புது டெல்லி, August 25, 2015 /PRNewswire/ --
- 125 பங்கேற்கும் நிறுவனங்கள் மற்றும் 2,700-க்கும் அதிகமான தொழில்துறை நுகர்வோர்
- பேக்கேஜிங் மற்றும் தொழில்நுட்பம், உட்பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள், நறுமணம் மற்றும் மணங்கள் மீதான தொழில்துறை கருத்தரங்கங்கள் மற்றும் பயிலரங்கங்கள்
- புதுமைத் தயாரிப்புகளின் கண்காட்சி
தனிநபர் பராமரிப்பு, ஒப்பனை மற்றும் வீட்டுப் பராமரிப்பு உட்பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் பேக்கேஜிங் தொழில்கள் சம்பந்தப்பட்ட இந்தியாவின் முதல் சர்வதேச வர்த்தக நிகழ்ச்சியான, தி பர்சனல் கேர் இந்தியா எக்ஸ்போ 2015, இந்தியாவில் இத்தொழில்துறையின் வாய்ப்பு வளங்களையும், எதிர்காலப் போக்கினையும் தெளிவாக எடுத்துரைத்தது. UBM இந்தியாவின் கன்னி முயற்சியான இக்கண்காட்சி, பிரகதி மைதானில், ஆகஸ்ட் 21 அன்று நிறைவடைந்தது. இங்கு, ஒப்பனை உட்பொருட்கள், மூலப்பொருட்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான உற்பத்தி, பேக்கேஜிங் மற்றும் இயந்திரங்கள், ஆயுர்வேதம் மற்றும் நியூட்ராசூட்டிகல் உட்பொருட்களின் முக்கியத் தயாரிப்பாளர்கள், தங்களை இணைத்துக் கொள்வதற்கும், பகிர்வதற்கும், யோசனைகளை உருவாக்குவதற்கும் ஒன்றுகூடினர்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150824/10129002 )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150824/10129002-b )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150116/10114481 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
மூன்று நாட்களுக்கு நடைபெற்ற இந்நிகழ்ச்சியானது, ஒப்பனைப் பொருட்கள் மற்றும் உட்பொருட்களின் தயாரிப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள்/இறக்குமதியாளர்கள், விநியோகிப்பாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் வர்த்தக அமைப்புகளின் சர்வதேச வாங்குவோர்-விற்போர் சந்திப்புகளுக்கான ஒரு தொழில்துறை தளத்தை வழங்கியது. இவ்வர்த்தக நிகழ்ச்சியில், 125-க்கும் அதிகமான நிறுவனங்கள் ஒன்றுகூடியதுடன், கென்யா, லிபியா, ஃபிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த பிரதிநிதிகள் உட்பட 2,700 நுகர்வோர் பங்கேற்றனர். இதனை நடத்திய நுகர்வோரில், புகழ்பெற்ற நிறுவனங்களான காயா, விஷால் பெர்சனல் கேர், MCPL லிமிடெட், ஆங்கர் ஹெல்த் & பெர்சனல் கேர் லிமிடெட், ஆயுர்வேதிக், ITC லிமிடெட், மாரிக்கோ, இமாமி, VVF லிமிடெட், கோரான் ஃபார்மா, ஸீஹார்ஸ் ஃபார்மா, பாரமவுன்ட் காஸ்மெடிக்ஸ் மற்றும் நிவியா லிமிடெட் ஆகியவை அடங்கும்.
