மும்பை, October 9, 2015 /PRNewswire/ --
இந்தியாவின் முன்னணி சர்வதேச உள்வடிவமைப்பு, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு நிகழ்வை யூபிஎம் இன்டெக்ஸ் ஃபேர்ஸ்
யூபிஎம் இன்டெக்ஸ் ஃபேர்ஸ், காட்சி இன்டெக்ஸ் கண்காட்சிகளின் முதன்மையான காட்சியின் ஒருங்கிணப்பாளர்கள், அக்டோபர் 15-18 வரை எம்எம்ஆர்டிஏ கண்காட்சி மையம், மும்பையில் இந்தியாவின் முன்னணி சர்வதேச உள்வடிவமைப்பு, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு நிகழ்வுகளின் 27வது நிகழ்வை நடத்துகின்றனர். இந்த கண்காட்சியில் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் இருப்பும் 500 பிராண்டுகளுக்கு மேற்பட்டவற்றை விளம்பரமும் செய்யப்படும்.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20151008/10132188)
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c)
இன்டெக்ஸ், இந்த ஆண்டு துருக்கி, ஐக்கிய ராஜ்யம், ஸ்பெயின் மற்றும் சீனாவின் தேசியை கூடாரங்களை சேர்ப்பதற்கு பெருமிதம் கொள்கிறது அதோடு ஆஸ்திரேலியா, மலேசியா, நேபால், ஜப்பான் உள்ளிட்ட பிற சர்வதேச பங்கேற்பும் உண்டு.
நான்கு நாள் வர்த்தக கண்காட்சியானது வாங்குநர்களையும், மரச்சாமான்கள் மற்றும் ஃபிட்டிங்குகள், ஓஈஎம் வெள்ளை சரக்குகள், துணைபொருட்கள், ஒளியூட்டும் பொருட்களை கையாளும் வணிகர்களுடன், கட்டிடக்கலைஞர்கள், உட்புற வடிவமைப்பாளர்கள், கட்டிடம் கட்டுபவர்கள், செயல்திட்ட மேலாளர்கள், ஆலோசகர்கள், கொள்முதல் தலைவர்கள் ஆகியோரை விருந்தோம்பல், கார்ப்பரேட் மற்றும் அரசாங்க பிரிவுகள், சமையலறை மற்றும் குளியலறை சாதன பிரிவுகளில் இருந்து ஒன்றிணைக்கும். இந்த காட்சியானது கல்வி மன்றங்கள், புதுமை முனைகள் மற்றும் தயாரிப்பு வெளியீட்டு பகுதிகளினால் குறியிடப்படும். இந்த நிகழ்வானது இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டீரியர் டிசைனர்ஸ் (ஐஐஐடி), அனைத்து இந்திய வன்பொருள் கழகம்,விருந்தோம்பல் கொள்முதல் மேலாளர்கள் மன்றம் (ஹெச்பிஎம்எஃப்), தாய்வான் ஃபர்னிச்சர் உற்பத்தியாளர்கள் கழகம்(டிஎஃப்எம்ஏ), துருக்கியில் இருந்து ஃபர்னிச்சர் கழகம் (எம்ஏஆர்எம்ஓபி), இஸ்டான்புல் ஏற்றுமதியாளர் கழகம் (ஐஈஏ) மற்றும் பிரிடிஷ் ஒப்பந்த ஃபர்னிஷிங் கழகம் (பிசிஎஃப்ஏ) ஆகியோரால் ஆதரிக்கப்பட்டுள்ளது.
இந்த காட்சியில் ஐஐஐடி நடத்தும் ஒரு கருத்தரங்கு, "இமேஜின் நாட்கான்', சமையல்கலை நிபுநர் ரன்வீர் பிரார் என்பவரின் சமையலறை உணவுப்பட்டியல் வெளியீடு, ஒரு கலை உறைவிடம், வடிவமைப்பு வீதி மற்றும் புகழ்பெற்ற கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் கட்டிடக்கலைஞர்களின் கைவேலைகளை காட்சிப்படுத்தும் குடோஸ் கேலரி ஆகியவை உள்ளடங்கும்.
