மும்பை, September 4, 2015 /PRNewswire/ --
தீவிர ரம்மி ஆட்டக்காரர்களுக்கு ஆகஸ்ட் 18 அன்று வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. பணம் கட்டி திறன் விளையாட்டுகள் விளையாடுவது சூதாட்டம் ஆகாது என்ற நன்கு அமையப்பெற்ற சட்ட கோட்பாட்டில் குறுக்கிட வேண்டிய காரணம் ஏதும் இருப்பதாக நீதிமன்றம் நினைக்கவில்லை. 1957-ல், உச்சநீதிமன்றத்தின் ஓர் அரசமைப்பு ஆயமானது, வாய்ப்பு மற்றும் திறன் அடிப்படையிலான செயல்பாடுகளுக்கு இடையிலான இந்த வேறுபாட்டைத் தெளிவாக எடுத்துரைத்தது. இந்த வேறுபாடு பின்னர் குதிரை பந்தயம் தொடர்பான தமிழ் நாட்டின் நிலைப்பாட்டில் மீண்டும் உறுதி செய்யப்பட்டு, திறன் விளையாட்டுகளில் இந்த வேறுபாடு மற்றும் அரசமைப்புசார் பாதுகாப்பு மறுஉறுதி செய்யப்பட்டது. இதில் சுவாரசியம் என்னவென்றால், கிளப்பினால் எதிர்த்து சவால் விடுக்கப்பட்ட மெட்ராஸ் உயர்நீதிமன்ற முடிவும், ரம்மி ஒரு திறன் விளையாட்டு என்றே குறிப்பிட்டிருப்பதாகும்.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130906/10074697)
மாண்புமிகு நீதிபதிகள் மதன் B. லோகர் மற்றும் S.A. போட்பே அடங்கிய பெஞ்ச் ஒன்று, பணம் கட்டி விளையாடும் சீட்டு விளையாட்டு சட்டவிரோதமானது என்ற மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் கருத்து நிலைக்கத்தக்கதல்ல, ஏனென்றால், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டது.
சென்னையில் அமைந்துள்ள மகாலட்சுமி கல்சுரல் அசோசியேஷன் என்ற நகர கிளப், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் டிவிஷனல் பெஞ்ச் மார்ச் 2012 அன்று, பணம் கட்டி விளையாடும் ரம்மி சூதாட்டத்திற்கு ஒப்பானது என்று வழங்கிய தீர்ப்புக்கு சவால் விடுத்தது. பிளே கேம்ஸ் 24x7 பிரைவேட் லிமிடெட் (இது http://www.rummycircle.com-ஐ நடத்துகிறது) உள்ளிட்ட பல இணையதள ரம்மி நிறுவனங்கள், இத்தீர்ப்பினால் தங்கள் தொழில் பாதிக்கப்படும் எனக்கூறி இம்முறையீட்டில் சேர்ந்து கொண்டன.
ரம்மி சர்க்கிளின் CEO திரு. பவின் பாண்டியா, உச்ச நீதிமன்ற தீர்ப்பினை வரவேற்றுள்ளார். "உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு எங்களுக்குத் திருப்தி தருகிறது, இது பணம் கட்டி விளையாடும் திறன் விளையாட்டுகளின் சட்டபூர்வத் தன்மை குறிந்த முந்தைய சட்ட நிலைப்பாட்டை சிறந்த முறையில் தக்கவைத்துள்ளது."
இவ்வழக்கு நடைபெற்ற காலகட்டத்தின் ஒரு துரித தொகுப்பு வருமாறு:
இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ரம்மி ஆட்டக்காரர்கள் கவலை ஏதுமின்றி தங்களுக்கு விருப்பமான சீட்டு விளையாட்டைத் தொடர்ந்து விளையாடி மகிழலாம். RummyCircle.com-ல் பணம் செலுத்தி, சட்டபூர்வமாகவும், பாதுகாப்பாகவும், பொறுப்புடனும் ரம்மி விளையாடலாம்
மேலும் தகவல்களுக்கு, அணுகவும்: https://www.rummycircle.com/legality.html
பிளே கேம்ஸ் 24x7 பிரைவேட் லிமிடெட் பற்றி
பிளே கேம்ஸ் 24x7 பிரைவேட் லிமிடெட், 2.5 மில்லியனுக்கும் அதிகமான ரம்மி ஆட்டக்கார்ர்களுடன், இந்தியாவின் மிகவும் மனம் கவர்ந்த இணைய வலைத்தளமான http://www.RummyCircle.com -ஐ இயக்கி வருகிறது. எளிமையான, இணையவழியிலான பல ஆட்டக்காரர்கள் விளையாடும் ரம்மி விளையாட்டை, புகழ் பெற்ற வடிவங்களில் இலவசமாகவும், பணத்திற்கும் ரம்மிசர்க்கிள் வழங்குகிறது. இவ்வலைத்தளம், பலவித பணம் செலுத்தும் விருப்பத்தேர்வுகள் மற்றும் விரைவாக விலகிக்கொள்ளும் அமைப்புடன், மிகவும் பாதுகாப்பான விளையாட்டுச் சூழலை வழங்குகிறது.
ஒவ்வொரு ரம்மி ஆட்டக்காரருக்கும் வேறேதுமின்றி, மிகச்சிறந்த ரம்மி அனுபவத்தை மட்டுமே வழங்குவதில் இதன் நிர்வாகக் குழு தீவிரப் பற்றுடன் உள்ளது. பிளே கேம்ஸ் 24x7, 2006-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இது இணையதள விளையாட்டுப் பிரிவில், NYU, IIT, IIM-ன் கடந்தகால மாணவர்களான தொழில்முனைவோரால், தொழில்சார் முறையில் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் இதற்கு டைகர் குளோபல் மேனேஜ்மென்ட் நிதி வழங்குகிறது.
*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும். மேலும் அறிவதற்கு அணுகவும் RummyCircle.com.
ஊடகத் தொடர்பு:
சச்சின் உப்பல்
[email protected]
+91-22-42323450
மார்க்கெட்டிங் இயக்குனர்
பிளே கேம்ஸ் 24x7 பிரைவேட் லிமிடெட்
Share this article