ஹைதராபாத், ஜூன், June 12, 2015 /PRNewswire/ --
UBM இந்தியா நடத்திய ஹைதராபாத் ஜுவல்லரி, பேர்ல் மற்றும் ஜெம் கண்காட்சியின் (HJF) 8வது பதிப்பு, ஹைடெக்ஸ் எக்ஸிபிஷன் சென்டரில், கடந்த ஆண்டின் பதிப்பைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான பங்கேற்கும் காட்சியாளர்கள் மற்றும் வருகையாளர்களுடன், வெற்றிகரமாக நிறைவடைந்தது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150611/10124759-c )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150611/10124759-a )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150611/10124759-b )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
தெலங்கானா மாவட்டத்தின் மாண்புமிகு நிதியமைச்சரான திரு. எட்டாலா ராஜேந்தர், UBM இந்தியாவின் பொறுப்பிலுள்ள நிர்வாக இயக்குனரான திரு. யோகேஷ் முத்ராஸ் ஆகியோர், ஹைதராபாத் ஜுவல்லர்ஸ் மேனுஃபாக்சரர்ஸ் அசோஸியேஷனின் துணைத் தலைவர் திரு. சஞ்சய் குலாபானி, மற்றும் ஹைடெக் சிட்டி ஜுவல்லர்ஸ் மேனுஃபாக்சரர்ஸ் அசோசியேஷனின் தலைவர் திரு. மஹேந்திர தயாள் ஆகியோர் மற்றும் நகை வர்த்தகத் தொழில்துறையைச் சேர்ந்த பல பிரமுகர்களின் முன்னிலையில், இக்கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர்.
இந்த மூன்று நாள் (5 ஜூன் முதல் 7 ஜூன் '15 வரை) HJF 2015 கண்காட்சியானது, 150-க்கும் அதிகமான காட்சியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், வைரம் மற்றும் ஜெம்ஸ்டோன் விநியோகிப்பாளர்கள் மற்றும் வர்த்தக மற்றும் அரசு அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மிகப் பிரமாண்டமான ஜெம்ஸ் அன்ட் ஜுவல்லரி B2B கண்காட்சிகளில் ஒன்றாக பிரமிக்க வைத்தது. இக்கண்காட்சியில், ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த தலைசிறந்த உற்பத்தியாளர்கள், தங்களுடைய புகழ்பெற்ற நிஜாம் மற்றும் ஹைதராபாத் பாணி நகைகளைக காட்சிப்படுத்தினார்கள். இக்கண்காட்சியில், வாரங்கல், விஜயவாடா, விசாகப்பட்டினம், நெல்லூர், நிஜாமாபாத் மற்றும் தென்னிந்தியாவின் இதர பகுதிகளிலிருந்து பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஹைதராபாதிற்கு வெளியேயுள்ள மண்டலங்களிலிருந்து 110-க்கும் அதிகமான காட்சியாளர்களின் பங்கேற்புடன், தென்னிந்திய நகைச் சந்தைக்கு HJF தொடர்ந்து ஒரு சிறப்பான நுழைவாயிலாக அமைந்துள்ளது, இது வாங்குவோருக்கு மற்றும் விநியோகிப்போருக்கு தங்களை இணைத்துக் கொள்ளவும், வலையைமைப்பை உருவாக்கிக் கொள்ளவும், கருத்துக்களைப் பரிமாறவும், எதிர்காலப் போக்குகளைக் கண்டறியவும், மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும், ஒரு பிரமாதமாள தளத்தை வழங்குகிறது. இக்கண்காட்சியில், காட்சியாளர்கள், வைரங்கள், முத்துக்கள், ஜெம்ஸ்டோன்கள், கல்பதித்த நகைகள், பாரம்பரிய மற்றும் புராதன குந்தன் மற்றும் நாகாஷ் நகைகள் உள்ளிட்ட தென்னிந்திய தன்னிகரற்ற தங்க நகைகள் அடங்கிய ஏராளமான வகை தயாரிப்புகளை காட்சிப்படுத்தினார்கள். உற்பத்திச் செயல்முறையில் பயன்படுத்தப்படுகின்ற சமீபத்திய இயந்திரங்கள் மற்றும் சாதனங்கள், இவற்றுடன் தொடர்புடைய பொருட்கள் மற்றும் சேவைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிகழ்ச்சியில் பேசும்போது, UBM இந்தியாவின் பொறுப்பிலுள்ள நிர்வாக இயக்குனரான திரு. யோகேஷ் முத்ராஸ் கூறியதாவது, "UBM இந்தியாவின் D&B உடனான சமீபத்திய