புதுடெல்லி, October 1, 2015 /PRNewswire/ --
- 270-க்கும் அதிகமான காட்சியாளர்கள் மற்றும் 10,000 வர்த்தக வருகையாளர்கள் இதன் 4வது பதிப்பிற்கு பெருமை சேர்த்தனர்
- ரீடெயில் ஜுவல்லர் கில்டு விருதுகள் 2015 மற்றும் இந்தியாவின் சில்லறை நகை விற்பனை நிறுவனங்கள் வெளியீட்டின் அறிமுகம்
- நவீன பாணி தயாரிப்பு வடிவங்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் காட்சி மற்றும் அறிமுகம்
UBM இந்தியா நடத்திய டெல்லி ஜுவல்லரி அன்ட் ஜெம் ஃபேர் 2015-ன் 4வது பதிப்பு, புது டெல்லியிலுள்ள பிரகதி மைதானில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இக்கண்காட்சி, திரு. விபுல் கோயல், எம்எல்ஏ; திரு. யோகேஷ் சிங்கால், பொதுச் செயலர், டெல்லி புல்லியன் அன்ட் ஜுவல்லரி அசோசியேஷன்; திரு. ராம் நிவாஸ் கோயல், எம்எல்ஏ; திரு. பிரேம் ஷர்மா, தலைவர், டெல்லி புல்லியன் அன்ட் ஜுவல்லரி வெல்ஃபேர் அசோசியேஷன்; மற்றும் திரு.ராமாவதார் வர்மா, தலைவர், டெல்லி புல்லியன் அன்ட் ஜுவல்லரி அசோசியேஷன் ஆகியோருடன் இணைந்து, சிறப்பு விருந்தினரான, சமூக நீதி மற்றும் ஆற்றலளிப்புக்கான மாநில மந்திரி திரு. க்ருஷண் பால் குஜ்ரார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20151001/10131699 )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20151001/10131766 )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20151001/10131766-a )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20151001/10131766-b )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
நகைத் தொழில்துறை முழுவதன் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இக்கண்காட்சி, முக்கிய கூட்டமைப்புகள், காட்சியாளர்கள் மற்றும் வாங்குவோரை ஒரே கூரையின் கீழ் கொண்டு வருகிறது. டெல்லி ஜுவல்லரி அன்ட் ஜெம் கண்காட்சி, வட இந்தியாவின் மிகப் பிரமாண்டமான B2B நகைக் கண்காட்சியாகும் மற்றும் இது, இந்திய ஜெம்ஸ் மற்றும் ஜுவல்லரிக்காக UBM இந்தியா ஆண்டுதோறும் நடத்தும் முக்கியமான நான்கு நகைக் கண்காட்சிகளில் ஒன்றாகும்.
இந்த மூன்று நாள் வர்த்தகக் கண்காட்சி, வட இந்தியாவிலுள்ள நகை உற்பத்தியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்மதியாளர்களுடன் இணைத்துக் கொள்வதற்கும், தொழிலை உருவாக்கிக் கொள்வதற்கும் உதவும் வகையில், 270-க்கும் அதிகமான காட்சியாளர்களை ஒன்று சேர்த்துள்ளது. அண்டை மாநிலங்களான, பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிவற்றிலிருந்து இக்கண்காட்சி பெற்ற மாபெரும் வரவேற்பானது, இதனை ஒரு தொழில்துறை தளமாகவும் அங்கீகரித்துள்ளது. அதைப்போலவே, இந்நிகழ்ச்சியில் தென்னிந்தியா மற்றும் மேற்கிந்தியாவிலிருந்தும்கூட காட்சியாளர்கள் பங்கேற்றிருந்தனர். டெல்லி ஜுவல்லரி அன்ட் ஜெம் ஃபேர் 2015-ன் நான்காவது