மும்பை, September 9, 2015 /PRNewswire/ --
- புரட்சிகரமான ஜென்ஃபோன் 2 லேசர் 5.5-ன் விலை இந்திய ரூபாயில் 9,999 ஆகும் மற்றும் இது நுகர்வோருக்கு மிகப் பிரமாதமான சலுகையாகும்
- விற்பனை தேதியை இந்நிறுவனம் முன்கூட்டியே அமைக்கிறது
தனது சமீபத்திய ஜென்ஃபோன் 2 லேசர் 5.5 முன்பதிவுகளுக்கான பிரமிக்கத்தக்க வரவேற்பினை பெற்றபின், தனது விற்பனை தேதியை செப்டம்பர் 19, 2015-லிருந்து செப்டம்பர் 8, 2015-க்கு மாற்ற வேண்டியிருந்ததாக ஆசுஸ் இன்று அறிவித்தது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150908/10129828 )
இவ்வாரத்தின் தொடக்கத்தில், தனது சமீபத்திய ஜென்ஃபோன் வகைகளுக்கு 30 ஆயிரம் முன்பதிவுகளை தான் பெற்றுள்ளதாகவும், இதில் நுகர்வோரின் மிகவும் விருப்பத்திற்குரியதாக ஜென்ஃபோன் 2 லேசர் 5.5 இருப்பதாக ஆசுஸ் உறுதி செய்தது. மூன்றாவது நாள், ஜென்ஃபோன் 2 லேசர் 5.5-னின் பத்தாயிரம் யூனிட்டுகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டது மற்றும் இச்சாதனத்தின் ஸ்டாக் முற்றிலும் தீர்ந்துவிட்ட நிலையை இந்நிறுவனம் எதிர்கொண்டது. புரட்சிகரமான ஜென்ஃபோன் 2 லேசர் 5.5-ன் விலை இந்திய ரூபாயில் 9,999 ஆகும் மற்றும் இது, மிகவும் உயர்தர ஸ்மார்ட்ஃபோனுக்கான அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு நுட்பங்களை எதிர்பார்பார்க்கும் நுகர்வோருக்கு மிகப் பிரமாதமான சலுகையாகும்.
"இந்தியாவில், நுகர்வோரிடமிருந்து நாங்கள் பெற்ற இவ்வகையான வரவேற்பு எங்களை மிகவும் பெருமை கொள்ளச் செய்கிறது," என்றார் ஆசுஸ் இந்தியா நிறுவன சிஸ்டம் பிசினஸ் குரூப் பிரிவின் மண்டல தலைவரும், தென்னாசியா மற்றும் தேசிய மேலாளருமான பீட்டர் சாங். "சந்தையில் புதிதாகப் பிரவேசித்திருக்கும் நிலையில், இத்தனை ஆர்வத்துடன் இந்த பிராண்டை நுகர்வோர் ஏற்றுக் கொண்டிருப்பதால், எங்கள் சமீபத்திய தயாரிப்பிற்கான விற்பனை தேதியை நாங்கள் மாற்றியமைக்க வேண்டியுள்ளது. எங்கள் முயற்சி எப்போதுமே 'ஒவ்வொருவருக்கும் ஆடம்பரத்திற்கான ஆற்றலளிக்க வேண்டும்' என்பதாகும், அதனால் தனது உயர்ரக அம்சங்களுடன் பெருவாரியான மக்களை இலக்காகக் கொண்டு ஜென்ஃபோன் 2 லேசர் 5.5 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று, ஃப்ளிப்கார்ட் மூலம் 660 நகரங்களை நாங்கள் சென்றடைந்துள்ளோம், மேலும் அடுத்த ஆண்டிற்குள் நாட்டின் சந்தையில் 5% அடையும் இலக்கையும் நாங்கள் கொண்டிருக்கிறோம்," என்று தொடர்ந்து கூறினார் திரு.பீட்டர் சாங்.
ஜென்ஃபோன் 2 லேசர் 5.5:
ஆசுஸ் ஜென்ஃபோன் 2 லேசர் 5.5 பிரமாதமான உயர் தெளிவுத்திறனான (HD) 1280 x 720-பிக்சல் பிரிதினை வழங்குகிறது. அது, லேசர் ஆதரவுடன்கூடிய தானியங்கு ஃபோகஸ் கொண்ட 5 MP முன்புற கேமரா மற்றும் 13 MP பின்புற கேமராவை வழங்குகிறது, இதன் மூலம் நுகர்வோரால் 0.3 நொடிகளிலேயே ஒரு பொருள் மீதான ஃபோகஸை லாக் செய்ய முடியும். 3000 mAh லி-பாலிமர் நீக்கக்கூடிய பேட்டரியுடன், இந்த ஃபோனில் சிறந்த ஃபோன் அழைப்பு தரத்திற்காக, இரைச்சல் நீக்கும் அமைப்புடன் இரட்டை மைக்ரோஃபோன் மற்றும் வீடியோ நிலைப்படுத்தி மற்றும் ஒரே தொடுதல் ஸ்டில் படப்பிடிப்பு வசதியுடன்கூடிய ஒரு முழுமையான HD வீடியோ பதிவுக்கான 1080p@30fps படப்பிடிப்பு வசதியும் உள்ளது.
