புது டெல்லி, August 18, 2015 /PRNewswire/ --
இந்தியாவில், இவ்வகையிலேயே முதலாவதான வர்த்தகக் கண்காட்சியை தொழில்துறை பெறுகிறது
இன்டெக்ஸ் என்ற முன்னணி கண்காட்சியின் அமைப்பாளர்களான UBM இன்டெக்ஸ்ஃபேர்ஸ், புது டெல்லியிலுள்ள பிரகதி மைதானில் ஆகஸ்ட் 21 முதல் 23 வரை, சமையலறை மற்றும் குளியலறை தொழில்துறையின் முன்னோடி கண்காட்சியான இந்தியா கிச்சன் & பாத் 2015-ஐ நடத்த உள்ளனர்.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150817/10128725)
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c)
இந்த மூன்று நாள் நடைபெறும் வர்த்தகக் கண்காட்சி, சமையலறை மற்றும் குளியலறை சாதனங்கள், OEM வெள்ளைத் தயாரிப்புகள், துணைப்பொருட்கள், சமையலறை மற்றும் குளியலறை ஃபர்னிச்சர் மற்றும் ஃபிட்டிங்குகள், ஒளியமைப்புப் பொருட்கள் ஆகியவற்றின் வாங்குவோர் மற்றும் விற்போரை, விருந்தோம்பல், தொழில்துறை மற்றும் அரசுத்துறைகள் முழுவதிலும் உள்ள கட்டிட நிபுணர்கள், உள் வடிவமைப்பாளர்கள், பில்டர்கள், திட்ட மேலாளர்கள், ஆலோசனையாளர்கள், கொள்முதல் தலைவர்களுடன் இணைக்கும். இக்கண்காட்சியில் அறிவாற்றல் கூட்டங்கள், புதுமை அரங்கு மற்றும் தயாரிப்பு அறிமுக மண்டலம் ஆகியவை இடம்பெற்றிருக்கும். இக்கண்காட்சிக்கு, இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்டியன் இன்டீரியர் டிசைனர்ஸ் (IIID), ஆல் இன்டியா ஹார்டுவேர் அசோசியேஷன் அன்ட் ஹாஸ்பிடாலிட்டி பர்சேஸிங் மேனேஜர்ஸ் ஃபோரம் ஆகிய அமைப்புகள் ஆதரவளிக்கின்றன. இந்நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில், வடிவமைப்பின் மீது IIID நடத்தும்....V தேசி ஆர் பி தேசி என்ற பரிமாற்ற அடிப்படையிலான அறிவாற்றல் கருத்தரங்கம் ஒன்றும் நடத்தப்படும்.
இந்தியா கிச்சன் & பாத் 2015-ல், பிரபல மாஸ்டர் செஃப்-ஆன ரன்வீர் பிரார் உடன், இத்தொழில்துறையின் முக்கிய பிரமுகர்களான ஆர்.கரன் குரோவர், ஆர். சஞ்சய் பூரி மற்றும் அன்கூர் தாகூர் மற்றும் இத்துறையின் இதர வடிவமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பங்கேற்பார்கள். புகழ்பெற்ற நிறுவனங்களான போர்செலனோஸா, க்யுவோ, அக்ரிசில், ஃபேர், கோத்ரெஜ், இன்டீரியோ, ஹஃபேல், JB கிளாஸ், காஃப் அப்ளையன்ஸஸ், கோஹ்லர், DS டோர்ஸ், மார்மோ ஹோம், காலின்ஸ், நியூமோபெல், ஓஸ்வால் ஹார்டுவேர், ஆய்ஸ்டர் பாத், பிரெஸ்டிஜ், ராயல் கிச்சன்ஸ், TZ பேனல்ஸ், யுனீக் இன்னொவேஷன்ஸ், விக்டரிநாக்ஸ், வைகா Gmbh மற்றும் வெல்கோனா, மற்றும் பல நிறுவங்களும் தங்கள் பொருட்கள் மற்றும் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தும்.
