டெல்லி NCR, September 29, 2015 /PRNewswire/ --
- 550-க்கும் அதிகமான காட்சியாளர்கள், 20,000 வருகையாளர்கள், 35 நாடுகள் மற்றும் 6 தேசிய அரங்குகள்
- அனைவருக்கும் 24x7 மின்சக்தி என்ற அரசின் நோக்கினை அடைவதன் மீதான CEO இரகசியக்கூட்ட அமர்வு
- "நாளைய எரிபொருள் ஆற்றலின் பயனை இன்றே துய்த்தல் - ஓர் ஒருங்கிணைந்த அணுகுமுறை" மீதான தொழில்துறை மாநாடு
- தொழில்துறைத் திட்ட போட்டியின் வெற்றியாளர்களுக்கு நிதியுதவித் தேர்வுகள் வழங்கப்பட்டன
- உலகளாவிய ஆர்வம், சர்வதேச முதலீடுகள் மற்றும் தொழில்நுட்ப சாதனைகள், 9வது பதிப்பை சிறப்பிக்கின்றன
- புகழ்பெற்ற இந்திய மற்றும் உலக பிராண்டுகளுடன், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்கேற்பு மற்றும் ஆதரவு
UBM இந்தியா நடத்திய இந்திய புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி கண்காட்சி (REI)-ன் 9[வது] பதிப்பு, கிரேட்டர் நொய்டாவிலுள்ள இந்தியா எக்ஸ்போ சென்டரில் நிறைவடைந்தது. புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி அமைச்சகம் - இந்திய அரசு (MNRE), இந்திய புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மேம்பாட்டு முகமை (IREDA), ஆந்திர பிரதேச புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மேம்பாட்டுக் கழகம் (NREDCAP), காற்று எரிசக்திக்கான தேசிய நிறுவனம் (NIWE), இந்தோ-ஜெர்மானிய எரிசக்தி குழு உதவி அலுவலகம் (IGEF), தமிழ்நாடு சூரிய எரிசக்தி மேம்பாட்டாளர்கள் கூட்டமைப்பு (TNSEDA), சூரிய எரிசக்தி மேம்பாட்டாளர்கள் கூட்டமைப்பு மற்றும் இந்திய உயிரிவாயு கூட்டமைப்பு ஆகியவை இந்நிகழ்ச்சிக்கு ஆதரவளித்துள்ளன.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150929/10131473 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20141027/10109418 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
REI இந்தியா 2015, சீனா, ஜப்பான், இத்தாலி, தைவான், கனடா மற்றும் யூஎஸ்ஏவிலிருந்து நாட்டு அரங்குகளைக் கொண்டிருந்தது மற்றும் நியூஸிலாந்தின் நீதித்துறை, நீதிமன்றங்கள், தகவல் தொடர்புகள் மற்றும் ஒலிபரப்பு அமைச்சரான மேன்மை தங்கிய மிஸ். ஆமி ஆடம்ஸ் வழிநடத்தும் தொழில் நிறுவனங்களுக்கான ஒரு பிரதிநிதிக் குழுவுடன், நியூஸிலாந்து இந்திய சந்தைக்குள் பிரவேசிக்கிறது.
சுமார் 35 நாடுகளிலிருந்து, 550-க்கும் அதிகமான பங்கேற்கும் நிறுவனங்கள் REI-ல் இடம்பெற்றிருந்தன. புதிய தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கான காட்சி மற்றும் அறிமுகத் தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது.
- ட்யூபான்ட், தனது விரிவான களச் சோதனை திட்டத்திலிருந்து நீண்ட கால நீடித்த தன்மையை செயல்விளக்கம் செய்ததுடன், தனது சமீபத்திய மேம்படுத்தப்பட்ட தயாரிப்புகளையும் காட்சிப்படுத்தியது. முக்கியப் பொருட்களில், உயர் ஆற்றல் சோலார் செல்களுக்கான இரண்டு ட்யூபான்ட்™ மற்றும் சோலாமெட்® ஒளிமின்னழுத்த உலோகமாக்கல் பசைகள், டெட்லர்® பாலிவினையல் ஃப்ளோரைடு (PVF) ஃபிலிம் அடிப்படையிலான பேக்ஷீட் பொருட்கள், ஒளிமின்னழுத்த பேனல்கள் மற்றும் பாகங்களுக்கான உயர் செயல்திறன் கொண்ட பாலிமர் ரெஸின்கள் ஆகியவை அடங்கும்.
- EMI இன்ஃப்ராடெக் பிரைவேட் லிமிடெட், தங்கள் வீட்டு சூரிய ஒளியமைப்பு மற்றும் மின்விசிறி (SHL108W)-ஐ அறிமுகப்படுத்தியது. 8 மணி நேர இரவு ஒளிக்கான 3X 1W LED விளக்குகளுடனும், 8 மணி நேரம் ஓடக்கூடிய 10W மேஜை மின்விசிறியுடனும் SHL108W வருகிறது. ஒவ்வொன்றும் 1.5A திறன் கொணட 2 மொபைல் சார்ஜ் செய்யும் மின்துளைகளையும் கொண்ட இது, ஒரு சிக்கனமான தீர்வாக அமையும். இந்த மின்துளைகளை நமது மொபைல் ஃபோன்களை சார்ஜ் செய்யவும் பயன்படுத்த முடியும்.
