புது டெல்லி, October 1, 2015 /PRNewswire/ --
தொழில் உலகில் சமையல் என்பது வெறும் சுவை மற்றும் மணத்தைப் பற்றியது மட்டுமல்ல என்பதை, செப்டம்பர் 18, 2015 அன்று, மேற்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் டி2-உடன் இணைந்து நடத்தப்பட்ட IIHM-யங் செஃப் இந்தியா ஸ்கூல்ஸ் 2015-ன் இறுதிச் சுற்றில் போட்டியிட்டபோது, ஏழு இளம் சமையல் நிபுணர்கள் அறிந்து கொண்டனர்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150930/10131635)
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150930/10131635-a)
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150911/763290)
11வது மற்றும் 12வது வகுப்பு மாணவிகளுக்கான சமையல் போட்டியின் வெற்றியாளர், அஹமதாபாதிலுள்ள மகாராஜா அக்ராசென் வித்யாலயாவின் வேதிகா காரிவாலா ஆவார். அவர் வெற்றி பெற்றதற்குக் காரணம், "அவருடைய தட்டில் ஏராளமான சமையல் திறன்களும், நுட்பங்களும் இருந்தன. சுவைக்கும் மேலாக, சமையல் என்பது உணவின் பதம், தோற்றம், குழைவுத்தன்மை, கவனக்குவிப்பு, நெருக்கடியிலும் அமைதி காத்தல் மற்றும் பணி இடத்தை சுத்தமாக வைத்திருத்தல் ஆகியவை சம்பந்தப்பட்டதுமாகும்," என்று லண்டனின் புகழ்பெற்ற 3 இந்திய செஃப்கள் உள்ளிட்ட 5 பேர் அடங்கிய நடுவர் குழுவானது ஒருமித்த கருத்தைத் தெரிவித்தது.
நாட்டிங் ஹில்லில், L.N. மிட்டலின் வீட்டிலிருந்து சில கட்டிடங்கள் தள்ளியிருக்கும் சக்ரா ரெஸ்டாரன்டின் உரிமையாளரான ஆன்டி வர்மா, தனது குடும்பத்தினரால் நடத்தப்படும் பிரில்லியன்ட் ரெஸ்டாரன்ட்டிலிருந்து சமையல் நிபுணர் தீப்னா ஆனந்த், மற்றும் சவுத் குளோசெஸ்டர்ஷையரிலுள்ள ரோமி'ஸ் கிச்சனிலிருந்து செஃப் ரோமி கில் ஆகியோருடன் ஒயின் மாஸ்டரான லியாம் ஸ்டீவென்சன் மற்றும் வெஸ்ட் லண்டன் பல்கலைக்கழகத்தின் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் மேனேஜ்மென்ட்டின் தலைவர், பேராசிரியர் டேவிட் ஃபோஸ்கெட் ஆகியோரும் அங்கிருந்தனர்.
17 வயதான வேதிகா, டெல்லி, கொல்கத்தா, புனே, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் ஜெய்ப்பூரிலிருந்து வந்திருந்த மற்ற ஆறு இறுதிச் சுற்றுப் போட்டியாளர்களிடமிருந்து வித்தியாசமாக எதைச் செய்தார்? "எனது உட்பொருட்களை நான் வித்தியாசமான முறையில் பயன்படுத்தினேன். என்னுடைய பட்டி பானை இந்திய மசாலாக்களுடன் சேர்த்து நான் கிரில் செய்ததை தான் இதுவரை பார்த்ததேயில்லை என்று ஒரு நடுவர் கூறினார். மேலும், ஒரு தண்ணீர்விட்டான் கொடியைச் சுற்றி ஓர் உப்பிய பேஸ்ட்ரியை நான் ரோல் செய்தேன், இதன் மூலம் அது மொறுமொறுப்பாக ஆனது," என்றார் விகாஸ் கன்னாவின் விசிறியான வேதிகா காரிவாலா.
