கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டி பிரஸ் இந்தியா மற்றும் மைக்ரோசாஃப்ட் உடனான கூட்டுடன், விஸ்IQ-வின் எட்டெக்.நவ் (EdTech.Now) குழுவானது, கல்வித் தொழில்நுட்பத்தில் ஒரு கருத்தியல் சார்ந்த மாற்றத்தைக் குறிக்கிறது
புது டெல்லி, October 9, 2015 /PRNewswire/ --
உலகின் மிகப் பிரமாண்டமான இணையவழிக் கல்வித் தளங்களில் ஒன்றான விஸ்IQ, தனது EdTech.Now குழுவின் மூலம் இந்திய மின்னணுசார் கற்றல் துறையில் பெரும் சிறப்பு வாய்ந்த மாற்றம் ஒன்றிற்கு நல்ல தயார்நிலையில் உள்ளது. கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டி பிரஸ் இந்தியா மற்றும் மைக்ரோசாஃப்ட் உடன் ஏற்பட்டுள்ள ஒரு தனித்துவமான கூட்டாண்மையுடன், இந்நிகழ்ச்சி கல்வித் துறையின் சிந்தனைத் தலைவர்கள், முடிவெடுப்பவர்கள் மற்றும் முன்னோடிகளின் மாபெரும் கூட்டமாக அமையப்போவது உறுதி. புது டெல்லியில் அக்டோபர் 15 அன்று நடைபெற உள்ள மாநாட்டில், 300 தொலைநோக்காளர்கள், முதலீட்டாளர்கள், எட்டெக் புத்தமைவாளர்கள், கல்வியாளர்கள், மற்றும் ஊடக நபர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
EdTech.Now குழுவில், மின்னணுசார் கற்றல் மற்றும் கல்வித் தொழில்நுட்பத் துறையில் தானே ஒரு முன்னோடியாக உள்ள விஸ்IQ-வின் நிறுவனரும் முக்கிய செயலதிகாரியுமான திரு.ஹர்மான் சிங் உடன் சேர்ந்து, உலகக் கல்வித் துறையைச் சேர்ந்த மேலும் பல பிரபலங்கள் இடம்பெற்றிருப்பார்கள். நிகழ்ச்சியில், மிகவும் பிரபலமானவர்களிடையே, பிரதீக் மெஹ்தா (இயக்குனர் - கல்வி, மைக்ரோசாஃப்ட் கார்ப் இந்தியா), வினோத் தம் (அகாட்கில்டின் முக்கிய செயலதிகாரி மற்றும் இணை நிறுவனரும், இன்தோயூஎஸ் வென்ச்சர் பார்ட்னர்ஸின் நிறுவனர் நிர்வாக இயக்குனரும் ஆவார்), அமித் சேவக் (முக்கிய செயலதிகாரி, லாரியேட் சதர்ன் ஏஷியா & இந்தியா), ரத்னேஷ் குமார் ஜா (நிர்வாக இயக்குனர், கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டி பிரஸ், தெற்கு ஆசியா), பேராசிரியர் M.M. பந்த் (முன்னாள் இணை-துணை வேந்தர், IGNOU), கௌரவ் டெக்ரிவால் (நிறுவனர் தலைவர், தி வேதிக் மேத் ஃபோரம் இந்தியா), மார்க் ஓ'நீல் (செயலதிகார இயக்குனர், கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டி பிரஸ், ANZ), மற்றும் ஆகாஷ் சௌதரி (இயக்குனர், ஆகாஷ், எஜுகேஷனல் சர்வீஸஸ்) ஆகியோர் முக்கியப் பேச்சாளர்களாக இருப்பார்கள்.
இந்த அறிவிப்பைப் பற்றி பேசும்போது, விஸ்IQ-வின் நிறுவனரும் முக்கிய செயலதிகாரியுமான திரு.ஹர்மான் சிங் குறிப்பிட்டதாவது, "நாட்டிலுள்ள கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்ற வழிமுறைகளை நாம் ஆராய்ந்து வரும் இச்சமயத்தில், இத்தகைய மாபெரும் தலைவர்கள் இங்கு வருகை தருவது எங்களுக்கு மிகுந்த பெருமையளிப்பதாக உள்ளது."
