மும்பை, October 9, 2015 /PRNewswire/ --
175-க்கும் அதிகமான காட்சியாளர்களுடன் இந்திய உணவுச் சந்தையை அணுகுகிறது
ஃபை இந்தியா & ஹை வர்த்தகக் கண்காட்சியின் 10[வது] பதிப்பு, அக்டோபர் 19, திங்கட்கிழமை முதல் அக்டோபர் 21 புதன்கிழமை வரை, இந்தியாவில், மும்பையிலுள்ள பாம்பே எக்ஸிபிஷன் சென்டரில் நடைபெறும். இந்திய உணவு மற்றும் உடல்நலத் தொழில்துறையின் ஒரே As the only B2B தளமாக உள்ள Fi India & Hi, உயர்தர உட்பொருட்களைப் பெறுதல், தொழில்துறை வல்லுனர்களுடன் வலையமைப்பை உருவாக்கிக் கொள்ளுதல், தொழில்துறையின் சமீபத்திய போக்குகள் மற்றும் புத்தமைவுகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல் மற்றும் தங்கள் மார்க்கெட் ஷேரை விரிவுபடுத்துதல் ஆகியவற்றுக்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20151008/10132190 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
10 ஆண்டுகால தொழில்துறை அனுபவத்தால் ஆற்றலளிக்கப்பட்டுள்ள Fi India, உலகெங்கிலும் உள்ள முன்னணி வர்த்தகக் கூட்டமைப்புகளைச் சேர்ந்த பேச்சாளர்களுடன், ஏராளமான, இலவச, களம் சார்ந்த கருத்தரங்கங்களை வழங்குகிறது. இச்சிறப்புமிக்க கருத்தரங்கங்கள், நியூட்ராசூட்டிகல்ஸ் மற்றும் செயல்பாடுசார் உணவுகளின் வளர்ச்சி முதல், இந்திய உணவுச் சந்தையிலுள்ள உரிமச் செயல்முறை வரை பல வகையான விஷயங்களையும் அலசி ஆராய்கின்றன. ஊட்டச்சத்து மற்றும் நலன் ஆகியவை முடிவற்ற தொடர் வளர்ச்சிப் போக்கில் செல்வதால், Health ingredients (Hi), ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் நலன் தொழில்துறையின் முழுமையான 360 நோக்கினை வழங்கும் ஓர் ஆற்றல்மிக்க கண்காட்சியை உருவாக்கியுள்ளது. நாள் 1-ல் நடைபெறும் தொழில்நுட்பக் கருத்தரங்கங்களை அசோசியேஷன் ஆஃப் ஃபுட் சயன்டிஸ்ட்ஸ் அன்ட் டெக்னாலஜிஸ்ட்ஸ் (இந்தியா) என்ற AFSTI நடத்தும். உலகெங்கிலும் சுமார் 2,300 உறுப்பினர்களைக் கொண்ட AFSTI, மிகப் பெரிய தொழில்சார் மற்றும் கல்விசார் அமைப்புகளில் ஒன்றாகும். அவர்களுடைய அமர்வுகளில், "உட்பொருட்கள் தொழில்துறைக்கான கடைப்பிடித்தல்" இடம்பெற்றிருப்பதுடன், அவை பொது கடைப்பிடித்தல்கள், பகுப்பாய்வுசார் கடைப்பிடித்தல்கள் மற்றும் FSMS கடைப்பிடித்தல்களைப் பற்றி கலந்தாலோசிக்கும்.
மேலும், உயர் நிலை உட்பொருள் விநியோகிப்பாளர்கள் தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துவதற்கும் மேலாக, Fi India முந்தைய வெற்றிகரமான எக்ஸ்போ ஃபுட்டெக் பெவிலியனை மீண்டும் ஒருமுறை நடத்தும். பதப்படுத்துதல், பேக்கேஜிங், சாதனங்கள் மற்றும் சேவைகளில் தீர்வுகளுக்கான தேவைகள் அதிகரித்து வருவதற்கு ஈடுகொடுக்கும் விதமாக, Fi India இந்தப் புகழ்பெற்ற அரங்கை மீண்டும் ஒருமுறை சேர்த்துக் கொள்வதன் மூலம், மேலும் முழுமையான வகைத் தேவைகளுக்கேற்ற தீர்வுகளைப் பெறுகின்ற திறனை வருகையாளர்களுக்கு வழங்கும்.
இரண்டாவது ஆண்டிற்கு, Fi India & Hi ஓர் இலவச பேக்கரி பயிலரங்கத்தை அறிமுகப்படுத்துகிறது. இப்பயிலரங்கம், அக்டோபர் 19-20 தேதிகளில், அரங்கு எண் 6-ல் நடத்தப்படும். பேக்கிங் தொழில்நுட்பம் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்காகவே பிரத்யேகமாக உள்ள, ஒரு முழுமையான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமான ஆஸோகாம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேக்கரி டெக்னாலஜி அன்ட் மேனேஜ்மென்ட் (AIBTM), இப்பயிலரங்கத்தை நடத்தும். இப்பயிலரங்கத்தில் கருத்தரங்கங்கள் மற்றும் செயல்விளக்கங்கள் ஆகிய இரண்டுமே இடம்பெற்றிருக்கும். ஊட்டச்சத்து செறிந்த பேக்கரி தயாரிப்புகள், ஓட்ஸ் அடிப்படையிலான குக்கிகள் மற்றும் குளூட்டன் இல்லாத குக்கிகள், குளூட்டன் இல்லாத சவால்கள் மற்றும் பேக் செய்த உணவுகளில் முட்டைக்கான மாற்றுகள் ஆகியவை இங்கு கலந்தாலோசிக்கப்படவுள்ள தலைப்புகளில் சிலவாகும்.
இவ்வாண்டு, "ஆரோக்கியமான குக்கி பேக்கிங் போட்டி" என்றழைக்கப்படும் ஒரு பேக்கரி போட்டியும் நடைபெறும். தொழில்சார் முறையில் அடுமனையாளராகப் பணியாற்றியுள்ள, அல்லது பேக்கிங், கேக், பேஸ்ட்ரி அல்லது சாக்லேட் தொழில்துறையில் பணியாற்றும் எவரும் இதில் பங்கேற்கலாம். இப்போட்டிக்கான முன்பதிவு, முதலில் வருவோருக்கு முதலில் என்ற அடிப்படையில் ஏற்கப்படும்.
Fi India & Hi, 10 உலகளாவிய வர்த்தகக் காட்சிகள் கொண்ட உலகளாவிய உணவு உட்பொருட்கள் பிரிவின் ஒரு பகுதியாகும், இதில் 142 நாடுகள் நமது நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் எடுத்துச் சென்று, உணவு மற்றும் பானங்கள் தொழில்துறை முழுவதற்கும் நேரடி அணுகலை வழங்குகின்றன.
மேலும் தகவல்களுக்கு அணுகவும் http://www.figlobal.com/india/home .
UBM இந்தியா பற்றி:
UBM இந்தியா, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM இந்தியா, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM ஏஷியாவின் ஒரு நிறுவனமான UBM இந்தியா, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM பிஎல்சி-க்கு சொந்தமான UBM ஏஷியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM ஏஷியா, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் http://www.ubmindia.in .
ஊடகத் தொடர்பு
ப்ரியா பாட்ஷா
[email protected]
022-61727353
UBM இந்தியா பிரைவேட் லிமிடெட்
Share this article