மும்பை, August 11, 2015 /PRNewswire/ --
மேற்கு இந்தியாவிற்கு UBM இந்தியாவின் பயணம் மற்றும் சுற்றுலா வர்த்தகக் கண்காட்சி
தென்னாசியாவின் முன்னணி பயண வர்த்தகக் கண்காட்சியான SATTE-ன் ஏற்பாட்டாளரான UBM இந்தியா, மும்பை வேர்ல்டு டிரேட் சென்டரில், 2015 ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய தினங்களில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள SATTE மும்பை மேற்கு-ன் 4[வது] பதிப்பை அறிவித்துள்ளது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150806/10128259 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
முக்கியமாக மஹாராஷ்டிரம், குஜராத் மற்றும் கோவாவைச் சேர்ந்த பயண வர்த்தக சமுதாயத்திற்கு பயன் தரும் SATTE மும்பை மேற்கில் தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலா வாரியங்கள், DMC-க்கள், பயண முகவர்கள் மற்றும் டூர் ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள், OTA-க்கள், ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், ஐடி நிறுவனங்கள் மற்றும் பலவற்றின் பங்கேற்பு இருக்கும். தொழில் வாய்ப்பு உதவிகளுடன் இணைத்துக் கொள்வதற்காகவும், இத்தளத்தின் மூலம் இம்மண்டலத்தில் வலிமையான கூட்டாண்மைகளை உருவாக்குவதற்காகவும். இத்தொழில்துறையைச் சேர்ந்த முக்கிய பொருள் மற்றும் சேவை வழங்குனர்களும் இதில் பங்கேற்பார்கள்.
இந்த வர்த்தகக் கண்காட்சி, சில சமீபத்திய சேரிடங்களையும், முக்கிய சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்குபவற்றையும் காட்சிப்படுத்தும். முக்கிய காட்சியாளர்களில், ராஜஸ்தான் சுற்றுலாத் துறை, மஹாராஷ்டிர சுற்றுலாத் துறை, சட்டீஸ்கர் சுற்றுலாத் துறை, உத்தர பிரேச சுற்றுலாத் துறை மற்றும் மத்தியப் பிரதேச சுற்றுலாத் துறை, டர்கிஷ் கல்ச்சர் மற்றும் சுற்றுலா அலுவலகம், டூரிசம் மலேசியா, டூரிசம் ஃபிஜி, உஸ்பெகிஸ்தான் டூரிசம், நீம்ரானா ஓட்டல்கள், ஓயோரூம்ஸ், ZO ரூம்ஸ், இன்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட் (இன்டிகோ), இன்டர்நெட் மொகல்ஸ், டீ எஸ்டேட் இந்தியா, கிரேடு ஒன் ஈவென்ட்ஸ், சிங்கப்பூரிலிருந்து யுனைடெட் டிராவல்ஸ் அன்ட் டூர்ஸ் மற்றும் பல நிறுவங்களும் அடங்கும்.
இக்கண்காட்சிக்கு தொழில்துறையின் சிறந்த வரவேற்பு இருந்ததுடன், இந்திய பயண முகவர்கள் கூட்டமைப்பு (TAAI), இந்திய பயண முகவர்கள் ஃபெடரேஷன் (TAFI), சுற்றுலா வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பு, டூர் ஆபரேட்டர்களின் இந்திய கூட்டமைப்பு (IATO), இந்திய வெளிச்செல்லும் டூர் ஆபரேட்டர்களின் கூட்டமைப்பு (OTOAI) மற்றும் நாசிக்கின் பயண பயண முகவர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஆதரவும் இருந்தது.
UBM இந்தியாவின் பொறுப்பிலுள்ள நிர்வாக இயக்குனரான திரு. யோகேஷ் முத்ராஸ் கூறியதாவது, "இந்தியாவின் மேற்கு மண்டலம் comprises of மஹாராஷ்டிரம், குஜராத், கோவா மற்றும் நெருக்கமான பகுதிகளைக் கொண்டதாகும், இவற்றிற்கு தொழில்துறை அறிக்கைகளின்படி, 10% உள்நாட்டு வருகையாளர்கள் மற்றும் 25%-க்கும் அதிகமான அயல்நாட்டு வருகையாளர்கள் உள்ளனர். மேலும், மும்பை, மேற்கிந்தியாவின் நிதிசார் தலைநகராகவும், நுழைவாயிலாகவும் இருப்பது மட்டுமின்றி, உலகளாவிய சேரிட நகரங்கள் அட்டவணை வரைபடத்தின்படி, சர்வதே இரவுநேர பயணிகளின் அடிப்படையில், அதிவேக வளர்ச்சி கண்டுவரும் முதல் 10 நகரங்களில் இடம்பிடித்துள்ள ஆசியா பசிபிக்கின் ஒரே இந்திய நுழைவாகவும் ஆகியுள்ளது. இவ்வாண்டின் முதல் பாதியில் சுமார் 4.75 மில்லியன் மக்கள் ஓர் இரவு மட்டும் மும்பையில் தங்கியுள்ளனர், இது கடந்த ஐந்தாண்டுகளில், இந்நகரில் தங்கிச் சென்ற சர்வதேச வருகையாளர்களின் உயர்ந்த பட்ச எண்ணிக்கையாகும் சாத்தியமுள்ளது. தங்கள் தொழிலை மேலும் வளர்ப்பதற்கும், இந்நகரம் மற்றும் இம்மண்டலத்தின் சுற்றுலா சந்தை வழங்கும் வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் பயண வர்த்தக சமுதாயத்திற்கு போதிய வாய்ப்புகளை வழங்கும் வகையில் SATTE மும்பை மேற்கு மிகச் சரியாக அமைக்கப்பட்டுள்ளது."
இந்த வர்த்தகக் கண்காட்சியில் ஒரு மாநாடும் இடம்பெற்றிருக்கும், இது, மேற்கிந்தியாவின் மீது சிறப்புக் கவனம் செலுத்துவதுடன், பயணம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் தொழில்துறையின் சாத்தியமுள்ள, வாய்ப்புகள், சவால்கள் மற்றும் சமீபத்திய போக்குகள் மீதான தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு ஏதுவாக, தொழில்துறைத் தலைவர்களை ஒன்றிணைக்கிறது. இது, மும்பையை ஓர் உறுதியான வெளிச்செல்லும் வாயிலாக சிறப்பித்துக் காட்டுவதுடன், சூரத், நாசிக் மற்றும் நாக்பூர் போன்ற IIம் நிலை நகரங்கள் இம்மண்டலத்தின் முக்கிய சந்தைகளாக உருவாவதை எடுத்துரைக்கும்.
UBM இந்தியா பற்றி
UBM இந்தியா, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM இந்தியா, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM ஏஷியாவின் ஒரு நிறுவனமான UBM இந்தியா, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM பிஎல்சி-க்கு சொந்தமான UBM ஏஷியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM ஏஷியா, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் http://www.ubmindia.in
ஊடகத் தொடர்புகள்:
ப்ரியா பாட்ஷா
[email protected]
022-61727353
அஞ்சலினா பிரதான்
[email protected]
UBM இந்தியா பிரைவேட் லிமிடெட்
Share this article