"சில மாணவ மாணவிகள் சில எளிய உணவுகளைத் தயாரித்தனர், அவை சுவையாக இருந்தபோதிலும், இந்நிலையில் நடக்கின்ற ஒரு போட்டியில் நீங்கள் சிறிது திறனையும் காண்பிக்க வேண்டியுள்ளது. கற்பனைத் திறனுக்காக இருபது புள்ளிகள் கொடுக்கப்பட்டன," என்றார் IIHM-ன் (ஓட்டல் மேலாண்மைக்கான சர்வதேச அமைப்பு) ஆசான் மற்றும் சமையற்கலை இயக்குனரான ஷான் கென்வொர்த்தி.
இறுதிச் சுற்றுக்கு முதல் நாளிரவு, போட்டியாளர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த ஏலிங் ஓட்டலில், தனது சக போட்டியாளர் ஒருவருடன் தங்களது யோசனைகளைப் பற்றி வேதிகா கல்ந்தாலோசித்தபோது, அவர்கள் இருவருமே ஒரே உணவைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தது தெரிந்தது! "நாங்கள் இருவருமே அதே சீமை சுரைக்காய் பலகைகள் மற்றும் அதே கிரேவியைப் பயன்படுத்தியதால், நாங்கள் சில விஷயங்களை மாற்றுவதற்கு பரஸ்பரம் ஒப்புக் கொண்டோம். சுரைக்காயின் வடிவத்தை மாற்றுவதன் மூலம், அவர் தனது பிளேட்டிங் பாணியை மாற்றினார், நான் என் கிரேவியை மாற்றினேன்," என்றார் வேதிகா. நடுவர்களுக்கு அது தெரிந்திருந்தால், சமையல் நிபுணருக்கதன மிகப் பெரிய திறமையான சமயத்திற்கு தக்கவாறு மாறிக்கொள்ளும் திறனுக்காக வேதிகாவுக்கு பிரவுனி புள்ளிகளைக் கொடுத்திருப்பார்கள்.
இந்த 5வது ஆண்டில், இளம் சமையல் நிபுணர் போட்டியின் வடிவம் மிகப் பெரிய சவாலாக இருந்தது. ஒவ்வொரு இறுதிப் போட்டியாளருக்கும், சர்க்கரைவள்ளி, பச்சை தண்ணீர்விட்டான் கொடி, ஃபிரெஞ்சு பீன்ஸ், பரங்கி விழுது மற்றும் சேப்பங்கிழங்கு மற்றும் கடைசி நாளன்று வெளியிடப்பட்ட பட்டி பான் என்ற இரகசிய உட்பொருள் உள்ளிட்ட 16 உட்பொருட்கள் அடங்கிய பட்டியல் ஒன்று கொடுக்கப்பட்டது. உணவுக்குப்பின் இனிப்புக்காக ஒவ்வொருவரும் பானகோட்டாவும் தயாரிக்க வேண்டியிருந்தது.
"விளையாட்டு மாறிவிட்டது. இப்போது, அதிகத் தொழில் முறையிலான விளைவுக்காக நீங்கள் எல்லைகளை விஞ்சுவதற்கு முயற்சிக்கிறீர்கள். ஒன்று, ஆக்கத்திறனை வெளிப்படுத்தத் தூண்டுகின்ற இதுவரை பார்த்திராத காய்கறிகள் அடங்கிய ஒரு பெட்டி. மற்றொன்று, சமையல் முறைகளைத் அவர்களால் பின்தொடர்ந்து தங்களது செயல்பாட்டில் கச்சிதமாக இருக்க முடியும் என்பதை நடுவர்களுக்கு எடுத்துக் காட்டுகின்ற ஒரு குறிப்பிட்ட இனிப்பு வகை," என்றார் மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து நடுவராக இருந்து வரும் கொல்கத்தாவைச் சேர்ந்த பிரபல நடுவரான சமையல் நிபுணர் ஆன்டி வர்மா.
