விஸ்IQ, உலகளாவிய கல்வித் தொழில்நுட்பக் குழுவான எட்டெக்.நவ் (EdTech.Now)-க்காக, மைக்ரோசாஃப்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டி பிரஸ்ஸுடன் கூட்டிணைகிறது
புது டெல்லி, October 7, 2015 /PRNewswire/ --
மின்னணுசார் கற்றல் துறையின் முன்னோடி என்ற முறையில், உலகின் மிகப் பிரமாண்டமான இணையவழிக் கல்வித் தளங்களில் ஒன்றான விஸ்IQ, தனது எட்டெக்.நவ் குழுவின் மூலம் உலக அளவிலான கல்வித் தலைவர்கள், புத்தமைவாளர்கள் மற்றும் தொலைநோக்காளர்களை ஒரு பொதுவான தளத்தில் ஒன்றுசேர்க்கிறது. புது டெல்லியிலுள்ள லீ மெரிடியன் ஓட்டலில் அக்டோபர் 15 அன்று நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில், 300 கல்வியாளர்கள், தொலைநோக்காளர்கள், முதலீட்டாளர்கள், எட்டெக் புத்தமைவாளர்கள் மற்றும் ஊடக நபர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எட்டெக்.நவ் -ஐ முறையே கல்வி மற்றும் புத்தமைவுத் தொழில்நுட்பத் துறைகளில் சிந்தனைத் தலைவர்களாக உள்ள பெருமைமிக்க கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டி பிரஸ் இந்தியா மற்றும் மென்பொருள் முன்னோடி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் உடன் இணைந்து விஸ்IQ நடத்துகிறது.
உயர்தர உள்ளடக்கம் மூலம், கல்வி, நடப்பு போக்குகள், எதிர்கால மேம்பாடுகள், சவால்கள் மற்றும் வாய்ப்புகள் மீது தொழில்நுட்பம் கொண்டுள்ள வலிமையான தாக்கம் குறித்த ஆழ்ந்த நுண்ணுணர்வுகளை எற்படுத்துவதையே நோக்கமாகக் கொண்ட எட்டெக்.நவ், இந்தியாவின் முன்னணி உலகளாவிய கல்விக் குழுவாக ஆகும் வாய்ப்பினைக் கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், வினோத் தம் (அகாட்கில்டின் முக்கிய செயலதிகாரி மற்றும் இணை நிறுவனரும், இன்தோயூஎஸ் வென்ச்சர் பார்ட்னர்ஸின் நிறுவனர் நிர்வாக இயக்குனரும் ஆவார்) போன்ற தொழில்துறைத் தலைவர்களும் மற்றும் பல சிந்தனைத் தலைவர்களும் ஆற்றும் தலைமை உரை மற்றும் தொடக்க அமர்வுகள் இடம்பெறும் மற்றும் இவர்கள் டிஜிட்டல் யுகத்தில், கல்வியின் எதிர்காலம் குறித்து விவாதிப்பார்கள்.
பென்டியம் பிராசஸரின் தந்தை என்று பிரபலமாக அறியப்படுகின்ற மற்றும் தற்போது எட்டெக்கின் தொழில்முனைவரான வினோத் தம் கூறியதாவது, "ஸ்மார்ட்ஃபோன்கள் எவ்வாறு கணினி தொழில்துறையின் விதிமுறைகளை மாற்றி, தனிநபர் கணினிகளை காலாவதியாக்குகின்றவோ, அதைப்போலவே இன்று வெளியேறுவதைப்போல், இணைவழிக் கல்வியும் மிக விரைவிலேயே பல்லாயிரக் கணக்கான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை காலாவதியாகச் செய்துவிடும்."
கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டி பிரஸின் நிர்வாக இயக்குனரான திரு.ரத்னேஷ் ஜா கூறினார், "டிஜிட்டல் ஏற்பானது, கல்வித் துறையின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும் மற்றும் வெளியீட்டாளர்களுக்கும், உள்ளடக்க தீர்வு வழங்குனர்களுக்கும் ஐடி/டிஜிட்டல் தளம் ஒரு ஆக்கக் கருவியாக அமையும். தொழில்நுட்பத்தால் செயல்படுத்தப்படும் ஆசிரியலியல் குறுக்கீடானது, 21-ம் நூற்றாண்டின் இந்தியாவை வடிவமைக்கும் விதியாக அமையும். உயர் தரம் மற்றும் நன்கு ஆராயப்பட்ட உள்ளடக்கம், டிஜிட்டல் தீர்வுகள், மதிப்பீடுகள், தனித்துவமான மற்றும் கற்கும் சமுதாயத்திற்கான ஒத்திசைவான கற்றல் ஆகியவை மிகவும் முக்கியமான, அவசியமான அம்சங்களாகும், மேலும் விஸ்IQ போன்ற எட்டெக் நிறுவனங்கள், அத்தகைய தீர்வுகளை பல லட்சம் மக்களுக்குக் கொண்டு செல்ல உதவுவதில் மிகப் பெரிய பங்கு வகிக்கும். உயர்தர உள்ளடக்கம் மற்றும் தீர்வுகளை பரப்புவதற்காக, விரிவான சென்றடைதல் மூலம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்ட எட்டெக்.நவ் போன்ற கருத்துக் களங்களுக்கு உதவுவதில் கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டி பிரஸ் மிகுந்த மகிழ்ச்சியடைகிறது."
