ஹைதராபாத், September 4, 2015 /PRNewswire/ --
UBM இந்தியா நடத்திய, ஃபார்மாலிட்டிகா 2015-ன் 2வது பதிப்பு, ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில், வெற்றியுடன் இன்று நிறைவடைந்தது, இதில் கடந்த ஆண்டின் பதிப்பைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் கண்காட்சியாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் வருகையாளர்கள் பங்கேற்றனர்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150904/10129598-a )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150904/10129598-b )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150831/10129340 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
இரண்டு நாள் நிகழ்ச்சியான ஃபார்மாலிட்டிகா 2015, இந்தியாவின் ஒரு முழுமையான, பகுப்பாய்வு சார்ந்த மற்றும் ஒப்பந்த சேவை நிகழ்ச்சியாகும், மேலும் 100-க்கும் அதிகமான பகுப்பாய்வு சார்ந்த, ஒப்பந்த அடிப்படையிலான, உயிரிதொழில்நுட்ப மற்றும் தரக் கட்டுப்பாட்டு துறைகள் இவ்வாண்டு கண்காட்சியில் பங்கேற்றன.
கண்காட்சியின் சிறப்பம்சமாக புத்தமைவு கேலரி அனைவரையும் கவர்ந்தது. காந்தி ஆட்டோமேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், ஸிக்மா சயன்டிஃபிக் கிளாஸ் பிரைவேட் லிமிடெட், மேக் ஃபார்மா டெக், கேலிபர் டெக்னாலஜீஸ், பயோலிங்க்ஸ் லேப் சிஸ்டம்ஸ்மற்றும் ஜோஃப்ராக்ஸ் பிரைவேட் லிமிடெட் போன்ற நிறுவனங்கள், தங்கள் புதுமைத் தயாரிப்புகளை இந்தக் கேலரியின் ஒரு பகுதியாகக் காட்சிப்படுத்தினர்.
இத்தயாரிப்புகள், புகழ்பெற்ற நபர்கள் அடங்கிய நடுவர் குழு ஒன்றாலும், வருகை தந்திருந்த பங்கேற்பாளர்களின் பிரபலத் தேர்வு வாக்குகளாலும் மதிப்பிடப்பட்டன. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் UBM இந்தியாவின் பாராட்டுகளைப் பெற்றன.
நிகழ்ச்சியில் பேசிய UBM இந்தியாவின் பொறுப்பிலுள்ள நிர்வாக இயக்குனரான
திரு. யோகேஷ் முத்ராஸ் கூறியதாவது, "பங்கேற்கும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஃபார்மாலிட்டிகா 2015-வில் தங்களுடைய புதுமை தயாரிப்புகளைத் திறந்து வைப்பதும், காட்சிப்படுத்துவதும், தொழில்நுட்ப புத்தமைவுகளை வழங்குவதற்கும், காட்சிப்படுத்துவதற்கும், இந்தியா மட்டுமின்றி உலகச் சந்தைக்கும் இத்தகையதொரு தளம் அவசியம் தேவைப்படுவதை உறுதிப்படுத்துகிறது."
UBM இந்தியா பற்றி
UBM இந்தியா, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM இந்தியா, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM ஏஷியாவின் ஒரு நிறுவனமான UBM இந்தியா, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM பிஎல்சி-க்கு சொந்தமான UBM ஏஷியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM ஏஷியா, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் http://www.ubmindia.in.
ஊடகத் தொடர்புகள்:
ப்ரியா பாட்ஷா
[email protected]
UBM இந்தியா பிரைவேட் லிமிடெட்
ஹரி பிரசாத்
[email protected],
+91-9618883774,
MSL குரூப்
Share this article