- இந்திய காற்றுப் பயன்பாடுகளுக்காக A 1 MW இன்வர்ட்டரை டெல்டா பவர் வழங்கியது.
- தங்கள் சோலார் PV மாட்யூல்களின் சஃபையர் வகைகளை நவிடாஸ் கிரீன் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் அறிமுகப்படுத்தியது.
- 60 செல்களில் 260 வாட் மாட்யூலுடன் உயர் ஆற்றல் 4 பஸ் பார் செல்லை PV பவர் டெக் அறிமுகப்படுத்தியது;
இக்கண்காட்சியின் சிறப்பம்சங்களில், தொழில்துறை முழுவதிலிருந்தும் 120-க்கும் அதிகமான புகழ்பெற்ற பேச்சாளர்கள் இடம்பெற்ற புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி தொழில்துறையின் தோற்றம் மீதான. பல அமர்வுகள் கொண்ட ஒரு மூன்று - நாள் கூட்டம், ஜப்பான் அரங்கில் ஹைட்ரஜன் எரிபொருளுடனான கான்செப்ட் காருடன் ஒரு நேரடி செயல்விளக்கம், குளோபல் சஸ்டெயினபிள் எனர்ஜி சொல்யூஷன்ஸ் (GSES) நடத்திய பயிலரங்கங்கள், காற்று எரிசக்திக்கான தேசிய அமைப்பு (NIWE) நடத்திய தொழில்நுட்பக் கருத்தரங்கம் மற்றும் நியூ ஜிலாந்து கிளீன்டெக் மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி வட்டமேஜை, புத்தமைவின் உலகம்- அறிமுகத் தளம் மற்றும் தொழில் திட்டப் போட்டி ஆகியவை அடங்கும்.
மாநாட்டில் நடைபெற்ற CEO இரகசியக்கூட்ட அமர்வில், புகழ்பெற்ற பேச்சாளர்களான திரு. ஆஷிஷ் கன்னா, செயலதிகார இயக்குனர் & முக்கிய செயலதிகாரி, டாட்டா பவர் சோலார்; திரு. பசுபதி கோபாலன், தலைவர், ஆசியா பசிபிக், சன்எடிசன் LLC; திரு. ஞானேஷ் சௌத்தரி, நிர்வாக இயக்குனர் & முக்கிய செயலதிகாரி, விக்ரம் சோலர்; திரு. ஹிதேஷ் தோஷி, தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், வாரீ எனர்ஜீஸ் லிமிடெட்.; திரு. சுனில் ஜெயின், முக்கிய செயலதிகாரி மற்றும் செயலதிகார இயக்குனர், ஹீரோஃபியூச்சர் எனர்ஜீஸ் லிமிடெட்; திரு. இந்தர்ப்ரீத் வாத்வா, நிறுவனர் & முக்கிய செயலதிகாரி, அஷ்யூர் பவர்; திரு. விகாஸ் தாவ்ரா, நிர்வாக இயக்குனர், நிலைத்த தன்மை கொண்ட முதலீட்டு வங்கிச் செயல்பாடு, யெஸ் பாங்க்; திரு. மதுசூதன் கெம்கா, நிர்வாக இயக்குனர், ரீஜென் பவர்டெக் ஆகியோர், அனைவருக்கும் 24x7 மின்சாரம் என்ற அரசின் நோக்கினை அடையும் வெற்றிக்கான யுக்திகளை கலந்தாலோசித்தனர்.
UBM இந்தியாவின் பொறுப்பிலுள்ள நிர்வாக இயக்குனரான திரு. யோகேஷ் முத்ராஸ் கூறியதாவது,"REI எக்ஸ்போவின் 2015 பதிப்பிற்கான UBM இந்தியாவின் குறிக்கோள், தொழில்துறை, அரசு மற்றும் முதலீட்டாளர்களிடையே உள்ள இடைவெளியை நிரப்புவதாகும். 2022-க்குள் 1,75,000 MW-வை எட்டும் இந்திய அரசின் இலக்கிற்கு ஆதரவளிப்பதற்காக, சாத்தியமுள்ள திட்டங்களை செயல்படுத்தவும், "இந்தியாவில் உருவாக்கவும்" இயக்கத்தின் கீழ், உற்பத்தி தொழிற்சாலைகளை அமைக்கவும், தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களை எடுத்து வருகின்ற தொழில்துறை ஊக்கியாக REI கண்காட்சி செயல்பட்டுள்ளது. கடந்த பதிப்பைவிட இருமடங்கு வருகையாளர்களை இக்கண்காட்சி கண்டிருப்பது இதனை உலகின் 2வது மிகப் பெரிய நிகழ்ச்சியாக ஆக்குகிறது, சர்வதேச பங்கேற்பாளர்கள் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்கேற்பு ஆகிய இரண்டுடனும், தொழில்துறையின் ஏகோபித்த பாராட்டுகளுடனும் இந்நிகழ்ச்சி நிறைவு பெற்றது."
UBM இந்தியா பற்றி:
UBM இந்தியா, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM இந்தியா, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM ஏஷியாவின் ஒரு நிறுவனமான UBM இந்தியா, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM பிஎல்சி-க்கு சொந்தமான UBM ஏஷியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM ஏஷியா, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் www.ubmindia.in
ஊடகத் தொடர்பு:
ப்ரியா பாட்ஷா
[email protected]
+91-22-6172-7353
UBM இந்தியா பிரைவேட் லிமிடெட்.
Share this article