புது டெல்லி, August 20, 2015 /PRNewswire/ --
தனிநபர் பராமரிப்பு, ஒப்பனை மற்றும் வீட்டுப் பராமரிப்பு உட்பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் பேக்கேஜிங் தொழில்கள் சம்பந்தப்பட்ட இந்தியாவின் முதல் சர்வதேச வர்த்தக நிகழ்ச்சியான, பெர்சனல் கேர் இன்டஸ்ட்ரி எக்ஸ்போவின் தனது முதல் பதிப்பை இன்று UBM இந்தியா புது டெல்லியிலுள்ள பிரகதி மைதானில் தொடங்கி வைத்தது. இத்தனித்துவமான வர்த்தகக் கண்காட்சியை ஷானாஸ் ஹுசைன் குரூப் ஆஃப் கம்பெனீஸின் CMD, திருமதி ஷானாஸ் ஹுசைன் திறந்து வைத்தார், மற்றும் இது கெமெக்சில் - பேசிக் கெமிக்கல்ஸ், ஃபார்மாசூட்டிகல்ஸ் & காஸ்மெடிக்ஸ் எக்ஸ்போர்ட் ப்ரொமோஷன் கவுன்சில் (இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் முயற்சி), தி இந்தியன் ஹோம் & பர்சனல் கேர் இன்டஸ்ட்ரி அசோசியேஷன் (IHPCIA), ஃப்ராக்ரன்சஸ் அன்ட் ஃபிளேவர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (FAFAI), EU சேம்பர் ஆஃப் காமர்ஸ், ஆயில் டெக்னாலஜிஸ்ட்ஸ்' அசோசியேஷன் ஆஃப் இந்தியா - வெஸ்ட் ஸோன் (OTAI), மற்றும் ஆல் இந்தியா காஸ்மெடிக் மேனுஃபாக்சரர்ஸ்' அசோசியேஷன் (AICMA) ஆகியவற்றின் ஆதரவுடன், தொழில்துறை முழுவதன் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150819/10128884-a )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150819/10128884-b )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150116/10114481 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியானது, ஒப்பனைப் பொருட்கள் மற்றும் உட்பொருட்களின் தயாரிப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள்/இறக்குமதியாளர்கள், விநியோகிப்பாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் வர்த்தக அமைப்புகளின் சர்வதேச வாங்குவோர்-விற்போர் சந்திப்புகளுக்கான ஒரு தொழில்துறை தளத்தை வழங்குகிறது. தொடக்க நாளன்று, 125 தொழில்துறை காட்சியாளர்கள், ஒப்பனை உட்பொருட்கள், மூலப்பொருட்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான உற்பத்தி, பேக்கேஜிங் மற்றும் இயந்திரங்கள், ஆயுர்வேதம் மற்றும் நியூட்ராசூட்டிகல் உட்பொருட்கள் அடங்கிய தங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளைக் காட்சிப்படுத்தினர்.
இவ்வாண்டு பங்கேற்கும் முக்கிய காட்சியாளர்களில், ஆர்த்தி இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஏஸ் டெக்னாலஜீஸ், ஏஜிலன்ட் டெக்னாலஜீஸ், ஆன்காலிமா லைஃப்சயன்ஸஸ் லிமிடெட், ஏரோகெம் ரட்லம் பிரைவேட் லிமிடெட், ஈடல்மேன் பேக்கேஜிங் இந்தியா (பி) லிமிடெட், எக்காட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட், ஐடென்டிசென்ட்ஸ் FZC, லாசன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், N V ஆர்கானிக்ஸ் பிரைவேட் லிமிடெட், நோரெக்ஸ் ஃபிளேவர்ஸ் பிரைவேட் லிமிடெட், மஹரிஷி உத்யோக், மார்ஜெம்-இமேஜ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மிட்சுபிஷி கெமிக்கல் இந்தியா பிரைவேட் லிமிடெட், சாலிசைலேட்ஸ் அன்ட் கெமிக்கல்ஸ், ஸ்ரீ பகவதி மேக்டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட், சுரு கெமிக்கல்ஸ் & ஃபார்மாசூட்டிகல்ஸ் பிரைவேட் லிமிடெட், வாக்ஸாயில்ஸ் பிரைவேட் லிமிடெட், வெஸ்ட் பெங்கால் கெமிக்கல் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஸெஜியாங் JM இன்டஸ்ட்ரி கம்பெனி, லிமிடெட், ஸோங்ஷான் லியூன்சியாங் டிஸ்பென்சிங் பம்ப் லிமிடெட் மற்றும் பல நிறுவனங்களும் அடங்கும். மேலும், இந்நிகழ்ச்சி சீனாவின் சர்வதேச அரங்கு ஒன்றையும் கொண்டிருந்தது, இதில் ஒப்பனைப் பொருள் பேக்கேஜிங், டிஸ்பென்சிங் பம்புகள் மற்றும் ஏரோசால் வால்வுகள் போன்ற தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
