மும்பை, October 9, 2015 /PRNewswire/ --
ஸ்மார்ட்ஃபோன் பிரிவில் வளர்ந்துவரும் நிறுவனமான ஆசுஸ், பின்தங்கிய குழந்தைகள் தங்கள் ஆக்கத் திறன்களை வெளிப்படுத்துவதற்கு உதவும் வகையில் அவர்களை ஈடுபடுத்துவதற்காக, பிரதம் கல்வி அமைப்புடன் கூட்டாண்மை ஒன்றை உருவாக்கியுள்ளது. நாட்டிற்கு தான் ஆதரவளிப்பதை உறுதிப்படுத்துவதற்காக ஆசுஸ் எடுத்துவரும் முயற்சிகளின் சான்றாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. சமீபத்தில், ஸ்ரீ சிட்டியில் தனது உற்பத்தித் தொழிற்சாலையை இந்நிறுவனம் அறிவித்தது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20151008/10132181 )
கூட்டாண்மையின் கீழ், மும்பையில் இவ்வமைப்பின் 10 மையங்களில் ஒரு படம் வரையும் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் 200-க்கும் அதிகமான குழந்தைகள் பங்கேற்றனர், தாளில் வண்ணங்களுடன் தங்கள் கற்பதைத் திறனை பயன்படுத்தி, தங்கள் படைப்புகளை உருவாக்கும்படி அவர்களிடம் கூறப்பட்டது. 'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட' ஆசுஸ் ஜென்ஃபோன் 2 லேசர் வாங்கும் 2000 நுகர்வோருக்காக சிறப்பாக வடிவமைக்கப்படும் ஒரு பையில் இப்படங்களின் ஒட்டுவடிவம் இடம்பெறும், இது ஆசுஸ் பிரத்யேக அங்காடிகளிலும் ஃப்ளிப்கார்ட்டிலும் கிடைக்கும். இத்தனித்தன்மை வாய்ந்த பையைத் தவிர, நுகர்வோர் ஆசுஸ் குடும்பத்திடமிருந்து தீபாவளிக்கான ஆச்சரியப் பரிசு ஒன்றையும் பெறுவார்கள்.
http://www.flipkart.com/asus/zenfone-2/new-ranges?otracker=hp_nmenu_sub_electronics_0_Asus
"நாங்கள் இந்தியாவுக்காக பொறுப்புறுதி ஏற்றுள்ளோம் மற்றும் எங்கள் தொழிலை அதிக அர்த்தம் நிறைந்ததாக ஆக்குவதற்கான வழிமுறைகளையும் நாங்கள் தீவிரமாகத் தேடி வருகிறோம். எங்களுடைய இந்திய உற்பத்தித் தொழிற்சாலை தொடங்கப்பட்டிருப்பதைப்போலவே, பிரதம் கல்வி அமைப்புடனான எங்கள் கூட்டாண்மையும் அதே பாதையில் நாங்கள் எடுத்து வைக்கின்ற இன்னொரு அடியாகும். ஒரு கலைநயமிக்க முயற்சியில் குழந்தைகள் ஈடுபடுவது மட்டுமின்றி தங்கள் திறனை வெளிப்படுத்துவதற்கும் உதவிய ஒரு செயல்பாட்டின் அங்கமாக இருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது," என்றார், ஆசுஸ் இந்தியாவின் சிஸ்டம் பிசினஸ் குரூப், மண்டல தலைவரும், தென்னாசியா மற்றும் தேசிய மேலாளருமான பீட்டர் சாங். "குழந்தைகளுக்குக் கல்வியளித்து, அவர்களுக்கு அறித்திறனுடன் ஆற்றலளிப்பதில் பிரதம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கலை மூலமாக தங்களை வெளிப்படுத்துவதற்கும், ஒரு முக்கியமான பாடத்திட்டம்சாரா செயல்பாட்டில் பங்கேற்பதற்கும் இம்முயற்சி அவர்களுக்கு ஒரு தளத்தை வழங்கியுள்ளது எங்களுக்கு நிச்சயமாகத் தெரிகிறது," என்று பீட்டர் மேலும் கூறினார்.
இந்தியாவில் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக 1995-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பிரதம், பின்தங்கிய குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதன் மீது கவனம் செலுத்துகிறது. அதன் பூகோள பரப்பளவு இந்தியாவிலுள்ள 21 மாநிலங்களில் பரவியுள்ளது மற்றும் பல்வேறு திட்டங்கள் மூலம் 7.7 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளைச் சென்றடைகிறது.
ஆசுஸ் பற்றி
ஆசுஸ், ஓர் உலகளாவிய, முதல் மூன்று நுகர்வோர் நோட்புக் விற்பனையாளரும், உலகின் விற்பனையில் சாதனை படைக்கின்ற, விருது வெல்லும் மதர்போர்டுகளின் உற்பத்தியாளரும் ஆகும். புதிய டிஜிட்டல் தலைமுறையின் முன்னணி நிறுவனமான ஆசுஸ், மதர்போர்டுகள், கிராஃபிக்ஸ் கார்டுகள், ஆப்டிகல் டிரைவ்கள், டிஸ்பிளேக்கள், டெஸ்க்டாப் மற்றும் அனைத்தும் அடங்கிய பிசிக்கள், நோட்புக்குகள், நெட்புக்குகள், சர்வர்கள், மல்டிமீடியா சாதனங்கள், ஒயர்லெஸ் தீர்வுகள், வலையமைப்பு சாதனங்கள், டாப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளுடன், இன்றைய டிஜிட்டல் சார்ந்த வீடு மற்றும் அலுவலகத்தின் தேவைகளைக் கச்சிதமாகப் பூர்த்தி செய்கின்ற பொருட்களை வடிவமைத்து, உற்பத்தி செய்கிறது. புத்தமைவினால் தூண்டப்பட்டு, தரத்திற்கு பொறுப்புறுதி ஏற்றுள்ள ஆசுஸ், 2014-ல் 4,326 விருதுகளை வென்றுள்ளதுடன், தனது Eee PC™ மூலம் பிசி தொழில்துறையை புரட்சிகரமாக ஆக்கியதற்கான மிகப்பெரிய பெருமையையும் பெற்றுள்ளது. ஆசுஸ், உலகம் முழுவதும் 16,000-க்கும் அதிகமான பணியாளர்களுடன், 5,200 பொறியாளர்கள் இடம்பெற்றுள்ள உலகத்தரம் வாய்ந்த ஓர் R&D குழுவையும் கொண்டுள்ளது. 2014-க்கான இந்நிறுவனத்தின் வருமானம் சுமார் US$14.5 பில்லியன் ஆகும்.
மேலும் தகவல்களுக்கு, அணுகவும்: http://www.asus.com/in/
ஊடகத் தொடர்பு:
மனோஜ் குமார்
[email protected]
+91-9818520082
ஆசுஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்
Share this article