பி2பி வர்த்தக காட்சியானது ஜரீன் கான், எனும் புகழ்பெற்ற கட்டிடக்கலைஞர் மற்றும் உட்புற வடிவமைப்பாளர், அவரோடு தொழில்துறை பிரமுகர்களான பிரிண்டா மில்லர், ஏஆர்.கரன் குரோவர், பிரதாப் ஜாதவ், தலைவர், ஐஐஐடி, மோகன் தேஷ்பாண்டே, நாற்காலிநபர், விருந்தோம்பல் கொள்முதல் மேலாளர்கள் மன்றம் மற்றும் துறையிலுள்ள மற்ற வடிவமைப்பாளர்கள் மற்றும் சிறந்த துறை பிரமுகர்களின் முன்னிலையை பெறும். லிவிங் ஸ்பேசஸ், உட்பாக்ஸ், சீடிங்வேர்ல்ட், ஹெட்டிச், எப்கோ, லபாச்சா, காலின்ஸ், ஜோதி ஆர்கிடெக்சுரல், குராம்ப்ட்ன், ஏசியன் பெயிண்ட்ஸ், மக்வானா, காஃப், அக்ரிசில், ஹெச்எஸ்ஐஎல், ஸ்பேஸ்வுட், வந்தனா டிரேடர்ஸ், ஃப்யூச்சரிஸ்டிக் கான்செப்ட்ஸ், வென்ச்சுரா, போஸ் ஹார்டுவேர், சிஎன்ஆர், இவால்வ், ஆக்ஷன் டேசா, டியூன்ஸ், இண்டாவுக்ஸ், கிலிடோரியம், ஓஸ்வால், ஜாலி என்ஜ், ஈகிள் சேல்ஸ் உள்ளிட்ட பலர் தங்கள் தயாரிப்புகளையும் சலுகைகளையும் காட்சிப்படுத்துவார்கள்.
யோகேஷ் முத்ராஸ், செயல்பாட்டிலுள்ள மேலாண்மை இயக்குநர், யூபிஎம் இந்தியா, இவ்வாறு கூறினார், "வணிகம் மற்றும் மூலதன பாவுகள் கடந்த இருபது ஆண்டுகளில் அதிகரித்துள்ளன மற்றும் நாட்டின் ஒரு முதலீட்டுக்கான வருவாய் இந்த காலகட்டத்தில் மும்மடங்காக பெருகியுள்ளது. நகர்புற இந்தியாவின் தற்போதைய வளர்ச்சியானது கார்ப்பரேட் சூழலாகவும் ஒரு முதலீட்டு வருமானத்திற்கு வளர்ச்சியடைகின்ற நடுத்தரவர்க்க மக்கள் தொகையாகவும் இருப்பதை கருத்தில்கொண்டால், இவை அனைத்தும் சொகுசு சந்தையிலே, குறிப்பாக உள்வடிவமைப்பு மற்றும் உள்திருப்ப ஃபர்னிச்சரிலும் பெரும் தேவையை உருவாக்கியுள்ளன. யூபிஎம் உடைய சந்தை ஊடுருவலுடன், வாங்குநர்களிடம் இருந்து சர்வதேச சோர்சிங் பிரதிநிதிகளிடம் இருந்தும் உலகளவில் குறிப்பிடத்தக்க கவனத்தை இன்டெக்ஸ் ஈர்த்துள்ளது மற்றும் இந்திய தொழிற்துறை இந்த கண்காட்சியில் அதிகரித்துள்ள சர்வதேச இருப்பை கொண்டு பயனடையும் என்றும் எதிர்பார்க்கிறோம்."
Mr எல்.ஏ கான், மேலாண்மை இயக்குநர், யூபிஎம் இன்டெக்ஸ் , மேலும் இவ்வாறாக விவரித்தார், "எங்களுடைய 26 ஆண்டுகாள முதன்மை வணிக கண்காட்சியை வழங்கிய இன்டெக்ஸ், இந்தியாவில் தொழிற்துறைக்கு சேவையளிக்கும் ஒரே வகையான பி2பி கண்காட்சியினால், நாங்கள் கட்டமைப்பாலர்கள், உட்புற வடிவமைப்பாளர்கள் மற்றும் கட்டிடம்கட்டுபவர்கள்/டெவலப்பர்கள் உள்ளிட்டோரின் சமுதாயத்துடனும் இந்தியா முழுவதிலும் இருந்து முக்கிய வணிக மற்றும் வாங்குநர் பிரதிநிதிகளிடமும் நெருக்கமான இணைப்பை நாங்கள் மகிழ்ந்தனுபவித்தோம். கூடுதலாக, எங்கள் திட்டமுள்ள கூட்டணியால், தொழிற்துறையின் தொழில்முறை அமைப்புகளோடு எங்களுக்கு ஒரு நிலையான உறவு ஏற்பட்டுள்ளது. வணிக சமுதாயத்திற்கான தொழிற்துறை தளமாக 27வது நிகழ்வு தொடர்ந்து சேவையளிக்கும் மற்றும் பெரும் ஆற்றலையும், அதன் காரணமாக இந்த துறையில் வளர்ச்சிக்கும் பங்களிக்கும்."
மேலும் தகவலுக்கு, வருகைதாருங்கள் www.ubmindexfairs.com
யூபிஎம் இந்தியா பற்றி :
யூபிஎம் இந்தியா என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களை அளிக்கிறது. யூபிஎம் இந்தியா ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு யூபிஎம் ஆசியா நிறுவனமான, யூபிஎம் இந்தியாவுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. யூபிஎம் ஆசியா லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள யூபிஎம் பிஎல்சிக்கு சொந்தமானது. யூபிஎம் ஆசியா ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து வருகைதாருங்கள் ubmindia.in.
ஊடக தொடர்பு
பிரியா பாட்ஷா
[email protected]
+91-22 61727353
யூபிஎம் இந்தியா பிரைவேட் லிமிடெட்.
Share this article