புது டெல்லி, September 25, 2015 /PRNewswire/ --
வட இந்தியாவின் பிரமாண்டமான நகை வர்த்தகக் கண்காட்சி
UBM இந்தியா நடத்தும் தி டெல்லி ஜுவல்லரி அன்ட் ஜெம் ஃபேர் 2015 (DJGF), புது டெல்லியிலுள்ள பிரகதி மைதானில், 2015 செப்டம்பர் 26 முதல் 28 வரை நடைபெறும். தி புல்லியன் & ஜுவல்லர்ஸ் அசோசியேஷன், கரோல் பாக் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன், டெல்லி ஜுவல்லர்ஸ் அசோசியேஷன், மற்றும் மாலிவாரா ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் ஆகிய புகழ்பெற்ற கூட்டமைப்புகளின் உதவியுடன், கூட்டமைப்புகள் மற்றும் இத்தொழில்துறை முழுவதன் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக இக்கண்காட்சி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
270-க்கும் அதிகமான பங்கேற்கும் காட்சியாளர்களுடனும், துபாய், பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, மற்றும் மலேசியாவிலிருந்து வருகின்ற சர்வதேசப் பங்கேற்பாளர்களுடனும், இக்கண்காட்சி பிரமாண்டமான நகை மற்றும் விலையுயர்ந்த கற்களை வாங்கும் அமைவிடமாக உண்மையில் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. இவ்வாண்டின் காட்சியாளர்களில், நகை உற்பத்தியாளர்களான, பிந்தி ஜுவல்லர்ஸ், செயின் - N - செயின்ஸ், டமாரா, தீர்சன்ஸ் டயமண்ட்ஸ், ஃபைன் ஜுவல்ஸ், ஹரியானா ஜுவல்லர்ஸ், ஈட்டான் ஜுவல்ஸ், ஜெய்ப்பூர் ரத்னா, ஜுவல்லரி மெஷினரி அசோசியேஷன், ஜிண்டால் ஜுவல்லர்ஸ், கிஷோர் மோத்திவாலா, N.D டயமண்ட்ஸ், நௌலகா ஜுவல்லர்ஸ், P.C டோட்டுகா, ரோஹ்டக் செயின்ஸ், ராயல் செயின்ஸ், சுவர்ண்சரிதா, சுவர்ண்ஷில்பி, டாட்டிவாலாஸ் கெஹ்னா, யுனீக் ஜுவலஸ், WBIDC மற்றும் பலரும் அடங்குவர்.
இக்கண்காட்சிக்கு அறிமுகமாக, லூதியானா, சண்டிகர், டேராடூன், யமுனாநகர், மீரட், கான்பூர், அம்பாலா மற்றும் கங்காநகர் போன்ற பல்வேறு நகரங்களில் வெற்றிகரமான எண்ணற்ற சாலைக் காட்சிகளை UBM இந்தியா நடத்தியது.
வட இந்தியாவில் நகைத் தொழில்துறையின் வளர்ந்துவரும் வாய்ப்புகளைப் பற்றிப் பேசும்போது, UBM இந்தியாவின் பொறுப்பிலுள்ள நிர்வாக இயக்குனரான திரு. யோகேஷ் முத்ராஸ் கூறியதாவது, "உலகின் மிகப் பெரிய மற்றும் அதிவேக வளர்ச்சி கண்டு வரும் ஜெம்ஸ் மற்றும் ஜுவல்லரி சந்தைகளில் ஒன்றாக இந்தியா இருந்துவரும் அதே நேரத்தில், வட இந்தியாவானது, வண்ணக் கற்கள், வெள்ளி, குந்தன், மீனா, தங்கம் மற்றும் வைரம் உள்ளிட்ட பலவகையான நகை வகைகளுக்கான மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக உள்ளது. D&B உடனான எங்கள் ஆய்வானது, குறிப்பாக வெள்ளி நகைகளுக்கான புகழ்பெற்ற இடமாக டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறச் சந்தைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது. தொழில்துறை முழுவதன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, இப்பிரிவின் உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தங்களை இணைத்துக் கொள்வதற்கும், தொழிலை உருவாக்குவதற்கும் ஒரு தளத்தை உருவாக்க வேண்டுமென்ற எங்கள் தொடர் முயற்சியே இந்த டெல்லி கண்காட்சியாகும். UBM-ன் சந்தை ஊடுருவலான இக்கண்காட்சி, உலகம் முழுவதிலிருந்தும், வாங்குவோர் மற்றும் சர்வதேச நுகர்வோர் பிரதிநிதிகளின் கவனத்தைக் குறிப்பிடத்தக்க அளவிற்குக் கவர்ந்துள்ளது."
இந்த மூன்று - நாள் வர்த்தகக் கண்காட்சியில், நகைத் தொழிலின் சில்லறை விற்பனையில் சிறந்து விளங்குவோரை கௌரவிக்கும் ரீடெயில் ஜுவல்லர்ஸ் கில்ட் அவார்ட்ஸ் என்ற தனித்துவமான முயற்சியும் இடம்பெற்றிருந்தது. இவ்விருது, நாடெங்கிலும் உள்ள சில்லறை விற்பனையாளர்களின் திறனை மேம்படுத்துவதையும், அவர்களுடைய பங்களிப்பை அங்கீகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டது. இந்த விருது வழங்கும் இரவில், இந்தியாவின் சில்லறை விற்பனை நகை நிறுவனங்கள் வெளியீட்டின் அறிமுகமும் இடம்பெறும், இவ்வெளியீடு, முக்கிய முன்கணிப்புகள் மற்றும் போக்குகளுடன், இத்தொழில்துறை மீதான 10 ஆண்டுகால கண்ணோட்டத்தையும் வழங்கும்.
இந்நிகழ்ச்சியின் இதர அம்சங்களில், தனித்துவமான நகை வடிவங்களை எடுத்துக்காட்டும் ஒரு ஃபேஷன் ஷோ மற்றும் கண்காட்சியில் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு புதிய நகை வடிவமைப்பாளர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் நகை வடிவத்திற்கான விருதுகள் ஆகியவை அடங்கும். ஃபேஷன் ஷோ மாலையின் ஒரு பகுதியாக, நகை வடிவமைப்பு நிறுவனங்களும் அங்கீகரிக்கப்பட்டு, வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசுகளுடன்கூடிய சான்றிதழ்களும் வழங்கப்படும்.
UBM இந்தியா பற்றி:
UBM இந்தியா, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM இந்தியா, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM ஏஷியாவின் ஒரு நிறுவனமான UBM இந்தியா, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM பிஎல்சி-க்கு சொந்தமான UBM ஏஷியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM ஏஷியா, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் http://www.ubmindia.in.
ஊடகத் தொடர்பு
ப்ரியா பாட்ஷா
[email protected]
+91-22-6172 7353
UBM இந்தியா
Share this article