விஸ்IQ-வினால் ஆற்றலளிக்கப்படும் ஆகாஷ்லைவ் உடன், நேரடி ஆன்லைன் கல்வியை ஆகாஷ் இன்ஸ்டிட்யூட் அறிமுகப்படுத்துகிறது
புது டெல்லி, August 13, 2015 /PRNewswire/ --
விஸ்IQ-வின் அதிநவீன ஆன்லைன் ஆகாடமி பில்டர், ஆரம்பநிலைக் கல்வியை மேலும் அணுகத்தக்கதாக ஆக்க உதவுகிறது
மருத்துவ மற்றும் பொறியியல் நுழைவு மட்டுமின்றி அடிப்படை பயிற்சிக்கும் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஆகாஷ், தனது தன்னிகரற்ற ஆகாஷ்லைவ் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக, விஸ்IQ தொழில்நுட்பத்தை இணைத்துக் கொண்டுள்ளது. இக்கூட்டானது, பொறியியல், மருத்துவம் மற்றும் அடிப்படை பாடத்திட்டங்களை நாடுவோருக்கு, நேரடி வகுப்பறை அனுபவத்தை வழங்கும் வகையில் விஸ்IQவின் 'ஆன்லைன் அகாடமி பில்டர்' மற்றும் 'வர்சுவல் கிளாஸ்ரூம்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதைக் காணும்.
"மாணவர்கள் நாட்டில் எங்கிருந்தாலும், உயர்தரமான நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியை வழங்கும் எங்கள் தொடர் முயற்சிகளில், ஆகாஷ்லைவ் அறிமுகம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது," என்றார் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெடின் இயக்குனரான திரு.ஆகாஷ் சௌத்ரி. மேலும், இப்பாடத்திட்டங்கள் ஒவ்வொன்றும், தீவிரமான மற்றும் பொறுப்புறுதியுடன்கூடிய மாணவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறும் அவர், "விஸ்IQ-வால் ஆற்றலளிக்கப்படும் நேரடி ஆன்லைன் அமர்வுகள், ஆகாஷ் வகுப்பறையில் நீங்கள் காணும் ஆற்றலை முழுமையாகப் பிரதிபலிப்பதுடன், தொல்லையற்ற கற்கும் அனுபவத்தைப் பெற மாணவர்கள் மேஜைக்கணினி, மடிக்கணினி, டாப்லெட்டுகள் அல்லது மொபைல் போன்ற எந்தவொரு சாதனத்தையும் பயன்படுத்துவதற்கும் உதவுகிறது," என்றார்.
விஸ்IQ-வின் நிறுவனரும் முக்கிய செயலதிகாரியுமான திரு.ஹர்மான் சிங் குறிப்பிட்டதாவது, "உயர்தரமுள்ள, சிக்கனமான தேர்வுக்குத் தயார் செய்கின்ற கல்வியை அணுகும் வசதியை அனைவருக்கும் அளிக்கும் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீஸஸின் முயற்சிகளில் கூட்டிணைவதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம். உலகம் முழுவதும் கற்றல் எவ்வாறு வழங்கப்படுகிறது மற்றும் நுகரப்படுகிறது என்பதை மறுவிளக்கம் செய்கின்ற அதிநவீன விஸ்IQ தொழில்நுட்பத்தை ஆகாஷ்லைவ் பயன்படுத்துகிறது. முக்கியத்துவம் வாய்ந்த தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் முறை மீது தாக்கத்தை ஏற்படுத்தி அதனை மேம்படுத்துவதுடன், அவர்கள் எங்கிருந்தாலும், வகுப்பறை விரிவுரைகளை எந்த நேரத்திலும் அவர்கள் அணுகுவதற்கு உதவும் வகையிலும் இக்கூட்டு அமைந்துள்ளது."
ஆகாஷ்லைவின் அறிமுகத்தின் மூலம், குறைந்த கட்டணத்தில், தங்கள் வீட்டின் வசதியான சூழலில், பயணம் செய்கின்ற மதிப்புமிக்க நேரத்தையும் மிச்சப்படுத்திக் கொண்டு, நேரடி பயிற்சியாளர் வழிநடத்தும் வகுப்பறைகளில் மாணவர்களால் பங்கேற்க முடிகிறது. இந்த ஆன்லைன் அகாடமியில், பாடத் திட்டங்கள், ஒன்றாக நிகழாத கலந்துரையாடல் அமர்வுகள், உள்ளடக்கத்திற்கான ஒருங்கிணைந்த கிளவுட் சேமிப்பு வசதி மற்றும் வகுப்பின் பதிவுகளை பல வழிகளில் அணுகும் வசதி போன்ற பல கூடுதல் அம்சங்களும் இடம் பெற்றிருக்கும். இணையதள இணைப்பில்லாத மாணவர்கள் ஆடியோ விரிவுரைகளை ஃபோன் மூலம் அணுகுவதற்கு ஏதுவாக, ஒரு 'டயல் அன்ட் லேர்ன்' என்ற வசதியும் உள்ளது. அசல் வகுப்பறையில் உள்ளதைப் போலவே, சந்தேகங்களை அமர்வின்போது நிகழும் ஒரு சந்தேகம் தீர்க்கின்ற அமர்வின்போதோ அல்லது மின்னஞ்சல் வினவல்கள் மூலமாகவோ தீர்த்துக் கொள்ளலாம்.