ஆய்வின்படி, 2014-ல், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6-7% பங்களிப்பை ஜெம்ஸ் மற்றும் ஜுவல்லரி துறை வழங்கியுள்ளது. உலகின் அதிவேக வளர்ச்சி கண்டுவரும் ஜெம் மற்றும் ஜுவல்லரி சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதுடன், தென்னிந்தியா மிகப்பெரிய சந்தையாகவும் உள்ளது. நம்முடைய ஒழுங்கமைந்த நகை சில்லறை விற்பனை இன்னும் ஆரம்பநிலையிலேயே இருப்பதால், வளர்ச்சிக்கான வாய்ப்பு அபரிமிதமாக உள்ளது. இத்துறை, வாடிக்கையாளர் ரசனையில் மாற்றங்களையும், நகைகளில் புதுமையான வடிவங்கள் மற்றும் விதங்களின் அதிகரிப்பையும் கண்டு வருகிறது. பங்கேற்கின்ற தனது காட்சியாளர்கள் மற்றும் வருகையாளர்களுக்கான இத்தொழில்துறை தேவைகள் மற்றும் விநியோகத்திற்கு இடையிலான இடைவெளியை நிரப்புவதில் HJF முக்கிய பங்காற்றுவதுடன், கண்காட்சியின் இப்பதிப்பானது இத்தொழில்துறையின் தேவைகளை மேலும் தொடர்ந்து பூர்த்தி செய்யும். பெரிய அளவில் இந்தியாவின் தொழில்துறையின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், நகை வர்த்தகர்கள் இணையவும், தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் ஒரு தளத்தை வழங்குவதுதான் UBM இந்தியாவின் தொடர் முயற்சியாக இருந்து வருகிறது. இத்தனை ஆண்டுகளில், ஹைதராபாத் ஜுவல்லரி, பேர்ல் மற்றும் ஜெம் கண்காட்சியானது, இம்மண்டலத்தின் வர்த்தகத்திற்கான ஒரு மைல்கல்லாக அமைந்திருப்பதுடன், நாடெங்கிலும் உள்ள சந்தைகளுக்கான தென்னிந்திய நுழைவாயிலாகவும் அமையும். HJF-ன் 8வது பதிப்பினுடைய வெற்றிக்கு, இதில் பங்கேற்ற காட்சியாளர்கள் மற்றும் தெலிங்கானா மற்றும் ஆந்திர பிரதேச ஜுவல்லரி அசோஸியேஷன்களின் தொடர் கூட்டாண்மைக்கு UBM இந்தியா நன்றி தெரிவித்துக் கொள்கிறது. கடந்த மூன்று நாட்களாக வருகையாளர்களின் அதிகரிப்பு, இக்கண்காட்சியின் வெற்றிக்கு மேலும் ஒரு சான்றாக அமைகிறது."
தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேச ஜுவல்லர்ஸ் அசோஸியேஷனுக்கு இடையிலான கூட்டு வருடாந்திர பொதுக்கூட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தளமாகவும் HJF அமைந்துள்ளது. இக்கூட்டத்தைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாக இம்மண்டலங்களில் நகைத் தொழிலுக்கு அவர்கள் வழங்கியுள்ள பங்களிப்பிற்காக, குறிப்பிட்ட நகை உற்பத்தியாளர்களுக்கு UBM இந்தியாவின் பாராட்டு விழாவும் நடைபெற்றது.
பெருமைமிக்க 100 ஆண்டுகள் பங்களிப்பிற்கான ஆயுட்கால சாதனை விருது: திரு. கோபால் ராவ், ஸ்ரீ வெங்கட ரமணா ஜுவல்லரி, விஜயநகரம், பார்வதிபுரம்
பெருமைமிக்க 80 ஆண்டுகால பங்களிப்பிற்கான விருது: திரு. இர்ஃபான் கான், நிர்வாக இயக்குநர், முகமது கான் & சன் ஜுவல்லர்ஸ், குண்டூர்
பெருமைமிக்க 70 ஆண்டுகால பங்களிப்பிற்கான விருது: திரு. B. மஹேஷ், யோகேஷ் பவனாசி வெங்கட சுப்பையா சாரி & சன்ஸ், கர்னூல், நந்தியால்
முன்னணி காட்சியாளர்களில் அடங்குவோர்: ஜெய் குலாப் ஜுவல்லர்ஸ், கிரிஸ், பிண்டி ஜுவல்லர்ஸ், சிந்தாமணி கோல்டு, N D டயமண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், தெர்மோ ஃபிஷர் சயன்டிஃபிக் இந்தியா பிரைவேட் லிமிடெட், லக்ஷ்மி டயமண்ட்ஸ், எமரால்டு ஜுவல்லரி இன்டஸ்டிரி இந்தியா லிமிடெட், ஃபிஷர் மெஷர்மென்ட் டெக்னாலஜீஸ், மீனாக்ஷி ஜுவல்லர்ஸ், ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் இத்தொழில்துறையின் இதர பிரபல நிறுவனங்களும் அடங்கும்.
