ஹைதராபாத், இந்தியா, September 3, 2015 /PRNewswire/ --
- இந்தியாவின் மருந்து உற்பத்தி தலைநகரான ஹைதராபாதில், இந்தியாவின் அனைத்தும் அடங்கிய பகுப்பாய்வு சார்ந்த மற்றும் ஒப்பந்த சேவை நிகழ்ச்சி
- இந்தியா முழுவதிலிருந்தும் 100-க்கும் அதிகமான பங்கேற்கின்ற காட்சியாளர்கள்
- முக்கிய நிபுணர்களுடன் தொழில்துறையை இலக்காகக் கொண்ட மாநாடு
உலகின் முன்னணி ஃபார்மா வர்த்தகக் கண்காட்சி மற்றும் மாநாடான CPhI / P-MEC இந்தியாவின் ஏற்பாட்டாளர்களான UBM இந்தியா, இன்று ஃபார்மாலிட்டிகா 2015-ன் இரண்டாவது பதிப்பை நடத்தினர். இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியை, ஹைதராபாதிலுள்ள ஃபார்மெக்சில் நிறுவனத்தின் துணைத் தலைவரும், அரபிந்தோ ஃபார்மாவின் முழு நேர இயக்குனருமான திரு. மதன் மோகன் ரெட்டி, ஹைதராபாதிலுள்ள ஃபார்மெக்சில் நிறுவனத்தின் தலைமை இயக்குனரான டாக்டர் P V அப்பாஜி, மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் துணை இயக்குனர் மற்றும் உரிம அதிகாரியான திரு. M. அம்ருத ராவ், மற்றும் UBM இந்தியாவின், பொறுப்பிலுள்ள நிர்வாக இயக்குனரான
திரு. யோகேஷ் முத்ராஸ் ஆகியோர் இன்று ஹைடெக்ஸ் எக்ஸிபிஷன் சென்டரில் தொடங்கி வைத்தனர்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150902/10129471-a )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150902/10129471-b )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150831/10129340 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
இந்தியாவின் மருந்து உற்பத்தித் துறையில் தொழில்களை வளர்க்கின்ற நம்முடைய திறனின் பின்னணியுடன், இந்தியாவின் வளமான மற்றும் ஒத்திசைவான மருந்து உற்பத்தி தலைநகரான ஹைதராபாதில் ஒரு கச்சிதமான தளத்தை ஃபார்மாலிட்டிகாவால் உருவாக்க முடிந்துள்ளது, இந்நகரம் இந்தியாவின் மொத்த மருந்து உற்பத்திக்கான மையமாகக் கருதப்படுவதுடன், இந்தியாவின் மொத்த மருந்து ஏற்றுமதியில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கினைக் கொண்டுள்ளது.
இவ்வாண்டு, ஃபார்மாலிட்டிகாவின் 2வது பதிப்பில், பகுப்பாய்வு சார்ந்த, ஒப்பந்த, உயிரிதொழில்நுட்ப மற்றும் தரக் கட்டுப்பாட்டு துறைகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட காட்சியாளர்கள் பங்கேற்றனர், இவற்றில், முக்கிய நிறுவனங்களான ஏர்பாக் ஃபில்டர்ஸ் & சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட், யுரேகா ஃபோர்ப்ஸ் லிமிடெட், காந்தி ஆட்டோமேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், GD லேப் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், ஹைட்ரானாடிக்ஸ் - இது ஒரு நிட்டோ குழு நிறுவனமாகும், க்ளீன்டெக் எஞ்சினியரிங் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட், மெஷின்ஃபேப்ரிக் இன்டஸ்டிரீஸ் பிரைவேட் லிமிடெட், மேக் ஃபார்மாடெக் பிரைவேட் லிமிடெட், நானோலேப் இந்தியா, நியூட்ரானிக் லைஃப்கேர் எக்விப்மென்ட் பிரைவேட் லிமிடெட், ஓஸோன் ஓவர்சீஸ் பிரைவேட் லிமிடெட், ப்ரிஸிம் ஃபார்மா மெஷினரி, ப்ரோடெக் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட், ஸ்காட் கைஷா பிரைவேட் லிமிடெட், ஸைமெட் லேப்ஸ் லிமிடெட், டெம்போ இன்ஸ்ட்ருமென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், நிராகாரா இன்டஸ்டிரீஸ், லாப்டாப் இன்ஸ்ட்ருமென்ட்ஸ், ஹைட்ரோப்யூர், அனாடெக் சர்வீஸஸ் போன்றவையும் மற்றும் பலவும் அடங்கும்.
