சென்னை, August 11, 2015 /PRNewswire/ --
UBM இந்தியா நடத்தும் தென்னிந்தியாவின் ஒரே பணிசார் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மீதான வர்த்தகக் கண்காட்சி
சென்னையில், ஆக்யுபேஷனல் சேஃப்டி & ஹெல்த் (OSH) இந்தியாவின் 2வது பதிப்பை UBM இந்தியா அறிவித்துள்ளது. சென்னை டிரேட் சென்டரில் ஆகஸ்ட் 20 மற்றும் 21 அன்று நடைபெறுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள இக்கண்காட்சி, பணிசார் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொழில்துறையில், தரத் தீர்வுகளுக்காக, உலகளாவிய மற்றும் உள்நாட்டு சப்ளையர்கள், பாதுகாப்பு நிபுணர்கள், ஆலோசனையாளர்கள், உற்பத்தியாளர்கள், மற்றும் விநியோகிப்பாளர்களுடன் அனைத்துத் தொழில்துறைகளையும் சேர்ந்த தொழில்துறை நிபுணர்கள் பரிமாற்றத்தில் ஈடுபடுவதற்கான ஒரு தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150810/10128411)
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c)
முன்னணி பங்கேற்பாளர்களில், டிக்கீஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், டிராகர் சேஃப்டி இந்தியா பிரைவேட் லிமிடெட், ஹனிவெல் சேஃப்டி புராடக்ட், E.I. ட்யூபான்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட், கரம் இன்டஸ்டிரீஸ், பாட்டா இந்தியா லிமிடெட், அக்மி சேஃப்டி wears லிமிடெட், எக்ஸென்ட் இன்டஸ்டிரீஸ் லிமிடெட், வீனஸ் சேஃப்டி & ஹெல்த் பிரைவேட் லிமிடெட், உத்யோகி பிளாஸ்டிக் பிரைவேட் லிமிடெட், லைஃப்கியர் சேஃப்டெக் பிரைவேட் லிமிடெட், ரெஸ்போ புராடக்ட்ஸ், ஷுவர் சேஃப்டி மற்றும் பலரும் அடங்குவர்.
UBM இந்தியாவின் பொறுப்பிலுள்ள நிர்வாக இயக்குனரான திரு. யோகேஷ் முத்ராஸ் கூறியதாவது, "உலக அளவில் பணிசார் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் தேவை அதிகரித்து வருவதுடன் சேர்த்து, பாதுகாப்பில்லாத பணியிடங்களில் அதிகரித்து வரும் விபத்துகளும், பணிசார் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு கடைப்பிடித்தலின் முக்கியத்துவத்தை இந்திய நிறுவனங்களிடையிலும் உணரச் செய்துள்ளன. கூடுதலாக, இத்துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் கண்டுள்ள வளர்ச்சி மட்டுமின்றி, உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் பணியிட பாதுகாப்பை வழங்குதலின் முக்கியத்துவத்தை அரசுகள் வலியுறுத்தும் நிலையில், வாய்ப்புகள் மிகுந்த மற்றும் இன்னும் பயன்படுத்தப்படாத வளஆதாரங்கள் நிறைந்த இந்தியாவில் தங்கள் புதுமைத் தயாரிப்புகளையும், அறிவாற்றலையும் காட்சிப்படுத்துவதற்கு உலகெங்கிலும் உள்ள ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு சப்ளையர்கள் மற்றும் சேவை வழங்குனர்களுக்கு அளவற்ற வாய்ப்புள்ளது. OSH இந்தியா, இத்துறையின் விநியோகச் சங்கிலியை பலப்படுத்தும் அதே நேரத்தில், தொழில்களுக்கு சந்தை நுழைவுக்கான வாய்ப்புகளையும் வெற்றிகரமாக வழங்கி வருகிறது."
OSH இந்தியாவின் இரண்டு -நாள் மாநாடு, நாடு முழுவதிலிருந்தும் மற்றும் முன்னணி சர்வதேச அமைப்புகளிலிருந்தும் பங்கேற்கும் நிபுணர்கள் மூலம் பணிசார் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை முன்நிறுத்தும் அதே நேரத்தில், உலகளாவிய சிறந்த நடைமுறைகளையும், தொழில்துறை எதிர்கொண்டுள்ள சவால்களையும் கலந்தாலோசிக்கும். மாநாட்டில் கலந்தாலோசிக்கப்படவுள்ள தலைப்புகள், "பாதுகாப்பில் சிறப்பினை நோக்கிப் பயணம்: தலைமை முக்கியமானது', 'பொதுவான பாதுகாப்பு சவால்களை சமாளிப்பதில் கூட்டு நடவடிக்கை', 'விபத்தைத் தடுப்பதற்கு, அபாயத்தை அடையாளம் காணல் மற்றும் இடர் மதிப்பீடு', 'தீ தடுப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு', 'கட்டுமான பாதுகாப்பு - பாதுகாப்பான பணிச்சூழல், பாதுகாப்பான நடத்தையை ஊக்குவிக்கிறது', 'ஒரு நிறுவனத்தின் அடித்தட்டில் பாதுகாப்பு மற்றும் நிலைத்த தன்மை எவ்வாறு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்த, பணிசார் ஆரோக்கிய இடர் மேலாண்மை மற்றும் நிர்ணயங்களை உருவாக்குதல்' போன்ற பலவற்றை உள்ளடக்கியிருக்கும்.