ஹைதராபாத் ஜுவல்லரி, பேர்ல் மற்றும் ஜெம் கண்காட்சி 2015-க்கு, பின்வருபவை உள்ளிட்ட,தென்னிந்தியா முழுவதிலிருந்தும் முக்கிய ஜுவல்லரி கூட்டமைப்புகள் ஆதரவளித்துள்ளன: AP கோல்டு, சில்வர் & டயமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேஷன், செகந்திராபாத் ஜுவல்லர்ஸ் அசோஸியேஷன், நரசராவ்பெட் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன், ஈஸ்ட் கோதாவரி ஜுவல்லர்ஸ் அசோஸியேஷன் & வெஸ்ட் கோதாவரி ஜுவல்லர்ஸ் அசோஸியேஷன், குண்டூர் ஜுவல்லர்ஸ் அசோஸியேஷன்.
நரசராவ்பெட்மாவட்டத்தின் தலைவர் திரு.விஜயகுமார் கூறியதாவது, "ஒவ்வொரு ஆண்டும் HJF நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கின்ற UBM இந்தியாவின் முயற்சிகளை நாங்கள் வெகுவாகப் பாராட்டுகிறோம். ஏற்பாட்டுக் குழுவானது, இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், விநியோகிப்பாளர்கள் மற்றும் இதர மதிப்புச் சங்கிலி நிறுவனங்கள் அனைத்தின் தேவைகளையும் புரிந்து கொண்டிருப்பதுடன், இந்நிகழ்ச்சியின் மூலம், சில்லறை விற்பனையாளர்களுக்கு எங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தவும் உதவுகிறது."
HJMA-வின் தலைவரான திரு.மஹேந்திர தயாள் கூறியதாவது, "UBM இந்தியாவின் HJF, இத்தொழில்துறை நிறுவனங்களுக்கு தங்களுடைய சமீபத்திய தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்குக் காட்சிப்படுத்த உதவும் மிகச்சரியான தளமாகும். இது, இம்மண்டலத்தில், பெரிய அளவில் வர்த்தகர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களை இணைக்கின்ற, ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடு செய்யப்படுகின்ற மிகவும் வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகவும் அமைகிறது. வருகையாளர்களிடமிருந்து நாங்கள் ஊக்கமளிக்கின்ற வரவேற்பைப் பெற்றிருக்கிறோம், மேலும் இதன் முந்தைய பதிப்புகளைப் போலவே இந்த 8வது பதிப்பும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கிறோம்."
உலகம் முழுவதும் இத்தகைய புகழ்பெற்ற நகைக் கண்காட்சிகளை நடத்துவதன் மூலம், கடந்த முப்பது ஆண்டுகளாக நகை தொழில்துறையின் ஓர் ஒருங்கிணைந்த அங்கமாக UBM இருந்து வருகிறது. HJF, ஆண்டு முழுவதும் UBM இந்தியா நடத்திய ஐந்து - நகர (கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், டெல்லி மற்றும் குஜராத்) நகைக் கண்காட்சிகளில் ஒன்றாகும். மேலும் தகவல்களுக்கு, மற்றும் பதிவு செய்வதற்கு தயவுசெய்து அணுகவும் http://www.jewelleryfair.in.
UBM இந்தியாபற்றி
UBM இந்தியா, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM இந்தியா, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM ஏஷியாவின் ஒரு நிறுவனமான UBM இந்தியா, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM பிஎல்சி-க்கு சொந்தமான UBM ஏஷியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM ஏஷியா, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் http://www.ubmindia.in/
ஊடகத் தொடர்புகள்:
ப்ரியா பாட்ஷா,
[email protected],
+91 (0) 22-61727353,
UBM இந்தியா பிரைவேட் லிமிடெட்
ஹரி பிரசாத்
[email protected]
+91-9618883774
Share this article