மும்பை, October 14, 2015 /PRNewswire/ --
இந்தியாவின் தலைசிறந்த ஃபார்ச்சூன் 500 பட்டியலிடப்பட்ட புரோக்கர் நிறுவனமும், முன்னணி பன்முக நிதிசார் சேவைகள் அமைப்பான IIFL குரூப்பின் ஓர் அங்கமுமான இந்தியா இன்ஃபோலைன் லிமிடெட், இன்று இந்தியாவின் நிதி சந்தைப் பிரிவில், IIFL மார்க்கெட்ஸ் என்ற மிகவும் மேம்பட்ட மொபைல் பயன்பாட்டின் 2.0 பதிப்பை அறிமுகப்படுத்தியது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20151009/768922)
அலுவல்சார் அறிமுகத்திற்கும் முன்பாகவே இப்பயன்பாடு 200,000 தரவிறக்கங்களைக் கணடிருப்பது, நிதிச் சந்தை பயன்பாட்டுப் பிரிவில் ஓர் அதிவிரைவான சாதனையாகும். சுமார் 50,000 IIFL வாடிக்கையாளர்கள் ஏற்கனவே இப்பயன்பாட்டின் செயல்பாட்டிலுள்ள பயனர்களாக ஆகியுள்ளனர் மற்றும் இதற்குக் கிடைத்துள்ள வரவேற்பு, மிகவும் நேர்மறையாகவும், ஊக்கமளிப்பதாகவும் உள்ளது.
IIFL மார்க்கெட்ஸ், இந்தியாவில் அதிவிரைவான மற்றும் மிகவும் திறன்மிக்க பயன்பாடாக இருப்பதுடன், உலகம் முழுவதிலும் நிதிச் சந்தைப் பிரிவிலுள்ள பெரும்பாலான பயன்பாடுகளைக் காட்டிலும் சிறந்ததாக உள்ளது. உள்நாட்டு பயன்பாடான IIFL மார்க்கெட்ஸ், இவ்வகையைச் சேர்ந்த வேறு எந்தவொரு பயன்பாட்டையும்விட விரைவானது மற்றும் அதிக நிலையானது. நிரல்பலகை செயல்பாடு, அடிப்படை ஆராய்ச்சித் திறன் கொண்ட ஒரே பயன்பாடாக IIFL மார்க்கெட்ஸ் இருப்பதுடன், ஆரம்பக்கட்ட பொது வழங்கல்கள் மற்றும் பின்தொடர் பொது வழங்கல்களுக்கான ஆர்டர்களை நிறைவேற்ற உதவுகிறது.
இந்திய நிதிச் சந்தைகள் பிரிவில் உயர்ந்தபட்ச தரநிலை கொண்ட பயன்பாடான IIFL மார்க்கெட்ஸ், 80%-க்கும் அதிகமான பயனர்களால் 4 நட்சத்திர அல்லது 5 நட்சத்திர தரநிலையை அனுபவித்து வருகிறது. இந்த உயர்தர பயன்பாட்டை 50-க்கும் அதிகமானவர்கள் இடம்பெற்றுள்ள IIFL குரூப்பின் ஓர் உட்குழு உருவாக்கியுள்ளது.
"இப்பயன்பாடு, மின்னலைப் போன்று அதிவிரைவானது மற்றும் பங்கு விலைகள் மற்றும் வர்த்தகத்தை உடனடியாக நிறைவேற்றும் நிகழ்நேர அணுகலை வழங்குகிறது. பங்குச் சந்தை வர்த்தகத்தில் இப்பயன்பாடு புரட்சியை ஏற்படுத்தும். இது, சிறிய முதலீட்டாளருக்கு ஆற்றல்மிக்க கருவிகள் மூலம் ஆற்றலளித்து, அவரை மிகப் பெரிய முதலீட்டாளர்களுக்கு இணையாகக் கொண்டு வருகிறது. தொழில்நுட்பப் புத்தமைவாளர் என்ற முறையில், வலையம் மற்றும் வர்த்தகர் முனையத்தில் எங்களுடைய முந்தைய புதுமைகள் மூலம் நாங்கள் வழங்கியுள்ள மிகச் சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு ஆற்றலளித்துள்ளோம். இப்பயன்பாடு, ஆரம்பத்திலிருந்தே வெற்றி கண்டு வருகிறது, மேலும் இது தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கும், எதிர்கால வாடிக்கையாளர்களுக்கும் பிரமாதமான நக்மைகளை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்றார், IIFL குழுவின் முக்கிய யுக்தி அதிகாரியான திரு. அநிருத்தா டாங்கே.
IIFL மார்க்கெட்ஸ், 500 நிறுவனங்களில் இலவச ஆராய்ச்சிக்கான அணுகும் வசதியை வழங்குகின்ற உலகின் ஒரே சந்தைகள் பயன்பாடாகும். "எங்கள் நிரல்பலகை, பயனருக்கான சிறப்பு மெனு அம்சங்களுடன்கூடிய உலாவலின் இலகுத்தன்மை மற்றும் நிலையான இடைமுகம் ஆகியவை இந்தியாவிலேயே சிறந்தவை மற்றும் உலக அளவிலான பயன்பாடுகளைக் காட்டிலும் மேலானவை," என்று திரு. டாங்கே குறிப்பிட்டார். "எங்கள் பயன்பாடு, எங்கள் செய்தி வலைவாசலான http://www.indiainfoline.com ஆற்றலளிக்கும் மிகவும் தனித்துவமான மற்றும் தீவிரமான செய்தி விநியோகத்தைக் கொண்டிருக்கும் ஒரே பயன்பாடாகவும் உள்ளது, இது ஆசியாவின் நிதிச் செய்தி வலைவாசல்களிடையே மிகச் சிறந்ததாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.