கூட்டத்தில் பேசிய முக்கியப் பேச்சாளர்களில், திரு. MC சம்பந்தம், கூடுதல் இயக்குனர், சென்னை மண்டலம், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் இயக்ககம், தமிழ்நாடு அரசு; அர்விந்த் போதங்கர், உலகளாவிய தலைவர் - நிலைத்ததன்மை, ஆரோக்கியம், பாதுகாப்பு & சுற்றுச்சூழல், டாட்டா மோட்டார்ஸ் லிமிடெட்; திரு. ஸ்டீஃபன் ஃபிலிப் ஸ்டோரே, தலைவர் EHS,- ஹெவி சிவில் இன்ஃப்ரா IC, லார்சன் & டூப்ரோ லிமிடெட்; திரு. ஹீரக் தத்தா, செயலதிகார இயக்குனர், எண்ணெய் தொழில்துறை பாதுகாப்பு இயக்ககம் (OISD); திரு. S. வீரமணி, ஆலோசனையாளர், பாதுகாப்பு, சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் (CMRL); திரு. J C சேகர், முக்கிய செயலதிகாரி & இணை-நிறுவனர், Mகம்ப்ளை டெக்னாலஜீஸ் சிங்கப்பூர் பிரைவேட் லிமிடெட்/ErND சொல்யூஷன்ஸ் சிங்கப்பூர் பிரைவேட் லிமிடெட்; திரு KS அனிமோன், மூத்த மேலாளர், பாதுகாப்பு, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL); டாக்டர் K.மாமல்லன், மூத்த பொறியாளர் (பாதுகாப்பு ஆரோக்கியம், சுற்றுசூழல் மற்றும் தரம்), சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்; திரு. சுனில் சவுத்தரி, தலைவர் (தீ & பாதுகாப்பு), வோக்ஸ்வாகன் இந்தியா பிரைவேட் லிமிடெட்; திரு. சன்னி ஜார்ஜ், பாதுகாப்பு அதிகாரி, GMR பவர் கார்ப்பரேஷன் லிமிடெட், டாக்டர் S. ஸ்ரீதரன், செயல்பாடுகள் பிரிவின் தலைவர் தலைவர், TT அசெம்பிளி இந்தியா மற்றும் ஜப்பானின் டொயோட்டா ஷுஷோ கார்ப்பரேஷனின் பிரிவு, ஆகியோர் அடங்குவர்.
தமிழ் நாடு அரசின் தொழில்துறை பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் இயக்ககத்தின் சென்னை மண்டல கூடுதல் இயக்குனர் திரு. M C சம்பந்தம் கூறியதாவது, "சட்டம் ஒழுங்கமைக்க வேண்டும் என்று காத்திராமல், பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் தொழில்துறையால் தன்னார்வத்துடன் மேம்படுத்தப்படுவது, இந்தியாவில் உள்ள பணிச்சூழலை மாற்றுவதில் மிகப் பெரிய பங்கு வகிக்கும். அரசு மற்றும் தனியார் துறையானது, வலிமை பொருந்திய பாதுகாப்புச் சூழலைப் பராமரிப்பதும், பணியாளர்களின் பணிசார் ஆரோக்கியத்தை உறுதி செய்வதும் மற்றும் இவ்வனைத்துமே இந்தியாவின் வெற்றி வரலாறு மற்றும் பலமிக்க, அனைத்தும் உள்ளடங்கிய பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கும். மேலும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச் சூழலை உருவாக்குவதற்காக, தொழில் நிறுவனங்கள், இந்திய நிர்ணயங்கள் வாரியத்தினால் ஒப்புதலளிக்கப்பட்ட நிலையான தனிநபர் பாதுகாப்பு சாதனங்களை வாங்குவதுடன், அவற்றைச் செயல்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட வேண்டும்."
UBM இந்தியா பற்றி
UBM இந்தியா, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM இந்தியா, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM ஏஷியாவின் ஒரு நிறுவனமான UBM இந்தியா, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM பிஎல்சி-க்கு சொந்தமான UBM ஏஷியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM ஏஷியா, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் www.ubmindia.in
ஊடகத் தொடர்பு:
அஞ்சலினா பிரதான்
[email protected]
UBM இந்தியா பிரைவேட் லிமிடெட்
ப்ரியா பாட்ஷா
[email protected]
+91-22-6172 7353
UBM இந்தியா பிரைவேட் லிமிடெட்
Share this article