பதிப்பில், துபாய், பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, மற்றும் மலேசியாவிலிருந்தும்கூட சர்வதேசக் காட்சியாளர்கள் பங்கு வகித்தனர். இவ்வாண்டு 22,500-க்கும் அதிகமான முன்பதிவுகள் செய்யப்பட்டிருப்பது, இம்மண்டலத்தில் தொழில்துறை எந்த அளவிற்கு வளர்ச்சி கண்டுவருகிறது என்பதைப் பிரதிபலிக்கிறது. ஓர் அறிமுக நடவடிக்கையாக, டேராடூன், கான்பூர், மீரட், மற்றும் ஸ்ரீகங்காநகர் போன்ற அண்டை நகரங்களில் நடைபெற்ற வரிசையான சாலைக் காட்சிகளும், டெல்லிக்கு ஊக்கம் தரும் வகையில் அமைந்திருந்தன.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற புகழ்பெற்ற காட்சியாளர்களில், ஜின்டால் ஜுவல்லர்ஸ், N.D டயமண்ட்ஸ், P.C டோட்டுகா, ரோஹ்டக் செயின்ஸ், ராயல் செயின்ஸ், சுவர்ண்சரிதா, சுவர்ண்ஷில்பி, டாட்வொலாஸ் கெஹ்னா, யுனீக் செயின், மோகன் ஜெம்ஸ் அன்ட் ஜுவல்ஸ், பிந்தி ஜுவல்லர்ஸ், செயின் - N - செயின்ஸ், தமாரா, தீர்சன்ஸ் டயமண்ட்ஸ், ஃபைன் ஜுவல்ஸ், ஹரியானா ஜுவல்லர்ஸ், ஈடான் ஜுவல்ஸ், ஜெப்பூர் ரத்னா, ஜுவல்லரி மெஷினரி அசோசியேஷன், WBIDC ஆகிய நாட்டின் நகை உற்பத்தியாளர்களும் மற்றும் பலரும் அடங்குவர். டெல்லி ஜுவல்லரி அன்ட் ஜெம் ஃபேர் 2015 சில புதிய தயாரிப்பு அறிமுகங்களையும் கண்டது - ஜுனாகட்டில் (குஜராத்) அமைந்துள்ள பிந்தி ஜுவல்லர்ஸ், கலைநயமிக்க நகை வகைகளை அறிமுகப்படுத்தியது; இது ஒரே பீஸாக உள்ளமைந்த புராதன, ஓவியங்கள் தீட்டப்பட்ட நகையாகும். கொல்கத்தாவில் அமைந்துள்ள G.M. ஜுவல்லர்ஸ், தங்கள் பாரம்பரிய நகை வகைகளை (டெம்பிள் ஜுவல்லரி) அறிமுகப்படுத்தியதுடன், தங்களுடைய தனித்துவமான முறையில் வடிவமைக்கப்பட்ட வளையல்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர். இவ்வாண்டின் காட்சியாளர்களில் ஸ்டெர்லிங் ஆர்னமென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் ஒன்றாகும், இவர்கள், அரிஸோ கிட்ஸ் கலெக்ஷன் மற்றும் வழக்கமான டிஸ்னி வகைகளிலிருந்து வித்தியாசமான, டிஸ்னி கார்ட்டூன் கதாபாத்திரங்கள் அடிப்படையிலான குழந்தைகள் ஆபரணங்களை அறிமுகப்படுத்தினர்.
UBM இந்தியாவின் பொறுப்பிலுள்ள நிர்வாக இயக்குனரான திரு. யோகேஷ் முத்ராஸ் கூறியதாவது, "இந்தியாவில் ஒழுங்கமைந்த சில்லறை விற்பனை நகைச் சந்தை இன்னும் வளர்ச்சி பெறாத நிலையில் உள்ள போதிலும், அளவற்ற வளர்ச்சிக்கான வாய்ப்பு உள்ளது. புதிய வடிவங்கள் மற்றும் பல வகையான நகைகளுக்கான தேவைகளுடன், இத்துறை நுகர்வோரின் தேர்வுகளில் மாற்றங்களைக் கண்டு வருகிறது. டெல்லி ஜுவல்லரி அன்ட் ஜெம் ஃபேர்-ன் 4வது பதிப்பு, வருகையாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்திருப்பது, தொழில்துறை தயாரிப்புகளுக்கும், வட இந்தியாவில் அதிகரித்துவரும் சந்தை நுகர்வுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்புகின்ற எங்கள் முயற்சிக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது."