இந்த அறிவிப்பைப் பற்றி பேசும்போது, விஸ்IQ-வின் நிறுவனரும் முக்கிய செயலதிகாரியுமான திரு.ஹர்மான் சிங் குறிப்பிட்டதாவது, "இன்று தொழில்நுட்பமானது, கல்வித் தொழில்துறை மீது பிரமாண்டமான தாக்கத்தை ஏற்படுத்தி, கல்வி அணுகப்படும் முறையை தற்போது உருமாற்றம் செய்துள்ளது. இத்துறையின் எதிர்காலத்தை வரையும் பொருட்டு, தங்கள் ஆழ்ந்த நுண்ணுணர்வுகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக, நமது எட்டெக்.நவ் குழுவின் வாயிலாக, சிந்தனைத் தலைவர்கள், நிபுணர்கள் மற்றும் இணையவழிக் கல்வியின் முன்னோடிகளை ஒரே கூரையின் கீழ் கொண்டு வருவதை நாங்கள் எதிர்நோக்குகிறோம். மேலும், கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டி பிரஸ் இந்தியா மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற தொழில்துறையின் முன்னணி நிலையிலுள்ள நிறுவனங்களை இக்குழுவின் செயல்பாடுமிக்க பங்காளர்களாகக் கொண்டிருப்பது, இதனை இந்தியாவின் இணையவழிக் கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க இந்நிகழ்ச்சியாக ஆக்கும்."
விஸ்IQ-வின் எட்டெக்.நவ், இணையவழிக் கல்வி மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த கலந்துரையாடல்கள் மற்றும் நுண்ணுணர்வு வெளிப்பாடுகளுக்கு வகை செய்யும். "மாற்றத்துடன் பயணித்தல் - இணையவழிக் கல்வி சேவை வழங்குனர்களுக்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகள்", "பணிக்குழு 2020 -உருவாகிவரும் போக்குகள் மற்றும் தொழில்துறை கற்றலில் உள்ள சவால்கள்" மற்றும் "இணையவழி உலகில் கற்பவரை ஈடுபடுத்துதல் - கல்வியாளர்கள் மற்றும் கற்பவர்களின் நோக்குகள்" போன்ற தலைப்புகளுடன், எட்டெக்.நவ் ஒரு பொருத்தமான தளமாகவும், உயர் கல்வித் துறையைச் சேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மின்னணு கற்றல் சேவை வழங்குனர்கள், தொழில்நுட்ப புத்தமைவாளர்கள் மற்றும் உள்ளடக்கம் வழங்குனர்கள் ஆகியோர் அவசியம் வருகை தர வேண்டிய ஒரு நிகழ்ச்சியாகவும் அமையும்.
விஸ்IQ-வைப் பற்றி:
2007-ம் ஆண்டு நிறுவப்பட்ட விஸ்IQ, உலகின் மிகப் பெரிய கிளவுட் அடிப்படையிலான கல்வித் தளங்களில் ஒன்றாகும். 200 நாடுகளில் 4 மில்லியனுக்கும் அதிகமான கற்போருக்கு, கற்றல் சேவைகளை வழங்கும் வகையில் 400,000-க்கும் அதிகமான கல்வியாளர்கள் விஸ்IQ-ஐ அமைத்துள்ளனர். நேரடி பயிற்சியாளர் வழிநடத்தும் கற்றலின் ஆன்லைன் வழங்கலுக்கு உதவும் விஸ்IQ-வின் விருது வெல்லும் வர்சுவல் கிளாஸ்ரூம் தீர்வானது, உலகம் முழுவதும் உள்ள கல்வி சேவை வழங்குனர்களின் பாராட்டுதலைப் பெற்றுள்ளது. சில நிமிடங்களிலேயே தங்கள் சொந்த விருப்பத்திற்கேற்ற அகாடமிகளை நிறுவுவதற்கு கல்வி சேவை வழங்குனர்களுக்கு ஆற்றலளிப்பதன் மூலம், கல்வித் தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சிகரமான சாதனைக்கு விஸ்IQ-வின் ஆன்லைன் அகாடமி பில்டர் வழிவகுத்துள்ளது.
மொபைல் மூலம் கற்றல், வீடியோ ஸ்டிரீமிங், நேரடி ஆன்லைன் வகுப்பறை, கலந்துரையாடல் போர்டுகள், மதிப்பீடுகள், நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வுகள் போன்ற அதிநவீன அம்சங்கள் மூலம், கற்பவரின் ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில் விஸ்IQ-வின் ஆன்லைன் அகாடமி பில்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. உருவாக்குவதிலுள்ள சிக்கல்கள், நிறுவும் செலவுகளின் சுமை மற்றும் சேவையக கட்டமைப்பு போன்றவை அவசியமில்லாத நிலையில், இத்தீர்வானது உடமையாக்கிக் கொள்கின்ற மொத்தச் செலவை வியக்கத்தக்க அளவிற்குக் குறைக்கிறது. மேலும், உள்ளமைந்த மின்னணுசார் வர்த்தகத் திறனும், தங்கள் சேவைகளை பணமாக்கிக் கொள்வதற்கும், தங்களை புதிய சந்தைகளுக்கு விரிவுபடுத்திக் கொள்வதற்கும் அவர்களுக்கு உதவுகிறது. http://www.wiziq.com
ஊடகத் தொடர்பு:
ரிச்சா சிங்
[email protected]
+91-8427-263388
தகவல்தொடர்புகள் தலைவர்
Share this article