விருந்தினர்கள், காட்சியாளர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் வருகையாளர்களை வரவேற்று, UBM இந்தியாவின் பொறுப்பிலுள்ள நிர்வாக இயக்குனரான திரு. யோகேஷ் முத்ராஸ் கூறியதாவது, " தனிநபர் பராமரிப்புப் பொருட்களில் சிறப்பு உட்பொருட்களைப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ள நிலையில், ஒரு தொழில்துறை என்ற முறையில், இத்தகைய உட்பொருட்களுக்கான தேவை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தித் தொழிற்சாலைகள் பெரும்பாலும் வட இந்தியாவிலேயே அதிகமாக இருப்பதால், நமது சாத்தியமுள்ள காட்சியாளர்கள், வாங்குவோர் மற்றும் சர்வதேச பங்கேற்பாளர்களுடன் நமக்குள்ள பரிமாற்றங்களுடன்கூடிய சந்தை ஆராய்ச்சியானது, இத்தகைய வர்த்தகத் தளத்திற்கான தொழில்துறைசார்ந்த தேவையையும், இம்மண்டலத்தில் ஒரு தொழில்துறையை ஈடுபடுத்தும் வர்த்தகக் கண்காட்சியை அறிமுகப்படுத்துகின்ற நம்முடைய முடிவின் அவசியத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது. இதுவரை பெறப்பட்டுள்ள தொழில்துறை வரவேற்பு, பெர்சனல் கேர் இந்தியா எகஸ்போ 2015-ஐ அறிமுகப்படுத்துகின்ற நமது யுக்திக்கும் ஆதரவளிப்பதாக அமைந்துள்ளது."
தொடக்க விழாவின்போது, ஷானாஸ் ஹுசைன் குரூப் ஆஃப் கம்பெனீஸின் CMD, திருமதி ஷானாஸ் ஹுசைன் கூறியதாவது, "தங்கள் கண்காட்சிகள், மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகம் முழுவதிலும் உள்ள வாங்குவோர் மற்றும் விற்போரிடையே பரிமாற்றங்களை உருவாக்குவதற்காக பர்சனல் கேர் தொழில்துறைக்கு ஒரு மாபெரும் தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளதற்காக UBM இந்தியாவை நான் மிகவும் பாராட்டுகிறேன். உட்பொருட்கள், பேக்கேஜிங் மற்றும் அவசியமான இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட அழகு மற்றும் தனிநபர் பராமரிப்பு தொழில்துறையின் முக்கிய அம்சங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரித்திருப்பதற்காகவும் நான் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்."
புதுமை தயாரிப்பு கண்காட்சி கார்னர், ஷானாஸ் ஹுசைன் குழுவிடமிருந்து பரிசுகளை வெல்லும் வாய்ப்புடன், களத்திலேயே கலந்து கொள்ளும் போட்டிகள் ஆகியவை இந்நிகழ்ச்சியின் மற்ற சிறப்பம்சங்களில் அடங்கும். மூன்று நாட்கள் அனைத்திலும் இக்கண்காட்சியில், பேக்கேஜிங் மற்றும் தொழில்நுட்பம், டிஜிட்டல் பேக்கேஜிங், உட்பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள், நறுமணம் மற்றும் மணங்கள் மீதான ஏராளமான தொழில்துறை சார்ந்த கருத்தரங்கங்கள் மற்றும் பயிலரங்கங்கள் இடம்பெற்றிருந்தன. முதல் நாளன்று, பின்வரும் தலைப்புகள் மீதான கலந்துரையாடல்கள் நடைபெற்றன:
UBM இந்தியா பற்றி
UBM இந்தியா, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM இந்தியா, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM ஏஷியாவின் ஒரு நிறுவனமான UBM இந்தியா, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM பிஎல்சி-க்கு சொந்தமான UBM ஏஷியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM ஏஷியா, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் ubmindia.in.
ஊடகத் தொடர்புகள்:
ப்ரியா பாட்ஷா
[email protected]
தலைவர்-PR
UBM இந்தியா பிரைவேட் லிமிடெட்
அஞ்சலினா பிரதான்
[email protected]
+91-9999870839
UBM இந்தியா பிரைவேட் லிமிடெட்
Share this article