பெஙகளூரு, October 16, 2015 /PRNewswire/ --
பெங்களூரில் அமைந்துள்ள கிரே காலர் மற்றும் ப்ளூ காலர் சந்தைக்கான வேலை வாய்ப்பு வலைவாசலான Babajob.com, புதிதாக உருவாக்கப்பட்ட முக்கிய சந்தைப்படுத்தும் அதிகாரி பதவியில் ரிஷி டோக்ரா உடனடி செயல்பாட்டின் அடிப்படையில் அமர்த்தப்பட்டுள்ளதை இன்று அறிவித்தது. இந்தியாவில் தனது செயல்பாடுகளை இந்நிறுவனம் விரிவுபடுத்துகின்ற, மற்றும் 2012 முதல் அதன் பயனர் அடித்தளம் ஆண்டுதோறும் 116.7% அதிவேக வளர்ச்சி கண்டுவருகின்ற நிலையில், இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20151015/769417-b )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20151015/769417-a )
முக்கிய சந்தைப்படுத்தும் அதிகாரி என்ற முறையில், தொழிலின் ஒட்டுமொத்த மாற்றம் மற்றும் விரிவாக்கத்திற்குப் பொருந்தும் வகையில் புதிய சந்தைப்படுத்தும் திறன்களை உருவாக்குவதன் மீது கவனம் செலுத்தி, பாபாஜாப்-க்கான ஆரம்பம் முதல் முடிவு வரையிலான சந்தைப்படுத்தும் செயல்பாடுகளை ரிஷி வழிநடத்துவார். தற்போதுள்ள வாடிக்கையாளர்களுடன் உள்ள கூட்டாண்மைகளை வலுப்படுத்துகின்ற அதே நேரத்தில், நிர்ப்பந்தமான மதிப்புத் திட்டங்கள் மற்றும் சந்தைக்கே உரித்தான தீர்வுகளை வழங்குவதற்காக பல்வழி சந்தைப்படுத்தும் விளம்பரங்களை மேற்கொள்வதற்குப் பொறுப்பேற்றுள்ள குழுக்களையும் அவர் நிர்வகிப்பார்.
இந்நியமனம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், பாபாஜாப்-ன் முக்கிய தொழில் அதிகாரியான பரணி செட்லூர் கூறியதாவது, "யுக்திசார்ந்த முடிவுகளை எடுப்பதற்கும், அவற்றை ஒழுங்கான முறையில் நிறைவேற்றி, நல்ல விளைவுகள் ஏற்படுவதை உறுதி செய்வதற்கும் ரிஷிக்கு நிரூபிக்கப்பட்ட திறன் உள்ளது. ஒரு பிரமாண்டமான பன்னாட்டு நிறுவனத்தில் அவர் முன்னதாக வகித்த பதவி மற்றும் இத்தகைய பதவிகளில் அவருக்குள்ள முன் அனுபவம் ஆகியவை அவரை இப்பதவிக்கான சிறந்த தேர்வாக ஆக்குகிறது. அவருடைய தீவிர ஆர்வம் மற்றும் தொழில் திறன் ஆகியவை, பலருடைய வாழ்வில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் புதுமைகளை நாம் தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்யும். பாபாஜாபில் உள்ள நம் அனைவரின் சார்பாகவும், இக்குழுவிற்கு அவரை நான் வரவேற்க விரும்புகிறேன்."
ஹைதராபாதிலுள்ள இந்திய தொழிற் பள்ளியின் முன்னாள் மாணவரான ரிஷி, புதிய தலைமுறை சந்தைப்படுத்துதல், நுகர்வோர் ஈடுபாடு, டிஜிட்டல் முறை சந்தைப்படுத்துதல், விளையாட்டுகளின் செயல்பாடு மற்றும் ஒருங்கிணைந்த சந்தைப்படுத்துதல் சார்ந்த தகவல்தொடர்புகள் ஆகியவற்றில் இணையற்ற அனுபவங்களுடன் வருகிறார். பெப்ஸிகோ (இந்தியா)-வின் டிஜிட்டல் தலைவராக அவர் வகித்த முந்தைய பதவியில், பல பிராண்டுகளிலும் பல டிஜிட்டல் மற்றும் ஒருங்கிணைந்த விளம்பரங்களில் உதவியுள்ளார் மற்றும் தனது பணிக்காக அவர் பல அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார். அவர் 'இந்தியாவின் தலைசிறந்த 8 எதிர்காலம் சார்ந்த பிராண்ட் தலைவர்களில்' ஒருவராக சோஷியல் சமோசாவால் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், 2014-ல், CMO கவுன்சில் மற்றும் வேர்ல்டு பிராண்ட் காங்கிரஸின் 'இந்தியாவின் தலைசிறந்த 50 டிஜிட்டல் சந்தைப்படுத்தும் தொழில் நிபுணர்கள்" தரவரிசையிலும் இடம் பெற்றுள்ளார்.