UBM இந்தியாவின் பொறுப்பிலுள்ள நிர்வாக இயக்குனரான திரு. யோகேஷ் முத்ராஸ் கூறியதாவது, "இந்தியாவில், தரம், ஆராய்ச்சி, ஒழுங்கமைப்பு மற்றும் சுற்றுச்சூழல்சார் கடைப்பிடிப்பு ஆகியவற்றின் காரணமாக, பகுப்பாய்வு மற்றும் வெளிக்கொள்முதல் சேவைகள் மிகப் பெரிய வளர்ச்சிக்குத் தயார்நிலையில் உள்ளன. இதன் விளைவாக, இந்திய தொழில்துறை நிறுவனங்களின் உடனடி தேவையாக இருப்பது, சிறந்த பொருள் மற்றும் சேவையை வழங்குவதன் மூலம், இன்றைய சூழ்நிலையின் வசதி வாய்ப்புகளை முழுமையாக்குவதாகும். இத்தயாரிப்புகளை மேலும் பரவலான நுகர்வோருக்கு சந்தைப்படுத்துவதற்காகவும், அதன் மூலம் இந்த தனித்துவம் வாய்ந்த மருந்து தொழில்துறையின் வர்த்தகத்தைத் தூண்டுவதற்காகவும், பகுப்பாய்வு, வெளிக்கொள்முதல், பரிசோதனைக்கூடம், அறிவியல் மற்றும் உயிரிதொழில்நுட்ப தொழில்துறைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள தொழில்துறைத் தளமான ஃபார்மாலிட்டிகாவின் 2வது பதிப்பை UBM இந்தியா எடுத்து வருகிறது."
ஃபார்மெக்சில், தலைமை இயக்குனரான டாக்டர் PV அப்பாஜி கூறினார், " ஃபார்மாலிட்டிகாவின் இரண்டாவது பதிப்பை ஹைதராபாதில் ஏற்பாடு செய்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியை UBM இந்தியாவுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். மருந்து உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு தெலிங்கானா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் இருந்து வருகிறது, மேலும் API மற்றும் உற்பத்தித் தொழிற்சாலைகளில் ஏராளமானவை இம்மண்டலத்தில் அமைந்துள்ளன. மருந்து சோதனை, தரக் கட்டுப்பாடு மற்றும் தர உறுதிப்பாட்டில் ஈடுபட்டுள்ள மருந்து நிறுவனங்கள், ஃபார்மாலிட்டிகா நிகழ்ச்சியில் பல்வேறு காட்சியாளர்களை சந்திக்கின்ற இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமீபத்திய இயந்திரங்கள், சாதனங்கள் மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வு நுட்பங்களைப் பற்றி நிறுவனங்கள் புரிந்து கொள்ள வேண்டும், இது அவர்களை உயர்ந்த தரச் சோதனை முறைகளை செயல்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும் உதவுவதன் மூலம், இந்தியாவிலிருந்து செய்யப்படும் ஏற்றுமதி அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும்."
புத்தமைவு கேலரி மற்றும் ஃபார்மெக்ஸிலின் பிராண்ட் இந்தியா அரங்கு இக்கண்காட்சியின் முக்கிய சிறப்பம்சங்களாகும். இந்நிகழ்ச்சியில், முக்கிய நிபுணர்களான, வெங்கட் மனோகர், இயக்குனர், IICMS; G சுந்தர், இயக்குனர், ஃபார்மகா கம்ப்ளையன்ஸ் சர்வீஸஸ்; ரஜ்னி ஜா, தனி ஆலோசனையாளர்; சுமதி ராவ், தலைவர் - பகுப்பாய்வு, அரபிந்தோ ஃபார்மா மற்றும் வாசுதேவ் ஜக்கானியா, தலைவர் - ட்ரேஸ் அனலிட்டிகல் லேப் ஆகியோர் பங்கேற்ற தொழில்துறை கலந்தாய்வுகளுடன்கூடிய ஒரு மாநாடும் இடம்பெற்றிருந்தது. முதல் நாளன்று கலந்துரையாடப்பட்ட தலைப்புகள் சிலவற்றில் கீழ்க்கண்டவையும் அடங்கும்:
UBM இந்தியா பற்றி
UBM இந்தியா, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM இந்தியா, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM ஏஷியாவின் ஒரு நிறுவனமான UBM இந்தியா, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM பிஎல்சி-க்கு சொந்தமான UBM ஏஷியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM ஏஷியா, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும்: http://www.ubmindia.in
ஊடகத் தொடர்பு:
ப்ரியா பாட்ஷா
[email protected]
UBM இந்தியா பிரைவேட் லிமிடெட்
ஹரி பிரசாத்
[email protected]
+91-9618883774
MSL குரூப்
Share this article