ஆசுஸ் ஜென்ஃபோன் 2 லேசர் 5.5-க்கு ஆன்ட்ராய்டு 5.0 லாலிபாப் ஆற்றலளிக்கிறது மற்றும் இது ஆயுள் முழுவதற்குமான 5ஜிபி ஆசுஸ் வலை சேமிப்பகத்திற்கும் மேலாக, 16ஜிபி விரிவாக்கக்கூடிய சேமிப்பகத்தையும் கொண்டுள்ளது. இந்த ஃபோன் கீறல் எதிர்ப்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 உடன் வருகிறது, இது சந்தையில் உள்ள ஸ்மார்ட்ஃபோன்களுக்கான எந்தவொரு பாதுகாப்பு ஃபிலிமைக் காட்டிலும் சிறந்த கீறல் எதிர்ப்புத்தன்மையைக் கொண்டதாகும். இரட்டை-SIM, 4G LTE மற்றும் க்வால்காம் 64-பிட் க்வாட் கோர் பிராசஸர் ஸ்நாப்டிராகன் 410 ஆகியவை மற்ற அம்சங்களில் சிலவாகும்.
ஜென்ஃபோன் 2 லேசர் 5.5 நான்கு சிறப்பு வண்ணங்களில் கிடைக்கிறது - ப்யூர் பிளாக், செராமிக் ஒயிட், கிளாமர் ரெட், மற்றும் ஷியர் கோல்டு.
http://www.flipkart.com/asus/zenfone-2/new-ranges?otracker=hp_nmenu_sub_electronics_0_Asus
ஆசுஸ் பற்றி
ஆசுஸ், ஓர் உலகளாவிய, முதல் மூன்று நுகர்வோர் நோட்புக் விற்பனையாளரும், உலகின் விற்பனையில் சாதனை படைக்கின்ற, விருது வெல்லும் மதர்போர்டுகளின் உற்பத்தியாளரும் ஆகும். புதிய டிஜிட்டல் தலைமுறையின் முன்னணி நிறுவனமான ஆசுஸ், மதர்போர்டுகள், கிராஃபிக்ஸ் கார்டுகள், ஆப்டிகல் டிரைவ்கள், டிஸ்பிளேக்கள், டெஸ்க்டாப் மற்றும் அனைத்தும் அடங்கிய பிசிக்கள், நோட்புக்குகள், நெட்புக்குகள், சர்வர்கள், மல்டிமீடியா சாதனங்கள், ஒயர்லெஸ் தீர்வுகள், வலையமைப்பு சாதனங்கள், டாப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளுடன், இன்றைய டிஜிட்டல் சார்ந்த வீடு மற்றும் அலுவலகத்தின் தேவைகளைக் கச்சிதமாகப் பூர்த்தி செய்கின்ற பொருட்களை வடிவமைத்து, உற்பத்தி செய்கிறது. புத்தமைவினால் தூண்டப்பட்டு, தரத்திற்கு பொறுப்புறுதி ஏற்றுள்ள ஆசுஸ், 2014-ல் 4,326 விருதுகளை வென்றுள்ளதுடன், தனது Eee PC™ மூலம் பிசி தொழில்துறையை புரட்சிகரமாக ஆக்கியதற்கான மிகப்பெரிய பெருமையையும் பெற்றுள்ளது. ஆசுஸ், உலகம் முழுவதும் 16,000-க்கும் அதிகமான பணியாளர்களுடன், 5,200 பொறியாளர்கள் இடம்பெற்றுள்ள உலகத்தரம் வாய்ந்த ஓர் R&D குழுவையும் கொண்டுள்ளது. 2014-க்கான இந்நிறுவனத்தின் வருமானம் சுமார் US$14.5 பில்லியன் ஆகும்.
வலைத்தளம்: http://www.asus.com/in
ஊடகத் தொடர்பு:
மனோஜ் குமார்
[email protected]
+91-9818520082
ஆசுஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்
Share this article