"பாபாஜாபில் சேர்வது எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது. இந்தியாவின் அடிப்படைப் பிரச்னைகளில் மிகவும் முக்கியமான ஒன்றான வேலையின்மையை, உலக அளவில் அதற்கு இணையாக ஏதுமில்லாத ஒரு தனித்துவமான முறையில் நாங்கள் தீர்க்கிறோம் என்று நான் நம்புகிறேன். ஒரு சந்தைப்படுத்துபவர் என்ற முறையில், அதனை நடத்திக் காட்டுவதற்கு ஒரே நேரத்தில் இந்தப் பிரமிடின் உச்சி மற்றும் அடிப்புறம் ஆகிய இரண்டிலும் பேசுகின்ற மற்றும் நாமறிந்த சந்தைப்படுத்தும் கட்டமைப்பை உடைத்தெறிகின்ற ஒரு தனித்தன்மை வாய்ந்த சவாலை நான் உண்மையில் எதிர்நோக்குகிறேன்." என்று கூறி ரிஷி தனது உரையை முடித்துக் கொண்டார்.
பாபாஜாப்.காம் பற்றி
Babajob.com, நாட்டின் பணிக்குழுவில் 94% அளவு இருப்பதாக தற்போது கணக்கிடப்பட்டிருக்கும் முறைசாரா துறையிலுள்ள ஆர்வமிக்க பணியாளர்களுக்கான, இந்தியாவின் மிகப் பெரிய இணையவழி வேலைவாய்ப்பு வலைவாசலாகும். இந்நிறுவனம், முறைசார் துறையிலுள்ள விற்பனை, மேலாண்மை, நிதி, பொறியியல், தகவல்தொழில்நுட்பம், BPO மற்றும் கற்பித்தல் உள்ளிட்ட, நுழைவு நிலை பணிகள் மட்டுமின்றி, டெலிவரி பாய்ஸுக்கான பணிகள், அலுவலக ஊழியர்கள், ஓட்டுனர்கள், சமையல்காரர்கள், பணிப்பெண்கள், பாதுகாப்பு காவலர்கள், அழகுக்கலை நிபுணர்கள், வரவேற்பாளர்கள் போன்றவர்களை வழங்குவதில் சிறப்புப் பெற்றுள்ளது. கூடுதல் சேவையாக, பயிற்சி பார்ட்னர்கள் மூலம், தனிநபர் வளர்ச்சி மற்றும் தொழில்சார் மேம்பாட்டு வாய்ப்புகள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.
Babajob.com, பாபாஜாப்.காமின் முக்கிய செயலதிகாரியான ஷான் பிளாக்ஸ்வெட், அவருடைய வளர்ப்புத் தந்தையான ஐரா வெய்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் சகதோழர் விபோர் கோயல் ஆகியோரின் படைப்பாகும், மேலும் இது 'ஒவ்வொருவருக்கும் சிறந்த வேலை'யை வழங்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டதாகும்.
ஒரு சமூக நிறுவனமான பாபாஜாப், சரியான திறன் பெற்றவரை, சரியான பணிவழங்குவோரிடம் இணைப்பதற்காக, தொழில்நுட்பம், புதுமையான முறைகள் மற்றும் தனது தனியுரிமை சார்ந்த தொழில்நுட்ப நெறிமுறையின் உதவியுடன், முறைசாரா வேலைவாய்ப்புச் சந்தையில் தீவிரமான ஆற்றலை உருவாக்குவதன் மூலமாக, வறுமையை எதிர்க்க /குறைக்க உதவும் பொருட்டு, அதிகரிக்கக்கூடிய, திரும்பச் செய்யக்கூடிய, லாபகரமான தீர்வை வழங்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
Babajob.com-ல் 350-க்கும் அதிகமான பணியாளர்கள் உள்ளனர் மற்றும் இந்த எண்ணிக்கையானது, இந்நிறுவனம் அதிகவேகமாக தொடர்ந்து வளர்கின்ற நிலையில்/அதன் செயல்பாடுகள் அதிகரிக்கும்போது, வளர்ச்சிக்கும், சந்தை ஊடுருவலுக்கும் உதவுவதற்காக, சிறந்த நோக்கத்துடன் விரிவடையும்.
SEEK, வினோத் கோஸ்லா இம்பேக்ட், கிரே கோஸ்ட் வென்சர்ஸ் மற்றும் USAID ஆகியவற்றிடமிருந்து Babajob.com முதலீடுகளைப் பெற்றுள்ளது.
ஊடகத் தொடர்பு:
ஜிதின் கிருஷ்ணன்
[email protected]
+91-98206-85639
பாபாஜாப்
Share this article