IIFL மார்க்கெட்ஸ், இப்பயன்பாட்டில், சந்தை, பொருளாதாரம் மற்றும் மொழில்துறை முன்னேற்றங்களை உள்ளடக்கிய ஏராளமான வீடியோ தொகுதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. IIFL மார்க்கெட்ஸ், 500 நிறுவனங்களில் இலவச ஆராய்ச்சிக்கான அணுகும் வசதியை வழங்குகின்ற உலகின் ஒரே சந்தைகள் பயன்பாடாகும்.
"ஆன்ட்ராய்டு, விண்டோஸ் மற்றும் iOS தளங்களுக்காக இப்பயன்பாட்டை நாங்கள் தனியாக வடிவமைத்திருக்கிறோம், இது, பயனரின் மொபைல் தளத்திற்கு ஏற்றவாறு சிறந்த முறையில் வேலை செய்வதற்கு மூல பயன்பாட்டிற்கு உதவுகிறது. பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் இந்த அனுபவத்தை மிகவும் விரும்புவார்கள் மற்றும் தங்கள் மொபைல் மூலம் வர்த்தகத்தை மேற்கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாண்டின் இறுதிக்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான தரவிறக்கங்கள் இருக்குமென்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று திரு. டாங்கே கூறினார்.
"IIFL மார்க்கெட்ஸ் ஆன்ட்ராய்டு, நமது தரகு வாடிக்கையாளர்களுக்கு உடனடி வர்த்தகத்தைச் செயல்படுத்துவதுடன், விருந்தினர் பயனர்களுக்கு முழுமையான அம்சங்களை வழங்குகிறது," என்று அவர் மேலும் கூறினார்.
IIFL மார்க்கெட்ஸ் மூலம், இந்திய ஈக்விட்டி சந்தைகளிலிருந்து நேரடி புதுப்பித்தல்களுக்கான அணுகலை பயனர்கள் இலவசமாகப் பெறுகின்றனர்.
தனது தரகுக் கணக்கின் விவரங்களை ஒரு வாடிக்கையாளரால் கண்காணித்து, பேஇன்/பேஅவுட் அம்சத்தின் மூலம் பணத்தை அனுப்ப முடியும். இப்பயன்பாடு, விரிவான ஆர்டர் புத்தகம் மற்றும் வர்த்தக புத்தகத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் பங்குகள், நிகர நிலை மற்றும் மார்ஜின் ஆகியவற்றைக் கண்காணிப்பதற்கும் உதவுகிறது.
மிக உயர்ந்த தரநிலைப்படுத்தப்பட்ட ஆராய்ச்சிக் குழுவின் பங்கு குறித்த யோசனைகள், விருப்பத்திற்கேற்ப அமைத்துக் கொள்ளக்கூடிய 'மெனுக்கள்' மற்றும் 'வாட்ச் லிஸ்டின்' நெடுவரிசை தலைப்புகள், நிறுவனங்கள் மீதான IIFL-ன் முழுமையான கருத்து மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப வரைபடம் ஆகியவை, IIFL மார்க்கெட்ஸ் பயன்பாட்டின் இதர முக்கிய அம்சங்களாகும். இவ்வனைத்தும், பங்கு வாங்குதல்/விற்றலுக்கான ஒரே தேய்ப்பின் இலகுத்தன்மையுடன் வருகின்றன.
IIFL பற்றி
IIFL (இந்தியா இன்ஃபோலைன் குரூப்), இதில் அடங்கியுள்ள ஹோல்டிங் நிறுவனமான, IIFL ஹோல்டிங்ஸ் லிமிடெட் (NSE: IIFL, BSE: 532636) மற்றும் அதன் துணை நிறுவனங்களுடன் சேர்த்து, இந்தியாவின் நிதிசார் சேவைகள் பிரிவிலுள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. ஈக்விட்டிகள் மற்றும் வழிப்பொருட்கள், பொருட்கள், நிதி நிர்வாகம், சொத்து மேலாண்மை, காப்பீடு, வைப்புத் தொகைகள், கடன்கள், முதலீட்டு வங்கிச் செயல்பாடு, கோல்டு பாண்டுகள் மற்றும் இதர சிறு சேமிப்பு சாதனங்கள் போன்ற பல பிரிவுகளையும் உள்ளடக்கிய முழுமையான நிதி சேவைகளுக்கான ஆலோசனை மற்றும் நிறைவேற்றலுக்கான தளத்தை IIFL வழங்குகிறது.
ஊடகத் தொடர்பு:
சௌரவ் மிஷ்ரா
[email protected]
+91-9920285887
தலைவர் - கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ், IIFL
Share this article