ஹைதராபாத், இந்தியா, September 1, 2015 /PRNewswire/ --
இந்தியாவில் பகுப்பாய்வு, அவுட்சோர்ஸிங் மற்றும் உயிரியல்தொழில்நுட்பத்தில் வளர்ந்துவரும் உலகளாவிய தளம்
யூபிஎம் இந்தியா, உலகின் முன்னணி மருந்து வர்த்தக கண்காட்சியான சிபிஹெச்ஐ/பி-எம்ஈசி இந்தியாவின் ஒருங்கிணைப்பாளர்கள், ஃபார்மாலிடிகா 2015இன் 2ஆம் நிகழ்வை அறிவித்துள்ளனர். இந்த ஆண்டின் நிகழ்வு ஹைதராபாத்தில் ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் 2015 செப்டம்பர் 2ஆம் மற்றும் 3 ஆம் தேதி நடைபெறும்.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150831/10129340 )
இந்தியாவில் வளர்ந்து வரும் மருந்து வர்த்தகத்தில் எங்கள் நிரூபிக்கப்பட்ட நிபுணத்துவத்தை ஆதரவாக கொண்ட ஃபார்மாலிட்டிகா ஒரு சிறப்பான தளத்தை இந்தியாவின் செழிப்பான உகந்த மருந்துக்கான தலைநகர் ஹைதராபாதில் உருவாக்க தயாராக உள்ளது, இதுவே இந்தியாவின் சிறந்த மொத்த மருந்து மையமாக கருதப்படுகின்றது, இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் மருந்துகளில் ஐந்தில் ஒரு பங்கு இங்கிருந்தே ஏற்றுமதியாகின்றன. ஃபார்மாலிடிகா மாநாட்டின் ஒட்டுமொத்த அமர்வுகள் மற்றும் கலந்துரையாடல்களின் மூலமாக, மருந்துசார்ந்த சமூகமானது சமீபத்திய தொழிற்துறை போக்குகளையும், பகுப்பாய்வு, அவுட்சோர்சிங், ஆய்வக மற்றும் உயிரியல்தொழில்நுட்ப பிரிவு சார்ந்த புதுமைகளையும் எடுத்துக்கொள்ள உதவும்.
இந்த ஆண்டின் ஃபார்மாலிடிகாவின் 2ஆம் நிகழ்விலே நூற்றுக்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், பகுப்பாய்வு, ஒப்பந்தம், உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் தர கட்டுப்பாட்டு துறைகளில் இருந்து கலந்துகொண்டனர், அதில் ஏர்பேக் ஃபில்ட்ர்ஸ் & சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட்., யுரேகா ஃபோர்ப்ஸ் லிமிடெட்., காந்தி ஆட்டோமேஷன் பிரைவேட் லிமிடெட், ஜிடி லேப் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், ஹைட்ரோநாட்டிக்ஸ் - ஒரு நிட்டோ குழும நிறுவனம், கிளீண்டெக் என்ஜினியரிங் சிஸ்டம்ஸ் பிரைவேட்.லிமிடெட்., மேக் ஃபார்மாடெக் பிரைவேட் லிமிடெட்., நானோலேப் இந்தியா, நியூட்ரானிக் லைஃப்கேர் எக்யுப்மெண்ட் பிரைவேட் லிமிடெட், ஓசோன் ஓவர்சீஸ் பிரைவேட் லிமிடெட்., பிரிசம் ஃபார்மா மெஷீனரி ப்ரோடெக் டெக்னாலஜீ பிரைவேட் லிமிடெட், ஸ்காட் கைஷா பிரைவேட் லிமிடெட், சைமத் லேப்ஸ் லிமிடெட், டெம்போ இன்ஸ்ட்ருமென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், நீராகாரா இன்ட்ஸ்ட்ரீஸ், லேப்டாப் இன்ஸ்ட்ருமென்ட்ஸ், ஹைட்ரோபியூர் மற்றும் அனாடெக் சர்வீசஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் அதில் உள்ளடங்கும். இந்த நிகழ்விலே ஃபார்மெக்சில் வழங்கும் பிராண்ட் இந்தியா பெவிலியனும் காட்சியளிக்கும்.
யோகேஷ் முத்ராஸ், செயல்பாட்டிலுள்ள மேலாண்மை இயக்குநர், யூபிஎம் இந்தியா, இவ்வாறு கூறினார், "இந்தியாவின் மருந்துக்கான தலைநகரம்-ஹைதராபாத்தில் ஃபார்மாலிடிகாவின் இரண்டாம் நிகழ்வை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நிகழ்வானது மருந்து துறையிலுள்ள முக்கிய பகுதிகளின் ஒட்டுமொத்த மதிப்பு சங்கிலியிலும் உள்ள தயாரிப்புகளுக்கும் சேவைகளுக்கும் ஒரு முன்னணி சந்தைவெளியாக மாறவிருக்கிறது. ஃபார்மாலிடிகாவானது பங்குபெறும் மருந்து நிறுவனங்கள் உலக விநியோகஸ்தர்களோடு இணைந்துகொள்ளவும் பிணைப்பை ஏற்படுத்தவும் மட்டும் அல்ல, சமீபத்திய துறைசார் போக்குகளோடும் புதுமைகளோடும் இணைந்து செல்லவும் உதவும்."
ஃபார்மாலிடிகாவில் பங்கேற்கும் சில முக்கிய பேச்சாளர்களில் - ரஜினி ஜா, தனியார் ஆலோசகர், வெங்கட் மனோஹர், இயக்குநர், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் குரோமடோகிராஃபி அன்ட் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி, சுமதி ராவ், தலைவர் அனலிடிகல்-அரோபிந்தோ உள்ளிட்டோர் அடங்குவர்.
ஃபார்மாலிடிகாவின் முதல் நிகழ்வு பெங்களூருவில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்நிகழ்வை பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும் பதிவுசெய்யவும், வருகைதாருங்கள் - http://www.ubmindia.in/pharmalytica
யூபிஎம் இந்தியா பற்றி
யூபிஎம் இந்தியா என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர், அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களை அளிக்கிறது. யூபிஎம் இந்தியா ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு யூபிஎம் ஆசியா நிறுவனமான, யூபிஎம் இந்தியாவுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. யூபிஎம் ஆசியா லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள யூபிஎம் பிஎல்சிக்கு சொந்தமானது. யூபிஎம் ஆசியா ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து வருகைதாருங்கள் http://www.ubmindia.in
ஊடக தொடர்புகள்:
பிரியா பாட்ஷா
[email protected]
+91(0) 22-61727353
யூபிஎம் இந்தியா பிரைவேட் லிமிடெட்.
ஹரி பிரசாத்
எம்எஸ்எல் குரூப்
[email protected]
Share this article