இந்நிகழ்ச்சி, NIFT-ன் உருவாகிவரும் வடிவமைப்பாளர்களின் திறன்களைப் பாராட்டி, அங்கீகரித்துள்ளது. டிசைன் இன் எக்ஸலன்ஸ் விருதுகளின் வெற்றியாளர்கள், கார்த்திக் தூரியா, NIFT டெல்லி, சூர்யா ரஸ்தோகி, NIFT டெல்லி, மேக்னா சிங், NIFT அஹமதாபாத் மற்றும் மனீஷா மஹோபாத்ரா, NIFT டெல்லி ஆகியோராவர். கண்காட்சியின் இதர சிறப்பம்சங்களில், ஒரு ஃபேஷன் ஷோவும் அடங்கும், இக்காட்சியில் மிகவும் பாராட்டப்பட்டவர்களான நியோநிதா லோத், மிஸ் இந்தியா யூனிவர்ஸ், 2014; தீக்ஷா கௌஷல், மிஸ் இந்தியா 2015-க்கான இறுதியாளர்; வர்த்திகா சிங், மிஸ் இந்தியா கிராண்ட் இன்டர்நேஷனல் 2015 மற்றும் அஃப்ரீன் ரேச்சல் வாஸ், மிஸ் இந்தியா சூப்ரா நேஷனல் ஆகியோர், தனித்தன்மை வாய்ந்த நகை வடிவங்களைக் காட்சிப்படுத்தியபடி மேடையில் நடந்தனர்.
UBM இந்தியாவின் கன்னி முயற்சியான, ரீடெயில் ஜுவ்லர் கில்டு விருதுகள் 2015-ன் ஒரு பகுதியாக, ஆயுட்கால சாதனை விருது திரு. ராம்சந்த் பாப்லே-க்கு வழங்கப்பட்டது; யங் டர்க் விருது திரு. மித்துன் சச்சேட்டி-க்கும்; தொழில்துறையின் சிறந்த பெண்மணி விருது மிஸ். வைஷாலி பானர்ஜி-க்கும்; தொழில்துறை வீரர் விருது திரு. சஞ்சய் கோத்தாரி-க்கும்; தேசிய பிராண்ட் புகழ் விருது தனிஷ்-க்கும்; சிறந்த ஷோரூம் விருது டெல்லியிலுள்ள ஹஸூரிலால் லெகஸி-க்காக திரு. ரமேஷ் நாரங்-கிற்கும், மற்றும் உருவாகி வருகின்ற சில்லறை விற்பனையாளர் விருது B. G. கோட்டேவாலா ஜுவல்லர்ஸ்-க்கும் வழங்கப்பட்டன.
இவ்வாண்டின் ரீடெயில் ஜுவல்லர்ஸ் கில்டு விருதுகளை வென்ற வெற்றியாளர்கள், P.N.காட்கில் ஜுவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட், அன்மோல் ஜுவல்லர்ஸ், ஆபரண் டைம்லெஸ் ஜுவல்லரி பிரைவேட் லிமிடெட், குரானா ஜுவல்லரி ஹவுஸ், உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ், மெஹந்தி டயமண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், காஷி ஜுவல்லர்ஸ், கீர்த்திலால் காளிதாஸ் ஜுவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட், மெஹந்தி டயமண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், H.K. டிசைன்ஸ், ரிலையன்ஸ் ஜுவல்ஸ், காஷி ஜுவல்லர்ஸ், கீர்த்திலால் காளிதாஸ் ஜுவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட், ஸ்வன்சுகா ஜுவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட், வாமன் ஹரி பேட்டே சன்ஸ் மற்றும் திருபுவன்தாஸ் பீம்ஜி ஜவேரி லிமிடெட் ஆகியோராவர்.
மேலும், முக்கிய முன்கணிப்புகள் மற்றும் போக்குகளுடன், இத்தொழில்துறை மீதான 10 ஆண்டுகால கண்ணோட்டத்தையும் வழங்கும் இந்தியாவின் சில்லறை விற்பனை நகை நிறுவனங்களின் வெளியீட்டையும் UBM இந்தியா அறிமுகப்படுத்தியது.
UBM இந்தியா பற்றி:
UBM இந்தியா, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM இந்தியா, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM ஏஷியாவின் ஒரு நிறுவனமான UBM இந்தியா, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM பிஎல்சி-க்கு சொந்தமான UBM ஏஷியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM ஏஷியா, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் http://www.ubmindia.in.
ஊடகத் தொடர்பு:
ப்ரியா பாட்ஷா
[email protected]
+91-22-6172 7353
UBM இந்தியா பிரைவேட் லிமிடெட்
Share this article