UBM இந்தியாவின் பொறுப்பிலுள்ள நிர்வாக இயக்குனரான திரு. யோகேஷ் முத்ராஸ் கூறியதாவது, "இன்று இந்தியாவில், மாட்யுலர் கிச்சன் சந்தை 2018-க்குள் 42.93% CAGR அளவுக்கும், சானிட்டரி பொருட்கள் 12-15% விகித அளவுக்கும் வளர்ச்சி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவ்விரு பிரிவுகளுமே நுகர்பயனிலிருந்து ஆடம்பரத்திற்கு மாற்றம் பெற்றுள்ளன. 2013 மற்றும் 2018-க்கு இடையில் நிலையான மதிப்பின் அடிப்படையில் இந்தியாவின் ஆடம்பரச் சந்தை 86 சதவீத அளவுக்கு வளர்ச்சிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் தொழில்துறை சூழலின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நடுத்தர மக்களின் பிரதி நபர் வருமானம் ஆகியவற்றின் அதிகரிப்புடன், வரவிருக்கும் ஆண்டுகளில் இத்தொழில்துறை மேலும் வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ச்சி வாய்ப்பு மற்றும் அதன் காரணமாக ஒரு வர்த்தகத் தளத்தின் தேவை ஆகியவற்றை தொழில்துறை நிறுவனங்கள் என்ற முறையில் தாங்கள் வழங்கிய பின்கருத்தின் மூலம் தொழில்துறையும் எங்களுக்கு எடுத்துரைத்தது. எனவே, இந்தியாவில் வளர்ச்சி கண்டுவரும் இச்சந்தையின் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், அதன் மூலம் மேலும் பயனடையவும் ஏதுவாக UBM இன்டெக்ஸ்ஃபேர்ஸ் இந்தியா, இங்கு, தலைநகரில் இந்தியா கிச்சன் & பாத்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது."
UBM இன்டெக்ஸ்ஃபேர்ஸின் நிர்வாக இயக்குனரான திரு. L.A கான், மேலும் கூறியதாவது, "எங்கள் முன்னோடி வர்த்தகக் கண்காட்சியான இன்டெக்ஸ் காரணமாக, இந்தியா முழுவதிலும் உள்ள கட்டிட நிபுணர்கள், உள் வடிவமைப்பாளர்கள் மற்றும் பில்டர்கள்/மேம்பாட்டார்களுடனும், முக்கிய வர்த்தக மற்றும் நுகர்வோர் அமைப்புகளுடனும் நாங்கள் நெருக்கமான இணைப்பைக் கொண்டிருக்கிறோம். மேலும், எங்கள் யுக்திசார் கூட்டின் மூலம், தொழில்துறையின் தொழில்சார் அமைப்புகளுடன் ஒரு நிரந்தரமான உறவையும் கொண்டிருக்கிறோம். இந்தியா கிச்சன் & பாத் என்பது, கடந்த 26 ஆண்டுகளாக நாங்கள் சேவை புரிந்து வரும் தொழில்துறையின் ஒரு சிறப்புப் பிரிவுக்கான எங்கள் பங்களிப்பின் ஓர் இயற்கையான விரிவாக்கமாகும்."
இந்தியாவின் மிகப் பெரிய உள்அலங்காரம், கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு நிகழ்ச்சியான UBM இன்டெக்ஸை ஆண்டுதோறும் UBM இந்தியா மும்பையில் நடத்துகிறது, இதில் 25,000 வர்த்தக வருகையாளர்களும், 300 காட்சியாளர்களும் பங்கேற்பதுடன், சீனா, துருக்கி, யூகே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் அரங்குகளும் இடம்பெறுகின்றன.
UBM இந்தியா பற்றி
UBM இந்தியா, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM இந்தியா, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM ஏஷியாவின் ஒரு நிறுவனமான UBM இந்தியா, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM பிஎல்சி-க்கு சொந்தமான UBM ஏஷியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM ஏஷியா, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் ubmindia.in
ஊடகத் தொடர்பு:
ப்ரியா பாட்ஷா
[email protected]
UBM இந்தியா
அஞ்சலினா பிரதான்
[email protected]
+91-11-66517646
UBM இந்தியா பிரைவேட் லிமிடெட்
Share this article