மும்பை, June 9, 2015 /PRNewswire/ --
இந்தியாவிலுள்ள பள்ளிகளில் சிறு அறிவியல் மையங்களை அறிமுகப்படுத்துவதிலும், நிறுவுவதிலும் முன்னோடியாக உள்ள STEM லேர்னிங், பள்ளி நிலையில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தின் மீது ஆர்வத்தைத் தூண்டும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டதாகும். இப்பரிமாற்ற அடிப்படையில் அமைந்த பணி மாடல்கள், மாணவர்கள் தாங்களுடைய புத்தகங்களில் படிக்கும் அடிப்படை கருப்பொருட்களை அடையாளம் கண்டு, அனுபவித்தறிவதற்கு உதவுகின்றன, இது கல்வி கற்பதை மேலும் செயல்முறை சார்ந்ததாக ஆக்குகிறது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150527/10123663-a )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150527/10123663-b )
இந்த மினி சயன்ஸ் சென்டரில் (சிறு அறிவியல் மையம்) தகவல் சார்ந்த பின்புலங்கள், பயனர் கையேடுகள், ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் மற்றும் STEM லேர்னிங் வழங்கும் 2 ஆண்டுகால மதிப்பீடு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட 60 டேபிள் டாப் பரிமாற்ற அடிப்படையிலான கணித மற்றும் அறிவியல் செயல்முறை மாடல்கள்/காட்சிப்பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
"சிறு அறிவியல் மைய மாடல்கள் CBSE, ICSE மற்றும் SSC வாரியங்களின் 5வது முதல் 10வது வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ளன, மேலும் இவை இந்தியாவின் புகழ்பெற்ற அறிவியலாளர்கள் மற்றும் கல்வியாளர்களால் வடிவமைக்கப்பட்டவையாகும். இந்தியாவிலுள்ள 350,000-க்கும் அதிகமான மாணவர்கள் வெறும் 3 ஆண்டுகளில், எங்கள் அறிவியல் மையங்கள் மூலம் பலனடைந்துள்ளனர்," என்றார், STEM லேர்னிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான திரு. அஷுதோஷ் பண்டிட்.
"இப்போது எங்கள் பள்ளியில் ஒரு சிறு அறிவியல் மையம் உள்ளது. வழக்கமாக நாங்கள் அறிவியல் கோட்பாடுகளை பாடபுத்தகங்களிலிருந்து மட்டும்தான் படிப்போம். ஆனால் இன்று, நாங்கள் அவற்றை செயல்முறையில் பார்த்தோம். இப்போது, எங்களால் மேலும் சிறந்த முறையில் படிக்க முடிகிறது. இது எங்கள் உயர்ந்த வகுப்புகளில் எங்களுக்கு மிகவும் உதவும்," என்றார், மும்பை, பிரபாதேவி BMC பள்ளியின் மாணவர் ஒருவர்.
இதுவரை, STEM லேர்னிங் 40-க்கும் அதிகமான மெகா அறிவியல் மையங்களையும், 250-க்கும் அதிகமான சிறு அறிவியல் மையங்களையும், இந்தியாவின் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் அமைத்துள்ளது.
"முன்பெல்லாம், கருப்பொருளை மட்டும் கற்பிப்பதால், மாணவர்கள் உண்மையில் பரிசோதனைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. அதன்பின், இந்த செயல்முறை சார்ந்த அணுகுமுறைக்குப்பின், அவர்கள் எல்லாவற்றையும் வேகமாகவும், சிறப்பாகவும் புரிந்து கொள்கின்றனர்," என்றார், குஜராத்திலுள்ள அங்க்லேஷ்வர் என்ற இடத்தைச் சேர்ந்த ஓர் அறிவியல் ஆசரியர்.
STEM லேர்னிங், ஓர் ISO 9000-2008 சான்றளிக்கப்பட்ட நிறுவனமாகும், மேலும் இது மஹாராஷ்டிரா கல்வி வாரியமான MSCERTயாலும் சான்றளிக்கப்பட்டுள்ளது.
"இம்முயற்சி, மாணவர்களிடையே அறிவியல் சார்ந்த கண்ணோட்டத்தை உருவாக்குவதற்கு சிறந்தது. மேலும், தாங்கள் கேட்பதை பலர் கடைசியில் மறந்துவிடுகின்றனர், தாங்கள் காண்பதை சிறி காலத்திற்கே நினைவில் வைத்திருக்கின்றனர், ஆனால் ஒருவர் அனுபவிப்பது அவர் மனதைத் தொட்டு, அவருடன் என்றென்றும் நிலைத்துவிடுகிறது. கருப்பொருளானது, செயல்முறை கற்றலுடன் இணைக்கப்படும்போது, தான் கற்பதை ஒருவரால் மறக்கவே முடியாது. மேலும், அது ஒரு நகர்கின்ற சாதனமாகும், மற்றும் அதனை வகுப்பறைகளுக்குள் எடுத்துச் செல்ல முடியும் என்பதால், அது அதிகபட்ச மாணவர்களை சென்றடைகிறது," என்றார், BMC எஜுகேஷன் கமிட்டியின் தலைவரான திரு. வினோத் ஷேலார்.
கல்வியை மேம்படுத்துவதற்கான இப்புதுமையான அணுகுமுறை, நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது. அவர்களால் இத்தகைய சிறு அறிவியல் மையங்களை அரசு பள்ளிகள், ஆசிரம பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா மற்றும் உள்ளூர் சுய நிர்வாக கிராமப்புற பள்ளிகள் ஆகியவற்றில், CSR முயற்சியின் ஒரு பகுதியாக ஸ்பான்சர் செய்ய முடியும்.
தற்போது, STEM லேர்னிங், லூபின் ஃபார்மா, JSW ஃபவுண்டேஷன், பாங்க் ஆஃப் பரோடா, L&T இன்ஃபோடெக், அலட்ராடெக் சிமெண்ட், மாஸகான் டாக் லிமிடெட், மற்றும் பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, CSR திட்டங்களின் கீழ் சிறு அறிவியல் மையங்களை அமைத்து வருகிறது.
"எங்கள் தனித்துவமான தயாரிப்புடன், இந்தியாவின் கிராமப்புறம் மட்டுமின்றி நகர்ப்புறத்தையும் சேர்ந்த 1 மில்லியன் மாணவர்களுக்கு சேவை புரிவதே எங்கள் நோக்கமாகும். கல்வியில் தரத்தை நாங்கள் முன்னுரிமையாகக் கொண்டிருப்பதுடன், சமுதாயத்தின் பின்தங்கிய பிரிவினருக்குப் பங்களிப்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம்," என்று மேலும் கூறினார் திரு.அஷுதோஷ்.
நாளைய அறிவியலாளர்களை வளர்க்கும் நோக்குடன், தரமான STEM கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்கின்ற தனது பயணத்தைத் தொடர்வதற்கு STEM லேர்னிங் தயார்நிலையில் உள்ளது.
எங்களுடன் இணைவதற்கு, அணுகுங்கள் www.stemlearning.in
ஊடகத் தொடர்பு
அஷுதோஷ் பண்டிட்
[email protected]
+91-9987611400
நிர்வாக இயக்குனர்
STEM லேர்னிங் பிரைவேட் லிமிடெட்
Share this article