மும்பை, October 8, 2015 /PRNewswire/ --
பொதுவியல் அணு ஆற்றல் தொழில்துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஆதரவும், ஊக்கமும் அளிப்பதற்காக தன்னை பிரத்யேகமாக அர்ப்பணித்துக் கொண்டுள்ள ஒரே கண்காட்சி மற்றும் உச்சி மாநாடான இந்திய அணு ஆற்றலின் 7வது பதிப்பை UBM இந்தியா இன்று அறிவித்தது. DAE (அணு ஆற்றல் துறை) உடன் இணைந்து, NPCIL-ன் (நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்) ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியின் கருப்பொருள்: அணு ஆற்றல் மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் என்ற கருத்தாக்கம்.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20151007/10132073 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
இந்திய அணு ஆற்றல் 2015-ன் சிறப்பு விருந்தினராக இந்திய அரசின், பிரதமர் அலுவலக, அணு ஆற்றல், மாறில அமைச்சரான டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்பார் மற்றும் அணு ஆற்றல் கமிஷனின் தலைவர் டாக்டர் R K சின்ஹா சிறப்புரை ஆற்றுவார். இந்த உச்சி மாநாடு, DAE, NPCIL, IAEA (சர்வதேச அணு ஆற்றல் முகமை) மற்றும் பொதுவியல் அணு தொழில்துறையைச் சேர்ந்த இதர தனியார் நிறுவனங்களிலிருந்து வரும் மூத்த அதிகாரிகளை ஒன்று சேர்க்கிறது. இந்திய அணு ஆற்றல் 2015-ன் கூடுதல் சிறப்பம்சங்களில், கனடா மற்றும் இந்தியாவுக்கிடையிலான கூட்டாண்மையின் அடிப்படையில் அமைந்த ஒரு கருத்தரங்கமும் அடங்கும்.
70-க்கும் அதிகமான காட்சியாளர்களுடன், இந்திய அணு ஆற்றல் 2015, பொதுவியல் அணு தொழில்துறைக்காக தொழில்துறை விநியோகிப்பாளர்கள் வழங்கும் புத்தமைவுகள், அமைப்பு முழுமையாக்கல்கள், பராமரிப்பு மற்றும் நிலை கண்காணிப்பு சாதனங்கள் உள்ளிட்ட சமீபத்திய வழங்கல்கள் மற்றும் தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்தும். இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியானது, இந்தியா மட்டுமின்றி, கனடா, ரஷ்யா மற்றும் ஃபிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வரும் காட்சியாளர்களுடன் பரிமாற்றத்தில் ஈடுபட்டு, வலையமைப்பை உருவாக்கி, அணுத் துறை வழங்கும் பிரமாண்டமான சாத்தியக்கூறுகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை வழங்கும்.
அக்டோபர் 15 அன்று, இந்நிகழ்ச்சியில், அணு ஆற்றல் - இந்தியச் சூழல், இந்தியாவில் தயாரிப்போம் - அணு ஆற்றல்: நடப்பு நிலை, அயல்நாட்டு தொழில்நுட்பத்தை ஓரிடமாக்கல், அணு ஆற்றலில் பொதுமக்கள் ஏற்பு மற்றும் CSR பிரச்னைகள் மற்றும் பொதுவியல் அணுத் திட்டம்: கடந்த பத்தாண்டு மற்றும் அண்மையிலுள்ள எதிர்காலத்திற்கான கண்ணோட்டம் குறித்த வல்லுனர்கள் உரை போன்ற தலைப்புகள் மீது கலந்துரையாடி ஆலோசிக்கின்ற ஓர் ஒரு - நாள் மாநாடும் இடம் பெறும். இந்நிகழ்ச்சி, பொறியியல் கொள்முதல் மற்றும் கட்டுமானம் (EPC-க்கள்), அசல் சாதனங்களின் உற்பத்தியாளர்கள் (OEM-கள்), அமைப்பு உருவாக்குவோர் ஆகிய பிரிவுகளிலுள்ள முன்னணி நிறுவனங்கள் மற்றும் இறுதிப் பயனர் வகையினருடன் நடைபெறும் எதிரெதிர் "விரைவுக் கூட்டங்கள்" மூலம் மேலும் சிறப்புறச் செய்யப்படுகிறது.
இந்திய அணு ஆற்றல் 2015 பற்றிய மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து அணுகவும் http://www.ubmindia.in/indianuclearenergy/home
UBM இந்தியா பற்றி:
UBM இந்தியா, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM இந்தியா, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM ஏஷியாவின் ஒரு நிறுவனமான UBM இந்தியா, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM பிஎல்சி-க்கு சொந்தமான UBM ஏஷியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM ஏஷியா, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் ubmindia.in
ஊடகத் தொடர்பு:
ப்ரியா பாட்ஷா
[email protected]
+91-22- 61727353
UBM இந்தியா பிரைவேட் லிமிடெட்
ஆதாரம்: UBM இந்தியா பிரைவேட் லிமிடெட்.
Share this article