டெல்லி, September 4, 2015 /PRNewswire/ --
UBM இந்தியா நடத்தும் தெற்காசியாவின் முன்னணி புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி வர்த்தகக் கண்காட்சி
தனது சிறப்புமிக்க நிகழ்ச்சியான, இந்திய புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி கண்காட்சி (REI)-ன் 9வது பதிப்பை UBM இந்தியா செப்டம்பர் 23 முதல் 25 வரை, கிரேட்டர் நொய்டாவிலுள்ள இந்தியா எக்ஸ்போ சென்டரில் நடத்தும். REI ஓர் உலகளாவிய தளமாகும், இதில், தொழில்துறையின் போக்குகள், சவால்கள் மற்றும் இந்திய ஒழுங்கமைப்பு கட்டமைப்பு உள்ளிட்ட சந்தை குறித்த கணிப்புகளை கலந்தாலோசிப்பதற்காக, அயல்நாட்டு பங்கேற்பாளர்கள் உட்பட, இந்தியாவின் பசுமை பொருளாதார சமுதாயம் ஒன்றுகூடுகிறது. இந்நிகழ்ச்சி, புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மூலவளங்களின் பயன்பாடுகளை மேம்படுத்தி, அவற்றைப் பொதுப் போக்கிற்குக் கொண்டுவருதல், புதிய கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்துல், தயாரிப்பு அறிமுகங்கள் மற்றும் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டுத் தளத்தின் வாயிலாக கலந்தாலோசனைகளுக்கு மேலும் வளமூட்டுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டதாகும்.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150903/10129539)
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c)
REI இந்தியா 2015, சீனா, ஜப்பான், இத்தாலி, தைவான், கனடா மற்றும் யூஎஸ்ஏவிலிருந்து நாட்டு அரங்குகளைக் கொண்டிருக்கும், மற்றும் இதற்கு புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி அமைச்சகம் - இந்திய அரசு (MNRE), இந்திய புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மேம்பாட்டு முகமை (IREDA), ஆந்திர பிரதேச புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மேம்பாட்டுக் கழகம் (NREDCAP), காற்று எரிசக்திக்கான தேசிய நிறுவனம் (NIWE), இந்தோ-ஜெர்மானிய எரிசக்தி குழு உதவி அலுவலகம் (IGEF), தமிழ்நாடு சூரிய எரிசக்தி மேம்பாட்டாளர்கள் கூட்டமைப்பு (TNSEDA), சூரிய எரிசக்தி மேம்பாட்டாளர்கள் கூட்டமைப்பு மற்றும் இந்திய உயிரிவாயு கூட்டமைப்பு ஆகியவை ஆதரவளிக்கின்றன.
உற்பத்தியாளர்கள், EPC-க்கள் மற்றும் சேவை வழங்குனர்களை ஒன்று சேர்த்த REI 2015 வர்த்தகக் கண்காட்சியில், பாஷ் சோலார் எனர்ஜி, பான்ஃபிக்லியோலி ரின்யூவபிள் பவர், கன்வர்ஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட், கனடியன் சோலார், டெல்டா பவர் சொல்யூஷன் (I) பிரைவேட் லிமிடெட், EMMVEE ஃபோட்டோவோல்டெய்க் பவர் பிரைவேட் லிமிடெட், எனர்பார்க் எனர்ஜி பிரைவேட் லிமிடெட், GE, ஜீனஸ் இன்னொவேஷன் லிமிடெட், ஹர்ஷா அபாகஸ் சோலார், மஹிந்திரா சஸ்டேன், நியூவோசால் எனர்ஜி பிரைவேட் லிமிடெட், ஃபோகாஸ் இந்தியா சோலார் பிரைவேட் லிமிடெட், ரிஜன் பவர்டெக் பிரைவேட் லிமிடெட், ரோல்டா பவர் பிரைவேட் லிமிடெட், ஸீமென்ஸ் லிமிடெட், ஸ்கைபவர் குளோபல், ஸ்டெர்லிங் வில்சன், சன் எடிசன் சோலார் பவர் இந்தியா பிரைவேட் லிமிடெட், சுஸ்லான், விக்ரம் சோலார் பிரைவேட் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட மேலும் பல பங்கேற்கும் காட்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கண்காட்சியின் சிறப்பம்சங்களில், சோலார் காருடன் நேரடி அனுபவம், பயிலரங்கங்கள் மற்றும் குளோபல் சஸ்டெயினபிள் எனர்ஜி சொல்யூஷன்ஸ் (GSES)நடத்திய பிரமாண்டமான வகுப்புகள், முதலீட்டாளர்களிடமிருந்து நிதி பெறுவதற்கு சாத்தியமுள்ள தொழில் முனைவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் தொழில் திட்டப் போட்டி, அறிமுகத்திற்கான தளமான புத்தமைவு உலகம், திறன் உருவாக்கத்தின் மீது காற்று எரிசக்திக்கான தேசிய அமைப்பு (NIWE) நடத்திய தொழில்நுட்பக் கருத்தரங்கம் ஆகியவற்றிற்கும் மேலாக, "இந்தியாவின் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி காட்சி - வெற்றிக்கான அளவுருக்களை உருவாக்குதல்" என்ற தலைப்பிலான ஓர் ஆற்றல்மிக்க மூன்று - நாள் மாநாடும் அடங்கும்.
வர்த்தகக் கண்காட்சிக்கு முன்னதாக, சிறப்புமிக்கவையைக் கொண்டாடுவதையும், புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் துறையில் இந்திய நிறுவனங்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி இந்தியா விருதுகள் 2015 என்ற நிகழ்ச்சி நடைபெறும்.
UBM இந்தியா பற்றி:
UBM இந்தியா, மக்களை ஈடுபடுத்தி, தொழில்களுக்கு வளமூட்டும் இந்தியாவின் முன்னணி நேரடி ஊடக மற்றும் நிகழ்வுகள் நிறுவனமாகும். UBM இந்தியாவிலுள்ள நாங்கள், ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள், தொழில்நுட்ப ஊடகங்கள், நேரடி நிகழ்ச்சிகள், தரவு சேவைகள் மற்றும் ஆற்றல்மிக்க ஊடக பிராண்டுகள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்குகிறோம். UBM இந்தியா, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM ஏஷியாவின் ஒரு நிறுவனமான UBM இந்தியா, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM பிஎல்சி-க்கு சொந்தமான UBM ஏஷியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM ஏஷியா, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் http://www.ubmindia.in.
ஊடகத் தொடர்பு:
ப்ரியா பாட்ஷா
[email protected]
UBM இந்தியா பிரைவேட் லிமிடெட்
அஞ்சலினா பிரதான்
[email protected]
011-66517646
UBM இந்தியா பிரைவேட் லிமிடெட்
Share this article