மும்பை, September 11, 2015 /PRNewswire/ --
புதிய ஜென்ஃபோன் செல்ஃபி, ஜென்ஃபோன் 2 லேசர் அல்லது ஜென்ஃபோன் 2 டீலக்ஸ் வாங்கும்போது, வாடிக்கையாளர்கள் உறுதியாக ரூ.3,000 மதிப்புள்ள கோய்பிபோ வவுச்சர்களைப் பெறுவார்கள்
பண்டிகைக் காலம் நெருங்கிவிட்ட நிலையில், இந்தியா அதற்காக தன்னைத் தயார் செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில், தனது குறிப்பிட்ட கால சலுகையை ஆசுஸ் அறிவித்துள்ளது. இச்சலுகையின் கீழ், அசுஸின் சமீபத்திய தயாரிப்புகளான - ஜென்ஃபோன் செல்ஃபி, ஜென்ஃபோன் 2 லேசர், ஜென்ஃபோன் 2 டீலக்ஸ் மற்றும் ஜென்ஃபோன் 2 (ZE551/ZE550), அல்லது 1[வது] தலைமுறை ஜென்ஃபோன் மாடல்களில் ஏதேனும் ஒன்றை வாங்கி, வாடிக்கையாளர்கள் உறுதியாக ரூ.3,000 மதிப்புள்ள கோய்பிபோ வவுச்சர்களைப் பெறலாம். இதற்கும் மேலாக, ஓர் அதிர்ஷ்டக் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1,000 வாடிக்கையாளர்கள், ஒரு ஜென்பவரையும் வீட்டிற்கு எடுத்துச் செல்வார்கள். இச்சலுகை 10 செப்டம்பர் முதல் 27 செப்டம்பர் 2015 வரை அல்லது ஸ்டாக் இருக்கும்வரை, இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை, செல்லுபடியாகும்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150831/10129353)
ஆசுஸ் இந்தியாவின் மண்டல தலைவரும், தென்னாசியா மற்றும் தேசிய மேலாளருமான பீட்டர் சாங் கூறுகிறார், "எங்கள் சமீபத்திய தயாரிப்பு வகைகளுக்கு இந்தியாவில் மாபெரும் வரவேற்பு இருப்பதைக் நாங்கள் கண்டுள்ளோம். எங்கள் "மோர் வித் மோரியா" கோலாகல சலுகையுடன், பண்டிகைக் கால ஆனந்தத்தைப் பயன்படுத்திக் கொள்ள நாங்கள் விரும்புகிறோம். எப்போதுமே, உயர்தரமான பொருட்களை, உற்சாகமான விலைகளில் வழங்குவதன் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆடம்பரத்தைக் கொண்டு ஆற்றலளிப்பதே எங்கள் நோக்கமாக இருந்து வருகிறது. இச்சலுகை, இப்பண்டிகைக் காலத்தில் அதிக திருப்தி மற்றும் மகிழ்ச்சியை சேர்க்கும் இன்னொரு முயற்சியாகும்!"
http://www.flipkart.com/asus/zenfone-2/new-ranges?otracker=hp_nmenu_sub_electronics_0_Asus
கோய்பிபோ வவுச்சர்களுக்கு, விலைச்சீட்டு எண், வாங்கிய தேதி, விற்பனையாளர் பெயர், வாங்கிய இடம், தயாரிப்பின் வரிசை எண் மற்றும் தொடர்பு விவரங்கள் போன்ற தனது பொருள் வாங்கிய விவரங்களை பயனர்கள் http://asusindiapromo.com/more-with-morya என்ற வலைத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆசுஸ் இந்தியா முறையாக சரிபார்த்துள்ள, முழுமையாக செல்லத்தக்க உள்ளீடுகள் மட்டுமே இச்சலுகைக்கு தகுதி பெறுபவையாகக் கருதப்படும். வாடிக்கையாளர்கள் பதிவு செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30, 2015 ஆகும். வாடிக்கையாளர்கள் கோய்பிபோ வவுச்சர்களை அக்டோபர் 30, 2015 வரை பொருளாக மாற்றிக் கொள்ளலாம். கோய்பிபோ கிஃப்ட் வவுச்சர்களுக்கான விரிவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பின்வரும் வலைத்தளத்தில் வாடிக்கையாளர்கள் பார்த்துக் கொள்ளலாம்: http://www.goibibo.com/gocash.
ஆசுஸ் பற்றி
ஆசுஸ், ஓர் உலகளாவிய, முதல் மூன்று நுகர்வோர் நோட்புக் விற்பனையாளரும், உலகின் விற்பனையில் சாதனை படைக்கின்ற, விருது வெல்லும் மதர்போர்டுகளின் உற்பத்தியாளரும் ஆகும். புதிய டிஜிட்டல் தலைமுறையின் முன்னணி நிறுவனமான ஆசுஸ், மதர்போர்டுகள், கிராஃபிக்ஸ் கார்டுகள், ஆப்டிகல் டிரைவ்கள், டிஸ்பிளேக்கள், டெஸ்க்டாப் மற்றும் அனைத்தும் அடங்கிய பிசிக்கள், நோட்புக்குகள், நெட்புக்குகள், சர்வர்கள், மல்டிமீடியா சாதனங்கள், ஒயர்லெஸ் தீர்வுகள், வலையமைப்பு சாதனங்கள், டாப்லெட்டுகள், ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் அணியத்தக்கவை உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளுடன், இன்றைய டிஜிட்டல் சார்ந்த வீடு மற்றும் அலுவலகத்தின் தேவைகளைக் கச்சிதமாகப் பூர்த்தி செய்கின்ற பொருட்களை வடிவமைத்து, உற்பத்தி செய்கிறது. புத்தமைவினால் தூண்டப்பட்டு, தரத்திற்கு பொறுப்புறுதி ஏற்றுள்ள ஆசுஸ், 2014-ல் 4,326 விருதுகளை வென்றுள்ளதுடன், தனது Eee PC™ மூலம் பிசி தொழில்துறையை புரட்சிகரமாக ஆக்கியதற்கான மிகப்பெரிய பெருமையையும் பெற்றுள்ளது. ஆசுஸ், உலகம் முழுவதும் 16,000-க்கும் அதிகமான பணியாளர்களுடன், 5,200 பொறியாளர்கள் இடம்பெற்றுள்ள உலகத்தரம் வாய்ந்த ஓர் R&D குழுவையும் கொண்டுள்ளது. 2014-க்கான இந்நிறுவனத்தின் வருமானம் சுமார் US$14.5 பில்லியன் ஆகும்.
மேலும் தகவல்களுக்கு, அணுகவும்: http://asusindiapromo.com/more-with-morya/#_blank
ஊடகத் தொடர்பு:
மனோஜ் குமார்
[email protected]
+91-9818520082
ஆசுஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்
Share this article