வீதியோர உணவுகளையும் பால் பணியாரங்களையும் விரும்புவதன் காரணமாக தன்னை "கொல்கத்தாவின் விசிறி" என்று கூறிக் கொள்ளும் இந்த மார்வாடிப் பெண், பரிசுத் தொகையான 5,000 பவுண்டுகளை (ரூ 500,000) என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறார்? "லணடனில் உள்ள சமையலறைகள் என்னை மிகவும் கவர்ந்தன, அதனால் என் வீட்டில், என் சொந்த சமையலறையில் நல்ல சாதனங்களை வாங்குவதற்காக இப்பணத்தைச் செலவிட விரும்புகிறேன்," என்றார் வேதிகா, இவருடைய சீஸ் பொட்டேட்டோ ரோஸ்டி-க்காக இவர் வீட்டிலும், உறவினர்களிடையேயும் மிகவும் பாராட்டப்படுபவர்.
இந்த வர்த்தகம் பயிலும் மாணவிக்கு இந்த வெற்றி ஒரு பிரகாசமான எதிர்காலத்தைக் குறிக்கிறது, மேலும் இவர் தான் ஒரு சமையல் நிபுணராக ஆவது குறித்த நிச்சய உணர்வில் இருக்கிறார். "இவர்களைப்போன்ற நபர்களுக்கு யூகேயில் பெரிய வேலை வாய்ப்புகள் உள்ளன, ஏனென்றால், இங்கு, லண்டனில் சமையல் நிபுணத்துவத்திற்குப் பற்றாக்குறை உள்ளது," என்றார் செஃப் தீப்னா. இருப்பினும், குடிவரவு கட்டுப்பாடுகள் காரணமாக, புலம் பெயர்வது ஒரு பெரிய தடையாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். "அந்தச் சட்டத்தை அரசு தளர்த்தியவுடன், இவர்களைப் போன்ற செஃப்களை நாம் உள்ளே கொண்டு வர முடியும். முன்பெல்லாம் என்னுடைய சமையல்காரர்கள் அனைவரையும் நான் இந்தியாவிலிருந்துதான் வரவழைப்பேன், ஆனால் இப்போது கண்டிப்பான விதிமுறைகள் உள்ளன," என்று மேலும் கூறினார் தீப்னா.
சிறப்பு விருந்தினரும், அரசியல்வாதியுமான பாப் பிளாக்மேன் மற்றும் இளம் சமையல் நிபுணர் முயற்சியின் நிறுவனரான, IIHM-ஐ சேர்ந்த டாக்டர் சுபர்னோ போஸ் ஆகியோர் மன்னிலையில், செப்டம்பர் 18, வெள்ளிக்கிழமையன்று இரவு உணவுக்குமுன் வெற்றியாளரின் பெயர் அறிவிக்கப்பட்டபோது, வேதிகா நம்ப முடியாமல் எழுந்து நின்றார், அவரால் தன்னுடைய உற்சாகத்தை அடக்கவே முடியவில்லை.
"எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. போட்டி மிகவும் கடினமாக இருந்ததால், வெற்றி பெறுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்தியாவின் மிகச் சிறந்த 6 பேருடன் நான் போட்டியிட்டேன்," என்று புன்னகைத்த அந்த ரன்வீர் சிங்கின் விசிறி, புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதற்காக தனது தலை அணியான, கருப்பு ரிப்பன் கட்டிய ஒரு பழுப்புத் தொப்பியை எடுத்தார்.
தொப்பி எதற்காக? "தொப்பிகள் அணிவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. வீட்டில் என்னிடம் ஏராளமாகத் தொப்பிகள் உள்ளன. நான் தனியாகத் தெரிய வேண்டுமென்று நினைக்கிறேன் போலிருக்கிறது," என்று வேதிகா இறுதியாகக் கூறினார். நிச்சயமாக அப்படித்தான் தோன்றியது.
