மும்பை, August 10, 2015 /PRNewswire/ --
செய்தி ஊடகத் தொழில்துறைக்கான ஒரு பொருத்தமான விவகாரம்
தொலைக்காட்சி சேனல்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், காளான்களாக முளைத்துக் கொண்டிருக்கும் இந்த சேனல்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு உரிம விவகாரமே இன்று செய்தி ஊடகத் தொழில்துறை எதிர்கொண்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையாகும். கடுமையான நுழைவுக் கட்டுப்பாடுகளை உருவாக்குவதற்கு ஏதுவாக, முறையான ஒழுங்கமைப்புக் கட்டமைப்பு ஒன்று இருக்க வேண்டும் என்பதே இத்தொழில்துறையின் தற்போதைய அத்தியாவசியத் தேவையாக உள்ளது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150807/10128369 )
இப்பிரச்னையால் கவலையடைந்துள்ள எஸ்ஸெல் குருப்பின் தலைவரான டாக்டர் சுபாஷ் சந்திரா தெரிவித்துள்ள கருத்தானது, "நம்முடைய சுதந்திர போராட்ட வீரர்களான ராஜா ராம் மோகன் ராய் போன்றவர்களால் மக்களுக்கு தகவலளிப்பதற்காகவும், ஆற்றலளிப்பதற்காகவும் ஊடக நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. ஆனால், இன்று தங்களுடைய சட்டவிரோத செயல்பாடுகளை மறைப்பதற்காக சில அமைப்புகள் செய்தி ஊடகத் தொழில்களை தொடங்கியுள்ளன. ஒழுங்கமைப்பு சிக்கல்கள் இத்தொழில்துறையிலுள்ள ஒரு கவலையாகும், மேலும் தாறுமாறான தொழில் முன்மாதிரிகள் காரணமாக, தீவிர எண்ணமுள்ள நிறுவனம் எதுவும் இத்தொழிலில் முதலீடு செய்ய விரும்பவில்லை. இந்த சட்டவிரோத அமைப்புகளைக் கண்டறிவதற்கு, ஊடக ஒழுங்கமைப்பின் கீழ் முறைப்படுத்தப்பட்ட விதிமுறைகளின் கட்டமைப்பு ஒன்றிற்கான தேவை இருப்பதை நாம் உணர்கின்ற தருணம் வந்துவிட்டது."
ஊடகம் என்பது ஒரு மென் ஆற்றலாகும், மேலும் நம்முடையதைப் போன்ற ஒரு மிகப் பெரிய ஜனநாயகத்தில், செயலதிகாரம், சட்டம், நீதித்துறை மற்றும் தொழில்துறையும்கூட தங்கள் சுய லாபத்திற்காக ஜனநாயகத்தை பயன்படுத்தாமல் இருப்பதற்காக, இது பொதுக் கருத்தினை உருவாக்குகிறது. அச்சு ஊடகத்திலிருந்து தொலைக்காட்சி ஊடகம் மிகவும் வித்தியாசமானது ஏனென்றால் செய்தித்தாள்கள் கல்வியறிவுள்ள வகுப்பினரால் மட்டுமே படிக்கப்படுபவையாகும். ஆனால் தொலைக்காட்சி பெருவாரியான மக்களின் ஊடகமாக இருப்பதால், நாட்டின் கிராமப்புற பகுதிகளின் மூலை முடுக்குகளில்கூட அந்தந்த பகுதியின் மொழிகளில் ஊடுருவிப் பரவியுள்ளது. எனவே ஓர் ஊடகமாக, தொலைக்காட்சி சமுதாயத்தின் மீது மிக அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நிதிசார் சேவைகளில் பிரவேசிக்கும் நிறுவனங்களுக்கு எந்தவொரு அனுமதியையும் வழங்குவதற்குமுன், இந்திய ரிசர்வ் வங்கி 'சரியான மற்றும் முறையான' தகுதிவிதிகளைக் கடைப்பிடிக்கிறது. இச்சேவைகள், சாதாரண மனிதனின் நிதிநிலை மீது தாக்கத்தை ஏற்படுத்துபவையாக இருப்பதால், இத்தகுதிவிதிகள், நிறுவனம் முழுவதையும் வெளிப்படுத்தி, நிதிக்கான வளஆதாரங்களை மட்டுமின்றி, மேம்பாட்டளர்களின் உறவையும் குறுக்கிலும் நெடுக்கிலும் அலசி ஆராய்கின்றன. எனவே, கேட்கப்பட வேண்டிய கேள்வி என்னவென்றால், 'ஒருவருடைய பணத்தைப் பாதுகாப்பதைக் காட்டிலும், சாதாரண மனிதனின் மனதை திசை திருப்பப்படுவதிலிருந்தும் மாசுபடுவதிலிருந்தும் காப்பது குறைந்த முக்கியத்துவம் கொண்டதா?'
மேலும் விரிவாக விளக்கி டாக்டர் சந்திரா கூறியதாவது, "இன்று, ஊடகங்களை உடமையாக்கிக் கொள்வது, குறிப்பாக புதிய சேனல்கள் விஷயத்தில், தெளிவற்றதாகவே உள்ளது. இப்புதிய சேனல்களில் சிலவை, சட்டவிரோத கும்பல்களுக்குச் சொந்தமானவையாக இருந்தாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. வங்கித் துறைக்கு ஆர்பிஐ வழங்கும் ஆற்றல்மிக்க கண்காணிப்பைப் போலவே, வலிமை பொருந்திய ஊடக நன்னெறிகள் மற்றும் நன்னடத்தை நெறிகள் இடம்பெற்றுள்ள ஓர் ஊடகக் குழு இருக்க வேண்டும் என்பதே தற்போதுள்ள தேவையாகும்."
வெளிப்படையான ஊடக செயல்பாடுகளுக்கான அவசியத்தைப் பற்றி மீண்டும் குறிப்பிடும்போது டாக்டர் சந்திரா, "இந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து ஏகோபித்த குரலெழுப்புவதற்கு தொழில்துறை நிறுவனங்கள் ஒன்று சேரவேண்டிய முக்கியத்துவத்தை" வலியுறுத்தினார்.
சமீபத்தில், ஊடக உரிமை மற்றும் வெளிப்படைத்தன்மை மீதான ஒரு கட்டாயமான கலந்தாலோசனையில், இப்பிரச்னையை ஜீ பிசினஸ் சேனல் வெளிக் கொண்டு வந்தது. உங்கள் பார்வைக்கு, தயவுசெய்து இணைப்பினைக் கீழே காணவும்:
டாக்டர் சுபாஷ் சந்திராவின் அலுவல்சார் டுவிட்டர் ஹேன்டில் - @_SubhashChandra
ஊடகத் தொடர்பு:
ஜெயஸ்ரீ குமார்
+91-22-24831367
+91-9769286661
[email protected]
அரன்ட்ஸா கொன்சால்வெஸ்
+91-22-24831395
+91-9820336890
[email protected]
கார்ப்பரேட் பிராண்ட் - ஜீ என்டர்டெயின்மென்ட் என்டர்பிரைசஸ் லிமிடெட் (ZEEL)
Share this article