்சர் பிரிவிலும், பிரமாண்டமான தேவையை உருவாக்கியுள்ளன. UBM-ன் சந்தை ஊடுருவல் மூலம், வாங்குவரின் மற்றும் உலகெங்கிலும் உள்ள சர்வதேச கொள்முதல் குழுக்களின் கவனத்தை குறிப்பிடத்தக்க அளவிற்கு இன்டெக்ஸ் ஈர்த்துள்ளது மற்றும் கண்காட்சியில் சர்வதேச பங்கேற்பின் இந்த அதிகரிப்பினால் இந்திய தொழில்துறை நன்மையடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்."
UBM இன்டெக்ஸ்ஃபேர்ஸின் நிர்வாக இயக்குனரான திரு. L.A கான், மேலும் கூறியதாவது," எங்கள் 26 ஆண்டு கால முன்னோடி வர்த்தகக் கண்காட்சியும், இந்தியாவிலுள்ள தொழில்துறைக்கு சேவை புரிகின்ற, இவ்வகையிலேயே ஒரே B2B கண்காட்சியுமான இன்டெக்ஸ் காரணமாக, இந்தியா முழுவதிலும் உள்ள கட்டிட நிபுணர்கள், உள் வடிவமைப்பாளர்கள் மற்றும் பில்டர்கள்/மேம்பாட்டார்களுடனும், முக்கிய வர்த்தக மற்றும் நுகர்வோர் அமைப்புகளுடனும் நாங்கள் நெருக்கமான இணைப்பைக் கொண்டிருக்கிறோம். மேலும், எங்கள் யுக்திசார் கூட்டின் மூலம், தொழில்துறையின் தொழில்சார் அமைப்புகளுடன் ஒரு நிரந்தரமான உறவையும் கொண்டிருக்கிறோம். இக்கண்காட்சியின் 27[வது] பதிப்பானது, இத்தொழில்துறையின் பிரமாண்டமான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வர்த்தக சமுதாயத்திற்கு உதவுவதுடன், அதன் வளர்ச்சிக்கு தனது பங்களிப்பை வழங்குவதற்கான ஒரு தொழில்துறை தளமாகவும் அமையும்."
UBM இந்தியா பற்றி:
UBM இந்தியா, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM இந்தியா, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM ஏஷியாவின் ஒரு நிறுவனமான UBM இந்தியா, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM பிஎல்சி-க்கு சொந்தமான UBM ஏஷியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM ஏஷியா, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் ubmindia.in
ஊடகத் தொடர்பு
ப்ரியா பாட்ஷா
[email protected]
+91 22 61727000
PR - தலைவர்
UBM இந்தியா பிரைவேட் லிமிடெட்
தீரஜ் மிஷ்ரா
+91 9833643101
ப்ளூ லேட்டஸ் கம்யூனிகேஷன்ஸ்
Share this article