அவர்கள் கூற விரும்பியவை:-
"இப்போட்டியின் நோக்கம், அடுத்த இளம் செஃப் சாம்பியனைக் கண்டறிவதைவிடவும் மேலானது. இது வாழ்க்கைத் திறனாக சமையலை மேம்படுத்துவது சம்பந்தப்பட்டதாகும்." என்றார் IIHM-ன் தலைவரான டாக்டர் சுபர்னோ போஸ். "சமையல் என்பது அடிப்படையான வாழ்க்கைத் திறன்களில் ஒன்றாகும். எவ்வாறு பிழைத்திருப்பது மற்றும் ஆரோக்கியமாக வாழ்வது என்பதைப் பற்றி அறிந்திருப்பது முக்கியமாகும்!" என்று அவர் விளக்கினார்.
"இப்போட்டி எங்கள் அனைவரின் வாழ்வையும் ஒரு புதிய நிலைக்கு உயர்த்தியுள்ளது. மேற்கு மண்டலத்தின் பிரதிநிதியாக இருப்பது ஓர் அற்புதமான விஷயம். மிகச் சிலரே இத்தகைய வாய்ப்பைப் பெறுகின்றனர். இவ்விடத்தின் நினைவுகளை மறக்கவே முடியாது. எனது புதிய ஆசான்கள், நாங்கள் புதிதாகக் கற்றுக் கொண்டவை, அந்தப் பெரிய செஃப்களுடனான சந்திப்பு, செஃப் ஹெஸ்டன் ப்ளூமென்தாலின் ஆட்டோகிராஃப் புக், நாங்கள் கொடுத்த வெற்றி போஸ்கள், நாங்கள் பாடிய பாட்டுகள், குழுவின் அரவணைப்புகள், அந்தச் சிரிப்புகள், அந்தக் கண்ணீர் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒரு விசேஷ பந்தம் உருவாகியுள்ளது, இனிமேல் அது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்." - அஹமதாபாதிலுள்ள மகாராஜா அக்ராசென் வித்யாலயாவைச் சேர்ந்த வேதிகா காரிவாலா - வெற்றியாளர் "யங் செஃப் இந்தியா இந்தியா ஸ்கூல்ஸ் 2015".
"சமையல் உலகில் பிரமாதமாக முன்னேற வேண்டும் என்ற கனவுடைய இளம் செஃப்கள் அனைவருக்கும் YC15 ஒரு அற்புதமான தளம் மற்றும் வாய்ப்பாகும். அத்தகைய பிரமாண்டமான சர்வதேசத் தளத்தில் எனது நாடு, மண்டலம் மற்றும் எனது பள்ளியின் பிரதிநிதியாக நான் பங்கேற்றது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியையும், பெருமையையும் தருகிறது. இது நடைபெறுவதற்கு காரணமாக இருந்த நபர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி."-ப்ரியங்கா நாத் - க்ளென்டேல் அகாடமி, ஹைதராபாத்.
"இப்போட்டி, எங்களைப் போன்ற அனுபவமில்லாத செஃப்களுக்கு, பிரபலமான செஃப்களின் முன்னிலையில் சமைப்பதற்கான ஒரு சர்வதேச தளத்தை வழங்கியது. நாங்கள் தேர்ந்தெடுத்துள்ள வாழ்க்கைத் தொழிலில் முன்னேறிச் செல்வதற்குத் தேவையான ஊக்கத்தை அது எங்களுக்கு அளித்தது. லண்டனுக்குச் செல்வது, கனவு நனவானதைப் போலிருந்தது. அது ஒரு மிக அழகான நகரம் மற்றும் நான் மிகவும் அனுபவித்து மகிழ்ந்தேன்." - தனய் - டெல்லி பப்ளிக் ஸ்கூல், பெங்களூர்.