கண்காட்சியைத் தொடங்கி வைத்ததற்கும் மேலாக, புதுமைத் தயாரிப்புக் கண்காட்சியில், புதுமை உட்பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் பேக்கேஜிங்கின் வெற்றியாளர்களுக்கு ஷானாஸ் ஹுசைன் குரூப் ஆஃப் கம்பெனீஸின் CMD, திருமதி ஷானாஸ் ஹுசைன் பரிசுகளை வழங்கியது இக்கண்காட்சியின் ஒரு சிறப்பம்சமாக அமைந்தது. இக்கண்காட்சி நடைபெற்ற மூன்று நாட்களிலும், பேக்கேஜிங் மற்றம் தொழில்நுட்பம், டிஜிட்டல் பேக்கேஜிங், உட்பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள், நறுமணம் மற்றும் மணங்கள் மீதான ஏராளமான கருத்தரங்கங்களும், பயிலரங்கங்களும் நடைபெற்றன. முக்கியப் பேச்சாளர்களில், ஜேமி சிட், பர்ப்பிள் ஹெர்ட்; கவிதா கெய்க்வாட், கிளாரியன்ட் கெமிக்கல்ஸ்; விமரேஷ் தர்ஜி மற்றும் திரு. விநாயக் மோகன், ஏஸ் டெக்னாலஜீஸ்; டாக்டர் அமித் ஜனுல், அஜிலன்ட்; வாரன் ஃபெர்னான்டஸ், அர்ஜுன் பீஸ்வாக்ஸ்; கௌரங் துமார், சுந்தரம் டெக்னாலஜீஸ்; S. முகர்ஜி, KBH பாலிமர்ஸ் பிரைவேட் லிமிடெட்; ரிஷப் தேசாய், கோயல் கலர்ஸ் போன்ற நிபுணர்களும் அடங்குவர்.
இக்கண்காட்சி, கெமெக்சில் - பேசிக் கெமிக்கல்ஸ், ஃபார்மாசூட்டிகல்ஸ் & காஸ்மெடிக்ஸ் எக்ஸ்போர்ட் ப்ரொமோஷன் கவுன்சில் (இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் முயற்சி), தி இந்தியன் ஹோம் & பர்சனல் கேர் இன்டஸ்டிரி அசோசியேஷன் (IHPCIA), ஃப்ராக்ரன்சஸ் அன்ட் ஃபிளேவர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (FAFAI), EU சேம்பர் ஆஃப் காமர்ஸ், ஆயில் டெக்னாலஜிஸ்ட்ஸ்' அசோசியேஷன் ஆஃப் இந்தியா - வெஸ்ட் ஸோன் (OTAI), மற்றும் ஆல் இந்தியா காஸ்மெடிக் மேனுஃபாக்சரர்ஸ்' அசோசியேஷன் (AICMA) ஆகியவற்றின் ஆதரவுடன், தொழில்துறை முழுவதன் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.
நிகழ்ச்சியை நிறைவு செய்து பேசிய UBM இந்தியாவின் பொறுப்பிலுள்ள நிர்வாக இயக்குனரான திரு. யோகேஷ் முத்ராஸ் கூறியதாவது, "உள்நாட்டு தனிநபர் பராமரிப்புச் சந்தையின் அதிவேக வளர்ச்சியைத் தூண்டும் சமூகப் பொருளாதார போக்குகள் மற்றும் உட்பொருட்கள், பேக்கேஜிங் மற்றும் இயந்திரங்கள் போன்ற தரமான தனிநபர் பராமரிப்புப் பொருட்களுக்கான சார்புத்தன்மை ஆகிய இரண்டுமே இத்தொழில்துறையை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக ஆக்கிவிட்டன. இதன் விளைவாக, இப்பங்களிக்கும் தொழில்துறைக்கான ஓர் ஈடுபாடுமிக்க வர்த்தகத் தளம் வெகுவாக வரவேற்கப்பட்டது மற்றும் இது, இக்கண்காட்சியில் நாங்கள் பெற்ற மாபெரும் தொழில்துறை வரவேற்பில் பிரதிபலித்துள்ளது. இக்கன்னி முயற்சியின் வெற்றி, பெர்சனல் கேர் இந்தியா எக்ஸ்போவின் 2016 பதிப்பிற்கான முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்துள்ளது."
UBM இந்தியா பற்றி
UBM இந்தியா, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM இந்தியா, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM ஏஷியாவின் ஒரு நிறுவனமான UBM இந்தியா, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM பிஎல்சி-க்கு சொந்தமான UBM ஏஷியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM ஏஷியா, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் http://www.ubmindia.in.
ஊடகத் தொடர்பு:
ப்ரியா பாட்ஷா,
[email protected],
+91-(0)-22 6172 7353,
UBM இந்தியா பிரைவேட் லிமிடெட்
Share this article