ஆகாஷ்லைவ் தற்போது XI-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு 2-ஆண்டு மருத்துவப் பயிற்சி (AIPMT) மற்றும் XII-ம் வகுப்பு தேறியுள்ள (மறுமுறை) மாணவர்களுக்கு 1-ஆண்டு மருத்துவப் பயிற்சியை (AIPMT) நடத்தி வருகிறது. XII-ம் வகுப்பு தேறியுள்ள மாணவர்களுக்காக நடத்தப்படும் மருத்துவத்திற்கான (AIPMT) 3வது குழு, ஆகஸ்ட் 17 அன்று தொடங்க உள்ளது. மற்றப் பிரிவுகளுக்கான பாடப்பயிற்சிகள் விரைவில் அறிவிக்கப்படும்.
விஸ்IQ-வைப் பற்றி:
ஆதர்ஜென் டெக்னாலஜீஸ், விஸ்IQ-வின் ஹோல்டிங் நிறுவனமாகும். 2007-ம் ஆண்டு நிறுவப்பட்ட விஸ்IQ, உலகின் மிகப் பெரிய கிளவுட் அடிப்படையிலான கல்வித் தளங்களில் ஒன்றாகும். 200 நாடுகளில் 4 மில்லியனுக்கும் அதிகமான கற்போருக்கு, கற்றல் சேவைகளை வழங்கும் வகையில் 400,000-க்கும் அதிகமான கல்வியாளர்கள் விஸ்IQ-ஐ அமைத்துள்ளனர். நேரடி பயிற்சியாளர் வழிநடத்தும் கற்றலின் ஆன்லைன் வழங்கலுக்கு உதவும் விஸ்IQ-வின் விருது வெல்லும் வர்சுவல் கிளாஸ்ரூம் தீர்வானது, உலகம் முழுவதும் உள்ள கல்வி சேவை வழங்குனர்களின் பாராட்டுதலைப் பெற்றுள்ளது. சில நிமிடங்களிலேயே தங்கள் சொந்த விருப்பத்திற்கேற்ற அகாடமிகளை நிறுவுவதற்கு கல்வி சேவை வழங்குனர்களுக்கு ஆற்றலளிப்பதன் மூலம், கல்வித் தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சிகரமான சாதனைக்கு விஸ்IQ-வின் ஆன்லைன் அகாடமி பில்டர் வழிவகுத்துள்ளது. மேலும் தகவல்களுக்கு, அணுகவும் http://www.wiziq.com.
மொபைல் மூலம் கற்றல், வீடியோ ஸ்டிரீமிங், நேரடி ஆன்லைன் வகுப்பறை, கலந்துரையாடல் போர்டுகள், மதிப்பீடுகள், நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வுகள் போன்ற அதிநவீன அம்சங்கள் மூலம், கற்பவரின் ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில் விஸ்IQ-வின் ஆன்லைன் அகாடமி பில்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. உருவாக்குவதிலுள்ள சிக்கல்கள், நிறுவும் செலவுகள் மற்றும் சேவையக கட்டமைப்பு போன்றவை அவசியமில்லாத நிலையில், இத்தீர்வு உடமையாக்கிக் கொள்கின்ற மொத்தச் செலவை வியக்கத்தக்க அளவிற்குக் குறைக்கிறது. மேலும், உள்ளமைந்த மின்னணுசார் வர்த்தகத் திறனும், தங்கள் சேவைகளை பணமாக்கிக் கொள்வதற்கும், தங்களை புதிய சந்தைகளுக்கு விரிவுபடுத்திக் கொள்வதற்கும் அவர்களுக்கு உதவுகிறது.
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட் பற்றி:
1988-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது முதலே, இந்தியா முழுவதும் பல்வேறு மருத்துவ, பொறியியல் நுழைவு மற்றும் அடிப்படை நிலை தேர்வுகளில் (NTSE, ஒலிம்பியாட்ஸ் போன்றவை) தனது தனித்துவமான செயல்திறன்கள் மூலம் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட் மிகக் கடினமான பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் இந்தியா முழுவதும் டாப்பர்கள் மற்றும் 1வது ரேங்குகளை உருவாக்கி வந்துள்ளது, மேலும் தனது அனைத்தும் அடங்கிய திட்ட வகைகள், அற்புதமான அதிநவீன திட்டங்கள் மற்றும் வசதிகள், இந்தியா முழுவதும் உள்ள 110-க்கும் அதிகமான மையங்கள் கொண்ட வலையமைப்பு, இவ்வாண்டு 110,000-க்கும் அதிகமான பிரமாண்டமான வருடாந்திர மாணவர் அடித்தளம் ஆகியவற்றுடன், விளைவு சார்ந்த அணுகுமுறையை வழங்கும் தொடர் முயற்சியில் அது ஈடுபட்டிருப்பதுடன், பயிற்சித் துறை முழுவதிலும் ஒரு வளமான பாரம்பரியத்தையும் உருவாக்கியுள்ளது.
ஊடகத் தொடர்பு:
ராகுல் சிங்,
[email protected],
+91-9899868666,
VP மார்க்கெட்டிங், விஸ்IQ
Share this article