"யங் செஃப் இந்தியா ஸ்கூல்ஸ் 2015 என் வாழ்வில் ஒரு திருப்புமுனையாகும். இப்போது, எனது வெற்றிகரமான வாழ்க்கைத் தொழில் குறித்த ஒரு தெளிவான நோக்கு எனக்கு ஏற்பட்டுள்ளது. வெற்றியும் தோல்வியும் நமது வாழ்வின் ஒரு பகுதியாகும், ஆம் நான் வென்றுவிட்டேன்!! மற்ற ஆறு போட்டியாளர்கள், மேன்மை தங்கிய நடுவர்கள், அந்த உலகத் தரம் வாய்ந்த செஃப்கள் மற்றும் பிரமிப்பூட்டும் ஏற்பாட்டாளர்கள் ஆகிய அனைவரின் இதயங்களையும் நான் வென்றுவிட்டேன். லண்டனில் நான் பெற்ற நண்பர்களே எனது சிறப்புச் சாதனைகளாகும்." - சர்தக் கல்ரா - ருக்மணி பிர்லா மாடர்ன் ஸ்கூல், ஜெய்ப்பூர்.
"அத்தகைய போட்டியின் ஓர் அங்கமாக இருந்தது ஒரு பிரமாதமான அனுபவமாகும். வர்த்தக நிலைகளில் வேலை செய்வது எப்போதுமே எனது கனவாக இருந்ததால், இது ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. எனது வாழ்நாளிலேயே 100% எனது கனவுகளை நிறைவேற்றி, எனது திறனை வெளிப்படுத்த உதவிய ஒரே வாய்ப்பாக இது அமைந்தது என்று நான் சொல்வேன். நாங்கள் 7 பேரும் எவ்வாறு ஒருவருடன் ஒருவர் பிணைந்திருந்தோம் என்பதை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்." - இஸ்டுட்டி - சல்வான் பப்ளிக் ஸ்கூல், குர்காவன்.
"நிறையப் புகழ் பெறுவதற்கு யங் செஃப் எனக்கு உதவியது. நான் வெற்றி பெற்றிருந்தால், IIHM யங் செஃப் 15-ல் நான் வெற்றி பெற்றுள்ளேன் என்ற எண்ணம் மட்டுமே என்னிடம் இருக்கும் என்று இஸ்டுட்டியின் தாய் சிறப்பாகச் சொல்லியதைப்போல், இதில் ஏற்பட்ட தோல்வியை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளப்ப போவதில்லை. ஆனால், இப்போது நான் மேலும் விசாலமாகச் சிந்திப்பதுடன், ஒவ்வொரு நிலையிலும் வாழ்வில் மேலும் மேலும் சிறக்க வேண்டுமென்ற ஊக்கத்தைக் கொண்டுள்ளேன். " -தேஜஸ் சிங்கானியா - ஹெரிடேஜ் ஸ்கூல், கொல்கத்தா.
"லண்டன் ஒரு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. வாழ்நாள் முழுவதும் அதன் நினைவுகள் நீடித்திருக்கும். யங் செஃப் என்பது எங்கள் வயதுடைய மாணவர்களுக்கு ஒரு பிரமாதமான தளமாகும் மற்றும் சமையல் துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் அனைவருமே இந்நிகழ்ச்சியின் ஓர் வகிக்கும் குறிக்கோளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். லண்டன் உன்னைப் பிரிவது வருத்தமாக உள்ளது." -ரோஷ்னி அயூப் - SM சோக்ஸி ஹை ஸ்கூல், புனே
இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் (IIHM) பற்றி
இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் (IIHM) என்பது, ஆசியாவிலுள்ள மிகப் பெரிய ஓட்டல் பள்ளிச் சங்கிலிகளில் ஒன்றாகும். தென் கிழக்கு ஆசியா முழுவதும் அதற்கு 11 கல்லூரிகள் உள்ளன, மேலும் அது கொல்கத்தா மற்றும் கோவாவில், 4 நட்சத்திர வகையைச் சேர்ந்த இரண்டு செயல்பாட்டிலுள்ள தொழில் ஓட்டல்களையும், யூகே மற்றும் தாய்லாந்தில் தனது அலுவலகங்களைக் கொண்ட இரண்டு சர்வதேச பயிற்சி நிறுவனங்களையும் கொண்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு, http://www.iihm.ac.in; உதவி எண் - +91-9831259416/18
ஊடகத் தொடர்பு:
அப்துல்லா அகமது
[email protected]
+91-11-43204700
இயக்குனர்
இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்
டெல்லி
Share this article