கல்யாண் சட்டோபாத்யாய், கமல் வதேரா, பவன் சௌஹான், பங்கஜ் மக்கார், புல்கிட் ஜெயின், அமித் மஹன்சாரியா, ஆலோக் கோயல், அமித் கர்கா, விவேக் அகர்வால், ரிச்சர்ட் கியூ, டாக்டர் ரமேஷ் ஷர்மா, சந்தீப் அனேஜா மற்றும் டாக்டர் நெல்லி டாய்ச் உள்ளிட்ட பல பிரபல பங்கேற்பாளர்களுடன், விஸ்IQ-வின் EdTech.Now, உயர் கல்விப் பிரிவைச் சேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மன்னணு கற்றல் சேவை வழங்குனர்கள், தொழில்நுட்ப புத்தமைவாளர்கள் மற்றும் உள்ளடக்க வழங்குனர்களுக்கான பொருத்தமான தளமாகவும், அவசியம் பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சியாகவும் அமையும். "மாற்றத்துடன் பயணித்தல் - இணையவழிக் கல்வி சேவை வழங்குனர்களுக்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகள்", "பணிக்குழு 2020 -உருவாகிவரும் போக்குகள் மற்றும் தொழில்துறை கற்றலில் உள்ள சவால்கள்", மற்றும் 'கல்வியின் எதிர்காலத்தை வடிவமைக்கும் புகழ்பெற்ற தொழில்நுட்பங்கள்' போன்ற தலைப்புகளுடன், இந்நிகழ்ச்சி, இணையவழிக் கல்வி மற்றும் தொழில்நுட்பப் பயன்பாடு தொடர்பான பல்வேறு விஷயங்கள் பற்றிய கலந்தாலோசனைகள் மற்றும் நுட்பமான அறிவாற்றல் வழங்கலுக்கு வழிவகுக்கும்.
விஸ்IQ-வைப் பற்றி:
2007-ம் ஆண்டு நிறுவப்பட்ட விஸ்IQ, உலகின் மிகப் பெரிய கிளவுட் அடிப்படையிலான கல்வித் தளங்களில் ஒன்றாகும். 200 நாடுகளில் 4 மில்லியனுக்கும் அதிகமான கற்போருக்கு, கற்றல் சேவைகளை வழங்கும் வகையில் 400,000-க்கும் அதிகமான கல்வியாளர்கள் விஸ்IQ-ஐ அமைத்துள்ளனர். நேரடி பயிற்சியாளர் வழிநடத்தும் கற்றலின் ஆன்லைன் வழங்கலுக்கு உதவும் விஸ்IQ-வின் விருது வெல்லும் வர்சுவல் கிளாஸ்ரூம் தீர்வானது, உலகம் முழுவதும் உள்ள கல்வி சேவை வழங்குனர்களின் பாராட்டுதலைப் பெற்றுள்ளது. சில நிமிடங்களிலேயே தங்கள் சொந்த விருப்பத்திற்கேற்ற அகாடமிகளை நிறுவுவதற்கு கல்வி சேவை வழங்குனர்களுக்கு ஆற்றலளிப்பதன் மூலம், கல்வித் தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சிகரமான சாதனைக்கு விஸ்IQ-வின் ஆன்லைன் அகாடமி பில்டர் வழிவகுத்துள்ளது.
மொபைல் மூலம் கற்றல், வீடியோ ஸ்டிரீமிங், நேரடி ஆன்லைன் வகுப்பறை, கலந்துரையாடல் போர்டுகள், மதிப்பீடுகள், நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வுகள் போன்ற அதிநவீன அம்சங்கள் மூலம், கற்பவரின் ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில் விஸ்IQ-வின் ஆன்லைன் அகாடமி பில்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. உருவாக்குவதிலுள்ள சிக்கல்கள், நிறுவும் செலவுகளின் சுமை மற்றும் சேவையக கட்டமைப்பு போன்றவை அவசியமில்லாத நிலையில், இத்தீர்வானது உடமையாக்கிக் கொள்கின்ற மொத்தச் செலவை வியக்கத்தக்க அளவிற்குக் குறைக்கிறது. மேலும், உள்ளமைந்த மின்னணுசார் வர்த்தகத் திறனும், தங்கள் சேவைகளை பணமாக்கிக் கொள்வதற்கும், தங்களை புதிய சந்தைகளுக்கு விரிவுபடுத்திக் கொள்வதற்கும் அவர்களுக்கு உதவுகிறது.
அணுகவும்: http://www.wiziq.com
ஊடகத் தொடர்பு:
ரிச்சா சிங்
[email protected]
+91 8427-263388
தகவல்தொடர்புகள் தலைவர்
விஸ்IQ
Share this article